Author Topic: மாற்றான் தோட்டத்து ..........  (Read 407 times)

Offline thamilan

கவிதை
நம் உணர்ச்சிகளின் வெளிப்பாடு
நாம் காணும் காட்சிகளின் நிழல்படம்
நம் எண்ணங்களின் எழுத்து வடிவம்

நானும் கவிதை எழுதினேன்
என்பதை விட‌
நானே எழுதினேன்
என்பதில் தான் பெருமை

எத்தனை கவிதை வெளியிட்டேன்
என்பதை விட‌
ஒரு கவிதை எழுதினாலும்
அதை நானே எழுதினேன்
என்பது தான் பெருமை

மற்றவர் எண்ணங்களில்
அவர் கை வண்ணங்களில்
உருவானதை சுட்டு
நம் பெயரில் எழுதுவதும்
மற்ற‌வர் சொத்தை
கொள்ளையடிப்ப்பதும் ஒன்று தான்

மாற்றான் தாய்
தாய் என்றாலும் அவள்
நம்மை பெற்ற தாய் ஆகிவிட மாட்டாள்
எல்லா பிள்ளைகளும்
பிள்ளைகள் தான்
நாம் சுமந்து பெற்ற பிள்ளைகளே
நம் பிள்ளைகள் ஆவார்கள்

அந்த பிள்ளை
கருப்போ சிவப்போ
அழகோ அவலட்சணமோ
அது என் பிள்ளை என்ற‌
பெருமை ந‌ம‌க்கு
க‌விதையும் அப்படித்தான்

ப‌க்க‌ம் ப‌க்க‌மாக‌
ம‌ற்ற‌வ‌ர் க‌விதைக‌ளை
சுட்டு நிர‌ப்புவ‌தை விட‌
சொந்த‌மாக‌ சிந்தித்து
ஒரு க‌விதை எழுதுங்க‌ள்
அது உங்க‌ள் பேர் சொல்லும்

Offline SunRisE

  • Full Member
  • *
  • Posts: 179
  • Total likes: 408
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நம் வாழ்க்கை நம் கைகளில்
Re: மாற்றான் தோட்டத்து ..........
« Reply #1 on: August 22, 2017, 10:58:50 PM »
Thamilan sago,
Maatran thottathu malligai
Enum thalaippu kandu
Thamilan kooda etho
Kadhal kavithai punaivaro
Enrenni emanthu bitten

Vidungal sagothara
Kalavaadum unavukku
Ruchi athigam
Tamizh tharam kollamal
Thalai. Nimirattum
Ungal matrumoru sirantha
Kavithaikku kathirukkindren
Ungal kavithai nadaikku
Naanum oru rasigan

Offline SweeTie

Re: மாற்றான் தோட்டத்து ..........
« Reply #2 on: August 23, 2017, 04:25:24 AM »
தமிழன்  கவிதைக்கு நல்ல வரைவிலக்கணம்  கொடுத்துள்ளீர்கள்.
நமது குழந்தை  என்று சொல்லும்போது   எவ்வளவு  பெருமையோ  அதேபோல்தான்
எனது கவிதை என்று சொல்வதும். மாற்றான்  தோட்டத்தில்  மலரும் மல்லிகையை  மணக்கலாம் .. ஆனால்  பறிக்காமல்  ரசித்தால் நன்று. 

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 506
  • Total likes: 980
  • Karma: +1/-0
  • Gender: Male
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: மாற்றான் தோட்டத்து ..........
« Reply #3 on: August 24, 2017, 03:55:35 PM »
உண்மை தான் நண்பா
கவிதை மட்டும் இல்லை ஒருத்தன் நன் திறமையை தான் உருவாகும் எந்த விடயமும்
அவன் பெற்ற குழந்தை தான்

மற்றவர் கற்பனை திருடுவந்து குற்றம் தான்