Author Topic: ஏழையின் பசி  (Read 2059 times)

Offline BreeZe

  • Hero Member
  • *
  • Posts: 703
  • Total likes: 2381
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Smiling is the prettiest thing you can wear
ஏழையின் பசி
« on: May 12, 2016, 12:13:21 PM »


ஒரு செல்வந்தர் இருந்தார்.

ஒரு நாள் அவர் தன் தோட்டத்தில் விளைந்த வாழைக்குலை ஒன்றை பணியாளிடம் கொடுத்துக் கோவிலில் கொடுக்கச் சொன்னார்.

ஏழைப் பணியாள் எடுத்துச் செல்லும் வழியில் அவனுக்கு அதிகப் பசியெடுக்கவே அக்குலை யிலிருந்து இரண்டு பழங்களைப் பிய்த்துச் சாப்பிட்டு விட்டான்..

மீதிப் பழங்களை கோவிலில் கொடுத்தான்.

அன்றிரவு செல்வந்தர் ஒரு கனவு கண்டார்.கனவில் இறைவன் வந்து நீஎனக்குக் கொடுத்த இரண்டு பழங்களை நான் சாப்பிட்டேன்;ருசியாக இருந்தது என்றான்.

செல்வந்தனுக்கு மிகக் கோபம் வந்தது.

ஒரு குலை பழம் கொடுத்திருக்க இரண்டு மட்டுமே இறைவனுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. மீதி என்னவாயிற்று எனக் கோபப் பட்டான்.

மறு நாள் காலை அந்தப் பணியாளைக் கூப்பிட்டு விசாரித்தான்.

அவன் இரண்டு பழங்களைப் பசியினால் தான் சாப்பிட்டதை ஒப்புக் கொண்டு ,மீதிக் குலையைக் கோவிலில் கொடுத்து விட்டதைச் சொன்னான்.

செல்வந்தனுக்குப் புரிந்தது .

அந்த ஏழை சாப்பிட்ட பழம் மட்டுமே இறைவனைச் சென்று அடைந்திருக்கிறது என்று!



நீதி: இல்லாத ஒருவனுக்கு நீ செய்த உதவே, கடவுளுக்கு செய்த உதவி எனப்படும்…


Palm Springs commercial photography

CopyCat By
BreeZe

Palm Springs commercial photography

Offline PaRushNi

Re: ஏழையின் பசி
« Reply #1 on: May 15, 2016, 09:40:06 PM »
Breeze sooravali..are u alright?? enna ninga karuthu solla aarambichutinga?? :o
idhu ungaluku set aagaliye :P
Palm Springs commercial photography

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: ஏழையின் பசி
« Reply #2 on: May 25, 2016, 12:57:57 AM »


மிக அழகான நீதிக் கதை BreeZe தோழி...

பசி
வேரூன்றி இருக்கிறது ஏழையின் வயிற்றில்!
வேரறுந்து கிடக்கிறது பணக்காரன் வயிற்றில்!


பணம் படைத்தவன் இல்லாதவனுக்கு கொடுத்து கொடுத்து உதவ மனம் வருவதில்லை, நான் கவனித்து இருக்கிறேன் கோவில் உண்டியலில் ஆயிரக் கணக்கில் போட்டுவிட்டு வெளியே பிட்சைக்காரனிடம் ஒரு ரூபாய் போடுவான். நீங்கள் அதை அழகாக எளிமையாக சொல்லிவிட்டீர்கள் தோழி.
 


பசி உண்ணும் ஏழையின் கனவுகளிலும் சிதறிக் கிடக்கிறது உணவு.



Offline BreeZe

  • Hero Member
  • *
  • Posts: 703
  • Total likes: 2381
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Smiling is the prettiest thing you can wear
Re: ஏழையின் பசி
« Reply #3 on: May 25, 2016, 12:23:28 PM »
Nanri Maran anna ..athu naan copy paste panina oru story :) ...naan padichi enaku pudichi post panen inga (F) credits goes to person who wrote this story ... ungaluke pidichi iruntha enaku santhosam anna

Copyright by

BreeZe