Author Topic: ~மொழி~  (Read 313 times)

Offline Guest

~மொழி~
« on: December 08, 2018, 06:03:53 PM »
மொழி...
***************

பிருவங்களை உயர்த்தி
சுருக்கிக்கொண்டேன் - அங்கு
தூரத்தினின்றும் மென்
புன்னகையுதிர்த்து இமை மூடி
லேசாய் தலைசாய்த்துச்சென்றாய்
இது பதில் மொழி....
.
முழங்கையில் முகம் புதைத்து
விழிகள் குழமாகி
கண்ணீரால் கன்னம் நனைந்து
காத்திருப்பின் அவஸ்த்தை
சொல்வாய் பரிவின் மொழி...
.
நேற்று வாங்கி வந்த
பொம்மையை தனித்தனியாக
பிரித்து வைத்திருந்தான் மகன்
ஆட்காட்டி விரலுயர்த்தி
விழிகள் வெறித்தாய் நீ
சாக்கிரதை மொழி இது....
.
மண் மேடமைத்து தண்ணீர் ஊற்றி
மண்ணளைந்து கொண்டிருந்தாள்
கடற்கரையில் சிறுமகள் - உன்
தலையில்அடித்துக்கொண்டு
விருட்டென இழுத்துச்சென்றாய்
அதட்டலின் மொழி...
.
உண்டு உடுத்தி கதவு
சாத்தி புறப்பட்டு தெருவை
அடைந்து திரும்பிப்பாற்கையில்
பெருவிரலும் ஆட்காட்டிவிரலும்
குவித்து ஜன்னல் வழியே
நீ சொன்னது பேரழகு மொழி....
.
என் அலைபேசி அழைப்பை
ٍஏற்றவுடன் என் கேள்வியை
செவி மடுக்காமல் நீயே
சொல்லும் பதிலில்
அடங்கியிருக்கிறது என்
கேள்வி அறிந்த உன்
இங்கித மொழி....
.
பிருவமுயர்த்தாமல்
விரல்களால் சைகை செய்யாமல்
விழிகளால் வெறிக்காமல்
தலையசைக்காமல்
பார்வைகள் மாற்றாமல்
எல்லாம் ஒருக்களித்து ஓரமாய்
உட்கார்ந்து நிசப்தமாய் இருக்கையில்
இன்னும் அறியவியலாமல் போகிறது
அமைதி மொழி....
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ