FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on August 12, 2017, 11:33:43 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 156
Post by: Forum on August 12, 2017, 11:33:43 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 156
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக    வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org//newfiles/OVIYAM UYIRAAGIRATHU/156.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 156
Post by: VidhYa on August 13, 2017, 02:24:02 PM
                                                              காதல் காவியம்



அன்பை மலர்மாலையாய்
உறவை பூச்செண்டாய்
ஏந்தி தொடர்ந்த பயணமடா  இது

ஏழுசுவரமும் எட்டாமல் போனது
என் நாவில்
உன் பெயர் மட்டும் ஒட்டிக்கிடக்குதடா
எட்டுத்திக்கிலும்  நீ தெரிய
எந்த திசையை பார்ப்பது?

நவ கிரகங்களில் நீயும் ஒரு கிரகமாய்
உன்னை சுற்றி வரும் உப கோலாய் நானும்.

கடவுள் மனிதர்களுக்கு தந்த பொக்கிஷம் கனவுகள்
தீயவர் இல்லாத உலகம்
வருத்தங்கள் இல்லாத மனங்கள்
மாசுபடாத இயற்கை

அவர் அவர் நல்ல ஆசைகள்போல் வாழ்க்கை
பரிசுத்தமான மனங்கள்
இவை எல்லாம் காணலாம்
நம் கனவுலகில் நம் மன உலகில்

வெள்ளிகள் இமைக்க மறந்த நொடியில்
கூட நான் உன்னை நினைக்க மறப்பதில்லை
நீ தோலை தூரத்தில் இருப்பதனால் அல்ல
என் இதயத்துடிப்பின் இருப்பதனால்

நீ பேசாத ஒவொரு நொடியும்
ஒரு யுகமாய் நீள்வதால்
பல யூகங்கள் கடந்து
வாழ்கின்றேன்

பூவுக்குள் புயலடிக்க
உணர்வுகள்  உயிர்துடிக்க
யாருக்கு சொல்வது
எப்படி சொல்வது ?

காற்றேயில்லை பரக்கிறேன்
கண்களை மூடி சிரிக்கின்றேன்
கனவா? நினைவா? தெரியவில்லை

காதலின் மகிமை சொல்ல
வந்து மூச்சிரைத்து நிற்கின்றேன்
முடிந்தால் நீயும் காதலி
காதலை காதலாய்......

 
                                                                                       காதல் கவிக்குட்டி விது
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 156
Post by: VipurThi on August 13, 2017, 10:20:32 PM
காதல் சொன்ன காவியங்களை
திரும்பி பார்க்கிறேன் உன்னால் நான்
என் முன்னால் நீ வந்து நிற்கிறாய்
கண்ணால் உன் காதல் சொல்கிறாய்
கனவென நான் கண் விழிக்கும் முன்னே
என் கை கோர்த்து நீ சிரிக்கிறாய்

ரோமியோ ஜூலியட்டின் காதல்
அம்பிகாபதி அமராவதியில் தேடல்
கோகுல கிருஷ்ணனவனின் சீண்டலால்
ராதையவள் கொண்ட ஊடல்
இலக்கியங்களாம் இவை இன்று
என் இலக்கணங்களாய் போனதேனோ
என் இலக்கணங்களின் இருப்பிடமாய்
உன் இதயம்  இருப்பதேனோ??


காவியம் சொன்ன காதல் என்
காதல் இல்லை
ஆனால் காவியம் ஆனாய்
என்னுள் நீ
உன் காதல் சொல்லி


                **விபு**
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 156
Post by: JeSiNa on August 14, 2017, 01:51:50 AM
அன்பால் கட்டி போட்ட காதல்
இன்று நம்மால்  பேசப்படும்
காவியம் ஆனது ஏனோ..

அலைபாயும் மனதை
திருடி கொண்ட கள்வனே
வார்த்தையில் வர்ணித்த
உன் புதல்வி உந்தன்  அன்பிற்கு
அடிமை ஆக்கினேன் இன்று...!!

அழகிய உந்தன் கையால்
என்னை அணைத்து காதல்பேசும்
உன்  இதழ்கள்...
கட்டி கொண்டு காதல் செய்து
கட்டில் மேல் புது காவியம் ஆனதடி...

ரோமியோ கண்கள் சொன்ன கவிதையில்
 கரைந்து போன ஜூலியட்...
அம்பிகாபதி அணைப்பில்
சிக்கிக்கொண்ட இதயம் அமராவதி...
கிருஷ்ணரின் குறும்பில் 
மனதை பறிகொடுத்த ராதை
வரலாற்றில் பேசப்படும் காதல் கதைகள்....

காதல் செய்த உயிர்கள்
இந்த மண்ணில் இல்லை என்றாலும்
இவர்களின் உன்னதமான காதல் 
இலக்கியமாய்  வாழ்ந்துகொண்டேதான் இருக்கிறது..!!



கடவுளால் செதுக்க பட்ட
அழகிய சிற்பங்களுக்கு
உயிர் குடுத்த ஓவியம்
காவிய காதல்....

               JesiNa :)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 156
Post by: SunRisE on August 15, 2017, 02:31:12 AM
கணமும் யோசிக்காமல்
கண்களில் வசப்பட்டு..
வால் முனைகளின் கூர்போல்
கயல் விழிகள் நோக்கி..
என்னை மணந்து கொள்வாயா
என மகிழ் மறந்து..
அரசனவன் அடிபனிந்து
என்னை மணம் கொள் பெண்ணே!
என மன்டியிட...

ஆசைகளை அடக்கி!
நேசத்தை நேர்மையாக
கண்கள் தாழ்த்தி
வெட்கத்தின் ஊடே

பூக்கள் உதிராமல்..
பறவைகள் பறக்காமல்..
வண்டுகள் ரீங்காரம் ஓய்ந்து
காத்திருக்கும்..
அந்தி வேலையில்
செவ்வாய் மலர்ந்து...
ஆம்! உங்களை நேசிக்கின்றேன்
உங்கள் கரங்கள் மாலை இட
காத்திருக்கின்றேன்..

அவள் வாய் மொழிகள் கேட்டு
அவன் பார்க்கும் காதலில்..
நானம் கொண்ட பேதை அவள்..
மானை விட மருண்டோடுவாள்
வெட்கத்தில்...

காவியகாலத்தில் நானில்லை..

இது போன்ற காவியம் காண
கணாக்களில் மட்டுமே காண்கிறேன்..

காவியக் காதல்
வரைந்து வைத்த ஓவியம் தானே!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 156
Post by: thamilan on August 16, 2017, 04:22:33 PM
இணையில்லா காதல்கள்
காவியக் படைத்திட்ட காதல்கள் - அன்றைய
சரித்திரக் காதல்கள்

சரித்திரம் படைத்தன அன்றைய காதல்கள்
உலகில் காதல் உள்ளவரை
இந்த இலக்கியக் காதல்களும் இருக்கும்
காதலைப் போலவே காலத்தால் அழியாதது
இந்தக் காதல்

காதலுக்கு சரித்திரம் படைத்த
காதல்கள் அனைத்தும்
சாவிலேயே முடிந்தன

ரோமியோ ஜூலியட் , அம்பிகாபதி  அமராவதி
லைலா மஜ்னு ,சலீம்  அனார்கலி
இப்படி சாவில் முடிந்த
சரித்திரக் காதல்கள் பலப் பல

உண்மையான காதல்கள்
இறந்தும் வாழும்
மண்ணில் மறைந்தாலும்
மங்காது  என்றும் உண்மை காதல்கள்

தொட்டும் தொடாமலும்
பட்டும் படாமலும்
பார்த்தும் பார்க்காமலும்
பேசியும் பேசாமலும்
அன்பு ஒன்றாயே ஆணி வேராக்கி
ஆலமரம் போல தழைத்து நின்றது
அன்றைய இலக்கியக் காதல்கள்

இன்றைய காதல்கள் ????

உண்மைக்காதல் என்றும் அழிவதில்லை

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 156
Post by: joker on August 16, 2017, 07:57:51 PM
ஒரு சில நொடி தோன்றிய
மின்னல் போல் தோன்றினாள்
அவள்

கதையில்லை , எழுத வரிகளும்
தோன்றவில்லை இருந்தும் ஓராயிரம்
காவியம் சொன்னது உன் புன்னகை

மென்மையான ஓவியம் நீ
மணலில் வரைந்த  ஓவியம் அல்ல !
என் மனதில் பதிந்த இனிமையான காவியம் !

ரோமியோ ஜூலியட் , அம்பிகாபதி அமராவதி
காவியமான காதல் எல்லாம் மரணத்தில் தான்
முடியுமென்றால் எனக்கு காவிய காதல் வேண்டாம்

உன்னோடு நான் வாழ வேண்டும் பல ஆண்டுகள்
சின்ன சின்ன செல்ல சண்டைகள் இட  வேண்டும்
கொஞ்சி பேசி வளர்த்திட ஓர் குழந்தை
கொலுசு அணிந்து ஓடி விளையாட ஒரு வீடு

அம்மா செல்லமா அப்பா செல்லமா என்று கேட்க
இருவரையும் கட்டி அணைத்து முத்தமிடும் குழந்தை

நம் பிள்ளை படித்து வளர்ந்து அவனும் மணமுடித்து
பேர பிள்ளைகள் பெற்று அதனையும் கொஞ்சி

துன்பங்கள் வந்தாலும் தேற்றி தோள் கொடுத்து
வாழ்வின் இறுதியிலும் என் விரல் இடுக்கில்
உன் விரல் கோர்த்து அந்திமாலை பொழுதில்
வீதியில் நடக்க வேண்டும்

ஈரேழு ஜென்மம் வேண்டாம்
இனி ஒரு பிறவியும் வேண்டாம்
நிறைவாய் உன்னுடன் ஓர் வாழ்க்கை
காவியமாய் இல்லையெனினும்
காதலுடன் வாழ வேண்டும் ...

****ஜோக்கர் ********
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 156
Post by: SweeTie on August 17, 2017, 10:09:49 PM
பிற்பகலும்  முன்னிரவும்  சந்திக்கும்  மந்தாரம் 
காதலர் களிப்புடன்  உலாவரும் வேளை
கண்ணோடு கண் நோக்கி  கவிதைகள் பல பேச
காத்திருக்கும் நாயகன்  அவன்
சிற்றிடை  அசைய  கொலுசு மணி சலசலக்க
மற்றவர் பார்க்காமல்  ரகசியமாய்  வருவாள்  அவள்
அகழியில் துள்ளும் கெண்டைகள் போல்  என
கயல் விழிகளை வர்ணிப்பான்  நாயகன்
சூரியன் வரவால் நாணி கோணி நிற்கும் நெற்கதிர் போல்
நாணத்தால் சிவந்து கோலம் போடுவாள் நாயகி.
கவிஞனின் கற்பனையில்  காதல்  ஓர் ஓவியம் ,

கம்பன் மகனுக்கு  கவிதைக்கு பஞ்சமா?   ..
வாரியிறைத்த  காதல் கவி மழையில்  தீரக் குளித்தாள் 
குலோத்துங்க பாண்டியனின்மகள் இளவரசி அமராவதி
இருவரும் ஒருவர் என்றாகியபின்  ஏற்ற தாழ்வு  எள்ளி  நகையாட 
அம்பிகாபதி  தலை தரையில் உருள  அமராவதி உயிர் துறந்தாள் 
உண்மைக்  காதலுக்கு இதுதான் விளக்கமா?

மஜ்னுவின்  காதல்  கவிதைகளுக்கு  உயிர் கொடுக்கும் ஓவியம் லைலா
மஜ்னுவை பித்தனாக்கிய  பாரசீகத்தின் பேரழகி   
இரகசிய காதல்  அரங்கேற்றம்  வேண்டி காத்திருக்க
மாற்றான் மனைவியாய்  அவள் உயிர் நீத்தாள்  எனும் செய்தி 
கேட்ட கணமே  அவனும் உயிர் நீத்தான் 
சரித்திர காதல் வரிசையில் இடம் பெற்றார்கள்


மொகலாய சாம்ராஜ்ஜியத்தின்  இளவரசன் சலீம்
அனார்கலியின்  அபார  நடனத்தில்  விளைந்த மோகம்
காதலாகி  கசிந்துருகி   நீயின்றி நானில்லை  என்றபோது
பேரம் பேசலாயிருற்று  அடிமையுடன் அரசு
அனார்கலி  உயிருடன்  கற் சுவர் எழுப்பப்படவே
சலீம்  உயிர் அவனை விட்டு பிரித்ததுவே
காலத்தால் எழுதப்பட்டார்கள்

ரோமியோ ஜூலியட் அழகான காதல் ஜோடி
கண்டதும் காதல் ....தொடர்ந்தது  குடும்பகளின் எதிர்ப்பு 
உண்மைக்க காதல்  விபரீத  பரீட்சை சந்திக்க ஆரம்பித்தது
ஜூலியட்  மரணித்தாள்  என்ற பொய்யான செய்தி கேட்டு
ரோமியோ விஷம் அருந்த ஜூலியட் தன்னை தானே சுட்டுக்கொண்டாள்
உண்மைக்  காதலர் என வர்ணிக்கப்பட்டார்கள். 

மரணத்தில் முடிந்த இவை  காவியக்  காதல்கள்   ஆனதுவா ?
காவிய காதல்கள் என்பதால் மரணத்தில் முடிந்தனவா ?
உண்மைக் காதல்கள் மரணத்தில்தான்  முடியவேண்டுமா ?
மரணத்தில் முடியாதவை  பொய்யானவை என்றாகிவிடுமா?

காதல்கள்  வாழவேண்டும்   எதிர்ப்புகள் தகர்க்கப்படவேண்டும்
ஏற்ற தாழ்வுகள் நீங்க வேண்டும்  !!!






 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 156
Post by: DaffoDillieS on August 19, 2017, 03:37:41 PM
காதலில் தான் எத்துனை எத்துனை உணர்வுகள்..
காலங்காலமாய் மனிதனை ஆட்டி வைக்கும் அதிர்வுகள்..

கற்பனைகளின் பிடியில்..
மீள முடியாக் கைதிகளாய்..
கனவுகளின் மாய உலகில்..
மனிதர்கள் இயந்திரங்களாய்..

காதலும் பல வகைப்படும்..
விசித்திரங்களும் அரங்கேறும்..
தெய்வீகக் காதல்..
கண்டதும் காதல்..
சொல்லாத காதல்..
பார்க்காமல் காதல்..
இப்படி எண்ணற்றவை உள்ளடங்கும்..

காதல் ஓர் அரிய வியாதி..
தீவிர சிகிச்சைக்குப் பின்னும்...
காதல் நெஞ்சம் தான் அடையுமோ அமைதி!!
பிரிந்த மனம் வாடுகையில்..
கொண்ட மனம் தான் உறங்குமோ!
உடைந்த காதல் அழும் வேளையில்..
மெய்மை தான் தாங்குமோ!
பார்வைகளின் பரிபாஷையில்..
உணர்ந்த நேசம் தான் மறையுமோ!
அங்குமிங்குமாய் தேசம் பிளவுற்றிருப்பினும்..
கொண்ட அன்பு தான் மாறுமோ!

அன்பைப் பொழிந்தவர்..
வெறுப்பை உமிழும் போதும்..
உண்மைக் காதல் அழிவதில்லை!
இதுவே காதலின் நியதி..!

சூரியன் பட்ட பனி போல்..
நெஞ்சம் கசிந்துருக!
ஆற்றங்கரை ஊஞ்சல் கண்ட பிள்ளை போல்..
கண்கள் துள்ளிக் குதிக்க!
பேச்சற்று போகும் அந்த நொடி..
வாழ்க்கையின் சந்தோஷ த்வனி!

ரோமியோ-ஜூலியட்..
அம்பிகாபதி-அமராவதி..
லைலா-மஜ்னு..
தோற்றே போயிருப்னும்..
உண்மைக் காதல் வென்றே விட்டது!
சரித்திரத்தில் நின்றே விட்டது!

உள்ளங்களில் மெய்மை இருப்பின்..
நெஞ்சங்களில் சுயநலமற்ற அன்பிருப்பின்..
காலங்களைக் கடந்த காவியமாய் நிலைத்திருக்கும்!
இக்காதல் எனும் மாயை!