Author Topic: ~ ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்! ~  (Read 1072 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218306
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!



மைண்ட் ஷிஃப்ட் எனும் ஆப், பதற்றம் மற்றும் தவறான முடிவெடுக்கும் மனநிலையில் உள்ளவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. டீன் ஏஜில் உள்ளவர்களுக்கு சமூகம் மற்றும் வேலையால் ஏற்படும் தேவையற்ற மன அழுத்தம், அதனால் உண்டாகும் பதற்றத்தைக் கட்டுப்படுத்த, அந்தச் சூழலை எதிர்கொள்ள இந்த ஆப் உதவுகிறது. பயிற்சிகளை உள்ளடக்கிய இந்த ஆப், ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் தளங்களில் இலவசமாகக் கிடைக்கிற‌து. இதன் ரேட்டிங் 3.7. ஐந்து லட்சம் பயன்பாட்டாளர்களைக் கொண்டுள்ளது இந்த ஆப். http://bit.ly/1MhmCrt



மை டயட் கலோரி கவுன்ட்டர் என்கிற ஆப், நாம் உண்ணும் உணவில் உள்ள கலோரிகளை அறிந்துகொள்ள உதவுகிறது. தினசரி நமது உடற்பயிற்சிகளை அளவிட்டு, அவற்றால் நமது உடலில் குறையும் கலோரிகளின் அளவைக் கணக்கிடுகிறது. இது மட்டுமின்றி உணவில் உள்ள கலோரிகள், டயட்டை நிர்வகிப்பது, ஃபிட்னெஸ் ட்ராக்கிங் எனப் பன்முக வசதிகளுடன் உள்ளது இந்த ஆப். ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் தளங்களில் இலவசமாகக் கிடைக்கிற‌து. இதன் ரேட்டிங் 4.1. தினசரி கலோரி ட்ராக்கிங் மற்றும் ஃபிட்னெஸை கண்காணிக்கும் இந்த ஆப்பை 50 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். http://bit.ly/2krrcHF