Author Topic: அவளின் விபத்து  (Read 472 times)

Offline HBK

  • Newbie
  • *
  • Posts: 41
  • Total likes: 61
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Ninaivil Vaithu Kanavil Kanbathalla Natpu Manathil
அவளின் விபத்து
« on: August 05, 2017, 07:26:19 PM »
பூக்கள் கூட கெஞ்சுமடி
உன் புன்னகையை எனக்கும்
கொஞ்சம் கொடு என்று...

பூக்கும் மலர்கள் கூட
குறிப்பிட்ட நேரத்தில் வாடி விடும்
ஆனால் உன் முகமோ
வாடாத பூ தானடி...

விவேகம் என்னும் வார்த்தையின்
அர்த்தத்தை உன்னிடம் தான் கற்றேனடி...

சுறுசுறுப்பு என்பதை எறும்பிடம்
இருந்துதான் கற்று கொள்ள
வேண்டும் என்பார்கள்...

இல்லை இல்லை அதை
உன்னிடம் இருந்துதான்
கற்று கொள்ள வேண்டுமடி...

உன் நீண்ட கூந்தல்
அழகை கண்டு உனக்கு
தெரியாமல் ரசித்ததுண்டு...

உன் பொன்னான நடை கண்டு
ஒரு பெண்ணான நானே ரசித்தேனடி...

உனக்காக நான் அழ வேண்டும்
என்று நினைத்து தான்
உன் அருகில் என்னை அழைத்தாயோ!...

உனக்கு விபத்து என்று
கேட்டதும் என் வார்த்தைகள்
ஊமை ஆனது...

கண்களில் மட்டும் ஏனோ
கண்ணீர் கரை புரண்டது...

நீ குணமாகி திரும்பி வருவாய்
என்ற நம்பிக்கையில் நான்..

உன் வரவை என்னி என் கண்கள்
காத்திருக்க என்னை ஏமாற்றி
செல்ல உன்னால் எப்படி முடிந்தது...

அந்த நொடி தான் தெரிந்து
கொண்டேன் கடவுளுக்கு கூட
கண் இல்லை என்று...

உனக்கு ஒரு பிள்ளை
இல்லை என்று ஒவ்வொரு
நொடியும் நீ ஏங்கியதுண்டு...

உன் பிள்ளை தான் உனக்கு
கொல்லி போடும் என்று
ஆசையாய் சொன்னாயடி...

ஆனால் மண்ணால் கட்டியதால்
என்னவோ உன் ஆசையை
மரணம் என்னும் மழை
வந்து கரைத்து விட்டதடி...

நீ ஆசை ஆசையாய் வாங்கிய
வீட்டில் இன்று உன் பொய்யான
நிழல்கள் மட்டுமே வாழுதடி...

எனக்கு மூத்தவளாய் பிறந்ததால்
என்னவோ எனக்கு முன்பாகவே
போய்விட்டாயடி..

ஒரு நொடி கூட நினைத்திருக்க
மாட்டாயடி நீ இறந்து போவாய் என்று...

உன்னை பிடிக்காதவர் எவரும்
இல்லை இங்கு அதனால் தான்
என்னவோ எமனுக்கும் உன்னை
பிடித்து விட்டதடி...

நீ இறந்து விட்டாய் என்பதை
நான் மறுக்கிறேனடி...ஆனால்

என் மனமோ அதை ஏற்றுக்
கொண்டு உன் நினைவோடு
வாழத் தொடங்கி விட்டதடி...

"என்றும் அழியாத உன் நினைவுகளுடன் நான்"
HBK
                     SWEETCHIN MUSIC

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: அவளின் விபத்து
« Reply #1 on: August 07, 2017, 03:34:51 PM »
கவிஞர் அவர்களே வணக்கம்

"மண்ணால் கட்டியதால்
என்னவோ உன் ஆசையை
மரணம் என்னும் மழை
வந்து கரைத்து விட்டதடி... "

நம் நெருக்கமானவரின் பிரிவை உணர்த்த வார்த்தை
போதாது ..இருந்தும் உங்கள் மன நிலை உணர்ந்தேன்
வார்த்தை வரவில்லை ....

நன்றி



"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline SunRisE

  • Full Member
  • *
  • Posts: 179
  • Total likes: 408
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நம் வாழ்க்கை நம் கைகளில்
Re: அவளின் விபத்து
« Reply #2 on: August 08, 2017, 01:22:27 AM »
Hbk, arumayana varigal elimayana nadai. Privin thuyar ungal kavithaiyin amsam. Vazhthukkal

Offline JeSiNa

  • Hero Member
  • *
  • Posts: 504
  • Total likes: 813
  • Karma: +0/-0
  • Gender: Female
  • unmai kadhal yaar entral unai enai soluvene....
Re: அவளின் விபத்து
« Reply #3 on: August 09, 2017, 06:18:48 PM »
hbk nanba varigal anaithum kankazhanga vaithu vittathu :'( vazhgaiyil ilapugal pala nernthidum athai erka manam othulaipathu kastam pirivin thunbam niraintha ungal kavithai arumai ungal kavi payanam thodara en vazhthugal nanba.. :)

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: அவளின் விபத்து
« Reply #4 on: August 12, 2017, 01:27:17 PM »
வணக்கம் HBK  ....

தங்கள் முன்பு எழுதிய கவிகளுக்கு,
தங்களை நான் கவிஞர்
என்று பாராட்டியதில்
தவேறேதும் இல்லையென்று
தங்களின் ஒவ்வொரு கவிகளிலும்
நிரூபிக்கிறீர்கள் !!!

மிக அழகான கவிதை சகோ !!!

மனதிற்கு பிடித்த ஒருவருடையப்
பிரிவினை எவராலும்
ஏற்க  இயலாது ...
அதற்கான மருந்தினை காலம்
மட்டுமே தர இயலும் !!!

பிரிவினை ஏற்று ...
நினைவினை சுமக்கும்
தங்களுக்கும் தங்களின் கவிக்கும்
எனது வாழ்த்துக்கள் !!!

தொடரட்டும் பயணம் !!!

நன்றி !!!