FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on September 11, 2017, 06:42:04 PM

Title: உனக்கானது என் இதயம்
Post by: thamilan on September 11, 2017, 06:42:04 PM
ஆர்ப்பாட்டமில்லாத அழகு  - உன்னை
பார்க்கும் போதெல்லாம் ஆர்ப்பரிக்கும்
எனது மனது
பார்த்த நொடியில் உயிரை
உறையவைத்தாய் - நெஞ்சை
உருக வைத்தாய்
உறைதலையும்
உருகுதலையும்
ஒன்றாக நிகழ வைத்தாய் 

உன்னை நினைக்கும் நிமிடங்களில் எல்லாம்
இதயத்தின் துடிப்பை
அதிகரிக்கிறாய்
 
பேனையை நிரப்பும் மையாக
எனக்கும் புகுந்து
என்னை முழுமையாய்
நிரப்புகிறாய்

என்னை கடக்கும் நொடிகளில்
எனக்காய் படரும் உன் பார்வையில்
சிக்கிக் கொள்கிறேன்

என்னை நீ கடந்து சென்ற பிறகும்
உன் நினைவுப் பின்னலில்
சிக்கித் தவிக்கும்
உனக்கானது என் இதயம்
 
Title: Re: உனக்கானது என் இதயம்
Post by: joker on September 12, 2017, 06:45:16 PM
புலவரே ,


பேனையை நிரப்பும் மையாக  (நான் தலையில் இருக்கும் பேன் என நினைத்து விட்டேன் ....
அதையும் தமிழ் ஆகியிருக்கலாம்

"என்னை கடக்கும் நொடிகளில்
எனக்காய் படரும் உன் பார்வையில்
சிக்கிக் கொள்கிறேன் "

சுகமான வலி தான் காதல் ...அனுபவியுங்கள் புலவரே ...

அழகான கவிதை வாழ்த்துக்கள்


Title: Re: உனக்கானது என் இதயம்
Post by: thamilan on September 13, 2017, 09:36:30 PM
ஜோக்கர் நண்பரே
பேனுக்கும் மைக்கும் என்ன சம்மந்தம்.
எனக்கும் ஆங்கில சொற்களை பாவிப்பது பிடிக்காது . ஆனால் பேனைக்கு என்ன தமிழ் சொல் என்று யோசித்தேன். எழுதுகோல் தான் நினைவுக்கு வந்தது. எழுதுகோல்களில் பலவகை உண்டு. அந்த காலத்து எழுதுகோல்களில்  மை  நிரப்ப முடியாது மை  தொட்டு தான் எழுத முடியும். இந்த காலத்தில் போல் பாயிண்ட் பேனைகள் உண்டு. அதும் எழுதுகோல்கள் தான். அவற்றிலும் மை  நிரப்ப முடியாது. பென்சிலும் ஒரு எழுதுகோல் தான். அதற்கும் மைக்கும் சம்மந்தம் இல்லை.எழுதுகோல் என்று சொன்னால் இப்படி பலப்பல கேள்விகள் எழும். அதனால் தான் பேனை என்று எழுதி விட்டேன்.
உங்களுக்கு பேனைக்கு சரியான தமிழ்ச்சொல் தெரிந்தால் சொல்லுங்கள். நானும் தெரிந்து கொள்வேன்,
உங்கள் விமர்சனத்துக்கு நன்றி நண்பா!
Title: Re: உனக்கானது என் இதயம்
Post by: joker on September 14, 2017, 11:50:29 AM
எழுதுகோலில் நிரப்பும் மை போல்
எனக்குள் புகுந்து
என்னை முழுமையாய்
நிரப்புகிறாய் "

இதில் ஐயம் வர என்ன இருக்கிறது புலவரே
கவிதைக்கு விமர்சனம் நல்லதே
இருபாலரும் திருத்தி கொள்ள உதவும்

கவிதை எழுதும் புலவரின் எண்ணங்கள் தான்
கவிதைக்கு உயிர்

வாழ்த்துக்கள்