Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 172  (Read 2794 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 172
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 12, 2018, 11:16:55 AM by MysteRy »

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 180
  • Total likes: 547
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..


     தமிழ் போற்றும் தமிழர் தாம்!!!
     தமக்கென கொண்ட ஓர் பண்பாம்!!!
     
     குறைகள் கொண்ட மனிதனின் குறையை..
     களைந்திட என்றும் தேவையும் அதுவாம்!
     
     வலிமை அற்ற மனிதர்க் கெல்லாம்.
     நிழலினை போன்று இருப்பதும் அதுவாம்!
     
     பிறப்பில் அரிது மனிதன் என்பார்...
     அரிதை காக்க அவசியம் அதுவாம்!

     இறைவனின் வரமென இருப்பினும் கூட..
     தொழுவதை விடவும் அது மிகப் பெரிதாம்!
 
     மனவலி தீர்க்கும் அன்பின் மருந்தாம்!
     மகத்துவம் கொண்ட உதவிகள் விருந்தாம்!
 
     பொய்யாய் போகும் ஒர் நாள் காயம் (உலகம்)..
     அதுவரை போற்றுவோம் மனித நேயம்!!!
 
     உதவிட முயலும் இக் குழந்தையை!! போலே..
     உதவிடுவோமே இயலாதவர்க்கே!!!

 
      மனித நேயம் காப்போம்!!!      மானுடம் போற்றுவோம்!!!

                                   அன்புடன் பீன்......
« Last Edit: January 21, 2018, 06:03:05 PM by Mr.BeaN »
intha post sutathu ila en manasai thottathu..... bean

Offline JeGaTisH

சிறு பிள்ளையிடம் இருக்கும் உதவும் கருணை
அவர் பெற்ற  பிள்ளையிடம் இல்லையே...

பெற்றவர்களை வீதியில் விட்டால்
உனக்கும் அந்நிலமை ஏற்படும் என்பதை மறவாதே...

உதவி அது ஒவ்வோருவருக்கும் தேவைப்படும்
ஆனால் அது தேவையான ஆளிடம் இருந்து கிடைக்கபெருவதில்லை...

புண்ணியம் அது நீ செய்யும் நன்மையிலையே அடங்கும்
நீ தவிர்க்கும் ஒவ்வொரு நன்மையையும் உனக்கே தீமையாகும்...

தாய் தந்தை இல்லையே என்று கவலைபடாதே
அனாதையாய் இருக்கும் ஒவ்வொருவரும் உனக்கு தாய் தந்தையே ....

கைநீட்டி உதவி செய் அது பிற்காலத்தில்
உனக்கு உதவி செய்யும் கரங்கலாகும்....

நாம் பிள்ளையாய் இருந்த போது பெற்றோர் நம் மீது காட்டிய பாசத்தை
நம் பெற்றோர்கள் பிள்ளைகளாகிய பொது காட்ட மறவாதே.

இறந்திட தான் பிறந்திருகின்றோம்
இருக்கும்போது கொஞ்சம் இரக்கத்தோடு இரு.


யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா



              அன்புடன் ரோஸ்மில்க் தம்பி ஜெகதீஸ்
« Last Edit: January 22, 2018, 03:56:20 PM by JeGaTisH »

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
உடலால் ஊனமானவனை
உள்ளத்தால் ஊனமாக்கும்
உண்மையற்ற உலகமிது

சுயநலவாதிகளின் சூழ்ச்சியில்
நியாயவாதிகளான இவர்கள்
நிலை குலைந்து போகின்றனர்

ஆனால் நிதானமற்ற
மழலைகளோ மனிதம்
மாறாமல் வளர்கின்றனர்

உழைக்கும் கரங்களற்ற
உன்னத உள்ளங்களுக்கு
உதவும் கரங்களாய் மாறிடும்
சின்னஞ் சிறு சிறார்களை
சொல்லில் சொல்லிட
வார்த்தைகள் இல்லை

இளமையில் புகட்டிடும்
பண்புள்ள பழக்கங்களே
அன்புள்ள வாழ்க்கையின்
அத்திவாரமாகும்

                   **விபு**

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்

அடடே,
பார்த்ததும் பிடித்துவிடும்
புகைப்படம்

எடுத்தவனுக்கு
தெரிந்திருக்கிறது 
கலையின் அழகு

ஆயிரமாயிரம்  பேர்
விரும்பும் ஒரு புகைப்படம்

ஆனால்

மனிதநேயம்
அவனிடத்தில் வற்றி
போயிருக்கவேண்டும்

இன்றைய அவல நிலை
இது

சாலையோர விபத்தை
படம் பிடித்து நண்பர்கள்
குழுவிற்கு
அனுப்பும்
நாம்

சாக கிடப்பவனுக்கு
திருவூர்தி அழைக்க தாமதிப்பது
அவனை கொல்வதற்கு சமம்
என அறிவோமோ ?!

அப்புகைப்படத்தை பார்க்கும்
ஒவ்வொருவருக்கும்
அச்சிறுகுழந்தை
உணர்த்திக்கொண்டே இருக்கும்
உதவி என்பது யாதென்று

அதை எடுத்தவன்
மட்டும்
விதி விலக்கோ ?!

இதை தான் எம்வள்ளுவன்
அழகாய் சொன்னான்

"காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது"
என்று

உதவி என்பது என்ன செய்கிறோம்
என்பது அல்ல.
உதவி என்பது எவ்வளவு செய்கிறோம்
என்பதும் அல்ல.
உதவி என்பது யாருக்குச் செய்கிறோம்
என்பதும் அல்ல

உதவி என்பது எப்போது செய்கிறோம்
என்பதைப் பொருத்தது

உதவி செய்ய அறிவு தேவை இல்லை
இதயம் இருந்தால் போதும்

வாருங்கள் காலத்தே உதவுவோம் !


****ஜோக்கர் ****
« Last Edit: January 23, 2018, 12:27:04 PM by joker »

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline thamilan

பச்சிளங்குழந்தையாய் நீ
தடுக்கி விழும்போதெல்லாம்
நடக்க முற்ப்படுகிறாய் - என
நரம்பெல்லாம் குளிர்ந்து
தூக்கிப்பிடித்தேன்

பள்ளிச்சிறுவனாய் நீ
துள்ளித் திரிந்த போது
தவறி விழக்கூடாதென்று -தவித்துப்போய்
தாங்கிப் பிடித்தேன்

வாலிபனாய் வளர்த்துவிட்டாய்
பருவத்தின் வேகத்தில் - நீ
பாய்ந்து சென்றபோதெல்லாம்
பயந்து போய் உன்னை
தடுத்துப் பிடித்தேன்

மனைவி வந்ததும்
நீ ஒதுங்கி வாழ்ந்ததை
துரத்துப் பச்சைதான் கண்ணுக்கு குளிர்ச்சி என்று
ஊருக்குச் சொல்லி உன்னை
 விட்டுப் பிடித்தேன்
 
வருடம் ஒரு முறை
விருந்தினனாய் வந்துவிட்டு
வேலைப் பளுவென 
கூசாமல் போய் சொன்னபோதும்
பாசம் குறையாதவன் என
தட்டிக் கொடுத்தேன்

வயதான காலத்தில்
வாழ்க்கைச் சக்கரத்தின் பல் பதிந்து
வலுவிழந்து கால் பலமிழந்து
என் கைகளே கால்களென 
சக்கர வண்டியே துணையென
வாழத்தொடங்கியபின்
என்னை தாங்கிப் பிடிக்கவும்
தட்டிக் கொடுத்து ஆறுதல் சொல்லவும்
பெற்ற மகன் நீ மறந்துவிட்டாய் மறுத்து விட்டாய்
மனிதநேயம் மரணித்துபோனதென
மனம் வருந்தி இறைவனை நிந்தித்தேன்

இல்லை இன்னும் மரணிக்கவில்லை 
குழந்தைகள் வடிவில் இன்னும்
வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை
எனக்குணர்த்தியது அந்தக் காட்சி

ஒரு வயதான முதியவரின் சக்கரவண்டியை
தன்னால் முடியாது என்று தெரிந்தும்
தன்னம்பிக்கையோடு தடைகளை தாண்ட
தன் பிஞ்சுக் கையால் இழுத்தது உதவும்
ஒரு சின்னஞ் சிறுவனின் உதவும் கரங்களை

அன்பும் அருளும் நிறைந்த இறைவன்
இன்னும் சிறுவர்கள் மனதில் குடியிருக்கிறான்
ஒருவருக்கு உதவிட
பணமும் பொருளும் தேவை இல்லை
உதவ வேண்டும் என்ற மனம் இருந்தாலே போதும்
உலகம் உயர்ந்து நிற்க்கும் 

Offline Ms.SaraN

பூமியில் முதல் தடம் வைக்கும் வரை
நமக்கென  உரிய பெயர் குழந்தை
எப்பாவமும் அறியாத உள்ளம்
யாரை பார்த்தாலும் சிரிப்போம்
ஜாதிக்கு பொருள் தெரியாமல் வளர்வோம்
அணைக்கும் கைகளுக்கு அடிமையவோம்
ஏதும் சூதுவாது புரியாமல் அறியாமல்

வளர்ந்தோம் பட்டம் ஆயிரம் பெற்றோம்
குடும்பத்தை மறந்து வேலைக்காக ஓடினோம்
பெற்றோரை காக்காமல் பணத்தை காத்தோம்
மனிதாபிமானம் அற்று பலரை நோகடித்தோம்
புகழுக்காக நண்பனின் வளர்ச்சியில் குறிவைத்தோம்
அனைத்தும் இருந்தும் பிச்சைக்காரனாய்
வாழத்துவங்கினோம்
மனித நேயம் காற்றில் பறக்க

நல்ல உள்ளம் படைத்தவர் யாரோ
வேற்று கிரகத்தில் வாசிக்கிறார்களோ
என்று  நம் உள்ளம் ஏங்கும் போது
எங்கோவொரு மூலையில் குட்டி உள்ளத்தில்
குழந்தையின் ரூபத்தில் வாழ்கின்றது மனிதநேயம்
பணம் என்றால் பொருள் தெரியாத
காரணத்தினாலோ என்னவோ

தனியாகத்  தள்ளாடும் மனிதனுக்கு
உதவ மனிதர்களில் சிலருக்கு நேரம் இல்லை
பல மணி நேரம் அனாதையாக நின்றாலும்
நாதி அண்டுவதில்லை
இதில் முகச்சுளிப்பு வேறு
இதை அறிந்துதான் கடவுள்
குழந்தையின்  ரூபத்தில் பூமி வருகிறார்போலும்
இருக்கும் வரை மனிதநேயம் படைத்தவனாய் வாழ்
இல்லையேல் பிணமாகச்  சாம்பலில் கருகு

Offline BreeZe

  • Hero Member
  • *
  • Posts: 703
  • Total likes: 2381
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Smiling is the prettiest thing you can wear

மனதில் ஒரு வலி
என்றும் இருந்தாலும்
எப்பவும் முகத்தில்  புன்னகையுடன்
தினமும் நாளை வரவேற்றுக்கும் இவன்

வாழ்வையே சவாலாக எண்ணி வாழும்
சிறந்த உள்ளம் படைத்தவன்
அன்றாடம் மனதில் எத்தனை வலிகள் இருந்தாலும்
சிரித்த முகத்துடன் அதை எதிர்க்கொள்ளும்
வல்லமை படைத்தவன்

இவன் கால்களில் தான் ஊனம்
இல்லை ஊனம் இவன் மனதில்
பெற்றவரும் உற்றவரும் பெற்று எடுத்தவர்களும்
கை விட்டாலும்  விடவில்லை இவன்
நம்பிக்கையை தன்நம்பிக்கையை
எத்தனை சோதனைகள்  எத்தனை வேதனைகள்
இவன் சிரிப்பில் மறைந்து விடும் அத்தனையும்
படைத்தவன் இருக்கிறான்
படி அளப்பான் என்பதே இவன் தாரக மந்திரம்

எத்தனை தடைகள் வந்தாலும்
எங்கிருந்தாவது ஒரு கரம் நீளும் உதவிக்கு
படைத்த இறைவன் யாரையும்
தவிக்க விடுவதில்லை

இப்படி பிறந்தோம் என்று வருந்தாதே
எப்படி வளர்ந்தோம் என்று கலங்காதே
இது நம் வாழ்க்கை
நாம் தான் வாழவேண்டும்

 ஏழையோ பணக்காரனோ
கூனோ குருடோ
வாழ்வோம் நம் வாழ்வை
எவரையும் ஏமாற்றாமல்
எவரையும் எதிர்பார்க்காமல்
இது தான் நான் என வாழ்ந்து
மற்றவர்களுக்கும் வழிகாட்டியாய் இரு
இது தான் உன் வாழ்க்கைக்கு
நீ செலுத்தும் நன்றி


Copyright by
BreeZe

Offline சாக்ரடீஸ்

  • Hero Member
  • *
  • Posts: 845
  • Total likes: 2403
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Self-respect is a Priority & Luxury to Urself
எதார்த்தமான வாழ்க்கையில்
நாம் நம் எதார்த்தங்களை
எதார்தமாய் எதிர் கொள்ளாததால்
மனித நேயம் என்ற ஒன்று
நம்மில் பலருக்கு
பறிபோகின்றது ....

இளைய தலைமுறைக்கு
சவுக்கடி கொடுக்கும் புகைப்படம்
இது
குழந்தைகளின் அறிவுக்கு அப்பாற்பட்ட
மனித நேயத்தை இளைய தலைமுறைக்கு
அறிவுறுத்தும் புகைப்படம்
இது

குழந்தைகள்
தன் பிஞ்சு விரல்களை கொண்டு
பெற்றோர்களை தழுவி உதவும் போது
 அஹ்ஹா !! ஆஅஹ்ஹா !!
பேரின்பம் அவர்களுக்கு
தங்கள் உடல் ஊனம் மனஊனம்
மறந்து மகிழ்ச்சி என்னும்
சமுத்திரத்தில் விழுகிறார்கள்
அடாடா !!
இது அல்லவே
மனிதநேயம்

அன்பு பாசம் கருணை
இவை அனைத்தின் மறுஉருவமே
மனித நேயம் ...
அனால் இந்த மனிதநேயத்தின்
மறு உருவம் குழந்தை தான்  என்பதை
இப்போது உணர்தேன்

அன்னை தெரேசா  சொன்னது போல்
"உறவில் வரும் அன்பை விட
அன்பால் வரும் உறவு உயிர் போன்றது"
இதை பின்பற்றுவோம் 
மனிதநேயத்தை வளர்ப்போம்

மனிதநேயம் என்னையும்
அமிர்தத்தை
குழந்தைகளுக்கு ஊட்டி
வளர்ப்போம் ..

இந்த கிறுக்கனின் கிறுக்குத்தனமான
கிறுக்கல்களுக்கு
ஓவியம் உயிராகிறது மூலம்
 உதவும் கரம் நீட்டி
என் கிறுக்கல்களுக்கு உயிர் குடுத்த
உங்கள் மனிதநேயத்துக்கு
இந்த கிறுக்கல்
சமர்ப்பணம்

மனிதநேயத்தை காப்பதை விட
வளர்ப்பதில் முயற்சி கொள்வோம் !!!
« Last Edit: January 26, 2018, 06:28:18 PM by Socrates »

Offline பொய்கை

  • Full Member
  • *
  • Posts: 108
  • Total likes: 792
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யாகாவராயினும் நாகாக்க...
[highlight-text]

முல்லைக்கு தேர் கொடுத்த பாரி
உன் செயல்பார்த்து வந்திடுவான் ஓடி
மயிலுக்கு போர்வை தந்த பேகன் மனம்
வென்றிட்ட பஞ்சு மனம் உந்தன் மனம்

பெரிய ஆடையை  சிறிய ஊசி இணைப்பது
பெரிய பாறையை சிறிய உளி உடைப்பது
கண்முன்னே காணொளியாய் வந்திடுதே
கண் இரண்டும் ஈரத்தால் நனைந்துடுதே

பிஞ்சு போன்ற உந்தன் கரம்
மெச்சுகின்ற நெஞ்சு உரம்
கடவுள் ஒத்த கருணை மனம்
அள்ளி அணைக்க துடித்திடும்
காண்பவரின் சிறிய மனம்

கருணை உள்ளம் கொண்ட அன்னை தெரசா
ஆசியுடன்  உன்அன்னை தந்தாலோ பரிசா
பசுமை இல்லா மனித மனம் தரிசா
பண்படுத்த கடவுள்தந்த நீ சிறந்த பரிசா

இவன்தந்தை என்நோற்றான் கொல்லெனும் சொல்
வள்ளுவன் சொல்லியப்போ புரியலையே!

வார்த்தையைத்தான் தேடுகிறேன் !
உன்னை வாழ்த்த
வார்த்தையைத்தான் தேடுகிறேன் !
வார்த்தையால் வாழ்த்திடாது
வணங்கி விடை கோருகிறேன் !
[/highlight-text]