Author Topic: வரதட்சணை எப்போது துவங்கியது? இதனை ஆதரிக்கலாமா?  (Read 2581 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
வரதட்சணை வாங்குவது என்பது கண்டிக்கத்தக்க விடயம். புகுந்த வீட்டிற்கு வருவதற்காக ஒரு பெண் தட்சணை தருவது கூடாது. மாறாக மாப்பிள்ளை வீட்டார் விரும்பினால் தட்சணை கொடுத்து தங்கள் வீட்டு வரும் மகாலட்சுமியை (பெண்) அழைத்து வரலாம்.

ஒரு வீட்டிற்கு வரும் மருமகள் அந்த வீட்டின் மகாலட்சுமியாகவே கருதப்படுகிறாள். எனவே மகாலட்சுமியை வரதட்சணை கேட்டு சிரமப்படுத்தி அழைத்து வரக் கூடாது. வரதட்சணை பெறுவதால் புகுந்த வீட்டு உறவுகள் மீது மணமகளுக்கு வெறுப்பு ஏற்படும் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

சங்க கால நூல்களில் வரதட்சணை என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. அகநானூறு, புறநானூறு, கலிப்பா, பரிபாடல் ஆகிய நூல்களில் ஆடவரின் வீரத்தைப் பார்த்தே பெண் மாலையிட்டாள் என்று கூறுகின்றன.

ஒரு பெண், ஆடவரை மணக்க பணம்/நகை/தங்கக் காசுகளை வரதட்சணையாக அளிக்க வேண்டும் என்று எந்த சங்ககால நூலிலும் கூறப்படவில்லை. ஆடவரும் அதை விரும்பவில்லை. ஜாதி பார்த்து திருமணம் செய்து கொள்வதும் அப்போது பெரியளவில் நடைபெறவில்லை.

கடந்த 30 முதல் 40 ஆண்டு காலத்திலேயே வரதட்சணை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. விரைவில் பெண் எடுப்பதற்கு வரதட்சணை கேட்கும் காலம் மாறி, வரதட்சணை கொடுக்கும் காலம் வரும்.

கடந்த 15 ஆண்டுகளாக ஜோதிட ரீதியாக ஆண் கிரகங்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதால் உலகெங்கிலும் ஆண் குழந்தைகள் அதிகளவில் பிறந்துள்ளன. எனவே இன்னும் சில ஆண்டுகளில் மணப் பெண் கிடைப்பதே அரிதாகிவிடும் என்பதால், பெண் வீட்டில் வரதட்சணை கொடுத்து புகுந்த வீட்டிற்கு அழைத்து வரும் அளவுக்கு நிலைமை தலைகீழாக மாறும்.