Author Topic: அம்மா  (Read 658 times)

Offline Guest

அம்மா
« on: August 28, 2018, 01:47:14 AM »
உன் ஒப்புதல் கேட்டு முடிவாகும் தீர்மானங்களில் எல்லாம் ஒரு அழகியல் குடிகொண்டு விடுகிறது..
கொத்தமல்லித் தளிர்களால் நிறைவாகும் உன் சமையல் போல 💕 💕 💕
#அம்மா


அவள் சமைக்கும் போதெல்லாம்
காய்கறிகள் கூட அவள்
வசப்படுகிறது...💞
#அம்மா 💕


மனம் உருக்கும் ஒரு இசைக்கீற்றின் இலாவகத்தோடு இதயத்தின் உள்நுழைகிறாய் நீ....
#அம்மா💝💝💝



உன்னைச் சார்ந்திருத்தல் ஒன்றே,
சுயம் தொலைக்காத
'என் திமிர் கொல்லல்'.
#அம்மா💖💖


கேள்விகளால் அன்பு 💓செய்யும் பெரும்கலைக்கு என்ன பெயர் வைப்பது?!.
#அம்மா💜💜💜


உன்னைக் குறித்தான என் நினைவுத் தொகுப்புகளில் நீ காலங்கள் கடந்து தொடரவல்ல ஒரு பிடித்தமான நாவல்.

உன்னோடான நினைவுத் தரவுகளை இப்படித்தான் என எந்த வழிமுறைகளும் இல்லாத ஒரு வரிசைப்படி ஆவணப்படுத்தி வைத்திருக்கிறது மனம்.

தற்காலிகமாய் சில நிகழ்வுகளை மறந்தே போனாலும்,
இல்லை இன்னொருமுறை வாசிக்கவே முடியாமல் போனாலும்
பிடித்தமான புதினமாகவே
தொடர்வாய் நீ.
வழிமுறைகளே இல்லாத வரிசைப்படுத்தல் ஆயினும்,
மனமறியும் தனக்கான தரவுகளை
 எப்போது, எப்படி மீட்டெடுப்பதென..
#அம்மா😇😇😇😇


வருடங்கள் தாண்டியும் பேசித்தீராத உரையாடல்கள் நம்முடையது..
#அம்மா😊😊😊


நீ சொல்லித் தெரிகிறது நான் யார் என்பது.
என் அத்தனையும் உணர்ந்தறிய, உன் அத்தனையும் வேண்டும்.
உன் உதாசீனங்களை தவிர அத்தனையுமாய் நீ வேண்டும்..
#அம்மா😘😘😘😘


உன்னோடான என் கோபங்கள் தீங்கில்லாதவை என்பதை என்ன சொல்லி உன்னை புரியவைப்பது?.
#அம்மா😒😒😒

நான் நனைய மழை போதுமானதாய் இருக்கிறது.
சுயம் நனைந்து கொள்ள உன்னையே தேடுகிறது மனம்.
நீ என்பது என் உள்ளத்திற்கான உணர்வு மழை..
#அம்மா🤩🤩🤩


உன் பிழைகளை தானாக திருத்தம் செய்து,
வாசித்து கடக்கும் என் இதயம் ❤.
~ Auto correct களால் ஆசிர்வதிக்கப்பட்ட உறவு...
#அம்மா😎😎😎


நானெனும் கர்வம் கொல்ல வல்லது,
நீ கொள்ளும் கோபம்...
#அம்மா😚😚😚


மனம் சோர்ந்து போகும் நேரங்களில்
எல்லாம் புத்துணர்ச்சியூட்டி போக,
எப்போதோ
உன்னோடுண்டான சம்பாஷணையின்
ஒரு சிறுகீற்று
போதுமானதாய் இருக்கிறது..
#அம்மா❤❤❤❤

கண்ணீர் துளிகள் உலர்ந்து போன
ஒரு பின்மாலையிலோ, முன்னிரவிலோ,
கண்ணீர் சுரப்பிகளை
மீண்டும் உயிரூட்டி
ஆனந்தம் கொண்டு ஆசிர்வதித்துச்செல்லும் ஆற்றலுடையவை
உன் ஆதரவான கைவிரல்கள்..
#அம்மா😘😘😘

நேசம் குறைந்து விடுமோ என்ற அச்சப்பாட்டிலேயே
நாழிகைகளையும், நாட்களையும்
 நகர்த்திப் போகையில்
அழுத்திப் பற்றும்
உன் உள்ளங்கையின் கதகதப்பில்
அடைவிரிந்து உயிர்பெறுகிறது
வாழ்வை குறித்தான கனவுகள்
#அம்மா😇😇😇

உன்னை பேசிப்பேசியே
காலம் கடந்துவிடட்டும்..
#அம்மா🤗🤗🤗


என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ

Offline RishiKa

  • Full Member
  • *
  • Posts: 162
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Female
  • என்னை நீ மறவாதிரு!புயல் காற்றிலும் பிரியாதிரு..
Re: அம்மா
« Reply #1 on: September 17, 2018, 11:55:27 AM »
மிகமிக அருமையாக எழுதுகிறீர்கள்!
வரிகளும் சந்தங்களும் உங்களிடம் வசப்படுகிறன்றன !
சொற்களின் அர்த்தங்களும் ஆழமும் வியக்க வைக்கிறன்றன !
தங்கள் கவிமுயற்சி தொடர வாழ்த்துக்கள்