Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 239  (Read 2195 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 239
இந்த களத்தின்இந்த  நிழல் படம்   FTC Team சார்பாக        வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


Offline Raju

  • Jr. Member
  • *
  • Posts: 84
  • Total likes: 253
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am the Perfect version of me !!
அடர் இருளின்
அருள் ஜோதியென
அடர்ந்து ஒளிர்ந்த
மதி...

அங்கொன்றும்
இங்கொன்றுமாய்
அசைந்த நட்சத்திரங்கள்
அணிவகுப்பாயிருக்குமோ..

அசையும் நகர்வில்
ரிதங்களை கோர்த்து நகர்ந்த
இசையருவி..
ஒர் பெண்ணின்
நளினத்தை
ஒத்திருந்தது...

ஒர் பிறத்தலின்
அர்தமும்
வாழ்தலின்
நிர்ப்பந்தமும்
எண்ணத்திலிருந்து
கடந்தவண்ணம்..

நீ இல்லாமலும்
இனிக்கிறது
இந்த இரவு
இயற்கையால்...
நீ அருகிருந்தால்
உனையும்
அணைத்திருப்பேன்
என் இரு கண்ணால்....

Offline MoGiNi

உன் விலகுதல்கள்
நினைவுகளால்
நிரப்பப் படுகிறது ..
அதன் நிறைதலிலும்
வழிதலிலும்
உடைந்து சிதறுகிறது
புன்னகை பூக்கள் .

ஓர் நிலாக் கால
வெகு தூர பயணத்தில்
அமானுஷ்ய கணங்களாக
உன் பிரிவுகள் சுமந்து
நகர்கிறது பொழுது ..

அடிக்கடி
நினைவுகள்
கிள்ளிப்பார்கிறது
வாழ்தலின் நிச்சயத்தை
உன் விலகுதலிலும்
உயிர் வாழ்கிறதா என ..

உன் உறக்கங்களை
மௌனமாய் ரசிக்கிறேன்
ஒரு நிலவென நுழைந்து
நிறைகிறாய் ஒளியென ..
வரைகிறேன் உன்னை
வளைகிறாய் நதியென
என் நினைவுகளில் மட்டும் .

மின்னும் நட்ஷத்திரங்கள் என
என் வானமெங்கும்
உன் நினைவுச் சிதறல்கள்
அவை
உன்னிடம் ஒளி  வாங்கி
என்னை சுற்றி 
மிளிர்கின்றன  ..


நிஜங்களை தொலைத்து
நினைவுகள் தேடிய பயணத்தில்
உதிரிகளாய் நிறைகிறாய்
உளமெங்கும் ..
உன் வளமெங்கும் வாழ்ந்துவிட
மனம் ஏங்கும் இவள் ....

Offline VidhYa

           அழகு


இவுலகில் அனைத்துமே அழகு தான்
நீர், நிலம், காற்று, நெருப்பு
மற்றும் ஆகாயம்
இவ்வனைத்துப்  பஞ்ச பூதங்களும் அழகு

மழழையின் சிரிப்பழகு
பாட்டுக்காரரர்களின்  குரலோ அழகு
நாட்டியகாரர்களின்  நடனமோ அழகு

வானிலிருந்துப் பொழியும் மழையும் அழகு
கங்கை நதியோ அழகு
தாவரங்களும் உயிரினங்களும் அழகு
இன்பத்துன்பங்கள் அனைத்தும் அழகு

வானிலிருந்து  மண்ணில் வரை
உள்ள அனைத்துமே கடவுளால் படைக்கப்பட்ததாகும் ...

எவ்வித மதமோ , சாதியோ , வேற்றுமையேவிட்டு
ஒதுங்கியிருப்பது ஓர் அழகு தான்
அதுப்போல  நட்பும் ஓர் அழகிய காவியம்...


இயற்கையை சார்ந்தே  நகரும்                -kavi kutty வித்யா
என் நட்பு ....
« Last Edit: July 12, 2020, 11:23:50 PM by VidhYa »

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 643
  • Total likes: 1786
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
அன்று ஓர் நாள் இரவு....
என் விழிகளும் மூட மறுத்த நாள்..
நித்திரை துறந்து தவித்த நாள்...

படுக்கையும் முள்ளென குத்த எழுந்தேன்..
நடந்தேன்... தனியே.... நடந்தேன்...
தனிமையும் என்னுடன் கைகோர்க்க...  நடந்தேன்..
 
ஏதோ ஒரு வெளிச்சம்  கண்களில் பட
அதை நோக்கி சென்றன என் கால்களும்..
என் கட்டுப்பாடுகள் இன்றி..

அங்கே நான் கண்ட காட்சிகள்!!!   
இமைகளும் மூட மறந்தது .. என் சிந்தையும்
தடுமாறி நின்றேன் அவ்விடம் சிலையாய்

ஈரேழு உலகம் என சொல்வர் பலர் - நான்
அவைகள் பற்றி யோசித்ததில்லை...
ஆனால், இன்றோ பிரமிக்கின்றேன்..

நள்ளிரவே,  உன்னை பார்த்த பின்னே, 
நினைக்க தோன்றுகிறது.. சான்றோர்
சொன்ன ஈரேழு உலகில் நீயும் ஒன்றா?..

அடர் நீல வண்ணமாய் ஜொலிக்கும்
உன் மேனி எங்கும் மின்ன...
வைர கற்களை தெளித்தது யாரோ..

அருவிகள் அழகு ஜதிகள் இசைக்க
ஆர்ப்பரிக்கும் நீர் அலைகள் கைகள் தட்ட
அழகு நடமிட வந்தாயோ நிலவே...
 
இருள் மடியில் நானும் அமர்ந்து,  தாரகைகளின் 
தோள்களில் தலை சாய்த்து - நீரின் மேல்
சதிராடும் நிலவை ரசிக்கும் நான் தனியே இல்லை..

தனிமையே எனை விட்டு நீ தனியே போ...
நான் திரும்பினேன் என் அறைக்கு.. மனம் நிறைந்த மகிழ்வுடன்..
நித்திரையும் என்னை தழுவ நிம்மதியாய் உறங்கினேன்

Offline KoDi

  • Jr. Member
  • *
  • Posts: 70
  • Total likes: 270
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
இரவுநேர மேகக் கூட்டம்
வெள்ளிக்கம்பி நீர்வீழ்ச்சியில்
விண்மீன்கள் கண்ணோக்க
எழுகின்றாள் வெண்பந்து நிலவு

மங்கியவொளியில் அவளும் நானும்
அருகருகே அமர்ந்துகொஞ்ச
எங்களின்  உரசல்களில்
உயிர்ப்பெற்றாள் இயற்கையன்னை 
 
அடங்கியது அருவியின் அகங்காரம்
அவளது  அமுத மொழி கேட்டு 
நீலவானம் மண்டியிட்டு சாய்ந்தது
அவள் மயில்விழிகளின் முன்னால்

மாதவள் மத்தாப்புச்  சிரிப்பினிலே
மறைந்துபோயின  நட்சத்திரங்கள்
மங்கையவள் நறுமணத்தில்
வாசமிழந்து தவித்தன மலர்கள்

அவளின் அங்க அசைவுகள்
ஆசை தோய்ந்த அம்புகள்
பேதையவள் நினைவினிலே
கடந்திடுவேன் வாழ்நாள்முழுதும்

திடீரென்று  ஒரு சத்தம் .....
விழிக்கின்றேன் அவசரமாய்
என்னோடு யாருமில்லை....
ஏங்குகிறேன் தனிமரமாய் !
« Last Edit: July 12, 2020, 11:57:12 PM by KoDi »

Offline SweeTie


இருண்ட  விண்மீதிலே  உருண்டையாய்   ஒரு நிலவு
பௌர்ணமியை  பறைசாற்றும்    பால் நிலவு 
காதலர்  கொண்டாடும்  தேன்நிலவு
கவிஞர்கள்   நயந்துரைக்கும்   முழு நிலவு 

சுற்றி திரிந்த வெள்ளித்  தாரகைகள்
காதலனைக் கைவிட்ட  காரிகைகள் போல்
எங்கே  ஒளிந்து மறைந்துகொண்டனரோ !

பாறையில்  உருண்டு புரண்டு விளையாடி 
நூலிழைபோல்   சிந்தும் கண்ணாடி நீர்க்  கீற்றுகளே
பிறப்பிடம் தெரியாது  பிறந்த    நீங்கள்
விருந்தோம்பல் வீட்டுக்கு வந்த விருந்தாளி போல்     
வதிவிடம்   வேண்டியே    வந்தனையோ? 

அழகின்  ஓவியமே!  இயற்கையின் மறுஉருவே!
கண்களுக்கு   விருந்தாகும்  காவியமே !
நீ வீழ்கையில்   உண்டாகும்   சலசலக்கும் ஓசையிலே       
என்  காதலன்  சிரிப்பொலி  கேட்கிறதே   
உன் தெள்ளத் தெளிவான    நீர்த்  திவலைகளில்   
அவன் அழகான   அன்பு முகம்   தெரிகிறதே!  . 

சில்லென்ற  காற்று   உன்மேல்   தவழ்ந்து   வந்து
என்னை தொடும் வேளைகளில
அவன்   ஸ்பரிசத்தின்  தீண்டலை    உணர்கிறேன் 
மனதை மயக்கும்    உன் கட்டழகில் 
கண்டதும்  காதல்  கொண்டதை   வியக்கிறேன்
உன்னை ரசிக்கும்  ஒவொரு  நொடியும்  அவன் இல்லாத
தனிமையின்  கொடுமையை    வெறுக்கிறேன் 
         
இதயத்தை வருடும்   உன்  சுகமான  இயற்கை
காயத்தை   ஆற்றும்  மருந்தென்பேன் 
நித்தமும்  வேண்டும்  அமைதியும்  சாந்தமும்
உன்   வற்றாத  வளமான   நீர்வீழ்ச்சிபோல்   

Offline SandhyA

  • Jr. Member
  • *
  • Posts: 97
  • Total likes: 236
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am just new to this
கடும் இருளின் பயத்தை போக்க
சலசலப்புச் சத்ததுடன்
துள்ளினாள் அவள்
இது என்னவோ இந்நேரத்தில்?

எட்டிப்பார்த்தாள் யார் என்ற வியப்புடன் !!

கொட்டுகின்ற அருவியில் 
தெரிந்த பிம்பத்தில்
அவளுக்கும்  நிலவுக்கும்
ஓர் அழகுச் சண்டை ...
பின்வாங்கியது நிலவு ...
அவளிடம் .. தோற்று விடுவோம் என்று

தோற்ற  நிலவோ மயங்கி
எழுதியது கவிதை ...
தன்னை விட ஓர் அழகான நிலவு
இங்குள்ளதென என்னி....

நிலவே நிலவே வெள்ளை நிலவே
என்னவள் முகத்தினை காட்டிடும் நிலவே
பிரம்மன் உன்னை படைத்தும் ஏனோ...
பெண்ணின் பெயரை வைத்ததும் ஏனோ...
இரவில் தான் நீ  முகம் மலர்வாயோ
விடிந்ததும் என்னை மறந்திடுவாயோ
மேகம் உன்னை கவர்ந்துகொண்டாலும்
மீண்டும் வருவேன் மறுபடி
பெண்ணே !!

வெட்கத்தில் அவள் முகம்!!
கரும் இருளும் வெண்ணிற
இரவுகளாயின!!!
« Last Edit: July 15, 2020, 12:28:00 AM by SandhyA »

Offline gab

மழை ஈரம் பரவிய முன்னிரவில்
சாம்பல் நிற மேகத்திட்டுகளிடையே
நிலா உலவும் வானில் நீலம் பாவியிருந்தது
நினைவின் தாழ்வாரங்களில் வீற்றிருக்கும்
மனிதர்களின் நினைவுகளை குளிர்ச்சியாய்
மனதிற்குள் கொண்டு வரும்
வெண்முகில் இரவிது!

தேவதைக் கதைகளின் சாத்தியங்களோடு
நின்றிருக்கும் அந்திக்காவலனுக்கு
துணையாய் சிதறியிருக்கும்
ஓராயிரம் விண்மீன்கள்
ஒர் ஓவியம் போல் எழில் பொலிந்து நிற்கின்றது.
மேனியை சிலிர்க்கச் செய்யும்
ஈரப்பதம் நிறைந்த காற்று
மனதின் குழப்பங்களை விலக்கிச் செல்கிறது.

புரிந்துகொள்ள முடியாத வாழ்வின் முடிச்சுகளை
மெதுவாக அவிழ்க்கிறது
சலசலத்தோடும் அருவியின் மெல்லிசை.
ரசிப்பவர் யாருமின்றி வானில்
நத்தையை போல் ஊர்ந்திடும் நிலவிற்கு
பெயர் வைத்த கவிஞன் யார்?

தாகம் தேடி தடாகத்தில் வந்து வீழ்கிறது
நிலவின் நிழல்
நிலவினை ஆரத்தழுவி ஆர்ப்பரிக்கிறது நீல நதி.
ஆழ்ந்தவொரு தனிமையும்
பேரமைதியும் நிறைந்த இந்த இரவில்
முழு வெண்மதியின் பேரழகை கண்டபின்னும்
மறுமுறை இயற்கையை ரசிக்காதவன் உண்டோ ?

திங்களின் ஒளி வெம்மையான உறுதியை கொடுப்பதென்றால்,
இந்த வெள்ளியின் ஒளி குளிர்ச்சியான
மனதினை கொடுக்கின்றது.
யாருமற்றவர்களின் இடைவெளியை கூட
சமன் செய்கிறது இந்த வெண்ணிலவு.
இருளினை விலக்கும் இந்த சிறு ஒளி கூட
இறைவனின் படைப்பில் பேரழகானது.

மனதிற்கு என்றும் வலிமையை தரும்
இயற்கையின் மாண்பை ரசித்தவனாய்...
நான்!
« Last Edit: July 13, 2020, 04:13:47 PM by gab »

Offline thamilan

இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை இயற்கை
வண்ணங்கள் இன்றி தூரிகை இன்றி
எப்படிப்படைத்தானோ இந்த அழகோவியதை

பகலை விட
இரவு அழகானதே
கருமை பூசிய காரிருள்
அந்த காரிருளில் கண்சிமிட்டும்
மின்மினிகள் நட்சத்திரங்கள்
கதிரவனின் வெப்பம் தாங்காமல்
கடலுக்குள் மூழ்கிக் கிடைக்கும்
வெண் நிலவு

வெள்ளிக்கம்பிகள் போலே
கோடிட்டு கொட்டிடும் நீர் அருவி
குளம் போலே தேங்கிததும்பும்
தண்ணீர்த் தடாகம்

ஆயிரம் கண் போதாது 
இந்த அழகினை காண
இந்த அழகினில் தன்னை மறந்தவன்
கற்பனை வளமுள்ளவனாக  இருந்தால்
கவிதை வடிப்பான்
ரசனை உள்ளவனாக இருந்தால்
கவி படைப்பான்
காதலனான நான்
இந்த இயற்கையே நீ தான் என
வருணிக்கிறேன்