Author Topic: கூடங்குளம் அணு உலை அவசியமா? அவசியமில்லைய?  (Read 6088 times)

Offline Yousuf

தமிழகத்தில் தற்பொழுது மிகவும் பரபரப்பான செய்தியாக வளம் வந்து கொண்டிருப்பது கூடங்குளம் அணு உலை பற்றிய செய்திதான்.

ஒரு தரப்பினர் குறிப்பாக கூடங்குளம் அமைத்திருக்க கூடிய இடத்தில் வாழ கூடிய மக்கள் இந்த கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக மூட வேண்டும் இது எங்கள் வாழ்வாதாரத்தை பதிக்க கூடியது. அனுக்களிவுகளின் மூலமாக இங்கு சுற்று சூழல் பாதிப்பும் ஏற்படும் என்று கூறி எதிர்த்து வருகிறார்கள்.

மற்றொரு தரப்பினர் தமிழகைத்தில் அடிகடி மின் தடை ஏற்படுகிறது ஆகவே இதை எல்லாம் சரி செய்ய வேண்டும் என்றால் கூடங்குளம் அணுமின் நிலையம் தேவை என்று கூறி வருகின்றனர்.

இந்த அணுமின் நிலையம் ஆபத்தானதா இல்லையா என்பதை பற்றியும் பல்வேறு கருத்துகள் வளம் வந்து கொண்டிருக்கின்றன!

இப்போது இதை பற்றிய ஒரு ஆரோக்கியமான விவாதத்தை நாம் இங்கு ஏற்ப்படுத்தி இரு தரப்பிலும் உள்ள குறை நிறைகளை மற்றவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் விவாதிக்க அழைக்கிறேன் நண்பர்களே.

வாருங்கள் நம்முடைய விவாதங்களை தொடருவோம்!


Quote
குறிப்பு :-

விவாதத்தின் போது உங்களுடைய கருத்துக்கள் தலைப்பிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்! தலைப்பை விட்டு வெளியே செல்ல கூடாது!

தலைப்பை பற்றி மட்டுமே விவாதிக்க வேண்டும் தனி மனிதர்களையோ, எதிர் தரப்பில் விவாதம் செய்பவர்கலையோ கேலி செய்வது போன்றோ, ஏளனம் செய்வது போன்றோ விவாதம் அமையக்கூடாது.

விவாதத்தில் உங்களது கருத்துக்களை அழகிய முறையில் எடுத்து வைத்தால் நன்றாக இருக்கும் நண்பர்களே!

இந்த விதியை மீறி விவாதம் செய்பவர்களது பதிவுகள் எந்த வித அறிவித்தலும் இன்றி அகற்றப்படும்!
« Last Edit: February 04, 2012, 08:44:12 PM by Yousuf »

Offline Forum

பென்செர்,இது விவாத பகுதி. கொடுக்கப்பட்ட தலைப்பில் உங்களுக்கு விவாதத்தை பதிவு செய்யும் எண்ணம் இருந்தால் பதிவு  செய்யலாம். இல்லையெனில் நீங்கள் தலைப்புக்கு  சம்பந்தமில்லாத பதிவுகளை செய்யாமல் இருப்பதே நலம். விவாத பகுதி சம்பந்தமான  கருத்துக்கள் எதுவும் சொல்வதானால் நீங்கள் அட்மின் முகவரிக்கும் மின் அஞ்சல் செய்யலாம்.இந்த பகுதியில் விவாதத்திற்கான பதிவுகள் மட்டுமே அமைய வேண்டும் எனவே உங்கள் பதிவினை அகற்றி இருக்கிறோம்.
« Last Edit: February 06, 2012, 10:42:23 PM by Forum »

Offline செல்வன்

கூடங்குளம் அணு உலை மட்டுமல்ல . இந்தியாவில் எந்த ஒரு புதிய அணு உலைகளுமே தேவை இல்லை என்பதே எனக்கு கருத்து. அணு உலைகள் ஆபத்து மிகுந்தவை . அணு உலைகள் 30 முதல் 50 வருடங்கள் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். அதன் பின்னர் அதை மூடி பாதுகாப்பதற்கே பல பில்லியன் செலவு செய்யவேண்டி வரும். மூடிய பின் பல ஆயிரம் வருடங்கள் பாதுகாக்க வேண்டும் . அணு உலை கட்டுவதற்கு பல ஆயிரம் கோடிகள், அவற்றை மூடிய பின் பாதுகாப்பதற்கு பல ஆயிரம் கோடிகள் செலவு செய்ய வேண்டும். இடையில் மின் உற்பத்தி செய்யும் போது மட்டுமே மலிவு விலையில் மின்சாரம் கிடைக்கும். மொத்தத்தில் பார்த்தால் அணு உலைகளின் கட்டமைப்பு செலவு , உற்பத்தி செலவு , அது செயளிலந்தபின் அதை பல ஆயிரம் வருடங்கள் பாதுகாப்பு செலவு என கணக்கிடும் போது அணு சக்தி மின்சாரம் அதிக செலவு மிக்கது மற்றும் ஆபத்தானதும் கூட. பல மேற்கத்திய நாடுகளும் அணு உலைகளை 2020ஆம் ஆண்டுக்குள் மூட முடிவு செய்து உள்ளன. மிக பழைய தொழில் நுட்பத்தை அதிக விலைக்கு இந்தியாவிடம் விற்று ஆதாயம் தேடவே மற்ற நாடுகள் முன்வந்துள்ளன.அதன் வெளிப்பாடே இந்த கூடங்குளம் அணு சக்தி நிலையம்.
முதலில் அணு உலையை மூடக் கோருவதற்கான காரணங்களைத் தருகிறேன் .

1) கூடங்குளம் அணு உலையானது மிகவும் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் அமைக்கப் பட்டுள்ளது .பொதுவாக இது போன்ற பெரிய அணு உலைகள் அமையும் பகுதியிலிருந்து 16  கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் மிகக் குறைவான மக்கள் தொகையே இருக்கவேண்டும்.மாறாக இங்கு 16 கிலோ மீட்டருக்குள் 1 லட்சம் பேருக்கு மேல் வசிக்கிறார்கள் .அணு உலை நல்ல நிலையில்  இயங்கினால்கூட இவர்களுக்கு பல்வேறு குணமாக்க முடியாத நோய்கள் ஏற்படும் .

2 ) சமீபத்தில் ஜப்பானில் நிகழ்ந்ததைப் போலொரு விபத்து கூடங்குளத்தில் நிகழுமாயின் அணு உலையைச்சுற்றி 30  கிலோமீட்டருக்குள் வசிக்கும் 10  லட்சத்திற்கும் அதிகமான மக்கள் 24  மணி நேரத்திற்குள் வெளியேற்றப் படவேண்டும் .இது முற்றிலும் சாத்தியமில்லாதது.

3)முக்கியமான இன்னொரு காரணம் தரமற்ற கட்டுமானம் . கூடங்குளம் அணு உலை 2001  ம் ஆண்டு கட்டத் தொடங்கப் பட்டது.தொடங்கப் பட்ட சில நாட்களிலேயே அணு உலை கட்டுமானத்திற்கு பயன்படுத்தப் படும் மணலில் கடல் மண் கலக்கப் படுவதாக சர்ச்சை எழுந்தது.இப்போது புதிதாக சில அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளி வந்துள்ளன .அணு உலை அமைந்துள்ள பகுதியிலிருந்து 5  கிலோ மீட்டர் சுற்றளவிலான பகுதி நுண்ம பாது காப்பு பகுதி (Sterilized zone) என்பதால் அங்கு தொழிற்சாலைகளுக்கு அனுமதி இல்லை .அதிலும் அணு உலை அமைந்திருக்கும் பாறைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் கல் குவாரிகளுக்கு முற்றிலும் அனுமதியில்லை .
ஆனால் தற்போது அணு உலையிலிருந்து மூன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் கருங்கல் குவாரி செயல் பட்டு வருவது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது .இதன் காரணமாக அணு உலையின் அடித் தளத்தில் விரிசல்கள் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது .இது விபத்து நிகழ்வதற்கான வாய்ப்பை அதிகப் படுத்தியுள்ளது .

4) உக்ரைனின் செர்நோபில் விபத்து போல விபத்து நிகழுமாயின் தமிழகம் மற்றும் வடக்கு இலங்கையில் வசிக்கும் ஒட்டு மொத்த தமிழினமே அழியும் .

5) அணு உலையிலிருந்து வெளியாகும் கதிரியக்கம் கலந்த நீர் கடலில் கலக்கப் படுவதால் கடல்வளங்கள்,அழியும் .

6) அணு உலையின் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் மண்ணுக்கடியில் புதைக்கப் படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் .மேலும் இவற்றை 24000  ஆண்டுகள் பத்திரமாக பாதுகாக்க படவேண்டும் .

7 ) அணு உலைகள் கடற்கரையில் கடல்மட்டத்திலிருந்து வெறும் 7  மீட்டர் உயரத்தில் மட்டுமே அமைக்கப் பட்டுள்ளதால் எளிதில் சுனாமி தாக்கும் ஆபத்து உள்ளது .சமீபத்தில் ஃபுகுஷிமா அணு உலைகளை 20  மீட்டர் உயர சுனாமி அலைகள் தாக்கியது நினைவுகூறத் தக்கது .

8 )தீவிரவாதிகள் மற்றும் எதிரி நாடுகளுக்கு முக்கிய இலக்கு அணு உலைகள். இலங்கையில் சீன ராணுவம் குவிக்கப்பட்டு வருவதும் கூடங்குளம் அணு உலைக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது .

கல்பாக்கத்தில் விபத்து ஏற்பட்டால் அருகே உள்ள பகுதி மக்களைபாதுகாப்பாக வேறு இடத்துக்கு அழைத்துச் செல்வது பற்றியஒத்திகை சில வருடங்கள் முன்பு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில்
நடத்தப்பட்டது. எந்த லட்சணத்தில் தெரியுமா? அழைத்து செல்லவேண்டிய பஸ்கள் பிரேக் டவுன் ஆகிவிட்டன. காவல் அதிகாரிகளின்வயர்லெஸ் கருவிகள் வேலை செய்யவில்லை. விபத்து ஒத்திகை
நடக்கிறது என்ற தகவலே பாதி அதிகாரிகளுக்குத் தெரியவில்லை.அன்று அசல் விபத்து நடந்திருந்தால், நம் கதி என்ன?நில நடுக்கம், சுனாமி போன்றவற்றிலிருந்து தங்களைபாதுகாத்துக் கொள்ள உலகிலேயே மிகச் சிறப்பான ஏற்பாடுகளைசெய்துவைத்திருக்கும் நாடு ஜப்பான். அங்கே நேர்மையும் ஒழுக்கமும் நம்மை விடப் பல மடங்கு அதிகம். அதனால்தான் நம்சுனாமியைப் போல பல மடங்கு பெரிய அழிவு அங்கே ஏற்பட்டும்கூட
ஒப்பீட்டளவில்உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் நமது விகிதங்களில் அங்கே இல்லை. அழிவு ஏற்பட்ட எந்த ஊரிலும் ஒரு சிறு கடை கூட சூறையாடப்படவில்லை. கடும் பஞ்சத்துக்கு நடுவிலும் பாதிக்கப்பட்ட மக்கள் ஒழுங்காக கியூவில் நின்று கிடைத்ததை வாங்கிக் கொள்கிறார்கள்.பள்ளிக்கூடத்திலேயே நில நடுக்கத் தற்காப்பு பயிற்சிகள்,ஒத்திகைகள் மாதந்தோறும் குழந்தைகளுக்குத் தரப்படுகின்றன. அணு உலை விபத்து ஏற்பட்டதும் அருகிலிருக்கும் லட்சக்கணக்கானவர்களை இன்னொரு பகுதிக்கு ஒரே நாளில் குடி பெயரச் செய்யும் ஆற்றல் அவர்களுக்கு இருக்கிறது. அதுவே போதாதது என்று அங்கே விமர்சிக்கப்படுகிறது. நம்மால் கூவம் கரை குடிசைவாசிகளுக்கு மாற்று இடம் தருவதைக் கூட ஒழுங்காகச் செய்ய முடிவதில்லை. இலவச வேட்டி சேலை கொடுக்கும் இடத்தில் நெரிசல் தள்ளுமுள்ளுவில் சாகத் தயாராக இருக்கும் சமூகம் நம்முடையது. தலைவர் செத்தால், கடைகளை சூறையாடுவது நம் மரபு. தீர்வுள்ள சாயப்பட்டறைக் கழிவையே தீர்க்காமல் ஊரையும் ஆற்றையும் விவசாயத்தையும் நாசமாக்கியிருக்கிறோம்.

இந்தியாவின் முக்கியப் பிரச்னைகளில் எரிபொருள் மற்றும் மின்சாரப் பற்றாக்குறை முதன்மையானது என்பதை எவருமே மறுக்க முடியாது. அதற்கான தீர்வுகளை நாடுவதும் அவசியமானதே.ஆனால், நமது மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு அணு உலைகள் மட்டுமே வழி என்ற முடிவுக்கு எப்படி வந்தீர்கள்? அந்த எண்ணத்தை நம்மிடம் எவரெவர் எப்படி உருவாக்கினார்கள்? என்னென்ன தரவுகளை அளித்தார்கள்? எந்த தர்க்கங்களைச் சொன்னார்கள்? எப்படி இதை நாம் நம்ப ஆரம்பித்தோம்?இந்தியாவில் மட்டும் அல்ல; உலகம் முழுக்கவே அணு உலைகள் ஆற்றல் உற்பத்திக்கு லாபகரமானவை அல்ல என்ற முடிவுக்கு அறிவியலாளர்கள் வந்து விட்டார்கள் என்பதே உண்மை. உலகிலுள்ள அணு உலைகளை மூடும் நடவடிக்கைகள் வேகமாக முடுக்கப்பட்டுள்ளன.

இதற்குக் காரணம், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அணுக்கழிவுகளைப் பாதுகாப்பாக சேமிக்கும் முறைகள் ஆகியவற்றுக்கான செலவுகளை நீண்டகால அளவில் கணக்கிட்டால், அணு உலைகள் மிக மிக அதிகமாகச் செலவு பிடிப்பவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அணு உலைகளுக்குத் தேவைப்படும் பிரமாண்டமான முதலீட்டையும் தொடரும் நிர்வாகச் செலவையும் பிற ஆற்றல் உற்பத்திமுறைகளுக்குச் செலவிட முடிந்தால் உலகின் எரிபொருள் தேவையை சிறப்பான முறையில் எதிர்கொள்ள முடியும் என நிபுணர்கள் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள்.

இந்தியாவில் அணு உலைகளை விட்டால் இதுவரை இங்குள்ள மின்பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காகச் செய்யப்பட்டுள்ள ஒட்டுமொத்தப் பெரும் முயற்சிகள் என்னென்ன? அணு உலைகளுக்கு செலவிடப்படும் தொகையில் பாதியாவது அதற்காகச் செலவிடப்பட்டுள்ளதா? நாமறிய எந்த ஒரு முயற்சியும் செய்யப்படவில்லை என்பதல்லவா உண்மை?

இந்தியாவின் மின்சாரத்துறையில் மிகப்பெரிய சிக்கலே மின்கடத்தும்போது ஏற்படும் இழப்புதான். உலகிலேயே மின்கடத்தல் இழப்பு மிக அதிகமாக உள்ள தேசம் இந்தியாதான் என உலக ஆற்றல் கழகம் (world resources institute) கூறுகிறது. உலக அளவில் இதன் அதிக சராசரி என்பது 7 சதவீதம். இந்தியாவில் இது 30 முதல் 40 சதவீதம் வரை. பல இடங்களில் 60 சதவீதம் வரை. இன்னொன்று, இந்தியாவில் மின் திருட்டு விகிதம் உலகிலேயே மிக அதிகம். இந்திய அரசு அறிக்கையின்படி அது 42 சதவீதம் வரை.ஆக, நாம் பயன்படுத்தும் மின்சாரத்தை விட இழக்கும் மின்சாரம் அதிகம். இவ்விரண்டையும் சமாளித்தாலே இந்தியாவின் மின்தட்டுப்பாடு பெருமளவுக்கு நீங்கிவிடும் என்பதே நடைமுறை உண்மை.காரணம் என்ன? இந்தியாவில் பெரும்பாலான மின்கம்பிகள் தலைக்கு மேலே செல்கின்றன. ஆகவே அவை அறுந்து விழாத உலோகத்தில் தடிமனாக அமைக்கப்பட வேண்டியிருக்கிறது. அவை அளிக்கும் மின்தடை பெரும் மின்சார இழப்புக்குக் காரணமாக அமைகிறது.

திருட்டுக்கும் வழிவகுக்கிறது.மின்னிழப்பு உருவாகாத வகையில் நவீன மின்கடத்திகளை மண்ணுக்கடியில் போட்டு மின்வினியோகம் செய்யலாம், உலகின் வளர்ந்த நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. ஆனால் அதற்கான பெரும் முதலீடு நம்மிடம் இல்லை என்று சொல்லப்படுகிறது.ஆனால், கூடங்குளம் போன்ற ஒரே ஒரு அணு உலை அமைக்க நாம் செலவிடும் தொகை 1988-ல் போட்ட கணக்கின்படி ரூ.1600 கோடிக்கு மேல். இன்று அது ரூ.4000 கோடிக்கு மேல் சென்றிருக்குமென கணக்கிடப்படுகிறது. இன்னும் ஆயிரம் கோடி ரூபாய் அதன் அணுக்கழிவு பராமரிப்புக்குத் தேவையாம்.இந்தத் தொகை இருந்தால் போதும் இந்தியாவில் கால்வாசி மின்கடத்திகளை நவீனப்படுத்திவிட முடியும்.
கூடங்குளம் நமக்கு அளிக்கும் மின்சாரத்தை விட இருபது மடங்கு மின்சாரத்தை சேமிக்க முடியும். அதை நம் அரசுகள் செய்வதில்லை.நெடுந்தூரம் மின்சாரத்தைக் கொண்டுசென்று மின்னிழப்பு உருவாக்குவதற்கு பதிலாக இந்தத் தொகையைச் செலவிட்டு இந்தியாவில் பல்வேறு சிறிய மின்திட்டங்களை அமைத்து ஆற்றல் பற்றாக்குறையை எளிதில் ஈடுகட்ட முடியும். அதைப்பற்றி ஏராளமான நிபுணர்கள் எழுதிவிட்டார்கள்.ஆனால், அவற்றை நம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் செய்வதில்லை. அணு உலைகளை அமைப்பது நாட்டின் ராணுவ ரகசியங்களுடன் கலந்துள்ளது என்பதனால், அதன் கணக்குகள் எப்போதுமே ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஆகவே அவற்றில் உள்ள ஊழல்கள் வெளியே வருவதில்லை. அது ஆளும் தரப்புக்கு மிக வசதியானது.

இரண்டாவதாக, இந்த அணு உலைகளை எப்போதுமே வெளிநாடுகள்தான் அமைத்துத் தருகின்றன. இதற்கான பணம் முழுக்க அந்நாடுகளுக்குத்தான் உண்மையில் சென்று சேர்கிறது. அந்நாடுகள் தங்கள் காலாவதியான தொழில்நுட்பத்தை நமக்களிக்கின்றன. ஈடாக பெரும் பணமும் பெற்றுக்கொள்கின்றன. பேரங்கள் ராணுவ ரகசியங்களாகவும் எஞ்சுகின்றன. இந்நாடுகளின் ரகசியபேரங்களும் ஆள்பிடிப்பு வேலைகளும்தான் அணு உலைகளுக்குப் பின்னால் உள்ள தூண்டுதல்கள்.மூன்றாவதாக, சர்வதேச நிதியங்கள் இம்மாதிரி திட்டங்களுக்கு தேவையான கடன்களைக் கொடுக்கின்றன. உண்மையான வளர்ச்சித் திட்டங்களுக்கு அவை நிதி அளிப்பதில்லை. இந்த நிதியங்களில் அதிக முதலீடு செய்துள்ளவை இந்த அணு உலைகளை நமக்கு விற்கும் நாடுகளேதான். அதாவது தரம் கெட்ட பொருளை நமக்கு விற்பதோடு அவற்றை வாங்குவதற்கான கடனையும் அவையே வட்டியுடன் நமக்கு அளிக்கின்றன. மொத்தத்தில் நாம் கடன் வலைக்குள் விழுகிறோம்.

இந்தியாவின் எந்த அணு உலையும் அதன் முழுத் திறனுடன் தொடர்ந்து செயல்பட்டதில்லை. அவை உருவாக்கிய மின்சாரத்துக்கு அவற்றுக்கான செலவினங்களை வட்டியுடன் சேர்த்து கணக்கிட்டு விலை போட்டால் இந்தியாவில் உற்பத்தியாகும் நீர் மின்சாரத்தின் ஐம்பது  மடங்கு விலை ஆகும் என சொல்கிறார்கள்.ஆகவே, அணு உலைகள் என்பவை இந்தியா போன்ற நாட்டுக்குத் தேவை இல்லை. அவை இந்நாட்டின் செல்வத்தை வளர்ந்த நாடுகள் கொள்ளையடிக்கும் வழிகள் மட்டுமே. அவற்றின் ஆபத்து மட்டுமே நமக்கு எஞ்சுகிறது.

இந்தியாவைப் போல வருடம் முழுவது வெயில் இல்லாத நாடுகள்கூட முன்பே இதில் இறங்கிவிட்டன. ஸ்பெயினில் இப்போதே 12 சதவிகித மின்சாரம் சூரிய மின்சாரம்தான். இஸ்ரேலில் 90 சதவிகித வீடுகளில் சூரிய சக்தி ஹீட்டர் வந்துவிட்டது. சீனா போட்டோவொல்டெய்க் செல் தயாரிப்பில் உலகத்தில் முதலிடத்தில் இருக்கிறது. உலக அளவில் 3800 மெகாவாட்டுக்கான் சோலார் பேனல்களில் சரி பாதியை தயாரித்து ஏற்றுமதி செய்திருப்பது சீனாதான். சில மாதங்களே வெயில் அடிக்கும் ஜெர்மனியில் மொத்த மின்சாரத்தில் 25 சதவிகிதத்தை சூரியசக்தியில் தயாரிப்பதை 2050க்குள் சாதிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இப்போது உலகம் முழுவதும் உற்பத்தியாகும் சூரியசக்தி மின்சாரத்தில் சரிபாதி அமெரிக்காவில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. கலிபோர்னியா மாநிலத்தில் மட்டும் 2020க்குள் அதன் மொத்த மின் தேவையில் 33 சதவிகிதம் சூரியசக்தியிலிருந்து பெறுவது என்ற இலக்குடன் திட்டங்கள் நடக்கின்றன. கிரிட்டுக்கே மின்சாரம் அனுப்பும் திட்டங்களையும் அமெரிக்கா மேற்கொண்டிருக்கிறது. மூன்றாண்டுகளுக்கு முன்பாகவே சுமார் 500 மெகாவாட் சூரிய மின்சாரத்தை கிரிட்டுடன் இணைத்துவிட்டது.இன்னொரு பக்கம் தனியார் வீடுகளிலும் அவரவர் அலுவலகங்களிலும் சுயதேவைக்காக போட்டொ வோல்டெய்க் செல்பேனல் அமைத்து மின்சாரம் தயாரித்துக் கொள்வதை ஊக்குவிக்கிறது. தங்கள் தேவைக்குப் போக உபரி சூரிய மின்சாரத்தை கம்பெனிக்கு விற்கும் வீடுகள் பெருகிவருகின்றன. மின் கட்டணமாக 2400 டாலர் வரை செலுத்திய ஒரு வீட்டில் 25 ஆயிரம் டாலர் செலவில் சூரிய மின்சார தயாரிப்பு பேனல் பொருத்தியதும் அந்த முழு மின்கட்டணம் மிச்சமாகிவிடுகிறது.அமெரிக்காவில் கடந்த 30 வருடங்களாக ஒரு புதிய அணு உலைகூடத் தொடங்கவில்லை என்பதை இத்துடன் சேர்த்து கவனிக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் மொத்த வீடுகளில் வெறும் 25 சதவிகித வீடுகளின் கூரைகளில் மட்டும் இரண்டு கிலோவாட் மின்சாரம் தயாரிக்கும் சக்தியுடைய சூரிய ஒளி பேனல்கள் அமைத்தால் அதிலிருந்தே மொத்தம் ஏழாயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இதையே பள்ளிகள்,கல்லூரிகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், என்று பெரிய பெரிய கட்டடங்களின் மேற்கூரைகளில் அமைத்தால் தமிழகத்தில் மின்சாரம் உபரியாகிவிடும்.


ஆகவே மின்சாரத்தை விரயம் ஆக்குவதை தடுப்பதன் மூலமும், மின்சாரம் திருடுபவர்களை தண்டித்து திருட்டை தடுப்பதன் மூலமும்.,மின்கடத்தும் போதும் ஏற்படும் இழப்பை (transmission Loss)குறைப்பதன் மூலமும், சூரிய சக்தியின் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை எடுத்து பயன்படுத்தகூடிய வகையில் ஆவன செய்வதன் மூலமுமே நம்முடைய மின்சாரத தேவையை பூர்த்தி செய்வதுடன் உபரியாக மின்சாரமும் கிடைக்கும்.மின்விசிறி இல்லாமல் கூட இருக்க மக்கள் தயார் ஆனால் இது போன்ற ஆபத்தான அணு உலை தேவை இல்லை.

அணு உலை கட்ட ஆரம்பிக்கும் பொழுதே அதை மக்கள் கண்டுகொள்ளாது  இப்பொழுது கூக்குரல் எழுப்புவது,அரசின் பணம் வீணாகி போவதும் கவலை அளிக்கிறது.
« Last Edit: February 07, 2012, 02:22:58 PM by செல்வன் »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
செல்வன் கருத்துகளை நானும் ஏற்று கொள்கிறேன்.... கூடம் குளம் அணு மின் நிலையம் பற்றி தெரியாத போதும் அணுக்களால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் அறிந்ததே ... இன்றும் ஹீரோசீமா  பகுதியில் அங்கஹெனர்கலான குழந்தைகள் பிறப்பது  நடந்துகொண்டுதான் இருக்கிறது .... நம் கண் முன்னே உதாரணம் வைத்துகொண்டு எதற்கு வீணான விஷபரீட்சை ....

தினம் 2  மணி நேரம்  மின்சாரம் இல்லமால் இருப்பது நமவர்க்கு கஷ்டம் இலையே .... சிந்தித்து செயல் பட்டால் நன்று
                    

Offline micro diary

தமிழகத்திலே உள்ள கூடங்குளத்தில் அமைந்துள்ள 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டி, செயல்பட தயாராகிக்கொண்டு இருக்கும் நிலையில் அணுசக்தியைப் பற்றியும், அதன் விளைவுகளைப்பற்றியும் நாட்டில் சில விவாதம் நடந்து வரும் இவ்வேளையில், சில உண்மைகளையும், அணுசக்தியின் நன்மைகளைப் பற்றியும், இயற்கைச் சீற்றங்களினால் அதற்கு ஏற்படும் விளைவுகளைப் பற்றியும், அணுஉலைகளின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு போன்ற விஷயங்களை அறிவார்ந்த முறையில் அணுகி, அதைப்பற்றி ஒரு தெளிவான கருத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..
இந்த நவீன உலகில் நம் முன்னேற்றத்திற்கு மிக குறுகிய காலத்தில் மின்னுற்பத்தியை அதிகமாய் பெற அணு உலைகளே சிறந்தது.
செல்வன் கூறிய ஒரு சில கருத்துக்கள் ஏற்றுகொள்ளகூடியவை. ஆனால் ஆபத்து இல்லாமல் இங்கு எந்த ஒரு எந்திரமும் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலே தமிழ்மக்கள் உள்பட உலக மாந்தர் அனைவருக்கும் நாகரீகமாக அனுதினமும் உயிர்வாழக் குடிநீரும், மின்சக்தியும் மிக மிகத் தேவை.  அணுசக்தி நிலையத்தையும், உப்பு நீக்கி இராசயனச் சாலையையும் கூடங்குளத்தில் அமைக்க வேண்டா மென்று நிறுத்தக் கையில் செருப்புடனும், தடியுடனும் முன்கூட்டியே வர அசுரப் பட்டாளத்தை ஏற்பாடு செய்தது, விடுதலைப் பூமியில் ஓர் அநாகரீகப் போராட்டமே ! ஆக்கப்பணி புரியும் அரசாங்கப் பணியாளரை அவமானப் படுத்தி நாச வேலைகள் புரிகின்றன அழிவுப்பணி புரியும் ஆவேச எதிர்க்கட்சிகள்.  அணு உலைகளில் விபத்துக்கள் நேரா என்னும் உத்தரவாதம் அளிக்க வேண்டுமென அவர்கள் கேட்பது வியப்பாக உள்ளது.  அமெரிக்காவில் 9/11 விமானத் தற்கொலைத் தாக்கல்களுக்குப் பிறகு விமானப் பயணம், இரயில் பயணம், கப்பல் பயணம், அணு உலைகள், தொழிற்சாலைகள் அனைத்திலும் மனிதப் பாதுகாப்பு என்பதே கனவாகி, கதையாகி, கற்பனை யாகிப் போனது.  மில்லியன் கணக்கில் தினமும் பயணம் செய்யும் மொம்பை மின்சார இரயில்களில் எவரெல்லாம் உத்தரவாதம் வாங்கிக் கொண்டு வண்டியில் ஏறி நிம்மதியாக உட்கார்ந்திருக்கிறார் ?  21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களை விட, மக்கள் அனுதின ஊதியத்துக்குப் பயன்படுத்தும் இரயில் பயணங்களில் ஆபத்துக்கள் மிகையாகிப் பெருகி விட்டன !

ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணு ஆயுதங்களால் ஆயிரக் கணக்கான மாந்தர் மாண்டு, கதிர்க்காயங்களால் துன்புற்று வரும் ஜப்பான் பூகம்ப சுனாமித் தீவுகளில் தற்போது 50 அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி 40,000 MWe ஆற்றல் மின்சாரத்தைப் (30%) பரிமாறி வருகின்றன.  அவற்றுள் கூடங்குள அணு உலைகள் போல் ஆற்றல் கொண்ட (> 1100 MWe) 14 அசுர அணுமின்சக்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அனைத்து நிலையங் களும் கடல்நீரைத் வெப்பத் தணிப்பு நீராகவும், சில நிலையங்கள் கடல்நீரைச் சுத்தீகரித்து உப்பு நீக்கிய நீரையும் பயன்படுத்தி வருகின்றன.
1950 ஆம் ஆண்டுமுதல் 30 உலக நாடுகளில் 435 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம், ஜப்பானில் புகுஷிமா அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன.  மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் ஆய்வுகள் நடத்திக் கொண்டு வருகின்றன.
அதற்கு அடுத்தபடி அணுசக்தி இயக்கும் 220 கப்பல்களும், கடலடிக் கப்பல்களும் (Submarines) கடல் மீதும், கீழும் உலாவி வருகின்றன.  ஈழத்தீவில் பாதிக்கும் குறைவாக அரை மாங்காய் போலிருக்கும் தென் கொரியாவில் 20 அணுமின் நிலையங்கள் 39% ஆற்றலைத் தயாரித்து மின்சாரம் அனுப்பி வருகின்றன.  இந்தியாவின் அணு மின்சக்திப் பரிமாற்றப் பங்கு 2.6%  இயங்கி வருபவை 17 அணுமின் நிலையங்கள்.  இந்தியாவில் அனைத்து அணுசக்தி நிலையங்களைப் பாதுகாப்பாக இயக்கத் திறமையுள்ள, துணிவுள்ள நிபுணர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள்.

அணுமின்சக்தி தேவையான தீங்கு  என்று உலக நாடுகள் தெரிந்தே பயன்படுத்தி  வருகின்றன. அதன் பயன்பாட்டை இப்போது முழுவதும் நீக்க முடியாத, மீள  இயலாத நிலைக்கு நாம் வந்து விட்டோம்.   அணு உலை விபத்துக்களில் கற்கும் பாடங்களைக்  கையாண்டு அவற்றைப் பாதுகாப்பாக இயக்க முடியும் என்பது என் கருத்து.  வேறு மின்சக்தி உற்பத்திச் சாதனங்கள் எதிர்காலத்தில் வரும்வரைப் பேரளவு பயன்தரும் அணுமின்  சக்தி நிலையங்கள் உலகில் பாதுகாப்பாய் இயங்கிவரும்
ஆஸ்டிரியா வியன்னாவில் உள்ள அகில அணுசக்தித் துறைப் பேரவையில் [International Atomic Energy Agency (IAEA)] அனைத்து அணுவியல் ஆய்வு நாடுகளும் உறுப்பினராக இருந்து அணு உலைகள் டிசைன், கட்டுமானம், இயக்கம், பாதுகாப்பு, முடக்கம் (Decommissioning) சம்பந்தப் பட்ட அனைத்து விஞ்ஞானப் பொறியியல் நூல்களின் பயன்களைப் பெற்று வருகின்றன.  மற்ற தொழிற்துறைகள் எவற்றிலும் பின்பற்றப்படாமல், அணு உலை டிசைன்களில் மட்டும் வலியுறுத்தப்படும் பாதுகாப்பு விதிமுறையை, அணுசக்தி பற்றித் தர்க்கமிடும் அறிஞர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.  அந்த நிர்ப்பந்த விதி இதுதான்:  பூகம்பம், சூறாவளி, சுனாமி, சைக்குளோன், ஹர்ரிக்கேன், புயல், பேய்மழை, இடி, மின்னல், தீவிபத்து, மனிதத் தவறு, யந்திரத் தவறு போன்றவை தூண்டி எந்த விபத்து நேர்ந்தாலும் அணு உலையின் தடுப்புச் சாதனங்கள் இயங்கிப் பாதுகாப்பாக, சுயமாக [Automatic Shutdown Systems] அணு உலை உடனே நிறுத்தப்பட வேண்டும்.  வெப்பத் தணிப்பு நீரோட்டம் குன்றி யுரேனிய எரிக்கோல்கள் சிதைவுற்றால் அவற்றின் கதிரியக்கமும் பிளவுத் துணுக்களும் வெளியேறாது உள்ளடங்கும் “கோட்டை அரண்” [Containment Structure] கட்டாயம் அமைக்கப் படவேண்டும்.  செர்நோபிள் அணு உலையை டிசைன் செய்த ரஷ்யப் பொதுடைமை நிபுணர்கள் அணுசக்திப் பேரவை நியதிகளைப் பின்பற்றவில்லை.  பேரவை சுட்டிக்காட்டினும் ஏற்றுக் கொள்ளாத ரஷ்யப் பொதுடைமை நிபுணர்கள் செர்நோபிள் விபத்தின் போது பேரளவில் உயிரைப் பறிகொடுத்து, நிதி செலவாகிப் பெரிய பாடத்தைக் கற்றுக் கொண்டார்கள்.  செர்நோபிள் ஒரு விதிவிலக்கு ! நிபுணருக்கும் மூடருக்கும் ஒரு மதி விளக்கு

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலே தமிழகத்தில் பலரிடம் பீடக் கணினிகளும், மடிக் கணினிகளும், காதில் செல்பேசிகளும் நம்முடன் அனுதினம் சல்லாபித்துக் கொண்டுள்ள போது மின்சக்தி குன்றிப் போனால் என்னவாகும் என்று நான் விளக்க வேண்டியதில்லை.  சூழ்வெளி, உயிரினப் பாதுகாப்பளிக்கும் எந்த மின்சக்தி உற்பத்தியும் நமக்குக் கொடைதான்.  அணுசக்தி நிலையங்களிலிருந்து கிரீன் ஹௌஸ் வாயுக்கள் [CO2, SO2, & Nitrous Gases] வெளியாவ தில்லை.  அவை கூடங்குளத்தில் தேவையில்லை என்று பாமர மக்களின் கைகளில் செருப்பை மாட்டி, சுற்றுச் சூழல் ஆய்வலசல் பற்றி உரையாட வந்த விஞ்ஞானிகளின் வாயை மூடியது நாகரீகச் செயலில்லை.  அரசியல் மூர்க்க வர்க்க எதேச்சவாதிகளின் பிற்போக்குத் தன்மை அது.

அணு உலையா ? வாழ்வுக்கு உலையா ?  இப்படி மேலோடி இடித்துரைப்பது ஓர் அசுரப் போக்கு.  அணு உலை அருகே வாழ்பவருக்கு எல்லாம் வால் முளைக்குது,  ஏழாம் விரல் முளைக்குது என்றெல்லாம் நையாண்டி செய்வது அறிஞர்களின் கோமாளித்தனம்.  புற்று நோயுடன் மற்ற நோயும் தொற்றுது என்னும் பாட்டி கதைகளைக் கட்டிக் எறிந்து விட்டு சற்று புள்ளி விபரத்தோடு டாக்டர் புகழேந்தி ஆய்ந்து காட்டினால் நாமெல்லாம் நம்பலாம்.  கல்பாக்கத்தில் அணு உலை கட்டும் முன்பு அத்தகைய நோய்களால் துன்புற்றோர் அல்லது செத்தவர் எத்தனை பேர் ?  அப்போது அங்கு வாழும் நபருக்கு எத்தனை விரல்கள் இருந்தன என்று எண்ணிப் பார்த்தவர் யார் ?  அணு உலைகள் கட்டிய பின் இயங்கும் போது எத்தனை பேர் புற்று நோயில் செத்தனர்,  மற்ற நோயில் மடிந்தனர் என்ற எண்ணிக்கைகள் தேவை.  அப்படி அதிகமானால் அந்த தொகை கூறப்பட வேண்டும்.  அப்போதுதான் அணு உலையால் மனிதருக்கு ஏழாம் விரல் முளைத்த விந்தைகளைப் பற்றிப் புகாரிடலாம்.   உலகத்திலே இயங்கி வரும் (435+284+220) 939 அணு உலைகளுக்கு அருகில் வாழ்வோர் யாராவது புற்று நோயுற்றுத் செத்தால் அங்குள்ள பராக்கிரம யூனியன் நிலைய அதிகாரிகளைச் சும்மா விட்டு விடுமா ? அவர்களைச் சிறையிலிட்டு பெருத்த நட்ட ஈடைப் பிடுங்கி விடும்.

அதாவது அணுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு உருவாகியுள்ள எதிர்ப்பை மூன்று விதமாக பார்க்கலாம்.
1.   கூடங்குளம் பகுதியில் வாழும் மக்களுக்கே ஏற்பட்டுள்ள உண்மையான கேள்விகள்.
2.    பூகோள - அரசியல் சக்திகளின் வர்த்தகப் போட்டிகளின் காரணமாக விளந்த விளைவு ( Dynamics of Geo-political and Market forces).
3.   "நாமல்ல நாடுதான் நம்மை விட முக்கியம்" என்ற ஒரு அரிய கருத்தை அறிய முடியாதவர்களின் தாக்கம்.
முதலாவதாக மக்களின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களது நியாயமான சந்தேகங்களை வகைப்படுத்தி, அந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்வது மிகவும் முக்கியம். மக்களின் மற்றும் மக்களின் கருத்தால் எதிரொலிக்கும் கேள்விகள் தெளிவாக்கி அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது இரண்டாவது முக்கியம். இந்தியாவின் முன்னேற்றத்தை விரும்பாத, வளர்ச்சியை பிடிக்காதவர்களின் முயற்சியை பற்றியும், அவர்களின் அவதூறு பிரசாரங்களைப் பற்றியும் மத்திய, மாநில அரசுகள் பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே முதலில் மக்களின் கேள்விகள் என்ன? அவர்களின் நியாயமான பயம் என்ன? என்பதை பார்போம்.

1. ஜப்பான் புக்குஸிமா அணுஉலை எரிபொருள் சேமிப்பு கிடங்கில் சுனாமியால் கடல் நீர் சென்றதால், ஏற்பட்ட மின்சார தடையால் நிகழ்ந்த விபத்தை தொலைக்காட்சியில் பார்த்த மக்களுக்கு நியாயமாக ஏற்பட்ட பயம் தான் முதல் காரணம்.

2. இயற்கை சீற்றங்களினால் அணுஉலை விபத்து ஏற்பட்டால், அதனால் கதிரியக்க வீச்சு ஏற்பட்டால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், அதனால் தைராய்டு கோளாறுகள், நுரையீரல் புற்று நோய், மலட்டுத்தன்மை போன்றவைகள் வரும் என்று மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

3. அணு சக்தி கழிவுகளை சேமித்து வைப்பது ஆபத்து, அணுசக்தி கழிவுகளை கடலில் கலக்கப்போகிறார்கள், அணுசக்தியால் உருவாகும் வெப்பத்தினால் உருவாகும் நீராவியினாலும், அணுசக்தி கழிவை குளிர்விக்க பயன் படும் நீரை மீண்டும் கடலில் கலந்தால் அதனால் மீன் வளத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றும். 500 மீட்டருக்கு மீன் பிடித்தலுக்கு தடை விதிக்கப்படும் என்றும், அதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், என்ற பயம் நிலவுகிறது.

4. அணு உலையில் எரிபொருள் மாதிரியை இரவில் நிரப்பும் பொழுது வழக்கமாக ஏற்படும் சத்ததால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு விட்டது.

5. அணு உலையில் இயற்கைச் சீற்றத்தாலோ, கசிவாலோ விபத்து ஏற்பட்டால், உடனடியாக அப்பகுதி மக்கள், 90 கிலோ மீட்டர் தூரம் 2 மணி நேரத்திற்குள் வெளியேற்றப்படவேண்டும் என்று சொல்கிறார்கள், சோதனை ஒட்டம் செய்து பார்க்கும் போது மக்களை உடனடியாக வெளியேற சொன்னதினால் மக்களுக்கு பயம் ஏற்பட்டு விட்டது. ஒருவேளை விபத்து நேர்ந்தால், சரியான சாலை வசதி, போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் , மக்கள் கதிர்வீச்சு ஆபத்து ஏற்பட்டால் தப்புவதற்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை, மக்கள் எப்படி தப்ப முடியும்.

6. 10000 பேருக்கு வேலை வாய்ப்பு செய்து தரப்படும் என்று கூறினார்கள், ஆனால் அந்த பகுதியை சேர்ந்த 35 பேருக்குதான் வேலைவாய்ப்பு தரப்பட்டுள்ளது, ஏன் வேலை வாய்ப்பை அளிக்கவில்லை

7. பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் வரும் என்று சொன்னார்கள், கடல் நீரை சுத்திகரித்து நல்ல தண்ணீர் கிடைக்கும் என்று சொன்னார்கள், இரண்டும் கிடைக்கவில்லை.

இது போன்று பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது, சரியான கேள்விகளும் உண்டு, மிகைப்படுத்தப்பட்ட கேள்விகளும் உண்டு ஆனால் இந்த கேள்விகளுக்கு சரியான பதிலை தரவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. மக்களின் மனதில் பய உணர்வை ஏற்படுத்திவிட்டு எவ்வித விஞ்ஞான முன்னேற்றத்தையும் மக்களுக்கான முன்னேற்றத்திற்கான வழியாக ஏறெடுத்துச்செல்ல முடியாது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லனை கிடையாது. காட்டாற்று வெள்ளமென வரும் அகண்ட காவிரியை தடுத்து நிறுத்த அந்தகாலத்து தொழில் நுட்பத்தை பயன் படுத்தி முதல் நூற்றாண்டில் (1 Century AD) கல்லனை கட்டினானே கரிகாலன். எப்படி முடிந்தது அவனால், வெள்ளமென வரும் காவிரியால் கல்லனையை உடைந்து மக்களின் பேரழிவுக்கு காரணமாகிவிடும் என்று நினைத்திருந்தாலோ, பூகம்பத்தால் அணை உடைந்து விடும் என்று கரிகாலன் நினைத்திருந்தால் கல்லனை கட்டியிருக்க முடியாது.

ஆயிரம் ஆண்டுகளாகியும் நம் கண்முன்னே சாட்சியாக இருக்கிறதே ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில். சுனாமியினால் கடல் கொண்டு அழிந்த பூம்புகார் போன்று, பூகம்பத்தின் காரணமாக, பெரிய கோவில் அழிந்து விடும் என்று நினைத்திருந்தால், தமிழர்களின் மாபெரும் கட்டிட கலையை உலகிற்கே பறைசாற்றும் விதமாக, எடுத்துக்காட்டாக இருக்கும் பெரிய கோவில் நமக்கு கிடைத்திருக்குமா.

ஹோமி பாபா முடியாது என்று நினைத்திருந்தால், கதிரியக்கம் மக்களைப் பாதித்திருக்கும் என்று நினைத்திருந்தால், இன்றைக்கு 40 ஆண்டுகளாக பாதுகாப்பான அணுமின்சாரத்தை 4700 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்திருக்க முடியாது, மருத்துவதுறையிலே கேன்சர் நோயால் அவதிப்படும் மக்களுக்கு ஹீமோதிரெபி அளித்திருக்க முடியாது, விவசாயத்தின் விளைபொருளின் உற்பத்தியை பெருக்கி இருக்க முடியாது. உலக நாடுகளே இந்தியாவை மதிக்கும் வண்ணம் அணுசக்தி கொண்ட ஒரு வலிமையான நாடாக மாற்றியிருக்க முடியாது. எனவே முடியாது என்று நினைத்திருந்தால், ஆபத்து என்று பயந்திருந்தால் எதுவும் சாத்தியப்பட்டிருக்காது.

ஏன் கதிரியக்கத்தை முதன் முதலாக பிட்ச் பிளன்ட் (two uranium minerals, pitchblende and torbernite (also known as chalcocite).) என்ற உலோகத்தை தன் தலையில் சுமந்து அதை பற்றி ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தாரே மேடம் மேரி க்யூரி. தனக்கே ஆபத்து அதனால் வரும் என்று தெரிந்தும் ஆராய்ச்சியின் நல்ல பயன் உலகத்திற்கு செல்ல வேண்டும் என்று, தொடர்ந்து ஆராய்ச்சி செய்து முதன் முதலாக கதிர்வீச்சிற்கு வேதியலிலும், கதிர்இயக்கத்திற்கு இயற்பியலிலும் 2 நோபல் பரிசைப்பெற்று, அந்த கதிரியக்கத்தாலேயே தன் இன்னுயிரை இழந்தாரே.

அதுவல்லவா தியாகம். தன்னுயிரை இழந்து மண்ணுயிரை காத்த அன்னையல்லவா மேடம் க்யூரி. இன்றைக்கு அந்த கதிரியக்கத்தால் எத்தனை கேன்சர் நோயாளிகள் ஹீமோதெரபி மூலம் குணப்படுத்தப்படுகிறார்கள், விவசாயத்திற்கு தேவையான விதைகளை கதிரியக்கத்தினை பயன்படுத்தி அதன் விளைச்சலை அதிகரிக்க முடிகிறதே. இன்றைக்கு அணுசக்தியினால் உலகம் முழுதும் 4 லட்சம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறதே. அதே போல் அணுசக்தியில் யாருக்கும் நாம் சளைத்தவர்கள் இல்லை என்று சாதித்து காட்டினோமே, அந்த வழியில் நண்பர்களே முடியாது என்று எதுவும் இல்லை.

முடியாது, ஆபத்து, பயம் என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. அப்படிப்பட்ட இயலாதவர்களின் கூட்டத்தால், உபதேசத்தால் வரலாறு படைக்கப்பட வில்லை. வெறும் கூட்டத்தால் மாற்றத்தை கொண்டுவர முடியாது. முடியும் என்று நம்பும் மனிதனால் தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது, மாற்றம் இந்த உலகிலே வந்திருக்கிறது.
இந்த உணர்வோடு, நாம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பையும், மக்களின் நியாயமான கேள்விகளையும், உண்மையான பயத்தையும் போக்கும் வகையில் ஒவ்வொன்றாக பார்ப்போம். அதாவது ஒரு அணுமின் நிலையத்தைப்பற்றியும் அதன் பாதுகாப்பை பற்றி நாம் முக்கியமாக பார்த்தோமேயானால், நான்கு பாதுகாப்பு விஷயங்கள் முக்கியமானவை.

1. Nuclear Criticality Safety - நீடித்த தொடர் அணுசக்தி கதிர்வீச்சினால் எதிர்பாராத விதமாக விபத்து நேர்ந்தால் அதில் இருந்து எப்படி பாதுகாப்பது என்பது பற்றிய தொழில் நுட்பம்

2. Radiation Safety - அணுக்கதிர் வீச்சுள்ள எரிபொருள்களை எப்படி கையாளுவது என்பது பற்றியும், உலக தரத்திற்கேற்ப அதை எப்படி எந்த முறையில் பாதுகாப்பாக உபயோகிப்பது என்பது பற்றிய வழிமுறை

3. Thermal Hydraulic safety - அணுஉலையில் எரிபொருளை குளிர்விக்கும் அமைப்பு மின்சார தடையால் இயங்கவில்லை என்றால், அதை எப்படி மின்சாரம் இல்லாமலேயே இயங்க வைத்து மாற்று மின்சாரம் வரும் வரை உருகி வெப்பநிலை கூடி வெடிக்காமல் தடுக்கும் அமைப்பை எப்படி மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புடன் இயக்குவது.

4. Structural integrity Safety? அணுஉலையும் அது தொடர்பான மற்ற அமைப்புகளின் கட்டமைப்பையும், அது அமைக்கப்பெறும் இடத்தின் வலிமையையும், இயற்கைப்பேரிடர் நேர்ந்தாலும் அதை எப்படி நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என்ற வழிமுறை

இந்த நான்கு அமைப்புகளும் முறையாக அமைக்கப்பட்டிருக்கிறதா, தரத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறதா என்று தான் முதலில் பார்க்கவேண்டும். கூடங்குளம் அணுஉலை பற்றிய எங்களது முக்கியமான முதல் ஆய்வின் படி இந்த நான்கு பாதுகாப்பு விதிமுறைகளும், சரியான விதத்திலே அமைக்கப்பட்டிருக்கிறது, அது சோதித்தும் பார்க்கப்பட்டிருக்கிறது, பரிசோதனையில் அது நன்றாக செயல்படுகிறது என்பது உறுதியாகி இருக்கிறது. 3வது பாதுகாப்பு கூடங்குளத்திற்காக ஏற்படுத்தப்பட்ட சிறப்பு பாதுகாப்பாகும். எனவே கூடங்குளம் மக்களுக்கு அணுஉலையின் பாதுகாப்பை பற்றி சந்தேகம் வேண்டாம். முறையான பாதுகாப்பு அனுமதியுடன் கூடக்குளம் அணுமின் நிலையம்.


ஒரு அணுஉலையை நிறுவுவதற்கு இடத்தை தேர்ந்தெடுக்கும் முன்பாக மிக கடுமையான தேர்வு முறை பின் பற்றப்படுகிறது. அந்த இடத்தில், அதாவது பூகம்பத்தின் விளைவுகள் எப்படி இருக்கும், அது எவ்வித பூகம்ப வரையரைக்குள் வரும், அதன் பூகோளத்தன்மை, அடிப்படை அமைப்பு, பூகம்பம் வந்தால் ஏதேனும் பாதிப்பு நிகழுமா இல்லையா, பாறைகளின் தன்மை எப்படி இருக்கிறது, சுனாமி வர வாய்ப்பு உண்டா, அப்படி வந்தால் அது எப்படி பட்ட தன்மையானதாக இருக்கும், வெள்ளம், மழை, பக்கத்தில் உள்ள அணைக்கட்டு உடைந்தால் அதனால் பாதிப்பு ஏற்படுமா, விமான நிலையம் பக்கத்தில் இருக்கிறதா இல்லையா, நச்சு மற்றும் வெடிக்கும் தன்மையுள்ள பொருள்கள பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்க இடம் இருக்கிறதா இல்லையா, இராணுவ அமைப்புகள் அருகில் உள்ளனவா, அந்த பகுதியில் சுற்றுச்சூழல் அமைப்பு எவ்விதம் அமைந்துள்ளது, கடல் உயிரனங்களின் வாழ்வாதாரம், தேவையான பரந்த நிலப்பரப்பு, தண்ணீர், மின்சாரத்தேவை இருக்கிறதா இல்லையா போன்ற பல்வேறு காரணிகளை ஆராய்ந்து தான் அணுஉலை அமைக்க ஒரு இடத்தை அரசு தேர்வு செய்கிறது. இதில் ஏதாவது ஒன்று குறை இருந்தால் கூட அந்த இடம் அணு மின்சார உற்பத்திக்கு ஏதுவான இடம் இல்லை என்ற முடிவுக்கு வந்து, அதற்கான அங்கீகாரம் கிடைக்காது.

எனவே அணுஉலை அமைக்கும் முன்பாகவே இத்தகைய அம்சத்தையும் ஆராய்ந்து பார்த்து முடிவு எடுத்த பின்புதான் கூடம்குளம் இடம் அணுஉலை அமைப்பிற்கான Environmental Impact Assessment (EIA),

அதாவது இந்த அணு உலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றத்தைப்பற்றி ஒரு மதிப்பீடு செய்யப்பட்டு, அதன் மூலம் பொதுமக்கள் மற்றும் அதன் தொடர்புடையோர் கருத்தரிந்து, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் 2006 ம் ஆண்டின் வழிமுறைப்படி தேவையான பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு அதற்கான AERB Code of Practice on Safety in Nuclear Power Plant Sitting வழிமுறைப்படி, இடம் தேர்வுக்கமிட்டியால் பரிந்துரைக்கப்பட்டு அரசு அதற்கு முறைப்படி அனுமதி கொடுத்துள்ளது. எனவே, அணுஉலை சம்மந்தமாக செய்யப்படும் எந்த ஒரு அனுமதியும் எவ்வித சந்தேகங்களுக்கும் இடம் கொடுக்காத வகையில் அரசு மிக கடினமான வரைமுறைகளுடன் நிறைவேற்றி இருக்கிறது. ஜப்பான் புக்குஸிமா விபத்திற்கு பிறகு பூகம்பமும், சுனாமியும் ஒன்று சேர்ந்து வந்தாலும் கூட கூடங்குளம் அணு உலை தாங்கும்.

தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பகுதி பற்றிய அச்சம் தேவையற்றது (Exclusion and sterilization zone)

அணுஉலையை சுற்றி 1.5 கிலோமீட்டர் தனிமைப்படுத்தப்பட்ட பாதுகாப்பான பகுதி, அங்கு தான் குடியிருப்பு தடைசெய்யப்பட்ட பகுதி, அந்த பகுதி அணுஉலைக்கான இடத்திற்குள்ளேயே வருவதால், அதற்கு வெளியே குடியிறுக்கும் மக்களை வெளியேற்றுவது என்ற கேள்விக்கு இடமில்லை.

இதற்கடுத்தாற்போல், வரக்கூடிய பகுதி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட பகுதியாகும். அங்கு ஏற்கனவே வசிக்கும் மக்கள் எப்பொழுதும் போல் இருக்க, அந்த மக்கள் தொகை பெருக்கம் இயற்கையாக வளர எவ்வித கட்டுப்பாடும் இல்லை. ஆனால் பாதுகாப்பு காரணம் கருதி அந்த பகுதியில் அதிகமான மக்கள் புதிதாக குடியேறுவது, அந்த 5 கிலோமீட்டர் பகுதிக்குள் புதிய தொழிற்சாலைகள் போன்றவை உருவாவது தான் கட்டுப்படுத்தப்பட வேண்டும், அதனால் அதிக மக்கள் குடியிருப்பு, அதாவது 20000 மக்கள் தொகைக்கும் மேல், அந்த பகுதியில் ஏற்படுத்தப்படக்கூடாது என்பது ஒரு வழிகாட்டு நெறிமுறை தானே தவிர, கட்டாயம் இல்லை.

அணுஉலையின் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சம்

ஆனால் கூடங்குளம் அணுஉலை மிகவும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதிகளோடு, 3ம் தலைமுறையை சேர்ந்த பாதுகாப்பு வசதிகள் இந்தியாவின் வலியுறுத்தலின் பேரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது Passive Heat Removal System (PHRS) என்பது ஏற்படுத்தப்பட்டுள்ளது, ஒரு வேளை சிக்கலான சூழ்நிலையில் மின்சாரம் தடைபட்டாலோ, குளிர்விக்கப்பட்ட நீர் கிடைக்க தடை ஏற்பட்டாலோகூட, உபயோகப்படுத்தப்பட்ட எரிபொருளை பாதுகாத்து வைக்க ஏதுவான வகையில் PHRS செயல்படும். அதாவது "thermo siphon effect" மூலம் பம்ப் செய்யாமலேயே, மின்சாரம் இல்லாமலேயே தண்ணீரை மேலே செலுத்தி குளிர்ஊட்டக்கூடிய வகையில் கூடங்குளத்திலே முதன் முறையாக இந்தியாவின் வலியுறுத்தலின் பேரில் இந்த தொழில் நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது.

அதற்கு மேலும், அணுமின் நிலையத்தின் எரிபொருளான மேம்படுத்தப்பட்ட யுரேனியம், சுற்றச்சூழலில் கதிர்வீச்சை வெளிப்படுத்தி விடாமல் இருக்கவும், உருகிவிடமால் தடுக்கவும், உருகும் தாதுக்களால் அணுஉலைக்குள்ளேயே ஏற்படும் கதிர்வீச்சையும் தடுக்கும் வகையிலும், கடும் விபத்து அணுஉலையில் ஏற்பட்டு அணு உலை எரிபொருள் உருகும் நிலை ஏற்பட்டால் கூட அதைத்தடுக்கும் வகையில் கோர் கேட்சர் "core catcher" என்ற தொழில் நுட்ப வசதியை கூடங்குளத்தில் ஏற்படுத்தி உள்ளார்கள். எரிபொருள் உருகி அணுஉலையின் அழுத்தக்கலனை (Reactor pressure vessel), மீறி வெளியேறினால், நீயுட்ரானை உறிஞ்சும் பொருளான (Boron) போரான் அதிக அளவில் உள்ள Matrix மேட்ரிக்ஸில் வந்து விழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. போரானுடன், எரிபொருளில் இருந்து கசியும் நீயுட்டரான் சேரும் பொழுது, அணுசக்தி தொடர் கதிரியக்க சக்தி செயல் இழந்துவிடும். இப்படிப்பட்ட மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு கொண்ட அணுமின் உலைதான் கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதை நான் என் கண்கூடாக கண்டு, விஞ்ஞானிகளுடன் விவாதித்து, உணர்ந்துள்ளேன்.

அதாவது 1.20 மீட்டர் கனமுள்ள சிமிண்டால் ஆன கான்கீரீட் வளையம் அமைக்கப்பட்டிருக்கிறது. விபத்து ஏற்பட்டாலும் கூட, வெளிப்புற சுற்றுச்சூழலில் கதிர்வீச்சை கசிய விடாமல் இருக்கும் படி, இந்த தடிமனான கான்கீரீட் வளையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. எதிர்பாராத சம்பவம் ஏதும் நிகழ்ந்து விட்டாலும் கூட, அணுஉலையைக் குளிர்விக்க ஒவ்வொரு அணுமின் நிலைய உலை கட்டித்திலும் மிகப் பெரிய ரசாயணக் கலவை கொண்ட 12 நீர் தேக்கக் தொட்டிகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன.

மின் சப்ளை துண்டிக்கப்பட்டு விட்டால், அதை எதிர் கொள்ள 6 மெகாவாட் மின் சக்தி கொண்ட 4 டீசல் ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒருவேளை ஏதிர்பாராத காரணத்தால் எரிபொருள் உருகி வழிந்தாலும், அதை உள்வாங்கிக்கொள்ள வசதியாக பல லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள தண்ணீர் தொட்டிகள் அணுமின் உலைக்கட்டிடத்தின் அடியில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர ஹைட்ரஜனை ஈர்த்துக்கொள்ள வசதியாக இரு அணுஉலைக்கட்டிடங்களிலும், தலா 154 ஹைட்ரஜன் ரீகம்பெய்னர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே அணுஉலைக்குள் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியை மீறி எவ்வித ஆபத்தும் மக்கள் வசிக்கும் பகுதிக்கு பரவாமல் தடுக்கக்கூடிய வகையில் தான் கூடங்குளம் அணுஉலை மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இது இன்றைக்கு உலகிலேயே இருக்கும் மேம்பட்ட பாதுகாப்பு வசதியை விட பன்மடங்கு பாதுகாப்பு மற்றும் தடுப்பாற்றல் கொண்ட அம்சம், எனவே பாதுகாப்பைப்பற்றிய அச்சம் மக்களுக்கு வேண்டாம். அதைப்பற்றிய கவலையை விட்டு விடுங்கள், அதைப்பற்றிய பயம் கூடங்குளம் பகுதி மக்களுக்கு வேண்டாம்.

பூகம்பத்தையும் தாங்கும் உபயோகப்படுத்தப்பட்ட எரிபொருள் பாதுகாப்பு கட்டிடம்

உபயோகப்படுத்தப்பட்ட யுரேனியம் எரிபொருளை பாதுகாத்து வைக்கும் சேம்பருக்கு 400 சதவிகிதம் மாற்று மின்சக்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அதுமட்டுமல்ல, மின்சாரம் தடைபடும் பட்சத்தில் டீஸல் மூலம் தொடர்ந்து நாட்கணக்கில், மாதக்கணக்கில் செயல்பட ஏதுவாக செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அணுஉலைக்கு உள்ளே பூமிக்கு கீழே 20 அடி ஆழத்தில், Spent Fuel Storage Pond (SFSP) கட்டப்பட்டுள்ளது, எனவே ஒவ்வொரு வருடமும் அதில் 54 எரிபொருள் கட்டமைப்புகள் அதன் உபயோகம் முடிந்த நிலையில் அணுஉலையில் இருந்து பிரிக்கப்பட்டு, அதில் புதிய எரிபொருள் கட்டமைப்புகள் அணுஉலையில் வைக்கப்படும்.

இந்த கட்டமைப்பு, 582 ஏரிபொருள் கட்டமைப்புகளை 8 வருடங்கள் வரை பாதுகாத்து வைக்க ஏதுவான வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நமது இந்திய யுரேனியத்தை 75 சதவிகிதம் மறுசுழற்சி முறையில் பயன் படுத்த கூடிய மேம்படுத்தப்பட்ட இந்திய தொழில் நுட்பம் நமது அணுமின் நிலையங்களில் உள்ளது. எனவே இதன் மூலம் 75 சதவீகிதம் நாம் மறு சுழற்சி மூலம் திரும்பவும் பயன்படுத்த இயலும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இந்த உபயோகப்படுத்தப்பட்ட எரிபொருள் வைக்கும் கட்டிடம் 6 ரிக்டர் ஸ்கேல் அளவுள்ள பூகம்பத்தை தாங்கும் சக்தி படைத்தது, அப்படியே பூகம்பம் ஏற்பட்டால் கூட இது தானாக பாதுகாப்பாக நின்றுவிடக்கூடிய வல்லமை பொருந்தியது. ஆனால் பூகம்ப வாய்ப்பு மிக குறைவுள்ள 2 ம் பகுதியான கூடங்குளத்தில் மிகப்பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு மிக மிக குறைவு.

அணுக்கழிவுகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது?

அணுஉலையில் உபயோகப்படுத்தப்படும் திடக்கழிவுகள் அதாவது காட்டன், கையுறைகள், மெயின்டன்ன்ஸ் ஸ்பேர் பார்ட்ஸ்கள், ரெஸின்கள் மற்றும் வென்டிலேஸனுக்கு அதாவது காற்றோற்றத்திற்கு தேவையான பைபர்கள். இந்த கழிவுகளை ஒருவேளை கதிர்வீச்சு தாக்கியிருந்தால் அதை மறுசுழற்சி செய்து அதை சிமிண்ட் உடன் கலந்து ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் ட்ரம்களில் அடைத்து அதை திட கழிவு வைப்பு கட்டிடத்திற்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்படும். இந்த கழிவைப்ப பாதுகாத்து வைக்கும் கட்டிடத்தில் 7 வருடங்களுக்கு பாதுகாத்து வைக்க இயலும்.

அதற்கு பின் மறு சுழற்சி செய்து அதை திரும்ப பயன்படுத்த இயலும். திரவக்கழிவுகளை திடக்கழிவுகளாக மாற்றி, மேற்கூறிய முறையில் பாதுகாக்க இயலும். எனவே அணுஉலைக்கழிவு என்பது கதிர்வீச்சை ஏற்படுத்தக்கூடிய எரிபொருள் அல்ல, அணுஉலையில் உபயோகப்படுத்தக்கூடிய மற்ற பொருள்கள் சார்ந்த கழிவுகள் என்பது தான். எனவே அணுக்ககழிவுகள் கடலில் கழக்கப்பட வில்லை.

சுற்றுச்சூழலில் கதிர்வீச்சு ஏற்படும் அபாயம் உண்டா?

கடந்த 40 வருட அணுஉலை அமைப்பில் இந்தியாவின் அனுபவத்தில், சுற்றுச்சூழலில் அணுக்கதிர்வீச்சு அணுஉலை அமைந்த இடத்திலோ, அதைச்சுற்றியுள்ள 30 கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள பகுதியிலோ, சுற்றுச்சூழலில் எப்பொழுதும் இருக்கும் இயற்கையான கதிர்வீச்சின் அளவை விட மிகுதியானதில்லை. அதன் அளவை தொடர்ந்து கண்காணித்து கொண்டு வருவது அணுமின் நிலையத்தின் வேலையில் ஒரு பகுதியாகும். எனவே கடந்த கால வரலாற்றில் கதிர்வீச்சின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவைக்காட்டிலும் குறைந்து தான் காணப்பட்டிருக்கிறது. கூடங்குளத்தை பொருத்தவரை மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சம் அமைக்கப்பட்டு இருப்பதால் சுற்றுச்சூழல் கதிர் வீச்சிற்கு உள்ளாகும் என்ற கேள்விக்கே இடமில்லை.

கடந்த 40 வருட அணுஉலை அமைப்பில் இந்தியாவின் அனுபவத்தில், சுற்றுச்சூழலில் அணுக்கதிர்வீச்சு அணுஉலை அமைந்த இடத்திலோ, அதைச்சுற்றியுள்ள 30 கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள பகுதியிலோ, சுற்றுச்சூழலில் எப்பொழுதும் இருக்கும் இயற்கையான கதிர்வீச்சின் அளவை விட மிகுதியானதில்லை. அதன் அளவை தொடர்ந்து கண்காணித்து கொண்டு வருவது அணுமின் நிலையத்தின் வேலையில் ஒரு பகுதியாகும். எனவே கடந்த கால வரலாற்றில் கதிர்வீச்சின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவைக்காட்டிலும் குறைந்து தான் காணப்பட்டிருக்கிறது. கூடங்குளத்தை பொருத்தவரை மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சம் அமைக்கப்பட்டு இருப்பதால் சுற்றுச்சூழல் கதிர் வீச்சிற்கு உள்ளாகும் என்ற கேள்விக்கே இடமில்லை.
மீன்வளத்திற்கு எவ்வித ஆபத்தும் இல்லை

அணுமின் நிலையத்தில் குளிர்ந்த தண்ணீர் தேவை என்பது தெரிந்த ஒன்றுதான். அணுஉலையில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு நீராவி வேண்டும், அதற்கு தண்ணீர் தேவை. நீராவியை திரும்பவும் குளிரூட்டவும் தண்ணீர் தேவை. இந்த உபயோகத்திற்கு பின், அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீர், கடல் நீரின் வெப்பத்தைவிட 5 டிகிரி சென்டிகிரேட் கூடுதலாக இருக்கும், இது வரையறுக்கப்பட்ட அளவான 7 டிகிரி சென்டிகிரேடுக்கும் கீழ் தான் இருக்கிறது என்று ஆய்வு முடிவுகள் கூறுகிறது.

இதனால் மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படாது, கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது, இந்த சோதனையை 7 பல்கலைக்கழகங்கள், National Institute of Oceanography (NIO), Central Electro Chemical Research Institute (CECRI) போன்றவைகள் சோதனை செய்து, கடலில் கலக்கும் அணுஉலையின் நீரால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று உறுதி செய்திருக்கிறது. இதுவரை தாரப்பூர், கல்பாக்கம் அணுஉலைகள் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது, அதனால் மீன் வளத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட வில்லை. எனவே அணுமின் நிலையத்தின் நீர் கழிவுகளால் எவ்வித வெப்ப மாறுபாட்டாலோ எவ்வித பாதிப்பும் மீன்வளத்திற்கு ஏற்பட வாயப்பில்லை. கடலோரத்தில் உள்ள அனைத்து அணுஉலகளின் ஆய்வின் படி மீன் வளம்பாதித்தாகவோ, அதனால் மீனவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்றோ ஆய்வறிக்கை சொல்லவில்லை. மீன் வளம் குறையாமல் இருக்க பாதாள சாக்கடை கழிவுகளை சுத்தப்படுத்தி தான் கடலில் கலக்கவேண்டும். அதுதான் மிகவும் முக்கியம்.

பூகம்பம் மற்றும் சுனாமி

அடுத்ததாக கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ள இடம், பூகம்பம் வர வாய்ப்புள்ள இடம் என்ற வாதம் வைக்கப்படுகிறது. பூகம்ப அதிர்வுகள் அந்த பகுதியில் ஏற்பட்டு இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால் பூகம்பப்பகுதி என்று சொல்லப்படுகிற Earthquake Zone 2ல் வருகிறது கூடங்குளம்.

இதுவரை உலக வரலாற்றில் Earthquake Zone 4க்கும், அதற்கும் மேம்பட்ட பூகம்ப பகுதிகளில்தான் பூகம்பத்தின் தாக்கம் ரிக்டர் அளவில் 6க்கும் அதற்கும் மேல் வந்து அழிவுகள் ஏற்பட்டிருக்கிறது. Earthquake Zone 2ல் பூகம்பம் வந்து அதனால் பேரழிவுகள் நிகழ்ந்திருக்கிறது என்பதற்கான வரலாறு இல்லை. அதனுடைய லேசான அதிர்வுகளின் தாக்கம், பூகம்பத்தின் விளைவுகளால் உணரப்படுமே தவிர மிகப் பெரிய பூகம்பம் வந்து கூடங்குளத்தை அழித்து விடும் என்ற கூற்றில் எள்ளளவும் உண்மையில்லை. இந்தியாவிலே Earthquake Zone 4க்கும் மேற்பட்ட பகுதிகளில் தான் பூகம்பம் வந்துள்ளது.

இன்றைக்கு இந்தியாவிலே Earthquake Zone 4லே இருக்கக்கூடிய பகுதிகளிலே பூகம்பம் வந்தால் மிகப்பெரிய அடுக்குமாடி வீடுகள், கட்டிடங்கள் அந்த பூகம்ப கோட்டிலே இருந்தால் அவைகள் பூகம்பத்தால் பாதிக்காதவகையில் எழுப்பப்படும் கட்டிடம் என்ற வரையறைக்குள் கட்டப்பட வில்லை என்றால், அது பாதிப்பில் இருந்து தப்ப முடியாது. அதைப் பாதுகாக்க எவ்வித வழிமுறையும் இந்தியாவில் இல்லை. அது தான் உண்மை. ஆனால் தமிழ் நாட்டிலே அமைந்துள்ள கல்பாக்கம், கூடங்குளம் அணுஉலைகள், Earthquake Zone 2ல் வருவதாலும், பூகம்பத்தால் பாதிக்காதவகையில் எழுப்பப்படும் அடிப்படை கட்டமைப்பு என்ற வரையறைக்குள் கட்டப்பட்டுள்ளதாலும், 6 ரிக்டர் ஸ்கேல் மற்றும் அதிகப்படியான (0.15g Acceleration) வரை உள்ள பூகம்பத்தையே தாங்கும் வலிமையுடன் கூடங்குளம் அணுமின் நிலைய கட்டமைப்பு அமைந்துள்ளது.

இந்த பரிசோதனை பண்புகளின் அடிப்படையில், இதை பரிசோதனை செய்து பார்த்ததில் கூடங்குளம் அதற்கு மேல் அதிர்வை கூட தாங்கும் வல்லமையுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை கூடங்குளத்தில் இருந்து 88 கிமீ க்கு அப்பால் உள்ள திருவனந்தபுரத்திற்கு அருகில் 4.3 ரிக்டர் ஸ்கேல் வரை 2 தடவை பூமி அதிர்வு ஏற்பட்டுள்ளது, இது தான் அதிகப்படியான நிகழ்வு. இது வழக்கமான ஒன்றுதான். எனவே பூகம்பத்தால் Earthquake Zone 2ல் உள்ள கூடங்குளம் அணுஉலை பாதிப்புக்குள்ளாகும், அதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்தில் சுத்தமாக வலுவில்லை.

தமிழகத்தை 2004 ஆம் ஆண்டு தாக்கிய சுனாமி போன்ற இயற்கை பேரிடர் தனியாக வந்தாலோ, ஜப்பான் போன்று பூகம்பமும், சுனாமியோ சேர்ந்து வந்தாலோ, அப்பொழுது கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஆபத்து ஏற்படும் என்ற கருத்து, ஜப்பான் புக்குஸிமா டெயிச்சி அணுமின் நிலைய விபத்திற்கு பின் பரவலாக காணப்படுகிறது. அதாவது ஜப்பான் புக்குஸிமா டெயிச்சி அணுஉலை முதல் தலைமுறையை சேர்ந்த 40 ஆண்டு கால பழமை வாய்ந்த அணுஉலை. இக்கால சூழ்நிலைக்கேற்ப, அதன் பாதுகாப்பை மேம்படுத்தாதாலும் , பூகம்பம் அடிக்கடி ஏற்படும் ஜப்பானில், சுனாமியும் சேர்ந்து வந்ததால், 8 மணி நேரத்திற்குள் மாற்று மின் சக்தியை, சுனாமியினால் ஏற்பட்ட குழப்பத்தால், போக்குவரத்து தடையின் காரணமாக, அந்த குறிபிட்ட காலகட்டத்திற்குள் கொடுக்க இயலாத சூழ்நிலையினால் அந்த விபத்து ஏற்பட்டது.

கூடங்குளத்தை போன்று, மேலே குறிப்பிட்ட படி மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு கூட தேவையில்லை, சுலபமாக உபயோகப்படுத்தப்பட்ட எரிபொருள் சேமித்து வைக்கப்பட்ட அந்த நிலையத்தை குளிர்வூட்ட போதுமான மின்சாரத்தை தடையில்லாமல் கிடைக்கக்கூடிய வசதியை செய்திருந்தாலே, அந்த புக்குஸிமா எரிபொருள் சேமிப்பு கிடங்கு விபத்தில் இருந்து தப்பியிருக்க வாய்ப்பு இருந்திருக்கும். 1986ல் செர்னோபில்லில் நடைபெற்ற விபத்திற்கும், 2011ல் ஜப்பானில் நடைபெற்ற புக்குஸிமா விபத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம். அதில் இருந்த வெளிப்பட்ட கதிர்வீச்சு, செர்னோபிலில் வெளிப்பட்ட கதிர்வீச்சைக்காட்டிலும் 0.4சதவிகிதம் குறைவு, அது எவ்வித கதிர்வீச்சு சார்ந்த பாதிப்பையும் மக்களுக்கு ஏற்படுத்த வில்லை. எனவே தான், 11 மார்ச் 2011 ல் ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியினால் ஏற்பட்ட இயற்கை பேரழிவில், கதிர்வீச்சினால் ஒருவரும் பாதிக்கப்படவில்லை.

எனவே முதல் தலைமுறையை சேர்ந்த ஜப்பான் புக்குஸிமா வையும், அதைவிட பல்வேறு வகைகளில் மேம்படுத்தப்பட்ட 3ம் தலைமுறையைச் சேர்ந்த கூடங்குளம் அணுமின் நிலையத்தையும் ஒப்பீடு செய்வது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மக்களின் விழிப்புணர்வுக்காக நடத்தப்படும் பயிற்சி என்பது இந்தியாவிற்கு புதிதல்ல. பல்வேறு ஏவுகணைக்காகவும், செயற்கைக்கோள் ஏவுவதற்கும், சுனாமி, பூகம்பம், தீ விபத்து போன்ற வற்றில் இருந்து எப்படி மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற பயிற்சி கண்டிப்பாக வேண்டும்.

பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு வெளிப்படுத்துவது இன்றியமையாதது, அதையே மக்களை பயமுறுத்தும் ஆயுதமாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள இயலாது. எப்படி, தீவிபத்திலிருந்து மீள்வது, என்பதற்கு என்றென்றும் பயிற்ச்சி அளிக்கப்படுகிறது.

2004 ல் ஏற்பட்ட சுனாமி 1300 கிலோமீட்டருக்கு மேல் நாகபட்டினத்திற்கு கிழக்கே (SUNDA ARC) சுந்தா ஆர்க் என்ற இடத்தில் அமைந்துள்ளது. எனவே தான் நாகபட்டினத்தை, சென்னையை, கல்பாக்கத்தை நேரடியாக தாக்கிய சுனாமி, கன்னியாகுமரியையோ, கூடங்குளத்தையோ, இராமேஸ்வரத்தையோ தாக்கவில்லை. அதன் தாக்கம் வீரியம் குறைந்ததால் மிகுந்த சேதத்தை விளைவிக்கவில்லை. அப்படியே தாக்கினாலும், கல்பாக்கம் அணுஉலை பாதுகாப்பிற்கு எந்த பங்கமும் வரவில்லை, அது பாதுகாக்கப்பட்டது என்பது நாம் கண்கூடாக கண்ட உண்மை.

கூடங்குளத்தை பொருத்தவரை, அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதி கிட்டத்தட்ட சுனாமிஜெனிக் பால்ட் (tsunamigenic fault)என்று சொல்லப்படுகிற சுனாமியை எழுப்பக்கூடிய பூமி பிளவு ஏற்படக்கூடிய பூகம்ப பகுதி 1500 கிலோமீட்டர்க்கு அப்பால் சாகோஸ் ரிட்ஜ் (Chagos Ridge) என்று கன்னியாகுமரிக்கு கீழே தென் மேற்கே அமைந்துள்ளது. எனவே கூடங்குளத்தை நேரடியாக சுனாமி தாக்க வாய்ப்பு என்பது பூகோள ரீதியாகவும் இல்லை, அறிவியல் சார்ந்தாகவும் அமைய வில்லை.

அப்படி சுனாமி ஏற்படும் பட்சத்தில், கூடங்குளத்திற்கு அதன் பக்க அலைகள் தான் வலுவிழந்து வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே ஜப்பானில் ஏற்பட்டது போன்ற இராட்சத அலைகள் வந்து கூடங்குளத்தை தாக்குவதற்கு வாய்ப்பு இல்லை. நேரடியாக தாக்கவேண்டுமானால், கூடங்குளத்திற்கு கிழக்கே உள்ள 1300 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள SUNDA ARC பகுதியில் பூகம்பம் ஏற்பட்டு, இலங்கை இடையே இருப்பதால் கூடங்குளம் சுனாமியால் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை.

ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டால் கூட ஒருவேளை அதையும் மீறி சுனாமி வந்தால் 2004 சுனாமி போல் இல்லை அதை விட அதிக சக்தி வாய்ந்த சுனாமி வந்தாலும், அதன் அலையின் தாக்கம் அதிகபட்சமாக 5.44 மீட்டர் வரை எழும்பும் என்று கணிக்கப்படுகிறது. ஆனால் கூடங்குளம் அணுமின் நிலையமோ, நீர் மட்டத்தில் இருந்து 7.65 மீட்டருக்கு மேல் தான் அமைக்கப்பட்டுள்ளது. அந்த உயரத்தில் 6 பம்ப் ஹவுஸூம், 8.1 மீட்டர் உயரத்தில் டர்பனும், 8.7 மீட்டர் உயரத்திற்கு மேல் அணு உலையும், 9.3 மீட்டர் உயரத்திற்கும் மேல் ஜெனரேட்டர்களும், 13 மீட்டர் உயரத்திற்கு மேல் ஸ்விட்ச் யார்டும் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் கூடங்குளம் அணுமின் நிலையம் சுனாமியால் பாதிக்கப்படும் நிலை உண்டாக வாய்ப்பே இல்லை என்பது தான் உண்மை.

எனவே, பூகம்பமோ, சுனாமியோ, அல்லது ஜப்பானில் நடந்தது போல் சுனாமியும், பூகம்பமும் சேர்ந்து வருவதற்கு வாய்ப்பில்லை என்றாலும், அப்படியே வந்தாலும், கூடங்குளம் அணுஉலை பாதிப்படையவோ, விபத்து ஏற்படவோ எவ்வித வாய்ப்பும் இல்லை என்பது தான் உண்மை.
கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது, அச்சம் வேண்டாம்

எனவே கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுஉலை மிகவும் பாதுகாப்பான இடத்தில் அமைந்துள்ளது, 6 ரிக்டர் ஸ்கேல் அளவுள்ள பூகம்பம் Earthquake Zone 2ல் வர வாய்ப்பில்லை என்றாலும் கூட, ஒருவேளை அப்படி வந்தாலும், அது 6 ரிக்டர் ஸ்கேல் அளவுள்ளதாகவும், 0.6ஜி அதிர்வுள்ளதாக இருந்தாலும் தாங்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது, ஒருவேளை பூகம்பமோ, சுனாமியோ ஏற்பட்டால் கூட 3 நிமிடங்களுக்குள் மொத்த அணுஉலையும் நிறுத்தப்பட்டு விடும் திறன் கொண்டது, மின்சாரம் தடைபட்டாலும் உபயோகப்படுத்தப்பட்ட எரிபொருளை குளிர்விக்கும் கண்டெய்னர்களுக்கு 400% மாற்று மின்சார ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அவை சுனாமி வந்தாலும் பாதிக்காத உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது, பல்வேறு வகைகளில் மின்சாரம் தடைபட்டாலும், தொடர்ந்து இயற்க்கையாக குளிர்விக்கும் வகையில் Passive Heat Removal System (PHRS) அமைக்கப்பட்டுள்ளது, ஒருவேளை கசிவு ஏற்பட்டாலும் கூட கோர் கேட்சர் அவற்றை அணுஉலைக்குள்ளேயே போரான் மூலம் செயலிழக்கச்செய்து விடும். எனவே கதிர்வீச்சு அணுஉலையை விட்டு வெளியே வரும் என்றோ, செர்னோபில் போல் அணுஉலை கசியும் என்றோ, புக்குஸிமா போல் விபத்து நிகழும் என்றோ கவலை இல்லை. அதனால் சுற்றுச்சூழலில் கதிர்வீச்சு பரவும் அபாயம் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே கூடங்குளம் அணுஉலை உலகத்திலேயே ஒரு மேம்படுத்தப்பட்ட சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட அணுஉலை. எனவே அறிவார்ந்த முறையில் ஆய்வு செய்த பொழுது, மக்கள் மனதில் எழும்பிய நிஜமான பயம், அணுவிஞ்ஞானிகளாலும், இன்றும் பல ஆராய்ச்சியாளர்களாலும் ஆராயப்பட்டு அந்த பயங்களுக்கு சிறு நூலிலை இடம் கூட கொடுக்காமல் அமைக்கப்பட்டுள்ளது. கோடிகணக்கான பொருள் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டம் மக்களின் தேவைவை பூர்த்தி செய்யவேண்டியே அன்றி ,ஆபத்தை உண்டாக்க அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே கூடங்குளம் அணு உலை தேவையே என என் கருத்தை பதிவு செய்கிறேன்.

« Last Edit: February 13, 2012, 07:12:51 PM by micro diary »

Offline RemO

நன்றி செல்வன் மற்றும் Microdiary உங்களுடைய கருத்துகளை தெளிவாக கூறியிருக்கிறீர்கள். உங்கள் இருவரின் மூலம் பலவற்றை நான் தெரிந்து கொண்டேன்.

நானும் இங்கு என்னுடைய கருத்துகளை கூற விரும்புகிறேன்
எனக்கு இந்த கூடங்குளம் மின் நிலையத்தை பற்றி உண்மையான விவரங்கள் தெரியாது. இது பாதுகப்பனதா,இயற்கை சீற்றங்களை தாங்கும் திறன் கொண்டதா,இல்லை அணு மின்  நிலையங்களுக்கு தேவையான பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளதா என்று எதையும் நான் அறியேன்.ஏனென்றால் மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்க்கும் ஊடகங்கள்  ஒவ்வொன்றும் பல பல வேறு பட்ட தகவல்களை கூறுவதால் எது உண்மை என எனக்கு குழப்பம் தான்.
இங்கு செல்வன் மற்றும் microdiary கூறிய கருத்துகள் கூட ஊடகங்கள் மூலமாக வந்த செய்தியாக தான் இருக்கும் என நினைக்கிறன்.

இன்று தமிழகத்தின் மின் தட்டுபாட்டை விரைவில் பூர்த்தி செய்ய வேண்டியது அவசியம்
இன்று மின் தட்டுபட்டால் தமிழகம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
படிக்கும் மாணவர்கள் கூட தேர்வுக்கு படிக்க முடியாத நிலையில் தேர்வை கூட Generator கள் மூலமாக நடத்த வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது தமிழகம்.
பல மாணவர்களின் எதிர்காலத்திற்கே இந்த மின்தடை பெரும் பிரச்சனைதான்
இந்த மின்தட்டுபட்டால் பல நெசவாளர்கள் தங்களது தறியை விற்று உண்ண வேண்டிய நிலையில் உள்ளனர்.
சிறு தொழில் புரிவோரும் அறிவிப்பின்றி வரும் மின்தடையால் அவஸ்தை படுகின்றனர்
பல தொழிற்சாலைகள் முடங்கயுள்ளன அதனால் தொழிற்சாலைகளில் தினக்கூலியாக வாழ்க்கை நடத்துவோர் பட்டினி கிடக்க வேண்டிய நிலை
விவசாய தொழிலும் இந்த மின்தட்டுபட்டால் பாதிக்க  பட்டுள்ளது,விவசாயத்திற்கு கிடைக்கும் மின்சாரமும் தினமும் 1மணி நேரம் கிடைத்தால் பெரிய விஷயம் என்றாகி  விட்டது அந்த 1மணி நேரமும் எப்போதென தெரியாமல் கிடைக்கும் போது பயன்படுத்தி வயல்களுக்கு நீர் பாய்ச்சி,கால்நடைகளையும் பராமரிப்பது மிக கடினமாக உள்ளது. இதனாலேயே பல விவசாயிகள் விளை நிலங்களை குடிமனை ஆக்கவோ,பள்ளி கல்லூரிகள் கட்டவோ விற்று விட அவலமும் தமிழ் நாட்டில் இன்று அதிகம்.

பின்னாளில் என்றாவது இயற்கை சீற்றம் வந்தால் இந்த கூடங்குளம் மின் நிலையத்தால் பல உயிர் சேதம் வரும் என அஞ்சி அதை வேண்டாம் என்று கூறிவிட்டு இப்படி பல உயிர்கள் பட்டினியால் சாவது சரிதானா 

அணு  உலைகள் ஆபத்தானது என்றும் எங்கோ நடந்த விபத்தை காட்டி அது போல்  நடந்தால் என எண்ணுவதை விட்டுவிட்டு ஆபத்தை குறைக்கும் பாதுகாப்பு  நடவடிக்கைகளை எடுத்தால் நல்லதுதானே

எங்கோ ஒரு விமானம் விபத்துக்குள்ளானதால் விமான பயணமே வேண்டாம் என கூறி விட முடியுமா??

சுனாமி வர வாய்புகள் அதிகம் என ஜப்பான்,இந்தோனேசிய மக்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டனரா?? இல்லையே அதை எதிர்த்து வாழ தானே பழகி கொண்டனர்.

இயற்கை சீற்றங்கள் வரும் போது அணு உலைகள் ஆபத்தானது என்பதை ஏற்று கொள்கிறேன் ஆனால் இன்று தெரிந்தே பல பேர் பட்டினியில் இருப்பதை விட, கண் முன்னே விவசாயம் அழிவதை விட பல தொழில்களும் தொழிலர்களும் அழிவதை காட்டிலும் வர போகும் ஆபத்தை தடுக்க தேவையான பாதுகாப்பை ஏற்படுத்தி பலாயிரம் கோடி செலவில் உருவான மின் நிலையத்தில் உற்பத்தியை தொடங்குதல் மேல் என்பது என் கருத்து


Offline Yousuf

நன்றி செல்வன், டைரி, ரெமோ! உங்களுடைய கருத்துக்களை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்! நானும் என்னுடைய கருத்தை பதிவை உங்களை போல சிறப்பாய் பதிவு செய்ய முயற்சிக்கிறேன்.

என்னுடைய கருத்துகளை மட்டுமே சொல்ல ஆசை படுகிறேன் நண்பர்களின் கருத்துகளை விமர்சனம் செய்ய விரும்ப வில்லை.

அணுமின் நிலையத்தை பற்றிய ஆபத்துக்களை நண்பர் செல்வன் தெட்ட தெளிவாக விளக்கி விட்டதால் மற்ற விடயங்களை பற்றி நான் கூற விரும்புகிறேன்.

தற்போது தமிழகத்தின் மூலை முடுக்குகளிளெல்லாம் மின்வெட்டு சிக்கல் பற்றி பொதுமக்களால் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கோடிக்கணக்கான ரூபாய் வாரி இரைத்து பெறப்படும் மின்சாரம் எங்கே என்ற கேள்வி எழுவது இயல்பே.

 பொதுவாக, நடுவணரசின் அனல்மின் நிலையம் ஆனாலும் சரி, அணுமின் நிலையமானாலும் சரி, எந்த மாநில எல்லையில் அமைந்துள்ளதோ, அம்மாநிலத்திற்கு அம்மின் நிலையத்தினால் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 30 விழுக்காடு மட்டும் தான் வழங்கப்படும். மீதியுள்ள மின்சாரம் நடுவண் மின்தொகுப்பிற்கும், அண்டை மாநிலங்களுக்கும் வழங்கப்படும்.

குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் தமிழ்நாட்டிற்கு 30%, ஆந்திராவிற்கு 19%, கர்நாடகாவிற்கு 14%, கேரளாவிற்கு 10%, புதுச்சேரிக்கு 5%, என்.எல்.சி. நிறுவனத்திற்கு 7%, நடுவண் மின்தொகுப்பிற்கு 15% என பகிர்ந்தளிக்கப்படுகிறது.


 நடுவணரசின் சதியால் தன் மண்ணில் உற்பத்தியாகும் மின்சாரத்தையெல்லாம் அண்டை மாநிலங்களுக்குக் கொடுத்துவிட்டு, இருளில் தவித்துக்கொண்டிருக்கிறான் தமிழன்.

 நம் தாய்த்தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தை நடுவணரசால், பன்னாட்டு - வடநாட்டு தனியார்த் தொழில் நிறுவனங்களுக்கு மானிய விலையில், தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதால் தான் ரூ.42 ஆயிரம் கோடி வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. (நன்றி: தென் ஆசியச் செய்தி - பிப்ரவரி 2012) நம்மிடமிருந்து மின்சாரத்தைப் பெறும் அண்டை மாநிலங்களில் மின் தடை அமுலில் இல்லை. ஆனால் நாமோ இருந்த மின்சாரத்தை இழந்துவிட்டு இருளில் அல்லல்படுகிறோம்.

 மேலும், பன்னாட்டு நிறுவனங்களின் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க அரசு வழிவகை செய்திருக்கிறது. பன்னாட்டு மற்றும் தனியார் நிறுவனங்கள் நம்முடைய மின்சாரத்தில் குளிர்சாதன அறைகளில் இருந்துகொண்டு கொண்டாட்டம் போட்டு வருகின்றன.

இன்றைய சூழலில் நிலவும் மின் சிக்கலுக்கு, கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்களில் போராட்டமே காரணம் என்ற மாயையை மக்களிடத்தே உருவாக்க, சமீப காலங்களில் அளவுக்கு அதிகமாக - வழக்கத்துக்கு மாறாக மின்வெட்டு செய்து, கூடங்குளம் போராட்டத்தை பாமர மக்களைக் கொண்டே எதிர்ப்புத் தெரிவிக்க வைக்கும் படுமோசமான நயவஞ்சகச் செயலைச் செய்து வருகிறது தமிழக அரசு.

 கடந்த உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி, கூடங்குளத்துக்கு எதிப்புத் தெரிவிப்பது போல பம்மாத்து செய்த முதல்வர், தேர்தல் முடிந்ததும் மத்திய அரசுக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.
 
 மன்மோகன் சிங்கின் மற்றும் நாராயணசாமிகள் விடும் 'பொய்களை' உண்மையென நம்பிக்கொண்டு மெத்தப் ‘படித்த மேதாவிகள்’ சிலர் கூடங்குளம் அணு உலையைத் திறந்தால், உடனே தமிழகம் மின்ஒளியில் மிளிரும் என்று பேசிக்கொண்டு திரிகிறார்கள். அவர்கள் ஒரு செய்தியைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டின் தற்போதைய மொத்த மின் தேவை, நாளொன்றுக்கு 11,000 மெகா வாட்; இதில் 2500 மெகா வாட் பற்றாக்குறை. தற்போது இது 4000 மெகா வாட்டாக உயர்ந்துள்ளது. (நன்றி : இந்தியா டுடே - அக்டோபர் 2011)

 ஆனால், நீங்கள் சொல்கிறபடி கூடங்குளம் அணு உலை செயல்படத் தொடங்கினால், அதிலிருந்து சுமார் 963 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்; அதில் மின்கசிவின் மூலம் ஏற்படும் இழப்பு 173 மெகா வாட்; மீதியுள்ளது 790 மொகா வாட். இதில் அணு உலை அமைந்துள்ள தமிழகத்திற்கான ஒதுக்கீடு (30%) வெறும் 237 மெகா வாட். இது தமிழகத்தின் தற்போதைய 2% மின் தேவையைக் கூட பூர்த்தி செய்யாது. மீதியுள்ள 553 மெகா வாட் மின்சாரம் யாருக்கு என்ற ஐயம் எழலாம்.

 மீதியுள்ள மின்சாரம், நம்மைப் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் தில்லி ஏகாதிபத்தியத்திற்கும், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை காலில் போட்டு மிதித்து, தமிழகத்தின் முல்லைப் பெரியாறு நீர் உரிமையை மறுக்கும் மலையாள இனவெறி கேரள அரசுக்கும், காவிரியாறு மற்றும் பாலாற்று நீர் உரிமையை மறுக்கும் முறையே கர்நாடகா மற்றும் ஆந்திராவிற்கும் நம் இனத்தைக் கூட்டோடு அழித்த இலங்கைக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் செல்லவிருக்கிறது. அவர்கள் நம் உயிருக்கு உலைவைக்கும் கூடங்குள அணு மின்சாரத்தைப் பயன்படுத்தி குதூகலிக்க இருக்கிறார்கள்.


 தில்லி அரசு, கூடங்குளம் அணு உலையைத் திறப்பதில் காட்டும் முனைப்பைப் பார்த்தே தெரியவில்லையா கூடங்குளம் யாருடைய நலனுக்கானதென்று?

 அன்பார்ந்த “படித்த” பெருமக்களே, இப்போது சொல்லுங்கள்; நம் தாய்த் தமிழகத்திற்குப் பேராபத்தை ஏற்படுத்தும் கூடங்குளம் மரண உலை நம்மண்ணில் தேவைதானா?.

 தற்போதைய பெரும் மின்பற்றாக்குறைக்கு பெருமாநல்லூர் (பி.பி.என்.) ஜி.எம்.ஆர். வாசவி, மதுரை பவர், சாமல்பட்டி போன்ற தனியார் மின் நிறுவனங்கள், மின்வாரியத்தில் இருந்து தங்களுக்குச்சேர வேண்டிய நிலுவைக்காக உற்பத்தி நிறுத்தம் செய்து வருவதும் பன்னாட்டு நிறுவனங்களும், ஒழுங்குமுறை ஆணையமும், தில்லி அரசுமே காரணமாகும்.

 மின்சாரமின்றி அன்றாடம் பகலிலும், இரவிலும் அல்லலுக்கு உள்ளாகும் தமிழக மக்களின் மின் தட்டுப்பாட்டைத் தீர்க்க, வாரியத்திற்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்திய தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுத்து, தேவையற்ற நட்டத்தை நிறுத்த வேண்டும். பன்னாட்டு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சலுகை விலையில் தடையற்ற மின்சாரம் வழங்குவதை நிறுத்த வேண்டும். நம் மண்ணில் உற்பத்தி செய்யப்படும் நெய்வேலி உள்ளிட்ட மின் நிலையங்களின் மின்சாரம் அண்டை மாநிலங்களுக்கு அளிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்.

  தமிழகத்தின் மின் தட்டுப்பாடு என்பது, தனியார்மயம் மற்றும் உலகமயத்தோடு தொடர்புடையதாக உள்ளது. எனவே, தனியார்மயம் மற்றும் உலகமயத்திற்கு எதிராக மக்களின் கரங்கள் உயர்ந்தால் தான் தமிழகத்தை பீடித்துள்ள 'இருள்' விலகும்.

எனக்கு இறுதி கருத்து கூடங்குளம் அணுமின் நிலையத்தால் பயனடயப்போவது தமிழர்கள் அல்ல மாறாக நமது உரிமைகளை மறுக்கு அண்டை மாநிலத்தவர்கள் தான் என்பதை பதிவு செய்து கூடங்குளம் அணுமின் நிலையத்தால் ஆபத்து உள்ளது.

மனித நேயம் மிக்க யாரும் இந்த மரண உலையை சரி காண மாட்டர்கள். மேலும் தமிழகத்து எந்த பலனும் அளிக்காத ஆபத்தை மட்டுமே விளைவிக்க கூடிய அணு உலை நமக்கு தேவை இல்லை என்பது தான் என் கருத்து!