FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on September 04, 2017, 03:14:43 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 158
Post by: Forum on September 04, 2017, 03:14:43 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 158
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக    வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org//newfiles/OVIYAM UYIRAAGIRATHU/158.png)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 158
Post by: JeSiNa on September 05, 2017, 10:49:57 PM
உடல் மட்டும்தான் ஊனம்
உள்ளம் இல்லை
சாதனை புரியும் திறமைக்கு
ஊனம் ஏது?

ஊனமுற்ற மனிதர்கள் மனம்
குழந்தைதான்.
அவர்களுக்கு முயற்சி செய்ய
மட்டும்தான் தெரியும்.

குறைகளை எண்ணி குறைபாட்டால் கோழை..
நிறைக்கு முயற்சி சவாலே..

ரூஸ்வெல்ட்டுக்கு தோஷமோ
இளம்பிள்ளை வாதமோ..?
அமெரிக்க நாட்டை உலக அரங்கில் உயர்த்தினார்
அவரை தடுத்ததா ஊனம் ?

ஜான் மில்டன் காண்பது எல்லாம்
கபோதியாம்..
காவியம் செய்தார்
அவரை தடுத்ததா ஊனம் ?

சுதா சந்திரன் கால் அது ஊனம்..
நாட்டிய சாதனை செய்ய
தடுத்ததோ அவர் ஊனம் ?

சாதனை படைக்க ஊனம்
ஒரு தடையில்லை.
உடம்பில் உள்ள ஊனம் எல்லாம்
ஊனம் இல்லை..

உள்ளத்தின் குறை மட்டுமே
 உண்மையில் ஊனம்...


ஜெஸினா....
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 158
Post by: joker on September 06, 2017, 12:20:15 PM
ஒன்றாய் தான் உருவானோம்
ஒன்றாய் தான் வளர்ந்தோம்
தாயின் கருவறையில்

ஒன்றுபோல் பாசம் காட்டினாள் தாய்
இரு மடங்கு உண்பாள் நமக்காக
இரவு பகல் தொலைத்தாள் நமக்காக
இருந்தும் இரு மடங்கு ஆனந்தம் கொண்டாள்

ஒரு பிள்ளை இல்லை என ஏங்குவோர் பலர்
இருக்க தனக்கு இரு பிள்ளை பிறக்க போவதை
எண்ணி இரு மடங்கு ஆனந்தம் கொண்டாள்

பிரசவம் நெருங்கும் நேரம் மருத்துவர்
நுட்பமாய்ச் சோதித்து பார்த்ததில்  ஒருவருக்கு ஊனம்
என தெரிந்தது

உன்னிடம் சொன்னால் தாய்க்கும் சேய்க்கும் ஆபத்தாகலாம்
என மறைத்தனர் தந்தை உட்பட

எங்களுக்கு என்ன கவலை வெளியுலகம் காண
ஆவல் கொண்டு எட்டி உதைத்தோம் உன் வயிறில்

மருத்துவமனை அறுவை சிகிச்சை வாசல் வரை
தந்தை பின் உனக்கு துணை நாங்கள் மட்டும்

வலியின் உச்சம் தந்து, மரணத்தின் வாசல் தொட்டு பிறந்தோம்
சில நிமிட இடைவேளையில் பிறந்ததால் அண்ணன் தம்பி ஆனோம்
நாங்கள்

கண் திறந்து எங்களை பார்த்தாய் உன் கண்களின் ஆனந்தம்
குறையவில்லை

இதுவரை என் குறை நீ கண்டதில்லை
இதுவரை இரு வேறு முகம் காட்டியதில்லை
இதுவரை உன் அன்பு குறையவில்லை
இதுவரை என்னை வீழ அனுமதித்ததில்லை
இதுவரை எனக்கு நல்வழி காட்ட தவறியதில்லை

புரியாத புதிர்தான் நீ அம்மா
ஊனம் உடலிலோ கண்களிலோ அல்ல மனதில் என
உணர்த்தி கொண்டே இருக்கிறாய் உலகிற்கு

உன் அன்பிற்கு முன்னால்   ஊனம் கூட பலவீனம் ஆகிடும் அம்மா,
எப்பிறவியிலும் வேண்டும் நீயே என் அம்மா !!

*****ஜோக்கர்****
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 158
Post by: MysteRy on September 09, 2017, 04:21:16 PM
பாசத்தை பெறுவதற்கும் கொடுப்பதற்கும்
தகுதியும் வயதும் தேவை இல்லை
நல்ல மனங்களும் குணங்களும் போதுமே

சிறு வயதிலான அந்த
குழந்தைகளை பார்த்து
மெய் சிலிர்த்தது என் நெஞ்சம்

கைகள் இல்லை என்று கவலைப்படாமல்
தன் சகோதரத்துக்கு உதவி கரம் நீட்டி
பாசத்தை உணர்த்தி விட்டது
அந்த தெய்வத் குழந்தை

நல்ல குழந்தைகள் மனதில் மட்டுமே
எந்த கள்ளமும் இல்லை கபடமும் இல்லை
பாசத்தை பெறுவதற்கும் கொடுப்பதற்கும்
எந்த தகுதியும் வயதும் தேவை இல்லை

நல்ல குணமும் மனதும் போதுமே
சிறு வயதில் இந்தக் குழந்தை
செய்த நட்செயலை
என்னை மெய்சிலிர்க்க செய்ததே
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 158
Post by: thamilan on September 10, 2017, 07:28:09 PM
நீயும் நானும்
ஒரு தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகள்
ஒரே இரத்தத்தில்
உருவான குழந்தைகள்
அன்னையும் ஒன்று
தந்தையும் ஒன்று
ஒரே தாய் ஊற்றி வளர்த்த குழந்தைகள்

உனக்கு  வலித்தால்
எனக்கும் வலிக்கும்
நீ அழுதால் நானும் அழுவேன்
உனக்கு பசித்தால்
எனக்கு தெரியாதா என்ன

என் கைகளில் தான் ஊனம்
எனது மனதில் இல்லை
பாசம் மிகுந்த மனதில்
ஊனம் ஒரு பொருட்டே இல்லை
என் கைகளாக
என் வாயும்  இயங்கும்

உன்னை தழுவிடத் தான்
கைகள் இல்லை
உன்னை அன்பாக முத்தமிட
வாயயும் உதடுகளையும் தந்த
இறைவனுக்கு நான் சொல்கிறேன் நன்றி

நாம் வளர்ந்த பிறகும் உன்
கை  கோர்த்து நடக்கத்தான்
என்னால் முடியாது
உன்னுடன் பாசத்தில் பிணைந்திட
உனக்கு துணையாக நடந்திட
என்னால் முடியும்

என்றும் உனக்கு துணையிருப்பேன்
உன் உடன் பிறந்த சகோதரனாக
உன் இரு கரங்களின் துணையுடன்
உலகை வெல்லலாம்
அழாதே என் சகோதரனே

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 158
Post by: BlazinG BeautY on September 11, 2017, 01:45:18 PM
அழாதே என் கண்ணே
உன் அண்ணன் இங்கே
உன் அருகில் நான்
வருகிறேன் அங்கே

கைகள்  இல்லை எனக்கு
உன் அழுகையை   துடைக்க
உன்னை அணைத்து கொள்ள
என் மனம் ஏங்குகிறது...

 பசி தாளாமல் அழுதாய்,
அம்மா இங்கே  இல்லை ...
கலங்காதே வருந்தாதே...
உன் பசி தீர்க்க..
நகர்ந்தேன்  நகர்ந்தேன் ..

அதை எடுக்க முயன்றேன்
முடியவில்லை ..
என் வாய் கைகளாகின..
சந்தோசம் கொண்டேன்..

வாயில் வைத்தேன் விழுந்தது..
திரும்பவும் வைத்தேன்
விழாமல் தாங்கி கொண்டேன்
எடுத்து கொண்டான்  தம்பி

அப்படியே உற்றுப்பார்த்தேன்
சில நேரம்...
அம்மா வந்தார்
எங்களை பார்த்தார்
அப்படியே அள்ளி
அணைத்து கொண்டார்..

அம்மா சொன்ன ஓர் சொல்
கணீர் என் செவிகளில்..
நான் இல்லை என்றால்..
நீ பார்த்து கொள்வாய்
எனக்கு பதிலாக இன்னோர் தாய்..

மகிழ்ந்தென்.. நெகிழ்த்தேன்..


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 158
Post by: VipurThi on September 12, 2017, 08:08:16 AM
உலகில் பிறக்கையில் நாம்
இரட்டையர்
ஆனால் உணர்வுகளிலோ  நாம்
ஒற்றையர்

நான் அழுகையில் நீ அழுகிறாய்
நான் சிரிக்கையில் நீ சிரிக்கிறாய்
என் வலிகளை நீ உணர்கிறாய்
நம் அன்னையின் அரவணைப்பில்
அகம் மகிழ்கிறாய்

மனதில் ஊனம் உள்ளவர்களுக்கு
நீ முடவன் ஆனாய்
பாசம் கொண்ட உடன்பிறப்புகளுக்கு
நீ கண்ணீரானாய்

சில நிமிடங்கள் பிந்தியதால்
என் அண்ணனானாய்
என்னை அரவணைத்து என்
மனதில் தந்தையானாய்
உன் உள்ளமதால் நீயெனக்கு
தாயுமானாய்


வாழ்வின் வரமாகி நீ பிறந்தாய்
என் மொத்த உறவுகளாய்
உன் கரமாகி நான் இருப்பேன்
என் வாழ்வின் இறுதி வரை

                              **விபு**


அன்புஈனும்  ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு


ஒரு தங்கையாய் FTC யின் அண்ணன்களுக்கும், அக்காக்களுக்கும் இந்த கவிதையை நான் சமர்ப்பிக்கின்றேன் :D