Author Topic: திருவள்ளுவர் வழங்கிய திருக்குறள்  (Read 80544 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அதிகாரம் : 02  வான் சிறப்பு

15)

கொடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
.

.
பெய்யாமல் இருந்து மக்களை கெடுக்கவும் , அவ்வாறு கெட்டவர்க்கு துணையாகி நன்மை செய்யவும் வல்லது மழை

Destruction it may sometimes pour
but only rain can life restore.
« Last Edit: September 13, 2011, 10:09:40 PM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அதிகாரம் : 02  வான் சிறப்பு

16)

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது
.

மேகத்தில் இருந்து மழைத்துளி விழுந்தால் அல்லாது  இவ்வுலகில் பசுமையான ஒரு புல்லின் நுனியும் காண இயலாது

No grassy blade its head will rear
If from the could no drop appear.
« Last Edit: September 14, 2011, 11:24:45 PM by Global Angel »
                    

Offline thamilan

அதிகாரம் : 02  வான் சிறப்பு

17)
 
"நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
    தான் நல்கா தாகி விடின்"



ஆவியான‌ க‌ட‌ல்நீர் மேக‌மாகி அந்த‌க் க‌ட‌லில் ம‌ழையாக‌ப் பெய்தால் தான் க‌ட‌ல் கூட‌ வ‌ற்றாம‌ல் இருக்கும். ம‌னித‌ ச‌முதாய‌த்தில் இருந்து புக‌ழுட‌ன் உய‌ர் ந்த‌வ‌ர்க‌ளும் அ ந்த‌ ச‌முதாய‌த்துக்கே ப‌ய‌ன் ப‌ட்டால் தான் அ ந்த‌ ச‌முதாய‌ம் வாழும்.

  The ocean's wealth will waste away,
   Except the cloud it's stores repay 
« Last Edit: September 15, 2011, 12:36:15 AM by Global Angel »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

அதிகாரம் : 02  வான் சிறப்பு

18 )

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு .


மழை பெய்யாது போனால் , தேவர்களுக்காக மக்களால் செய்யப்படும் திருவிழாக்களோடு கூடிய நாள் வழிபாடும் கிடையாது

The earth, beneath a barren sky,
Would offerings for the gods deny.


                    

Arya

  • Guest
அதிகாரம் : 02  வான் சிறப்பு
19)

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தேனின்


இப்பேருலகில் மழை பொய்த்துவிட்டால் அது, பிறர் பொருட்டுச் செய்யும்  தானத்திற்கும் தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்

Were heaven above to fail below
nor alms nor penance earth would show



Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

அதிகாரம் : 02  வான் சிறப்பு

20)


நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு.


நீர் இல்லையென்றால்  எவுயிரும் இவுலகில் வாழ முடியாது . மழை இல்லையென்றால் மனித வாழ்க்கையில் ஒழுக்கமும் இல்லைஎன்றாகிவிடும்

Water life that comes from rain 20
Sens rain our dutie go in vain

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அதிகாரம் : 03 நீத்தார் பெருமை - The  marit go in Ascetics

21 )

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு .


ஒழுக்கத்தில் நிலையாக நின்று பற்று விட்டவரின்( துறவிகள் ) பெருமையைச் சிறந்ததாகப் போற்றிக் கூறுவதே நூல்களின் முடிவாகும்

No Merit can be held so high
As therirs who sense and self deny.

« Last Edit: September 20, 2011, 05:29:44 PM by Global Angel »
                    

Arya

  • Guest
அதிகாரம் : 03 நீத்தார் பெருமை - The  marit go in Ascetics
22)

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொன் டற்று


உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூறமுடியுமா?
அது போலதான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமைகளையும் அளவிடவே முடியாது.


To con ascentic glory here
Is to count the dead upon the sphere


Offline Anu

அதிகாரம் : 03 நீத்தார் பெருமை - The  marit go in Ascetics
23)

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

நன்மை எது தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்கள் ஆவர்

No lustre can with theirs compare
who know the right and virtue wear
« Last Edit: September 20, 2011, 05:29:07 PM by Global Angel »


Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அதிகாரம் : 03 நீத்தார் பெருமை - The  marit go in Ascetics

24)

உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து


அறிவு என்னும் அங்குசத்தால்  ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன்  மேலான வீடுபேறு அடைவான் .

With hook of firmness to restrain
The senses five, is heaven to gain
.
                    

Offline Anu

அதிகாரம் : 03 நீத்தார் பெருமை - The  marit go in Ascetics
25)
 
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்

Indira has himself has cause to say
How great the power Ascetics' sway
.


Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அதிகாரம் : 03 நீத்தார் பெருமை - The  marit go in Ascetics

26)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா  தார் .

பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும் . சிறுமையான செயல்களைப் பெருமைக்குரிய செயல்களைச்  செய்யாதவர்களை சிறியோர் என்றும்வரையறுத்துவிட  முடியும் 

The small the paths of ease purse
The great achieve things rare to do
« Last Edit: September 29, 2011, 08:33:23 PM by Global Angel »
                    

Arya

  • Guest
அதிகாரம் : 03 நீத்தார் பெருமை - The  marit go in Ascetics
27)

சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்.

They gain the world, who grasp and tell
Of taste, sight, hearing, touch and smell




Arya

  • Guest
அதிகாரம் : 03 நீத்தார் பெருமை - The  marit go in Ascetics
28)

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்


சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.

Full-worded men by what they say,
Their greatness to the world display.


Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அதிகாரம் : 03 நீத்தார் பெருமை - The  marit go in Ascetics

29)

குணமெனுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது

குணக் குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்த்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட
நிலைத்து நிற்காது .


Their wrath ,who`veclimb`d the mount of good,
Though transient ,cannot be withstood.