Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 151  (Read 2690 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 151
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக    வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 12, 2018, 11:00:58 AM by MysteRy »

Offline SwarNa


அன்புள்ள அப்பா
தங்களின் செல்லமகள் எழுதும்
அன்பு மடல் !
அப்பா,
அப்பா பாருங்க என்ற அம்மாவின்
அறிமுகத்துடன் ஆரம்பம் ஆயிற்று
நம் உறவு
அன்று கைப்பிடித்து கொஞ்சியதை நான் அறியேன்
நினைவு தெரிந்த நாள் முதலாய்
என்னை பெயரிட்டு அழைதததில்லை
பாப்பா என்ற சொல்லே போதுமானதாய் போயிற்று

நான்  கேட்டதெல்லாம் அதைப்பற்றி நினைக்கும் முன்பே
கண்முன்னே காணக்கிடைக்கும்
உறவுகளிடம் என்னை காண்பித்து “என் அம்மா “ எனும்போது
பெருமையாய் உணர்வேன்
உங்களுக்கு தாயாக என கூறியதாலோ என்னவோ
அம்மாவுக்கு மாமியாராய்தான் போய்விட்டேன் அப்பா  :P

அன்றாடம் வருத்துகிறேன்
வேலைநிமித்தம் என்றிலாமல் வெளியில் சென்று வரும்போதெல்லாம்
வந்தவுடன் பையை எடுத்து உள்ளே பார்க்கும் பெண்ணுக்காய்
ஏதாவது வாங்கி வரும் நீங்கள்
எனக்கு கடவுள் அளித்த வரமப்பா

கொஞ்சினால் மிஞ்சுவதும்
மிஞ்சினால் கெஞ்சுவதும்
நம் இயல்பாய் மாறிற்று
சிறு பெண்தானே என எண்ணாமல் எந்த முடிவிலும்
எனையும் ஆலோசனையில்  கலந்துக்கொள்ள அனுமதிப்பீர்கள்
மகளுக்காய்  அம்மாவிடம்  திட்டு வாங்கியதை மறவேன்
அப்பா

ஆண் என்றால் இப்படிதான் இருப்பார்கள் என நல்லவிதமாய்
எண்ணுவதற்கு காரணம் நீங்களே
நீங்கள் அம்மாவை மகாராணியை போல் நடத்துவதை பார்த்து
 என் வருங்கால கணவன்
இப்படிதான் இருப்பாரென உணர்ந்தேன்
வாழ்க்கையை இப்படிதான் இருக்கும் என்றும்
இப்படிதான் வாழவேனும் எனவும்
கற்றுகொடுத்த ஆசான் நீங்கள்தான் அப்பா
என்றும் உங்களை பிரிந்திடா நிலை வேண்டும்
உங்கள் மகவாய் இருந்த நான்
உங்களை மகவாய் எண்ணி காத்திடுவேன் அப்பா

விரும்பியதை கொடுத்த நீங்கள்
என் விருபபத்தை நிறைவேற்றுவீர்கள்
என்ற நம்பிக்கையுடன் ,
   உங்கள் பாப்பா








« Last Edit: June 20, 2017, 09:38:40 PM by SwarNa »

Offline பொய்கை

  • Full Member
  • *
  • Posts: 108
  • Total likes: 792
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யாகாவராயினும் நாகாக்க...
உலகத்தை நீ காண உன்னை
கரம் பிடித்து கூட்டிபோனேன் ..
பாழும் கல் குத்திடவே மனம்
பதறி துடிச்சு போனேன் ..

கொஞ்சு மொழி கேட்டு
குயிலோசை மறந்து போனேன்..
பஞ்சு பாதம் சிவந்திடவே
அஞ்சி நானும் பதறிப்போனேன் ..

துள்ளி நீயும் ஓடி போனால்
அள்ளி அணைச்சு வந்தேன் ..
பள்ளி படிப்புக்கு பல காணி
தோற்று போனேன் ..

மேற்படிப்பு நீ படிக்க -நான்
மேலை நாடு ஓடி வந்தேன் ..
உழைச்சு களைச்சு இப்போ
ஓடாய் திரும்பி வந்தேன் ..

சோம்பி நானும் படுத்துவிட்டேன்
தேம்பி அழ போகின்றேன் ..
"அப்பா "என நீ அழைக்க
அருகில் நீயும் வருவாயோ??


Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
என் உயிருக்கு உயிர் தந்தவரே
தந்தை எனும் மகுடம்
சூடிக்கொண்டவரே
தொப்புள் கொடி அறுத்து
என்னை கையில் ஏந்திய நொடியில்
ஓராயிரம் கனவுகள் கண்டவரே

தத்தி தத்திய என் நடையில்
ஆரவாரம் கொண்டவரே
ஆர்ப்பரிக்கும் கடற்கரையில்
என் கைபிடித்து நடத்தியவரே
மழலை பேச்சில் மகிழ்ந்தவரே
நான் மனம் மகிழ கதைகள்
பல சொன்னவரே

எந்தன் முதலான கையெழுத்தில்
முன்னெழுத்தை தந்தவரே
என் வெற்றிகளின் பாதையில்
தோள் கொடுத்து துணையாய்
என்றும் பின்னே நிற்பவரே

காலத்தின் தேவைகள் யாவும்
பலன் பாராமல் கடமையின்
கண்ணாய் செய்து முடித்து
என்னை காக்கின்ற தகப்பனே

இனி உங்கள் காலமுள்ள காலம்
வரையிலே எந்தன் கையில்
வைத்து தாங்குவேன் உங்கள்
பெயர் சொல்லும் மகளாய்
சொன்ன சொல் யாவும்
முடிப்பேனே.....


"தந்தையின் அன்பை எடை போட முடியாது
ஏனெனில் அவரே உன்
வாழ்க்கையெனும் படிக்கல்லை
எடுத்து வைப்பவரும் பின்பு
தராசாய் மாறி தாங்கி நிற்பவரும்"

                    **விபு**

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 506
  • Total likes: 977
  • Karma: +1/-0
  • Gender: Male
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
அவள் தான் கருவறையில்
குழந்தையை தாங்கியதிலிருந்து
தானும் அவள்  கைகோர்த்து
கனவு காண ஆரம்பித்தவர்

குழந்தை பிறந்ததும்
தொட்டிலில் குழந்தை
கட்டிலில் மனைவியையும்
குழந்தையாய் பார்த்தவர்

எந்த குழந்தையாய் முதலில்
கொஞ்சி தான் சந்தோஷத்தை
பகிர்வதென்று தெரியாமல்
தவித்தனர்

தான் குழந்தை எட்டி உதைந்தாலும்
கன்னத்தில் அறைந்தாலும்
மறுகன்னத்தை காட்டியும்
எல்லா குறும்புகளையும் ரசித்தவர்

அன்னை தான் உதிரத்தை
பாலாக்கி பசிதீர்த்தர்
ஆனால் தன் குழந்தையின் கனவை
நனவாக்க தன் வியர்வையை விலையாகியவர்

எந்த குழந்தையும் நடை பயில்வது
தன் தந்தை மேல் வைத்த நம்பிக்கையில் தான்
உங்கள்  கரம்பிடித்து  நடக்கையில்
எல்லாம் இன்பமாய் மாறுகிறது அப்பா

மகளுக்கு நீங்கள் தான்
முதல் தோழன்
மகனுக்கு நீங்கள் தான்
முதல் ஹீரோ

அப்பா நீங்கள் உயிர்
கொடுத்த ஓவியம் நான்

உங்கள் தியாகத்தை கூற
என்னிடம் வார்த்தைகள்
இல்லை அப்பா

Offline LoShiNi

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 8707
  • Total likes: 6529
  • Karma: +0/-0
  • Gender: Female
  • "Behind every successful woman is Herself " :)


கருவில் சுமந்த
தாயையும் சேர்த்து ...
என்னையும் மார்பில்
சுமந்த தந்தையே ...

இவ்வுலகம் பிடித்து
போனது அதை உன்
விரல் பிடித்து
நான் கண்டதால் ...

கஷ்டத்தின் கண்ணீர் துளி
அறியாமல் எங்களை
வளர்த்தாய் உன் வேர்வை
துளி கொண்டு ...

வார்த்தைகள் அறியாமல்
நான் தவித்தால் ...
நீ தான் எந்தன் அகராதி ...
வார்த்தைகளுக்கு மட்டுமல்ல
வாழ்க்கைக்கும் தான் ...

உன் அமைதியில்
ஆயிரம் மொழி கொண்ட
பாசத்தை உணர்ந்தோம் ...

நீர் எங்களின் முன்
பொய்யாய்  நடித்ததில்லை
அதனால் தான் என்னவோ
எங்கள் வாழ்க்கையின் முதல்
கதாநாயகன் நீர் ..

தமிழில்  பாசம் 
என்ற  மூன்றெழுத்தின்
இன்னொரு  மறுபெயர்
என்  அப்பா....

Pin Kurippu >> Muthal muraiya en kavidhai ya intha column le post pannuren. Tappa potturinthal manikavum. Special thanks Rithika @Baby Gurl ku en kavithai pudichu enakaga tamil font la translate pani kodutatthukum.

Neer engalin mun
poiyaai nadithathillai..
athanaal thaan yennavo
engal vazhkaiyin muthal
kathanaayagan neer..

thamizhil paasam
enra moondrezhuthin
inoru marupeyar
en appa ..

Intha rendu varigal en kavidhai ku azhagu serthu kodutha Myna sis ku ennoda nandrigal :) U made it even more beautiful sis.  Thanks for all ur supports. 


« Last Edit: June 25, 2017, 12:38:22 AM by MysteRy »

Offline AnoTH

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 323
  • Total likes: 1595
  • Karma: +0/-0
  • Gender: Male
  • சோதனைகளை சாதனையாய் மாற்று
நீ நடந்து செல்லும் பாதையதை
நான் தொடர்ந்து செல்ல
வழி காட்டுகிறது
உன் பாதச் சுவடுகள்………………..
நீ கடக்கும் பாதையில்
கிடக்கும் கற்குருணிகள்
உன் பாதமதைக்  கிழித்த போதிலும்,
நீ சொரியும் இரத்த வெள்ளத்தில்
நீர் பாய்ச்சி - அமைத்த
புல்வெளி மீது புன்னகையோடு
நான் நடந்திடுவேன்……………….

நீ கரம்பிடித்து முகம் மலர்கையில்
நான் தலை நிமிர்ந்து
நாயகன் என்றேன்………………………..
தரை பார்த்து தவழ்ந்த கைகளை
நீ தலை மீதேற்றி
சுமந்து செல்கையில்
வானையும் தொட்டு விடுகிறேன்……………… 
நீ தடுமாறும் பாதை 
மேடு பள்ளம் ஆயினும் ………………
உன் காலடித் தடம் மாறா நடையில்
தொடரும் எனது பயணமும்………………..

நீ படும் துயரமதன் நிலையை
பொறுத்த போதிலும்
துணிச்சல் கொடுத்து
எனை ஆள்கிறாய்………………….
மீசை முளைக்கும் தருணத்தில்
என்  குரலின் ஓசை
ஓங்கி எழும் பொழுது
மௌனமாய் ஓய்ந்து
போகிறாய்…………………..
 
நீ மௌனிக்கும்
நொடிகள் அனைத்தும்
நான் திசை மாறும்
தருணமாயின்……………………..
நிழலாய் எழுந்து
எனது நிலை அறிந்து
திசை மாற்றி எனை
நீயும்  வெல்வாய்.........................

தந்தையெனும் உன்
மந்திரத்தின் தந்திரத்தின்
துணையோடு பயணித்திடுவேன் 
அடுத்த தலைமுறை
உன் பாதையைத்தொடர்ந்திட……………

« Last Edit: June 18, 2017, 03:59:34 PM by AnoTH »

Offline MyNa

துணைவி கருத்தரித்த  நாளிலிருந்து
வருங்கால தாய்க்கே  தாயாகியவரே ..

அவள் என்னை கருவில் சுமக்கையில் 
எங்கள் இருவரையும் மனதில் சுமந்தவரே..

இரவு பகல் என தூக்கம் பாராது  என் வரவுக்காக
வழி மேல் விழி வைத்து காத்திருந்தவரே ..

கருவிலே நான் முதலில் உதைத்த  தருணத்தில்
உலகையே மறந்து ரசித்து மகிழ்ந்தவரே..

தாயின் கருவறை விட்டு வெளியுலகை காண
பயந்து நடுங்கிய என்னை கையில் ஏந்தியவரே..

அன்று விரல் பிடித்து நடை பழகி கொடுத்து
இன்றும் கரம் பிடித்து உடன் நடப்பவரே..

நான் சொல்லும் முன்னே என் குறை அறிந்து
நான் கேட்கும் முன்னே என் மனம் அறிந்தவரே ..

சிறு காயமது எனக்கு பட்டாலுமே அதை 
தாங்கிட இயலாமல் கலங்குபவரே ..

ஆண் வாரிசை மட்டும்  எதிர்பாக்கும் தம்பதிகளின் மத்தியில்
அனைத்தும் பெண்ணாய் பிறக்கையிலும் கூட
என் மகள் என மார்தட்டி பெருமை கொள்பவரே
..

கொஞ்சிடும் குழந்தையாய் ..
அரவணைக்கும் சகோதரனாய் ..
தோள் கொடுக்கும் தோழனாய் ..
கற்பிக்கும் நல்லதோர் ஆசானாய் ..
எனக்கு எல்லாமுமாய் கிடைத்த 
தந்தை எனும் வரம் நீர் ..


இந்த தந்தை என்னை வேறொருவரின் கரம் சேர்க்கையில்
அங்கு என்னை இனி வரும் காலங்களில்
இன்னொரு தந்தையாய் தாங்கிடும்
என் வருங்கால குழந்தையின் தந்தை
நான் கேட்காமலே எனக்கு கிடைத்த இன்னொரு வரம் ..

மறுபிறவி ஒன்று உண்டெனில்
நான் மீண்டும் உமக்கே மகளாகவும்
என் குழந்தைகளை உம்மை போல் தாங்கிடும்
தந்தையாய் என்னவனும் கிடைக்கும்
வரம் பெற வேண்டும் தந்தையே ..


அனைத்து தந்தையர்களுக்கும்
தந்தையர்  இல்லா குழந்தைகளின்
தந்தையாய் வாழும் தாயார்களுக்கும்
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்...


~ தமிழ் பிரியை மைனா ~
« Last Edit: June 19, 2017, 08:00:25 AM by MyNa »

Offline VidhYa

என் அன்பிற்கும் பாசத்திற்கும் மேலான அப்பா அவர்களுக்கு தங்கள் செல்ல மகள் எழுதும் கவிதை


எப்படி எப்படி எல்லாமோ 
தன்  பாசத்தை
உணர்த்துவான் அம்மா
ஒரேயொரு கைஅழுத்தத்தில்
எல்லாமே உணர்த்துவார்
அப்பா ...

முன்னால்சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கேன் என்னைப்பற்றி
பெருமையாக அப்பா பேசிக்கொண்டிருந்ததை

அம்மா எத்தனையோ முறை திட்டினாலும்
உரைத்ததில்லை
உடனே உறைந்திருக்கிறது
என்றேனும் அப்பா முகம் வாடும் போது
என் அப்பா
எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார்
தெரியுமா என
என் நண்பர்கள் என்னிடம்
சொல்லும் போதுதான் எனக்குத்தெரிந்து
எத்தனை  பேருக்குகிடைக்காத தந்தை 
எங்கு மட்டும் என ...

எத்தனையோ பேர் நான் இருக்கிறேன்
எனச்சொன்னாலும்
அப்பாவை போல் யார் இருக்க முடியும்...?
சொல்லிகொடுத்ததில்லை
திட்டியதும் இல்லை
இல்லை என்றும் சொன்னதுமில்லை
வேண்டாமென கூறியதுமில்லை
இருந்தும்
ஏதோ ஒன்றினால் கட்டுப்படுத்தியது
அப்பாவின் அன்பு...

அம்மாவிடம் பாசத்தையும்
அப்பாவிடம் நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்  அவர்கள்
இல்லாமலும் போகலாம்.
 
பள்ளி செல்லும் வரை
உன்னை போல்
அன்பான ஆசான் இல்லை
பள்ளி சென்ற பின்
உன்னை தவிர
அன்பான ஆசான் எவனுமில்லை.

 
                     
                                      -  இப்படிக்கு உங்கள்  அன்பு மகள் வித்யா


« Last Edit: June 18, 2017, 08:03:52 PM by VidhYa »