Author Topic: திருவள்ளுவர் வழங்கிய திருக்குறள்  (Read 80540 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அதிகாரம் : 03 நீத்தார் பெருமை - The  marit go in Ascetics
30 )
அந்தணர் என்போர் அறவோர்மற்  றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான் .

எல்லா உயிர்களிடத்திலும்  செம்மையான அருளை மேற்கொண்டு  ஒழுகும் அறவோரே அந்தணர் என்பவராவர் .

With gentlemercy towards all,
The sage fulfilsthe virtue`s call.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அறன் வலியுறுத்தல் - The  Power  of  Virtue

31)
சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு .

அறம் . வீடு பேற்றையும் சுவர்க்கம்முதலிய  செல்வத்தையும் தரும் . ஆதலால் மக்கள் உயிர்க்கு அறத்தை விட நன்மை உடையது வேறு ஒன்றுமில்லை .

From virtue weal and wealth outflow,
What greater god can mankind know?


                    

Offline RemO

அறன் வலியுறுத்தல் - The  Power  of  Virtue
32)

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.


ஒருவருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.

There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it.

Offline RemO

அறன் வலியுறுத்தல் - The  Power  of  Virtue
33)

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.

As much as possible, in every way, incessantly practise virtue.

Offline RemO

அறன் வலியுறுத்தல் - The  Power  of  Virtue
34)

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற.

ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show.

Offline RemO

அறன் வலியுறுத்தல் - The  Power  of  Virtue
35)

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.

That conduct is virtue which is free from these four things, viz, malice,desire, anger and bitter speech.

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அறன் வலியுறுத்தல் - The  Power  of  Virtue
36)
அன்றறிவாம் என்னா தரஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல்  அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்து துணை நிற்கும் .

Do good enow;defer it not
A deathless aid in death if sought.
                    

Offline RemO

அறன் வலியுறுத்தல் - The  Power  of  Virtue
37)

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

The fruit of virtue need not be described in books; it may be inferred from seeing the bearer of a palanquin and the rider therein.


Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அறன் வலியுறுத்தல் - The  Power  of  Virtue
38 )

வீழ்நாள் படாஅமை  நன்றாற்றின் அகுதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல் .

பயனற்றதாக ஒரு நாள் கூட கழிந்து போகாமல் , தொடர்ந்து நற்செயல்களில் ஈடு படுவதற்கு வாழ்க்கை பாதையை சீராக்கி  அமைத்து தரும் கல்லாக அந்த நர்செயகைகளே  விளங்கும் .

Like stones that block rebirth and pain
Are doing good and good again ..
                    

Offline RemO

அறன் வலியுறுத்தல் - The  Power  of  Virtue
39)

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.

அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.

Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise.

Offline RemO

அறன் வலியுறுத்தல் - The  Power  of  Virtue
40)

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.

That is virtue which each ought to do, and that is vice which each should shun.

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
இல்லறவியல்

இல்வாழ்க்கை - Married Life

41 )
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை .

பெற்றோர் , வாழ்க்கை துணை , குழந்தைகள்  என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருத்தல் வேண்டும் .

The idel householder is he
Who aids the natural orders there.

                    

Offline Anu

இல்லறவியல்

இல்வாழ்க்கை - Married Life

42 )
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்


He will be said to flourish in domestic virtue
who aids the forsaken, the poor, and the dead.
« Last Edit: November 03, 2011, 03:08:50 AM by Global Angel »


Offline RemO

இல்வாழ்க்கை - Married Life

43)

தென்புலத்தார் தெய்வம் விருந்தோக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.


The chief (duty of the householder) is to preserve the five-fold rule (of conduct) towards the manes, the Gods, his guests, his relations and himself.

Offline Anu

இல்வாழ்க்கை - Married Life

44)

பழியஞ்சிப்   பாத்தூண்   உடைத்தாயின்   வாழ்க்கை   
வழியெஞ்சல்   எஞ்ஞான்றும்   இல்..

பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.

Who shares his meal with other, while all guilt he shuns,
His virtuous line unbroken though the ages runs