Author Topic: ரஜினி ஹிட்ஸ்  (Read 33861 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #60 on: November 05, 2012, 03:04:11 AM »
Film : Maaveeran


மன்னர் மன்னனே என்னக்கு கப்பம் கட்டு நீ..
ஜென்ம ஜென்மமாய் என்னக்கு கட்டு பட்டு நீ..
எந்த ஊரு ராணி என்று என்னை நினைத்தாய்
எட்டு தேசம் ஆளுகின்ற பெண்ணை முறைத்தாய்
மன்னவா ஒ மன்னவா வா வா..
மன்னர் மன்னனே என்னக்கு கப்பம் கட்டு நீ..
ஜென்ம ஜென்மமாய் என்னக்கு கட்டு பட்டு நீ..
மன்னர் மன்னனே என்னக்கு கப்பம் கட்டு நீ..
ஜென்ம ஜென்மமாய் என்னக்கு கட்டு பட்டு நீ..

நான் பணம் படைத்த பட்டத்து ராஜன் தவ புதல்வி
நீ திமிர் படைத்த பாட்டாளி மக்களின் படை தலைவன்
ஆட்டம் போடு கூட்டம் போடு ஆடி போகும் உன் ஆணவம்
அர்ஜுனந்தான் அஞ்சுகின்ற அள்ளி ராணி என் ஜாதகம்
என்னை பார்த்து எந்த ஆணும்
இந்த நாளும் எந்த நாளும்
என்னை பார்த்து எந்த ஆணும் வணங்கி வந்து நின்று
வந்தனங்கள் தந்து செல்லனும்

மன்னர் மன்னனே என்னக்கு கப்பம் கட்டு நீ..
ஜென்ம ஜென்மமாய் என்னக்கு கட்டு பட்டு நீ..
எந்த ஊரு ராணி என்று என்னை நினைத்தாய்
எட்டு தேசம் ஆளுகின்ற பெண்ணை முறைத்தாய்
மன்னவா ஒ மன்னவா வா வா..
மன்னர் மன்னனே என்னக்கு கப்பம் கட்டு நீ..
ஜென்ம ஜென்மமாய் என்னக்கு கட்டு பட்டு நீ..
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #61 on: November 05, 2012, 03:04:35 AM »
திரைப்படம் : நெற்றிக்கண்
இசை: இளையராஜா
பாடியவர் : K J ஏசுசுதாஸ் S ஜானகி
பாடல் : கண்ணதாசன்
வெளியான ஆண்டு : 1981




ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு....
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்

இடமும் வலமும் இரண்டு உடலும் மனமும் ஒ ஒ...
இனைதோங்கி நிற்கும்போது
இதையன்றி எண்ணம் ஏது
இளவேனிர் காலம் வசந்தம்

ஒரு கோவில் மணியின் ராகம்.... லல லல லல லல லா...
ஒரு கோவில் மணியின் ராகம்
ஒரு வானில் தவழும் மேகம்
பறந்தோடும் நாள் இன்றுதான் கண்களே

ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு.... ஹோ ஹோ...

ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்

இடையும் கொடியும் குலுங்கும் நடையும் மொழியும் ஹ ஆ ஆ....
எடை போட கம்பன் இல்லை
எனக்கந்த திறனும் இல்லை
இலை மூடும் வாழை பருவம்

மடி மீது கோவில் கொண்டு.... லல லல லல லல லா...
மடி மீது கோவில் கொண்டு
மழை காலம் வெயில் கண்டு
சிலையாக நான் நிற்பதே அற்புதம்
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு....

ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்

லா லல லா லல
லா லல லா லல
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #62 on: November 05, 2012, 03:05:07 AM »
திரைப்படம் : உதிரிப்பூக்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி
பாடல் : கண்ணதாசன்
வெளியான் ஆண்டு : 1979


அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ

சங்கம் காணாதது தமிழும் அல்ல
தன்னை அறியாதவள் தாயும் அல்ல
சங்கம் காணாதது தமிழும் அல்ல
தனை அறியாதவள் தாயும் அல்ல

என் வீட்டில் என்றும் சந்ரோதயம்
நான் கண்டேன் வெள்ளி நிலா
அழகிய கண்ணே உறவுகள் நீயே

சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
என் நெஞ்சம் என்றும் கண்ணாடி தான்
என் தெய்வம் மாங்கல்யம் தான்

அழகிய கண்ணே உறவுகள் நீயே

மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாளுமே கலையாதது
மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாளுமே கலையாதது
நம்பிக்கை என்றும் கலைந்தோடுது
என் நெஞ்சம் அலையாதது

அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #63 on: November 05, 2012, 03:05:29 AM »
படம் : தர்மயுத்தம்
இசை: இளையராஜா
பாடல்: வல்லபன்
பாடியவர்: மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி
வெளியான ஆண்டு : 1979


ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி
பொன்மான் விழி தேடி
மேடை கட்டி மேளம் தட்டி
பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்

குங்குமத் தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

காதல் நெஞ்சில்..ஹே ஹே ஹே ஹே
மேள தாளம்..ஓஓஒஒ
காதல் நெஞ்சில்..ஹே ஹே ஹே ஹே
மேள தாளம்..ஓஓஒஒ
காலை வேளை பாடும் பூபாளம்
மன்னா இனி... உன் தோளிலே...
படரும் கொடி நானே
பருவப் பூ தானே
பூ மஞ்சம் உன் மேனி எந்நாளில் அரங்கேறுமோ

குங்குமத் தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
மேடை கட்டி மேளம் தட்டி
பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

தேவை யாவும் ஹே ஹே ஹே ஹே
தீர்ந்த பின்னும் ஓஓஒஒ
தேவை யாவும் ஹே ஹே ஹே
தீர்ந்த பின்னும் ஓஓஒஒ
பூவை நெஞ்சில் நாணம் போராடும்

ஊர்கூடியே உறவானதும்
தருவேன் பலநூறு
பருகக் கனிச்சாறு
தளிராடும் என் மேனி தாங்காது உன் மோகம்

ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி
பொன்மான் விழி தேடி
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #64 on: November 05, 2012, 03:05:49 AM »
படம் : முள்ளும் மலரும்
பாடல் : பஞ்சு அருணாசலம்
பாடியவர் : ஜென்சி
இசை : இளையராஜா
வெளியான ஆண்டு : 197
8

அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளைமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்பதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே அடி பெண்ணே

அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளைமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை

வானத்தில் சில மேகம் பூமிக்கோ ஒரு தாகம்
பாவை ஆசை என்ன பூங்காற்றில் ஒரு ராகம்
பொன் வண்டின் ரீங்காரம் பாடும் பாடல் என்ன
சித்தாடை முத்தாடு செவ்வந்தி நீயே
சிங்காரம் பார்வை சொல்லும் சேதியல்லவோ

அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளைமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்பதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே அடி பெண்ணே... அடி பெண்ணே

நீரோடும் ஒரு ஓடை மேலாடும் திருமேடை
தேடும் தேவையென்ன
பார்த்தாளும் ஒரு ராணி
பாலாடை இவள் மேனி
கூறும் ஜாடை என்ன
ஒன்றோடு ஒன்றான எண்ணங்கள் நீயே
கண்ணோடு கோலமிட்டு ஆடுகின்றதோ

அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளைமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்பதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே அடி பெண்ணே... அடி பெண்ணே
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #65 on: November 05, 2012, 03:06:15 AM »
Movie Name:Dharmathin thalaivan
Song Name:Muthamil kaviye varuga
Singers:K.J.Yesudhas,K.S.Chithra
Music Director:இளையராஜா


முத்தமிழ் கவியே வருக முக்கனி சுவையே வருக
முத்தமிழ் கவியே வருக முக்கனிச் சுவையே வருக
காதலென்னும் தீவினிலே காலங்கள் நாம் வாழ
நாள் வந்தது

முத்தமிழ் கலையே வருக முக்கனிச் சுவையும் தருக
காதல் என்னும் தீவினிலே காலங்கள் நாம் வாழ
நாள் வந்தது

முத்தமிழ் கலையே வருக முக்கனிச் சுவையும் தருக ஒ..

சரணம் ௦1

காதல் தேவன மார்பில் ஆடும் பூமாலை நான்
காவல் கொண்ட மன்னன நெஞ்சில் நான் ஆடுவேன்
கண்கள் மீது ஜாடை நூறு நான் பார்க்கிறேன்
கவிதை நூறு தானே வந்து நான் பாடினேன்
மூடாத தோட்டத்தில் ரோஜாக்கள் ஆட
என்னோடு நீ ஆட ஓடோடி வா
காணாத சொர்க்கங்கள் நான் காண தானே
பூந்தென்றல் தேர் ஏறி நீ ஓடி வா
காலங்கள் நேரங்கள் நம் சொந்தம்
இன்பம் கோடி ஆ..

ஆ.. முத்தமிழ் கலையே வருக
முக்கனிச் சுவையும் தருக

சரணம் ௦2

தங்கம் கொள்ளும் தமிழ் காதல் சிந்து
கொஞ்சம் கெஞ்சும் வண்ணம் ஒரு ராகம் சிந்து
நெஞ்சம் எந்தன் மஞ்சம் அதில் அன்பை தந்து
தந்தோம் தந்தோம் என்று புது தாளம் சிந்து
வார்த்தைக்குள் அடங்காத ரசமான சரசம்
நான் ஆட ஒரு மேடை நீ கொண்டு வா
என்றைக்கும் விளங்காத பல கோடி இன்பம்
யாருக்கும் தெரியாமல் நீ சொல்ல வா

காலங்கள் நேரங்கள் நம் சொந்தம்
இன்பம் கோடி ஆ..

முத்தமிழ் கவியே வருக முக்கனிச் சுவையே வருக
காதலென்னும் தீவினிலே காலங்கள் நாம் வாழ
நாள் வந்தது
முத்தமிழ் கவியே வருக முக்கனிச் சுவையே வருக
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #66 on: November 05, 2012, 03:06:37 AM »
Movie name:Raajaathi raja
Song Name:Vaa vaa manjal malare
Singers:Mano,S.P.Shailaja
Music Director:Ilaiaraja


வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
வைர மணி தேரினிலே ஒன்ன வெச்சு நான் இழுப்பேன்
வைர மணி தேரினிலே ஒன்ன வெச்சு நான் இழுப்பேன்
என்னுயிரே ..ஹா ஹா ஹா ஹா
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே

குயில் வந்து கூவையிலே
குஷியான பாடலிலே
ஒயிலாள் மனம் தவிக்குதைய
உயிரே தினம் உருகுதையா
வாச கருவேப்பில்லையே
உந்தன் நேசம் வந்து சேர்ந்ததம்மா
வீசும் இளன் தென்றலிலே
உந்தன் தூதும் வந்து சேர்ந்ததம்மா
பொன்னான நேரம் வீணாகுது
என்னோடு சேர்ந்தே ஒன்றாயிரு
என்ன சொல்லுறே ஆ ஆ ஆ ஆ

வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
வைரமணி தேரினிலே
ஒன்ன வச்சி நான் இழுப்பேன்
என்னுயிரே ஹா ஹா ஹா ஹா
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே

தென்னை மரம் பிளந்து
தெருவெல்லாம் பந்தலிட்டு
பந்தல் அலங்கரித்து
பாவை உன்னை அமர வைத்து
அம்மி அதை மிதித்து
அரசாணி பூட்டி வைத்து
அருந்ததியை சாட்சி வைத்து
அழகு மஞ்சள் கயிர் எடுத்து
கல்யாணம் ஆகும் காலம் வரும்
எல்லோரும் காணும் நேரம் வரும்
என்ன சொல்லுறே ஹா ஹா ஹா ஹா

வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
வைர மணி தேரினிலே
உன்ன வச்சு நான் இழுப்பேன்
என்னுயிரே ஹா ஹா ஹா ஹா

வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #67 on: November 05, 2012, 03:07:00 AM »
Movie Name:Raajaathi raja
Song Name:Meenammaa meenamma kangal meenamma
Singers:Mano,S.Janaki
Music Director:Ilaiyaraja
Cast:ரஜினிகாந்த்


மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா
சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ
இதமாக சுகம் காண துணை வேண்டாமோ
மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா

சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே
தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே
முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி
தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி
மோகம் கொண்ட மன்மதனும் பூங்கணைகள் போடவே
காயம் பட்ட காளை நெஞ்சில் காமன் கணை மூடுதே
மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ
சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ
இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே
சுகமான புது ராகம் இனி கேட்க்கத்தான்

மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா

இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள்
மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மேதை போடுங்கள்
சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள்
சந்தனத்தை தொட்டெடுத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள்
ப்பூஞ்சரதில் தொட்டில் கட்டி லாலிலலி கூறுங்கள்
நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள்
பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள்
சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள்
சுகமான புது ராகம் உருவாகும் வேலை நாணமோ
இதமாக சுகம் காண துணை வேண்டாமோ

மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா
சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ
இதமாக சுகம் காண துணை வேண்டாமோ
மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #68 on: November 05, 2012, 03:07:20 AM »
Movie : Naan adimai illai
music : Ilaiyaraaja
singers : Janaki s


வா வா என் இதயமே என் ஆகாயமே
உன்னை நாளும் பிரியுமோ இப்பூ மேகமே
கடல் கூட வற்றி போகும்
கங்கை ஆறும் பாதை மாறும்
இந்த ராகம் என்றும் மாறுமோ
வா வா இதயமே என் ஆகாயமே

தேவ லோக பாரிஜாதம்
மண்ணில் வீழ்தல் என்ன ஞாயம்
எந்தன் பாதம் முள்ளில் போகும்
மங்கை உந்தன் கால்கள் நோகும்
வான வீதியில் நீயும் தாரகை
நீரில் ஆடும் நான் காயும் தாமரை
காதல் ஒன்றே ஜீவனென்றால்
தியாகமுந்தன் வாழ்க்கை என்றால்
ஏழை வாசல் தேடி வா

...........வா வா இதயமே..........

வான வில்லும் வண்ணம் மாறும்
வெள்ளி வேரும் சாய்ந்து போகும்
திங்கள் கோட தேய்ந்து போகும்
உண்மை காதல் என்றும் வாழும்
காற்று வீசினால் பூக்கள் சாயலாம்
காதல் மாளிகை சாய்ந்து போகுமோ
ராமன் பின்னே மங்கை சீதை
எந்தன் வாழ்வோ உந்தன் பாதை
காதல் மாலை சூட வா

............வா வா இதயமே............
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #69 on: November 05, 2012, 03:07:47 AM »
படம் : வேலைக்காரன்
பாடல் : வா வா வா கண்ணா
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: மூ.மேத்தா
பாடியவர்கள் : சித்ரா, மனோ




வா வா வா கண்ணா வா
வா வா வா வா கண்ணா வா
தா தா தா தா கவிதை தா
உனக்கொரு சிறுகதை நான் இனிமையில்
தொடத் தொட தொடர்கதை தான் தனிமையில்
உனக்கொரு சிறுகதை நான்
தொடத் தொட தொடர்கதை தான்
உருகி உருகி இதைப் படித்திட
வா வா வா வா கண்ணா வா
வா வா வா

வானில் காணும் வானவில்லின் வண்ணம் ஏழு வண்ணமோ
தோகை உந்தன் தேகம் சூட மேகமாலை பின்னுமோ

காணும் இந்த பூக்கள் மேலே காயம் என்ன காயமோ
காற்சலங்கையோடு வண்டு பாடிச் சென்ற மாயமோ

நூறு நூறு தீபமாய் வானில் அங்கு கார்த்திகை
வாழும் காதல் சின்னமாய் ஆகும் எங்கள் யாத்திரை

நாலு கண்கள் பாதை போட
நாகரீகம் தொடர்ந்தது

வா வா வா வா கண்ணா வா
தா தா தா தா கவிதை தா

எனக்கொரு சிறுகதை நீ இனிமையில்
தொடத் தொட தொடர்கதை நீ தனிமையில்
எனக்கொரு சிறுகதை நீ
தொடத் தொட தொடர்கதை நீ
உருகி உருகி உனைப் படித்திட
வா வா வா அன்பே வா
வா வா வா

ஆசையோடு பேச வேண்டும் ஆயுள் இங்கு கொஞ்சமே
ஆவலாக வந்த பின்னும் தஞ்சம் இந்த நெஞ்சமே

ஆசை கொண்ட தேகம் ரெண்டு நீதி மன்றம் போகுமே
பேசத் தேவை இல்லை என்றே அங்கு தீர்ப்பு ஆகுமே

ராக வீணை போலவே நானும் வந்து போகவோ
தேகம் வீணை ஆகவே தேவ கீதம் பாடவோ

நானும் நீயும் காதல் கைதி
எண்ண எண்ண இனிக்குது

வா வா வா அன்பே வா
தா தா தா அமுதம் தா

காளிதாசன் காண வேண்டும் காவியங்கள் சொல்லுவான்
கம்ப நாடன் உன்னை கண்டு சீதை என்று துள்ளுவான்

ஜாஜஹானை பார்த்ததில்லை நானும் உன்னை பார்க்கிறேன்
தாகம் கொண்ட தேகம் ஒன்று பாடும் பாடல் கேட்கிறேன்

தாஜ்மஹாலின் காதிலே ராம காதை கூறலாம்
மாறும் இந்த பூமியில் மதங்கள் ஒன்று சேரலாம்

பாதி நீயும் பாதி நானும்
ஜோதியாக இணைந்திட

வா வா வா வா கண்ணா வா
தா தா தா தா கவிதை தா

எனக்கொரு சிறுகதை நீ

இனிமையில்

தொடத் தொட தொடர்கதை நீ

தனிமையில்

எனக்கொரு சிறுகதை நீ…ஆ…
தொடத் தொட தொடர்கதை நீ…ஆ…
உருகி உருகி உனைப் படித்திட
வா வா வா அன்பே வா
வா வா வா
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #70 on: November 05, 2012, 03:09:22 AM »
படம் (Movie) : அண்ணாமலை
பாடல் (Song) : வெற்றி நிச்சயம்
Music Director : தேவா
பாடியவர் Singer: S .P.பாலசுப்ரமணியம்
கவிஞர் : வைரமுத்து


வெற்றி நிச்சயம் , இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே , நான் கொண்ட லட்சியம்
என்னை மதித்தால் என் உயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பாப்பேன்
அடேய் நண்பா ! உண்மை சொல்வேன் !
சவால் வேண்டாம் , உன்னை வெல்வேன் !
வெற்றி நிச்சயம் , இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே , நான் கொண்ட லட்சியம்

இமயமலை ஆகாமல் எனது உயிர் போகாது
சூரியன் தூங்கலாம் எனது விழி தூங்காது
வேர்வை மழை சிந்தாமல் வெற்றி மலர் தூவாது
எல்லையை தொடும் வரை எனது கட்டை வேகாது
ஒவ்வொரு விதையிலும் விருக்ஷம் ஒளிந்துள்ளதே
ஒவ்வொரு விடியலும் எனது பேர் சொல்லுதே
பணமும் புகழும் உனது கண்ணை மறைக்கிறதே
அடேய் நண்பா ! உண்மை சொல்வேன் !
சவால் வேண்டாம் , உன்னை வெல்வேன் !
வெற்றி நிச்சயம் , இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே , நான் கொண்ட லட்சியம்

இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்
வானமே தாழலாம் தாழ்வதில்லை தன்மானம்
மேடு பள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோஷம்
பாறைகள் நீங்கினால் கோடைகில்லை சங்கீதம்
பொய்மையும் வஞ்சமும் உனது பூர்வீகமே
ரத்தமும் வேர்வையும் எனது ராஜாங்கமே
எனது நடையில் உனது படைகள் பொடிபடுமே
அடேய் நண்பா ! உண்மை சொல்வேன் !
சவால் வேண்டாம் , உன்னை வெல்வேன் !

வெற்றி நிச்சயம் , இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே , நான் கொண்ட லட்சியம்
என்னை மதித்தால் என் உயிர் தண்டு காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்
அடேய் நண்பா ! உண்மை சொல்வேன் !
சவால் வேண்டாம் , உன்னை வெல்வேன் !
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #71 on: November 05, 2012, 03:09:55 AM »
படம்: அண்ணாமலை
இசை: தேவா
பாடியவர்: Sp பாலசுப்ரமணியம்


வந்தேண்டா பால்காரன்
அடடா பசு மாட்டைப்பத்தி பாடப் போறேன்
புது பாட்டு கட்டு ஆடப்போறேன்
(வந்தேண்டா..)

புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும்
உன்னால முடியாது தம்பி
அச பாதிப்புள்ள பொறக்குதப்பா
பசும்பாலை தாய்ப்பாலா நம்பி
(வந்தேண்டா..)

தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாகம் பிரிப்பது பசுவோட வேலையப்பா
அது பிரிந்தாலும் பாலோடு தண்ணீரைக் கலப்பது மனிதனின் மூளையப்பா
சாணம் விழுந்தா உரும்பாரு எருவை எரிச்சா திருநீறு
உனக்கு என்ன வரலாறு உண்மை சொன்னா தகறாரு
நீ மாடு போல உழைக்கலையே
நீ மனுஷனை ஏச்சுப் பொழைக்கிறியே
(வந்தேண்டா..)

அட மீன் செத்தா கருவாடு நீ செத்தா வெறுங்கூடு
கண்ணதாசன் சொன்னதுங்க
பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும்
நான் கண்டு சொன்னதுங்க
அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம்
ஆயுள் வளர்க்கும் ஆட்டுப்பாலுங்க
அண்ணாமலை நான் கொடுப்பதெல்லாம்
அன்பு வளர்க்கும் மாட்டுப் பாலுங்க
அன்னை வாரிக் கொடுத்தது தாய்ப்பாலு
என்னை வாழ வைத்தது தமிழ்ப்பாலு
(வந்தேண்டா..)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #72 on: November 05, 2012, 03:10:15 AM »
ப‌ட‌ம் : அண்ணாம‌லை
பாடியவ‌ர்க‌ள் : எஷ்.பி.பால‌சுப்பிர‌ம‌ணியம், சித்திரா
இசை : தேவா


(பெண்)அண்ணாம‌லை அண்ணாம‌லை ஆச‌வ‌ச்சேன் என்னாம‌லே
அன்ன‌ம் த‌ண்ணி உண்ணாம‌லே என்னி ஏங்கிறேன்
(பெண்)அண்ணாம‌லை அண்ணாம‌லை ஆச‌வ‌ச்சேன் என்னாம‌லே
அன்ன‌ம் த‌ண்ணி உண்ணாம‌லே என்னி ஏங்கிறேன்
(பெண்)ஆசையில‌ சொக்குத‌ய்யா என் வ‌ய‌சு
உன் மீசையில‌ சிக்குதையா என் ம‌ன‌சு
உன் காதுக்குள்ள காத‌ல் சொல்லும்
க‌ண்ணா என் கொலுசு


(ஆண்)அன்ன‌க்கிளி அத்தை பெத்த‌ வ‌ண்ண‌க்கிளி
கூட்டுக்குள்ள இட‌ம் இருக்கா வ‌ச‌தி எப்ப‌டி
முன் அழ‌கு மூச்சு வாங்கி நிக்குதடி
உன் பின் அழ‌கு பித்த‌ம் கொள்ள‌ வைக்குத‌டி
நீ எந்த‌ ஊரில் வாங்கி வ‌ந்தா இந்த‌ சொக்கு பொடி
(பெண்)அண்ணாம‌லை அண்ணாம‌லை ஆச‌வ‌ச்சேன் என்னாம‌லே
அன்ன‌ம் த‌ண்ணி உண்ணாம‌லே என்னி ஏங்கிறேன்


(பெண்)நேச‌ம் உள்ள‌ மாம‌ன் கொஞ்ச‌ம் நெருங்கி வ‌ர‌ட்டுமே
உன் நெத்தியில‌ விழுந்த‌ முடி நெஞ்சில் வீல‌ட்டுமே
(ஆண்)ஈர‌த்த‌ல‌ துவ‌ட்டும் துனி என் மேல் சிந்த‌ட்டுமே
உன் இடுப்ப‌ சுத்தி க‌ட்டும் சேல‌ என்ன‌ க‌ட்ட‌ட்டுமே
(பெண்)அழ‌கான வீர‌னே அச‌காயா சூர‌னே
க‌றுப்பான வண்ணனே க‌லிகால‌ க‌ண்ணனே
(ஆண்)நாட‌க‌ம் தொட‌ங்கினால் நான் உந்த‌ன் தொண்ட‌னே

(பெண்)அண்ணாம‌லை அண்ணாம‌லை ஆச‌வ‌ச்சேன் என்னாம‌லே
அன்ன‌ம் த‌ண்ணி உண்ணாம‌லே என்னி ஏங்கிறேன்


(ஆண்)பிர‌ம்ம‌ணுக்கு மூடு வ‌ந்து உன்ன படச்சுட்டான்
அடி காம‌ணுக்கும் மூடு வ‌ந்து என்ன‌ அனுப்பிட்டான்
(பெண்)சாமிக்கும்தான் க‌ருணை வ‌ந்து அள்ளி கொடுத்திட்டான்
நான் தாவ‌ணிக்கு வ‌ந்த‌ நேர‌ம் உன்ன‌ அனுப்பிட்டான்
(ஆண்)வாழ்ந்தாக‌ வேண்டுமே வ‌லைந்தாடு க‌ண்ம‌ணி
வ‌ண்ணாடும் பூவுக்கு வ‌லிக்காது அம்ம‌ணி
(பெண்)உலுக்கி தான் ப‌றிக்க‌ணும் உதிராது மாங்க‌னி

(ஆண்)அன்ன‌க்கிளி அத்தை பெத்த‌ வ‌ண்ண‌க்கிளி
கூட்டுக்குள்ள இட‌ம் இருக்கா வ‌ச‌தி எப்ப‌டி
முன் அழ‌கு மூச்சு வாங்கி நிக்குதடி
உன் பின் அழ‌கு பித்த‌ம் கொள்ள‌ வைக்குத‌டி
நீ எந்த‌ ஊரில் வாங்கி வ‌ந்தா இந்த‌ சொக்கு பொடி
(பெண்)அண்ணாம‌லை அண்ணாம‌லை ஆச‌வ‌ச்சேன் என்னாம‌லே
அன்ன‌ம் த‌ண்ணி உண்ணாம‌லே என்னி ஏங்கிறேன்
(பெண்)ஆசையில‌ சொக்குத‌ய்யா என் வ‌ய‌சு
உன் மீசையில‌ சிக்குதையா என் ம‌ன‌சு
உன் காதுக்குள்ள காத‌ல் சொல்லும்
க‌ண்ணா என் கொலுசு

(ஆண்)அன்ன‌க்கிளி அத்தை பெத்த‌ வ‌ண்ண‌க்கிளி
கூட்டுக்குள்ள இட‌ம் இருக்கா வ‌ச‌தி எப்ப‌டி

(பெண்)அண்ணாம‌லை அண்ணாம‌லை ஆச‌வ‌ச்சேன் என்னாம‌லே
அன்ன‌ம் த‌ண்ணி உண்ணாம‌லே என்னி ஏங்கிறேன்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #73 on: November 05, 2012, 03:10:53 AM »
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: AR ரஹ்மான், SP பாலசுப்ரமணியம், கதிஜா ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து


புதிய மனிதா பூமிக்கு வா

எஃகை வார்த்து சிலிகான் சேர்த்து
வயரூட்டி உயிரூட்டி
ஹார்ட்டிஸ்கில் நினைவூட்டி
அழியாத உடலோடு
வடியாத உயிரோடு
ஆறாம் அறிவை அறைத்து ஊற்றி
ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி

புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா

மாற்றம் கொண்டு வா
மனிதனை மேன்மை செய்
உனது ஆற்றலால் உலகை மாற்று
எல்லா உயிருக்கும் நன்மையாயிரு
எந்த நிலையிலும் உண்மையாயிரு

எந்திரா எந்திரா எந்திரா என் எந்திரா
எந்திரா எந்திரா எந்திரா என் எந்திரா

நான் கண்டது ஆறறிவு நீ கொண்டது பேரறிவு
நான் கற்றது ஆறு மொழி நீ பெற்றது நூறு மொழி
ஈரல் கனையம் துன்பமில்லை இதயக் கோளாறெதுமில்லை
தந்திர மனிதன் வாழ்வதில்லை எந்திரம் வீழ்வதில்லை

கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்
அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை
இதோ என் எந்திரன் இவன் அமரன்
இதோ என் எந்திரன் இவன் அமரன்

நான் இன்னொரு நான் முகனே
நீ என்பவன் என் மகனே
ஆம் உன் பெயர் எந்திரனே

புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா

நான் என்பது அறிவு மொழி
ஏன் என்பது எனது வழி
வான் போன்றது எனது வெளி
நான் நாளைய ஜான ஒலி

நீ கொண்டது உடல் வடிவம்
நான் கொண்டது பொருள் வடிவம்
நீ கண்டது ஒரு பிறவி
நான் காண்பது பல பிறவி

ரோபோ ரோபோ பன்மொழிகள் கற்றாலும்
என் தந்தை மொழி தமிழ் அல்லவா
ரோபோ ரோபோ பல கண்டம் வென்றாலும்
என் கர்த்தாவுக்கு அடிமை அல்லவா

புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #74 on: November 05, 2012, 03:11:59 AM »
பாடியவர்கள்: ஹரிஹரன், சாதனா சர்கம்
வரிகள்: வைரமுத்து


இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்
அடி அழகே உலகாழ்கே
இண்டஹ் எந்திரன் என்பவன் படைப்பில் உச்சம்

அரிமா அரிமா
நானோ ஆயிரம் அரிமா
உன் போல் பொன்மான் கிடைத்தால்
யம்மா சும்மா விடுமா
ராஜாத்தி உலோகத்தில்
ஆசைத்தீ மூளுதடி
நான் அட்லாண்டிக்கை ஊற்றி பார்த்தேன்
அக்கினி அணையலையே
உன் பச்சைத் தேனை ஊற்று
என் இச்சைத் தீயை ஆற்று
அடி கச்சைக் கனியே பந்தி நடத்து
கட்டில் இலை போட்டு
(அரிமா..)
(இவன் பேரைச்..)

சிற்றின்ப நரம்பு சேமித்த இரும்பில்
சட்டென்று மோகம் பொங்கிற்றே
நாட்சகன் வேண்டாம் ரசிகன் வேண்டும்
பெண்ணுள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே
பெண்ணுள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே
நான் மனிதன் அல்ல
அக்ரினையின் அரசன் நான்
காமுற்ற கணிணி நான்
சின்னஞ் சிறுசின் இதயம் தின்னும்
சிலிகான் சிங்கம் நான்
எந்திரா எந்திரா..

எந்திரா எந்திரா..
எந்திரா எந்திரா..
எந்திரா எந்திரா..
(அரிமா..)
(இவன் பேரைச்..)

மேகத்தை உடுத்தும் மின்னல்தான் நானென்று
ஐசுக்கே ஐசை வைக்காதே
வயரெல்லாம் ஓசை உயிரெல்லாம் ஆசை
ரோபோவைப் போபோவென்னாதே
ஏ ஏழாம் அறிவே
உள் மூளை திருடுகிறாய்
உயிரோடு உண்ணுகிறாய்
நீ உண்டு முடித்த மிச்சம் எதுவோ
அதுதான் நானென்றாய்
(இவன் பேரைச்..)
(அரிமா..)

எந்திரா எந்திரா..
எந்திரா எந்திரா..
எந்திரா எந்திரா..
எந்திரா எந்திரா..