Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 190  (Read 2482 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 190
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 11, 2018, 01:45:58 PM by MysteRy »

Offline thamilan

இறைவன் படைத்த அற்புதங்களில்
இயற்கையும் ஒன்று
உலகம் அழகாக அமைதியாக இருந்தது
மனித  விஞ்ஞானம்  வளரும் வரை

மனிதனின் நாகரிக வளர்ச்சி
இயற்கையின் அழிவுக்கு அத்தாட்சி
தனது வளர்ச்சிக்காக இயற்கையை
வெட்ட வெட்ட சிதைந்து போனது
உலகத்தின் மலர்ச்சி

மரங்களை அறுப்பதும்
தாயின் தனங்களை அறுப்பதும்
ஒன்றென்பதை அறியாத மானிடனே
குடிக்க நீரின்றி அவதிப்படுவதும்
உன் செயல்களின் பலனே


ஆலைகள் இயந்திரங்கள் வாகனங்கள் என
கரிவாயுவை கக்கும் உன் படைப்புகளால்
உலகத்தின் இதயமான
ஓசானில் ஓட்டை
அதிவெப்பம்   பனிமலை உருகுதல்
கடல்மட்ட உயர்வு என
மூச்செடுக்க முடியாமல் திணறுதிந்த  உலகம்


தன் சுயநலத்துக்காக ஏரிகளை அழிதத்திடும்
காடுகளை சிதைத்திடும்  மூடர் கூட்டமே
இயற்கையுடன் சேர்ந்து நீயும்
சிறுக சிறுக அழிவதை உணராயோ

காடுகளை அழித்தாய்
அரியபல உயிரினங்கள் அழிந்தன
ஏரிகளில் கடல்களில் மாசுதனை கலந்தாய்
கடல்வாழ் உயிரினங்களும் காணாமல்போயின
எல்லாவற்றையும் அழித்து  விட்டு 
நீ மட்டும் வாழ்ந்துவிடுவாயா என்ன

நீ செய்யும் கொடுமைகள் தாளாமல் தான்
பூமாதேவி பூகம்பமாக உருவெடுக்கிறாள்
சமுத்திரதேவியோ சுனாமியாக உருவெடுத்து
வாரிக்கொண்டு போகிறாள்

நீ செய்யும்
பிழைகளும் உன்னையே சேரும்
நன்மைகளும் உன்னையே சேரும்     
நாம் என்ன ஆயுதத்தை  ஏந்த வேண்டுமென்பதை
நமது பகைவனே தீர்மானிக்கிறான்
இது இயற்கைக்கும் பொருந்தும்
« Last Edit: June 25, 2018, 05:27:11 AM by thamilan »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அன்று நான் கண்ட இயற்கை அழகானவள்
மனதை மயக்கும் ரம்மியமானவள்
மதிமயக்கும் அவள் அழகில்
மனமயங்கிப் போயிருந்த நான் - இன்றோ
சிறுக சிறுக அவளை சிதைத்திடும்
அலங்கோல  நிலை கண்கொண்டு
மனதுக்குள் அழுகிறேன்

சூரியஒளியால்  மாண்புற்ற இவ்வையகம் இன்றோ
மனிதனின் சுயநலன்களால்
சிதைவுற்று அதிவெப்பத்தால் அழிந்து கொண்டிருக்கிறது
பறவைகளின் ஆனந்தக் குரலொலி மறைந்து
அவலக் குரல்கள் கேட்கின்றன
மரங்களை வெட்டி 
தனது கூடாரங்களை அமைப்பதத்திற்காக
அவற்றின் கூடுகளை  அழித்தான்

மழைக்காடுகளை அழித்தான்
பாதைகளை அமைத்தான்
பல மாடி கட்டிடங்களை அமைத்தான்
வானம் பார்த்த பூமியாய்
வாடிக்கிடக்கிறது இன்று இவ்வுலகம்
பூக்காத செடிகளும் காய்க்காத மரங்களுமாய்
வறண்டு கிடக்கிறது இவ்வையகம்

அணு ஆலைகளும் இரசாயன தொழிற்சாலைகளும்
மேகமண்டலத்தை  புகைமண்டலமாக்கி
மழைநீரை நச்சுநீராக மாற்றி விட்டன
காற்றினில் கலந்த இரசாயனபுகைகள்
பிராணவாயுவை   நச்சுவாயுவாக மாற்றிவிட்டன

அடித்தளத்தை பலவீனமாக்கி அதன் மேல்
அடுக்குமாடி கட்டிடும் மதிகெட்ட மனிதனே
எத்தனை நாட்கள் தாக்குப் பிடிக்கும் என
சிந்திக்க மறப்பதும் ஏன்
நீ உன்னைப்பற்றி மட்டுமே சிந்திக்கிறாய்
உன் சந்ததிகள் இவ்வுலகினில்
வாழ வழி அமைப்பது உனது கடமையல்லவா

மனிதர்கள் நாம் சிந்திக்காவிட்டால்
இறைவனும் நம்மை மன்னிக்க மாட்டான்
இயற்கையும் நம்மை மன்னிக்காது
« Last Edit: June 26, 2018, 07:49:21 AM by MysteRy »

Offline kanmani


காலங்காலமாய்  இப்பபூமிக்கு  இயற்கை அளித்த
காடு கழனிகளை அழித்து
பாட்டன்  முப்பாட்டன்  நமக்கு அளித்த
மரங்களையும் வயல்களையும்  அழித்து
மக்களின் வாழ்வாதாரத்தை  அழித்து
பத்தாயிரம் கோடியில் எட்டுவழிச்சாலை அமைத்து
மக்களின் அழுகுரல்களை மறைத்து

பொருளாதார வளர்ச்சியென முழக்கி  சூளுரைத்து
அதிகாரத்துணையுடன் மக்களின் வாயடைத்து
 இந்த நயவஞ்சகர்களின் வஞ்சக  செயல்களும்
கார்ப்பரேட்  முதலாளிகளின் பேராசை கனவுகளும்

சொந்த மண்ணிலே நம் சொந்தத்தங்களை  அகதிகளாக்கிடுமோ
நமது எழுச்சிகளும் குமுறல்களும் கானல்நீராகிடுமோ
ஊடகங்களிலும் தாள்களிலும் வெற்றுச்செய்திகளாய் ஆகிடுமோ
என்று பதைபதைப்பில் தினமும் நெஞ்சம்...

8வழிச்சாலை  எம்மக்களின் 8அடிசவக்குழியின் மீதோ ?
பூமியின் கர்ப்பப்பையான  மலைகளுக்கு
எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும் தகுமோ ?
மரங்களை அழித்து மரங்களை  நடலாம்
மலைகளை அழித்து அவற்றை
உருவாக்கும் விந்தை அறிந்தவர்  யார் ?

விழித்தெழு  மனிதா  விழித்தெழு
பசுமை மாறா காடுகளை அழித்து
பசுமை சாலை  என பெயர் தாங்கி
பசுமையிழந்த வழித்தடம்  அவசியமா ?
நாளை தலைமுறை செழித்திட 
இந்த பசுமை சாலையை எதிர்த்திடு
வருங்கால  தலைமுறையை  வாழவைத்திடு...



இயற்கையோடு ஒன்றி வாழ்ந்திடுவோம்
வருங்கால  தலைமுறையை  காப்போம்!!
« Last Edit: June 26, 2018, 01:41:04 AM by kanmani »

Offline AshiNi

  • Full Member
  • *
  • Posts: 145
  • Total likes: 985
  • Karma: +0/-0
  • Gender: Female
  • -𝔹𝕖 𝕨𝕙𝕠 𝕦 𝕣 & 𝕤𝕒𝕪 𝕨𝕙𝕒𝕥 𝕦 𝕗𝕖𝕖𝕝-
இயற்கை நங்கையே...
  நாளுக்கு நாள் உன் எழில்
கெடுவது ஏனம்மா...?

பச்சைப்பசேலென்ற உன் தாவணி,
  சிறுக சிறுக சிதைந்து
காணாமல் போவது ஏனம்மா...?

உன் அழகை உருக்குலைப்பது,
  தன் அன்னையை
வதைப்பது போலன்றோ...!

அடைமழை தந்து
  பூமி அன்னையை குளிர்வித்த
பசுமை தருக்கள் எங்கே...?
  நேரத்தை சேமிக்கவும்
வளர்ச்சியை காண்பிக்கவும்
  சோலை வனங்கள் கலைந்து
தார் சாலைகள் அமைக்கும்
  அரசு வசிக்கும் உலகமம்மா இது...

பாரபட்சம் பாராமல்
  எல்லோரும் சமனன்றோ என
தாகம் தீர்த்த வாவிகள் எங்கே...?
  பணத்தின் தேவைக்காய்
மனத்தின் பேச்சையும் மறந்து
  நீரினையே மண்ணால் மூடி
மாடிகளை உயர்த்தும்
  வியாபாரம் வாழும் உலகமம்மா இது...

மனம் அள்ளும் பூங்கா போல
  இளம் தென்றல் வீசச்செய்த
பச்சைப் பூத்தாவரங்கள் எங்கே...?
  தம் சுயவசதிக்காய்
உயிருள்ள பயிர்களை அழித்து
  உயிரற்ற கட்டிடம் எழுப்பி
வாழ்வாதாரம் நடத்தும்
  மானிடம் வாழும் உலகமம்மா இது...

உன் பிள்ளைகள் என்று
  தொல்லைகள் அனைத்தும்
வெள்ளை மனமாய் சகித்தாய்...

பொறுமைக்கும் எல்லையுண்டென
  பூவுக்குள் பூகம்பம் போல
சீற்றங்கள் பல தந்து
  சோதிக்கத் தொடங்கிவிட்டாய்...

உன் மீது தவறில்லையம்மா...
  தாயை அழிப்பதும் உன்னை சிதைப்பதும்
சரிசமானம் என அறியா மூடர்கள்,
  அனுபவிக்க வேண்டிய தண்டனையம்மா இவை...

மரம் நடுவோம் மரம் நடுவோம் என
  உளம் துடிக்கும் நல்லவர்கள் ஒருபுறம்...
மரம் அழிப்போம் மரம் அழிப்போம் என
  வளம் குலைக்கும் பாதகர்கள் மறுபுறம்...

எது எவ்வாறாயினும்
  உன்னை எதிர்ப்பவரை
இனி நீ மன்னிக்க மாட்டாய்...
  உன் வனப்பினை
சுரண்டி மகிழ்பவரை
  இனி நீ அள்ளி அணைக்க மாட்டாய்...

மனிதன் உண்மை உணர்ந்தால்
  பசுமைவளம் காக்கப்படும்
இயற்கை நீ அகம் குளிர்ந்தால்
  உன்னால் மனிதவளம் போற்றப்படும்...!!!

Offline PowerStaR

வெட்டாதே!!!
ஆறறிவு கொண்டவன்
ஆக்கம் என்று எண்னி
ஆற்றல் அழிக்காதே!!
நான் அழிந்தால்
மேகத்துடன் காதல் கொள்வது யார்??
அவள் அன்பை பொழிவது எவ்வாறு??மண்தான் பிள்ளை பெறுமோ..??
மலடி என்ற சொல் பெண்மை தாங்குமோ!!
பிள்ளைகள் அன்றி பறவையும் , விலங்கினமும் வாழ்ந்திடுமோ??
தாய்க்கு பிறந்தவன்தானே!!!
தாய்மை அறிவற்றாயா??
நிழல் மட்டும் என்னினாயா ??
நிகழ்கால மழை வேண்டாமா??
எதிர்கால மழை வேண்டாமா??
மாசுவை உட்கொண்டு நற்காற்றை தரும்
என்னை அழித்து ....
நன்றி கெட்டு நடக்காதே!!!!
வனம் அழித்து
இனம் அழிக்காதே!!!   

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
என் வீட்டு பக்கத்தில் இருந்தது
பேர் தெரியா மரம் ஒன்று
யார் விதைத்த விதையில் மலர்ந்ததென்று
யாருக்கும் அறியேன்

வெயிலுக்கு இதமாய் நிழல் தரும் மரம்
பள்ளி சென்று திரும்புகையில்  யாரையோ
தொலைத்து தேடும் குயிலின் ஓசை
எனக்கு ஒரு வரவேற்பு கவிதை தரும்

பேர் தெரியா மரத்தில் ஊஞ்சல் கட்டி
தோழர்களுடன் கொஞ்சி அதில் விளையாடிய
நாட்கள் இன்னும் நிற்காமல் ஆடுகிறது
என் நெஞ்சில்

அதனால் அதற்கு பெயர் வைத்தேன்  ஊஞ்சல்மரம்,

இதுவும் காய் காய்க்கும், பழுக்கும் , தரையில் விழுந்து
அழுகும் தீண்டுவார் யாருமிலர்
அதற்காய் அமமரம் கவலைகொண்டதாய் நினைவில்லை

வெயிலுக்கு நிழலும் தரும்,
மழைக்கு குடையாயும்  மாறும்

சூறாவளி காற்றில் வீட்டின் கூரைகள்
பட்டம் போல் பறந்த  பின்
பலநாள் எங்களுக்கு அடைக்கலம்
கொடுத்தது இம்மரம்

எத்தனை இன்னல்கள்  வந்தபின்னும்
அசராது நிலைத்து நிற்கும் வித்தையை
எங்களுக்கு கற்றுத்தந்த போதிமரம்

இதுவரை யாருக்கும் இடையூறாய்
நிற்காத இம்மரம்
சாலை விரிவாக்கத்திற்கு
இடையூறென்று சொல்லி இதோ
அதை வேரறுக்க ஒரு கூட்டம்
அதன் நிழலில் நின்று திட்டம் தீட்டுகிறது

பாலை குடித்து அதை கள்ளென்று 
பிதற்றும் ஒரு மூடர்கூட்டங்கள்
எண்ணியதுண்டா?

அடுத்த தலைமுறை
வெயிலுக்கு எங்கு இளைப்பாறும்
குழந்தைகள் எங்கு ஊஞ்சலாடும்
காகங்கள் எங்கு கூடு கட்டும்

இதுபோல் ஒரு மரம் வளர
எத்தனை ஆண்டுகள் ஆகுமோ

இதோ சிறுது நாட்கள் தங்கிய
காகம் இம்மரத்தின் விதையை கவ்வி
பறந்து செல்கிறது மனிதர்கள்
இல்லா இடம் நோக்கி விதைக்க

மனிதா ,இயற்கையை அழிக்கும் நீ
அதை உருவாக்குவது எப்போது ?


****ஜோக்கர் ****

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 506
  • Total likes: 977
  • Karma: +1/-0
  • Gender: Male
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
நீயாக என்னை நட வில்லை
ஏதோ ஒரு பறவையின் 
எச்சதில் இருந்து மழையின்
உதவியில் நானே முளைத்தேன்

நான் வளர்ந்ததில் உன்னக்கு பங்கில்லை
இருந்தாலும் உன்னக்காக நான்
கொடுத்தது ஏராளம்
அதை கூட மறந்து விட்டாய் மானிட

ஏதேதோ  கரணம் சொல்லி 
எப்போதும் என்னை போன்றவர்களை
தரிப்பதே உங்கள் வேலையாகிற்று

இப்பொது சரியான காரணமாக
வீதி அமைப்பு ஏற்று
என்னில் பல பேரை தரிதாகிற்று

குடிக்கும் நீரை காசு கொடுத்து
வாங்கி பருகும் மானிட
என்னுடன் இருக்கும் மிச்சம் மீதியை கூட
விட்டு வைக்கவில்லை எனில்

நீ சுவாசிக்கும் 
பிராணவாயுவை விலை கொடுத்து
வாங்கும் நிலை  கூட வரும்
அதை மறந்து விடாதே