Author Topic: ரஜினி ஹிட்ஸ்  (Read 33479 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #15 on: October 28, 2012, 03:44:41 PM »
படம்: பணக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: இளையராஜா


மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்
மனசை பார்த்துதான் வாழ்வ மாத்துவான்
ஏ மனமே கலங்காதே வீணாக வருந்தாதே
பாரங்கள் எல்லாமே படைத்தவன் எவனோ அவனே சுமப்பான்
ஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம்
(மரத்தை..)

படைத்தவனின் துணை இருக்க அடுத்தவனின் துணை எதற்கு
இதயத்திலே துணிவிருக்க வருத்தமிங்கே உனக்கெதற்கு
படைத்தவனின் துணை இருக்க அடுத்தவனின் துணை எதற்கு
இதயத்திலே துணிவிருக்க வருத்தமிங்கே உனக்கெதற்கு
உன்னை நல்ல ஆளாக்க உத்தமனை போலாக்க
எண்ணியவன் யார் என்று கண்டுக்கொள்ள யாருண்டு
ஊரெல்லாம் உந்தன் பேரை போற்றும் நாள் வரும்
ஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம்
ஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம்
(மரத்தை..)

உதவி இன்றி தவிப்பவருக்கு உதவிடவே நீ படிப்பாய்
உணவு இன்றி துடிப்பவர்க்கு உணவுத்தர நீ படிப்பாய்
உதவி இன்றி தவிப்பவருக்கு உதவிடவே நீ படிப்பாய்
உணவு இன்றி துடிப்பவர்க்கு உணவுத்தர நீ படிப்பாய்
புத்தியுள்ள உனக்கெல்லாம் புத்தகத்து படிப்பெதற்கு
சக்தி உள்ள உனக்கெல்லா சத்தியத்தில் தவிப்பென்ன
காத்திருப்பது எத்தனை பேரோ உன்னிடம் தோற்ப்பதற்கு
ஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம்
ஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம்
(மரத்தை..)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #16 on: October 28, 2012, 03:45:05 PM »
படம்: பணக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி



டிங் டாங் டாங் டிங் டாங்
டிங் டாங் டாங் டிங் டாங்

இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது
இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது
காதல் காதல் டிங் டாங்
கண்ணில் மின்னல் டிங் டாங்
ஆடல் பாடல் டிங் டாங்
அள்ளும் துள்ளும் டிங் டாங்
(இரண்டும்..)

காதலில்லா ஜீவனை நானும் பார்த்ததில்லை
வானமில்லா பூமிதன்னை யாரும் பார்த்ததில்லை
தேகமெங்கும் இன்பம் என்னும் வேதனை வேதனை
நானும் கொஞ்சம் போட வேண்டும் சோதனை சோதனை
உந்தன் கை வந்து தொட்ட சத்தம்
டிங் டா டிங் டாங் டா டிங் டாங்
அன்பு முத்தங்கள் இட்ட சத்தம்
டிங் டா டிங் டாங் டா டிங் டாங்
அங்கும் இங்கும் டிங் டாங்
ஆசை பொங்கும் டிங் டாங்
நெஞ்சில் நெஞ்சம் மஞ்சம் கொள்ளும்
(இரண்டும்..)

காதல் கண்ணன் தோளிலே நானும் மாலை ஆனேன்
தோளில் நீயும் சாயும்போதும் வானை மண்ணில் பார்த்தேன்
நீயும் நானும் சேறும்போது கோடையும் மார்கழி
வார்த்தை பேச நேரம் ஏது கூந்தலில் பாய் விரி
எங்கு தொட்டாலும் இன்ப நாதம்
டிங் டா டிங் டாங் டா டிங் டாங்
என்றும் தீராது நெஞ்சின் வேகம்
டிங் டா டிங் டாங் டா டிங் டாங்
அங்கும் இங்கும் டிங் டாங்
சொர்க்கம் தங்கும் டிங் டாங்
உந்தன் சேவை எந்தன் தேவை
(இரண்டும்..)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #17 on: October 28, 2012, 03:46:04 PM »
திரைப்படம் : கைகொடுக்கும் கை
பாடியவர்கள் : SPB , S .ஜானகி
இசை: இளையராஜா


தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு
இரவும் இல்லே பகலும் இல்லே
அன்புக்கு பஞ்சமில்லே
தாலேலோ தாலேலோ

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு

நடந்தா காஞ்ச நிலம் செழிக்கும்
சிரிச்சா கோயில் மணி அடிக்கும்
கண்ட கண்ணு படும்

பேசும் போது தாயப் பார்த்தேன்
தோளில் தூங்கும் பிள்ளை ஆனேன்

நெஞ்சத்திலே ஏஏ
நெஞ்சத்திலே ஊஞ்சல் கட்டி
ஆரிரரோ பாடவோ

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு
வீடெதும் இல்லே வாசலுமில்லே
அன்புக்கு பஞ்சமில்லே
தாலேலோ தாலேலோ

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு

இனி நான் கோடி முறை பொறப்பேன்
உன நான் பார்க்க விழி தொறப்பேன்
இது சத்தியமே



நீரும் போனா மேகம் ஏது
நீயும் போனா நானும் ஏது
என்னுயிரே ஏஏ

என்னுயிரில் நீ இருக்க
உன்னுயிரும் போகுமோ
(தாழம்பூவே வாசம் வீசு)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #18 on: October 28, 2012, 03:46:56 PM »
படம்: நான் சிவப்பு மனிதன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜான
கி

பெண் மானே சங்கீதம் பாடி வா
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்
(பென் மானே..)

தேன் மழை நீ ஹோய் மார்பிலே தூவவோ
தேவதை நீ ஹோய் நான் தினம் தேடவோ
கையருகில் பூமாலை காதல் என்னும் கோபுரம்
மை விழியில் நீ தானே வாழ்கிறாய் ஊர் புறம்
என் காதல் வானிலே பெண் மேக ஊர்வலம்
காணுவேன் தேவியை கண்களின் விழாவில்

உன் மானே சங்கீதான் பாடவா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் தேனே வந்தேனே
(உன் மானே..)

யாத்திரை ஏன் ஹோய் ராத்திரி நேரமே
போர்களம் தான் ஹோய் பூக்களின் தேகமே
தேக மழை நான் ஆகும் தேவியை தேடுவேன்
ஈர வயல் நீயாக மேனியை மூடுவேன்
கண்ணோரம் காவியம் கை சேறும் போதிலே
வானமும் தேடியே வாசலில் வாராதோ
(பெண் மானே..)
« Last Edit: October 28, 2012, 03:49:07 PM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #19 on: October 28, 2012, 03:47:51 PM »
படம்: வீரா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா


ங்கு டாங்கு டிங்
டிங்கு டாங்கு டிங்
டிங்கு டாங்கு டிங்
டிங்கு டாங்கு டிங்

மாடத்திலே கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு ஐயா ஆத்துப் பொண்ணு
கூடத்திலே நடு கூடத்திலே
ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளை
மாமி சின்ன மாமி
மடிசார் அழகி வாடி சிவகாமி

டிங்கு டாங்கு டிங்
டிங்கு டாங்கு டிங்
(மாடத்திலே..)

டாலடிக்கிற நல்ல வைர அட்டி
போலிருக்கிற நீதான் ரொம்ப சுட்டி
ஆசை வைக்கிற இப்ப ரொம்ப நாளா
மாலையிட்டதும் மாறக் கூடாதுன்னா
பூலோக சாட்சி பொம்மனாட்டி ஆட்சி
ஸ்ரீ கிருஷ்ணன் நான் அல்லடி
இப்போது பாப்ப் என் பேச்சை கேட்ப
பின்னால என்னாவையோ
ஆன போதும் இங்கு ஆத்துக்காரி
ரொம்ப கண்ட்ரோல் பண்ணா கண்ட்ரோல் ஆகாதடி

டிங்கு டாங்கு டிங்
டிங்கு டாங்கு டிங்
(மாடத்திலே..)

அட்ஜஸ் பண்ணி கூட நீ இருப்பியோ
அடங்காத அலமு போல் இருப்பியோ
சட்ட திட்டம் தான் கையில் வச்சிருப்பேளோ
மத்டியான நேரம் பாய் போட சொன்னா
மாட்டேன்னு சொல்வியோ
மாட்டேன்னு சொன்னா சும்மாவே விடுவே
மாட்னி சோ கூப்பிடுவே ஏன்னா
நாளை சங்கதி நாளை பார்க்கலாம்
மானே இப்போ வாடி அணைச்சிக்கலாம்

டிங்கு டாங்கு டிங்
டிங்கு டாங்கு டிங்
(மாடத்திலே..)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #20 on: October 28, 2012, 03:50:05 PM »
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
இசை: இளையராஜா
பாடல் : பஞ்சு அருணாச்சலம்
திரைப்பட: பிரியா



அக்கரைச் சீமை அழகினிலே
மனம் ஆடக்கண்டேனே( அக்கரை)
புதுமையிலே மயங்குகிறேன்(2)
- அக்கரைச்

பார்க்கப் பார்க்க ஆனந்தம்
பறவை போல உல்லாசம்
வேலை இன்றி யாருமில்லை
எங்கும் சந்தோஷம்
வெறும்பேச்சு வெட்டிக்கூட்டம்
ஏதுமில்லை இந்த ஊரில்
கள்ளம் கபடம் இன்றி
கண்ணியமாக ஒற்றுமை உணர்வுடன்
வாழும் சிங்கப்பூர்

(அக்கரைச்சீமை அழகினிலே)
லலலா லலலா

சிட்டுப்போல பிள்ளைகள்
தேனில் ஆடும் முல்லைகள்
துள்ளித் துள்ளி மான்கள் போல
ஆடும் உற்சாகம்
தினம் தோறும் திருநாளே
சுகம் கோடி மனம் போலே
சீனர் தமிழர் மலேய மக்கள் உறவினர் போல
அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர்


மஞ்சள் மேனிப்பாவைகள்
தங்கம் மின்னும் அங்கங்கள்
காவியத்தில் வார்த்தை இல்லை
உன்னைப் பாராட்ட
நடைபார்த்து மயிலாடும்
மொழிகேட்டு கிளி பேசும்

கண்ணில் தவழும் புன்னகை கண்டேன்

சொர்க்கம்போல இன்பமும் பெருமையும்
வாழும் சிங்கப்பூர் (அக்கரைச்சீமை)
லாலாலாலாலல்லாலா

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #21 on: October 28, 2012, 03:51:17 PM »
படம் : படிக்காதவன் (1985)
இசை : இளையராஜா




ஒரு கூட்டுக் கிளியாக, ஒரு தோப்புக் குயிலாக பாடு, பண்பாடு
இரை தேடப் பறந்தாலும் திசை மாறித் திரிந்தாலும் கூடு, ஒரு கூடு
என்னென்ன தேவைகள் அண்ணனைக் கேளுங்கள்

செல்லும் வழியெங்கெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்

சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால்
சத்தியம் உங்களைக் காத்திருக்கும்
தாய் தந்த அன்புக்கும் நான் தந்த பண்புக்கும்
பூமாலை காத்திருக்கும்

நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா
வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப் பணமா
வெள்ளை இளஞ் சிட்டுக்கள் வெற்றிக் கொடி கட்டுங்கள்
சொர்க்கம் அதைத் தட்டுங்கள், விண்ணைத் தொடுங்கள்

பேருக்கு வாழ்வது வாழ்க்கையில்லை
ஊருக்கு வாழ்வதில் தோல்வியில்லை
ஆனந்தக் கண்ணீரில் அபிஷேகம் நான் செய்தேன்
என் கண்ணில் ஈரமில்லை

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #22 on: October 28, 2012, 03:52:10 PM »
படம் : தனிக்காட்டு ராஜா(1982)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜான
கி

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வா வா
காதோடு தான் நீ பாடும் ஒசை
நீங்காத ஆசை ஆ ஆ நீங்காத ஆசை

(சந்தனக் காற்றே)

நீர் வேண்டும் பூமியில் பாயும் நதியே
நீங்காமல் தோள்களில் சாயும் ரதியே
பூலோகம் அ அ அ தெய்வீகம் அ அ அ
பூலோகம்.. மறைய மறைய.. தெய்வீகம்.. தெரியத் தெரிய
வைபோகம் தான்...

(சந்தனக் காற்றே)

கோபாலன் சாய்வதோ கோதை மடியில்
பூபாணம் பாய்வதோ பூவை மனதில்
பூங்காற்றும் அ அ அ சூடேற்றும் அ அ அ
பூங்காற்றும்... தழுவத் தழுவ... சூடேற்றும்... சரியத் சரிய
ஏகாந்தம் தான்...

(சந்தனக் காற்றே)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #23 on: October 28, 2012, 03:54:40 PM »
படம்: தர்மதுரை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஸ்வர்ணலதா, KJ ஜேசுதாஸ்



மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமன் உனக்குத்தானே
பூவோடு ஓஓஓ தேனாட
தேனோடு ஓஓஓ நீயாடு ஓஓஓ
(மாசி மாசம்)

ஆசை நூறாச்சு போங்க நிலவு வந்தாச்சு வாங்க
நெருங்க நெருங்கப் பொறுங்கப் பொறுங்க ஓஹோஹோ
ஏ ஆசை நான் கொண்டு வந்தால் அள்ளித் தேன்கொள்ள வந்தால்
மயங்கிக் கிறங்க கிறங்கி உறங்க ஓஹோஹோ
வெப்பம் படருது படருது வெப்பம் வளருது வளருது
கொட்டும் பனியிலே பனியிலே ஒட்டும் உறவிலே உறவிலே ஓஓஓ…
(மாசி மாசம்)

காமலீலா வினோதம் காதல் கவிதா விலாசம்
படித்துப் படித்து எடுக்க எடுக்க ஓஹோஹோ
ஆசை ஆஹாப் பிரமாதம் காதல் கவிதாப் பிரவாகம்
தொடுத்துத் தொடுத்து முடிக்க முடிக்க ஓஹோஹோ
கொடிதான் தவழுது தவழுது பூப்போல் சிரிக்குது சிரிக்குது
உறவும் நெருங்குது நெருங்குது உலகம் மயங்குது உரங்குது ஓஓஓ…
(மாசி மாசம்)

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #24 on: October 28, 2012, 03:58:40 PM »
படம்: இளமை ஊஞ்சலாடுகிறது
இசை: இளையராஜா
பாடியவர்: வாணி ஜெயராம், SP பாலசுப்ரமணியம்
பாடல்: கவிஞர் வாலி


ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது...

ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது...

மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க

சங்கமங்களில் இடம் பெறும் சம்பவங்களில் இதம் இதம்

மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன....

[ஒரே நாள்...]

நெஞ்சத்தில் பேர்எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
நெஞ்சத்தில் பேர்எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்

கற்பனைகளில் சுகம் சுகம்
கண்டதென்னவோ நிதம் நிதம்

மழை நீ, நிலம் நான், மயக்கமென்ன...

[ஒரே நாள்...]

பஞ்சனை பாடலுக்கு... பல்லவி நீ இருக்க
பஞ்சனை பாடலுக்கு... பல்லவி நீ இருக்க

கண்ணிரண்டிலும் ஒரே ஸ்வரம்
கையிரண்டிலும் ஒரே லயம்

இரவும், பகலும், இசை முழங்க....

[ஒரே நாள்...]
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #25 on: October 28, 2012, 03:59:19 PM »
படம்: ஆறிலிருந்து அறுபது வரை
இசை: இளையராஜா
பாடியவர்: ஜெயச்சந்திரன்
வரிகள்: பஞ்சு அருணாசலம்



வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
காலத்தின் கோலம் புரிந்தது
ஞானிதானே நானும்
வாழ்க்கையே வேஷம்..

அன்பை நான் கண்டேன்
தினம் ஆசையோடு காவல் நின்றேன்
சொந்தமே என்றேன்
அவள் வாழ்வுக்காக வாழ்ந்து வந்தேன்
நெஞ்சிலே ஈரம்
அது காய்ந்து போன பால்தானா
வரண்ட நிலம் நீரை தேடுது
கசந்த மனம் ஞாபம் பேசுது
ஞானிதானே நானும்.
வாழ்க்கையே வேஷம்..


மலர்களை அள்ளி
தரும் கைகள் மீது வாசம் சேரும்
முள்ளையே கண்டேன்
அந்த காயம் தந்த பாடம் போதும்
கலங்குதே கண்கள்
நான் போன ஜென்மம் செய்த பாவம்
நினைப்பவர்கள் மறந்த நேரமே
மறப்பதுக்கு ஞானம் வேண்டுமே
ஞானிதானே நானும்

(வாழ்க்கையே வேஷம்..)

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #26 on: October 28, 2012, 03:59:58 PM »
படம்: ராஜாதி ராஜா
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ



சிலுசிலுவென குளிரடிக்குது அடிக்குது
சிறு அரும்புகள் மலர் வெடிக்குது வெடிக்குது
வனம் விட்டு வனம் வந்து
மரங்கொத்திப் பறவைகள் மனம் விட்டு சிரிக்கின்றதே

மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் குருவி
அலை ஆடை கலையாமல் தலையாட்டும் அருவி
மலை முடியினில் பனி வழியுது வழியுது மண் மணக்குதம்மா
கலையழகினில் மனம் கரையுது கரையுது கண் மயங்குதம்மா

(மலையாளக் கரையோரம்)


நீரில் மெல்ல சிறு நெத்திலி துள்ள
நீரோடை தாயைப் போல வாரி வாரி அள்ள
நீல வானம் அதில் எத்தனை மேகம்
நீர் கொண்டு காற்றில் ஏறி நீண்ட தூரம் போகும்
காட்டோரம் மூங்கில் பூக்கள் வாசம் வீச
காதோடு ஏதோ சொல்லி ஜாடை பேச

தேக்கும் பாக்கும் கூடாதோ
தோளைத் தொட்டு ஆடாதோ
பார்க்கப் பார்க்க ஆனந்தம்
போகப் போக வாராதோ
என் மனம் துள்ளுது
தன் வழி செல்லுது
வண்ண வண்ணக் கோலம்


(மலையாளக் கரையோரம்)


தூரல் உண்டு மலைச்சாரலும் உண்டு
பொன்மாலை வெயில் கூட ஈரமாவது உண்டு
தோட்டம் உண்டு கிளிக்கூட்டமும் உண்டு
கிள்ளைக்கும் நம்மைப் போல காதல் வாழ்க்கை உண்டு
நான் அந்த கிள்ளைப் போல வாழ வேண்டும்
வானத்தில் வட்டமிட்டு பாட வேண்டும்

எண்ணம் என்னும் சிட்டுத்தான்
ரெக்கைக் கட்டிக் கொள்ளாதா
எட்டுத்திக்கும் தொட்டுத்தான்
எட்டிப் பாய்ந்து செல்லாதா
என் மனம் துள்ளுது
தன் வழி செல்ல்து
வண்ண வண்ணக் கோலம்

(மலையாளக் கரையோரம்)

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #27 on: October 28, 2012, 04:00:35 PM »
படம்: பணக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ / S ஜானகி



நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுதான்
பேரு விளங்க இங்கு வாழணும்
சோல வனத்தில் ஒரு ஜோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க சிந்து பாடணும்
ஒன்னுக்கொன்னு பக்கத்திலே
பொண்ணு புள்ள நிக்கையிலே
கண்ணுபடும் மொத்தத்திலே
கட்டழகன் அம்மாடி என்ன சொல்ல
(நூறு வருஷம்..)

உசில மணியாட்டம் ஒடம்பத்தான் பாரு
தெருவில் அசைஞ்சாடும் திருவாரூர் தேரு
ஓம குச்சிப்போல் புடிச்சாரு தாரம்
தாவி அணைச்சாக்கா தாங்காது பாரம்
இவரு ஏழு அடி
நடக்கும் ஏணியடி
நிலவை நின்னுக்கிட்டே தொட்டுடுவார் பாரு
மனைவி குள்ளமணி
உயரம் மூனு அடி
இரண்டும் இணைஞ்சிருந்தா கேளி பண்ணும் ஊரு
ரெட்ட மாட்டு வண்டி வரும்போது
நெட்டை குட்டை என்றும் இணையாது
இந்த ஒட்டகந்தான்
கட்டிக்கிட குட்ட வாத்தை புடிச்சான்
நூறு வருஷம் ஹே ஹே..
(நூறு பருஷம்...)

புருஷன் பொஞ்சாதி பொருதந்தான் வேணும்
பொருத்தம் இல்லாட்டி வருத்தம்தான் தோணும்
அமைஞ்சா அது போல கல்யாணம் பண்ணு
இல்ல நீ வாழு தனியாழா நின்னு
முதல்ல யோசிக்கணும்
பிறகு நேசிக்கணும்
மனசு ஏத்துக்கிட்டா சேத்துக்கிட்டு வாழு
உனக்கு தகுந்தபடி குணத்தில் சிறந்தபடி
இருந்தா ஊரறிய மாலை கட்டி போடு
சொத்து வீடு வாசல் இருந்தாலும்
ஹே சொந்தம் பந்தம் எல்லாம் அமைஞ்சாலும்
அட உள்ளம் ரெண்டும் ஒட்ட விட்டால்
கல்யாணம்தான் கசக்கும்
(நூறு வருஷம்...)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #28 on: October 28, 2012, 04:01:11 PM »
படம்: தளபதி
இசை: இளையராஜா
பாடியவர்: மிதாளி


யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனோடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட
(யமுனை..)

இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லையே கூட..
இளைய கன்னியின் இமைத்திடாத கண்
அங்கும் இங்கும் தேட...
(இரவும்..)

ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசைவைப்பதே அன்பு தெல்லையோ...
(ஆயர்பாடியில்..)
பாவம் ராதா...

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனோடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட...
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #29 on: October 28, 2012, 04:01:51 PM »
படம்: தளபதி
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்:எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுவர்ணலதா



அடி ராக்கம்மா கையைத் தட்டு
புது ராகத்தில் மெட்டுக் கட்டு
அடி ராக்கோழி மேளம் கொட்டு
இந்த ராசாவின் நெஞ்சத் தொட்டு

அட ராசாவே பந்தல் நட்டு
புது ரோசாப்பூ மாலை கட்டு
அதை ராசாத்தி தோளில் இட்டு
தினம் ராவெல்லாம் தாளம் தட்டு

இது கட்டுக்காவல் இது ஒத்துக்காது
இதைக் கட்டிப் போட ஒரு சூரன் ஏது

ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாங்குஜக்குச்சா
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாங்குஜக்குச்சா

அடி ராக்கம்மா கையத் தட்டு
புது ராகத்தில் மெட்டுக் கட்டு
அட ராசாவே பந்தல் நட்டு
புது ரோசாப் பூ மாலை கட்டு

தேரிழுக்கும் நாளும் தெப்பம் விடும் நாளும்
மச்சான் இங்கே அது ஏன் கூறு
அட ஊரு சனம் யாவும் ஒத்துமையாச் சேரும்
வம்பும் தும்பும் இல்லை நீ பாரு

மத்தளச் சத்தம் எட்டு ஊருதான்
எட்டனும் தம்பி அடி ஜோராக
வைக்கிற வானம் அந்த வானையே
தைக்கணும் தம்பி விடு நேராக
அட தம்பட்டம் தாரதான் தட்டிப் பாடு

முத்தம்மா முத்தம் சிந்து
பனி முத்துப் போல் நித்தம் வந்து
அட மாமா நீ ஜல்லிக்கட்டு
இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு
அடி பக்கம் நீதான் ஒரு வைக்கப்போரு
உன்ன கொஞ்சம் மேஞ்சா என்ன அக்கப் போரு

(ஜாங்குஜக்கு)

அடி ராக்கம்மா கையத் தட்டு
புது ராகத்தில் மெட்டுக் கட்டு
அட மாமா நீ ஜல்லிக்கட்டு
இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு


வாசலுக்கு வாசல் வண்ண வண்ணமாக
இங்கே அங்கே ஒளி விளக்கேத்து
அட தட்டிருட்டுப் போச்சு
பட்டப் பகலாச்சு எங்கும் இன்பம் என்னும் பூப்பூத்து

நல்லவர்க்கெல்லாம் எதிர் காலமே
நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா
உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால்
உள்ளங்கையில்தான் வெற்றி வாராதா
அட இன்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான்

கண்ணம்மா கன்னம் தொட்டு
சொகம் காட்டம்மா சின்ன மெட்டு
பூமாலை வெச்சுப்புட்டு
புது பாட்டெல்லாம் வெளுத்துக் கட்டு

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்தமுடன் எடுத்த பொற்ப்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே

அடி ராக்கம்மா கையத் தட்டு
புது ராகத்தில் மெட்டுக் கட்டு
அட ராசாவே பந்தல் நட்டு
புது ரோசாப் பூ மாலை கட்டு
அட ஒன்னப் போல இங்கு நானுந்தாண்டி
அடி ஒண்ணு சேர இது நேரந்தாண்டி

(ஜாங்கு ஜக்கு)

அடி ராக்கம்மா கையத் தட்டு
புது ராகத்தில் மெட்டுக் கட்டு
அட ராசாவே பந்தல் நட்டு
புது ரோசாப் பூ மாலை கட்டு