Author Topic: ஆன்லைனில் பாஸ்வேர்ட் இல்லாமல் வேலை செய்ய புதிய தொழில் நுட்பம்  (Read 2076 times)

Offline Anu

இணைய தளத்திற்குள் புகுந்து ஆன்லைன் பேங்கிங், சமூக வளைத் தளங்கள் மற்றும் இ-மெயில் போன்றவற்றை இயக்க வேண்டும் என்றால் அதற்கும் பாஸ்வேர்டுகள் மிகவும் முக்கியம். அவை இல்லாமல் ஆன்லைனில் வேலை செய்யவே முடியாது.
தற்போது இந்த பாஸ்வேர்டுக்கு பதிலியாக ஒரு புதிய தொழில் நுட்பத்தை தனது டேப்லெட் மற்றும் லேப்டாப்புகளில் அறிமுகப்படுத்த இருக்கிறது இன்டெல். இந்த தொழில் நுட்பத்தில் பாஸ்வேர்டை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. கையை அசைத்தாலே போதும். இ-மெயில் கணக்கு திறந்துவிடும்.
தற்போது இணைய தளத்தில் நிறைய கணக்குகளை மக்கள் வைத்திருப்பதால் அவர்கள் ஏராளமான பாஸ்வேர்டுகளை உருவாக்கி அவற்றை மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. ஒருசில நேரங்களில் பாஸ்வேர்டுகளை மறந்துவிட்டால் அந்த கணக்குகளை அப்படியே மூடிவிட வேண்டியதுதான்.
எனவே இந்த பிரச்சினையப் போக்க இன்டெல் ஒரு புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய தனது டேப்லெட்டை உருவாக்குகிறது. இந்த டேப்லெட்டில் ஒரு பயோ மெட்ரிக் சென்சாரும் இருக்கும். இந்த சென்சார் ஒருவருடைய உள்ளங்கையை அறிந்து கொள்ளும் சக்தி கொண்டது. இதன் மூலம் ஒருவர் பாஸ்வேர்டை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. மாறாக தனது உள்ளங்கையை பதிவு செய்தால் போதும் அவர் எளிதாக இணைய தளத்தில் வேலை செய்யலாம்.
இதைப் பற்றி இன்டெலின் பாதுகாப்பு அதிகாரி ஐயங்கார் கூறும் போது டேப்லெட்டின் டிஸ்ப்ளே முன்பு உள்ளங்கையை காட்டினால் போதும். ஆனால் டிஸ்ப்ளேயை தொட வேண்டிய அவசியமில்லை. இந்த செய்கையை டேப்லெட் அறிந்து கொள்ளும். உடனே டேப்லெட் இயங்க ஆரம்பித்துவிடும். அதுபோல் இணைய தளத்திற்குள்ளும் இந்த டேப்லெட் தகவலைத் தெரிவித்துவிடும். இதன் மூலம் ஒருவர் மிக எளிதாக இணைய தளத்திற்குள் சென்று பாஸ்வேர்ட் இல்லாமல் வேலை செய்யலாம் என்று கூறுகிறார்.