Author Topic: பூஜைக்குத் தேவையான பொருட்களைத் தட்டில் வைப்பது எப்படி?  (Read 781 times)

Offline kanmani


பூஜைக்குத் தேவையான பொருட்களைத் தட்டில் வைப்பது எப்படி?
கருத்துகள்
10:33:28
Wednesday
2013-02-27
Before starting the prayer it is necessary to put things in the right way. The products must be equal to the basic principles vinnanattinpati spiritual famine. The universe operates by placing the bowl with giants can orinappatutta.
Types of Insurance
MORE VIDEOS

பூஜை தொடங்கும் முன் அதற்குரிய பொருட்களை சரியான முறையில் வைப்பது அவசியம். ஆன்மிக விஞ்ஞானத்தின்படி பஞ்ச தத்துவங்களுக்குச் சமமான அடிப்படையில் பொருட்களை வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதால் பிரபஞ்சத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பஞ்ச பூதங்களோடு ஓரினப்படுத்த முடியும். இதனால் பூஜை செய்யும் பக்தர், தான் வழிபடும் தெய்வத்திடம் இருந்து வெளிப்படும் சகுண(திரி குண ரூபம் உள்ள) நிர்குண(ரூபம் அற்ற) தத்துவங்களை அதிகம் ஈர்த்துக்கொள்ள அது உதவுகிறது.

பூஜை பொருட்களை எப்படி வைப்பது?

1. பூஜை தட்டில், மஞ்சள், குங்குமம் முதலியவை பக்தரின் வலது பக்கத்திலும், விபூதி, சிந்தூரம் முதலியவை இடது பக்கத்திலும் வைக்கப்பட வேண்டும்.

2. வாசனத் திரவியங்களும், வாசனைப் பொருட்களும்(சந்தனம் முதலியவை), புஷ்பம், அறுகம்புல் மற்றும் இலைகளைத் தட்டின் முன் பகுதியில் வைக்க வேண்டும். வாசனைத் திரவியங்களிலும் அறுகம்புல் மற்றும் இலைகளின் நிறத்திலும் உள்ள நுண்ணிய பகுதிகள், தெய்வங்களின் சூட்சும அதிர்வலைகளை ஊக்குவிக்கின்றன.

3. பாக்கு, வெற்றிலை மற்றும் தட்சணையாக கொடுக்க உள்ள பணம் முதலானவற்றை, தட்டின் கீழ் பகுதியில் வைக்கப்பட வேண்டும். ஏனென்றால் தெய்வங்களின் அதிர்வலைகளை செலுத்துவதற்கு இவை சிறந்த கருவிகளாக அமைகின்றன.

4. நடுப்பகுதியில் அருள் நிறைந்த முனை முறியாத அரிசி(அட்சதை) வைக்கப்பட வேண்டும். இந்த முனை முறியாத அரிசி நடுவில் வைக்கப்படுவதால் உயர்நிலைத் தெய்வங்களான சிவன், துர்க்கை, கிருஷ்ணர், ராமர், விநாயகர் ஆகிய ஐந்து தெய்வங்களின் சாந்நியங்களும் ஈர்க்கப்படுகின்றன. பின் தேவைக்கேற்ப மற்ற பொருட்களுக்கும் ஒரு வட்டச் சுழற்சி முறையில் அவை செலுத்தப்படுகின்றன. இப்படி பூஜை பொருட்களை ஒழுங்குபடுத்தி வைக்கும் முறையினால் ஆத்மா, பூமி தத்துவத்திலிருந்து ஆகாய தத்துவத்தை அடைந்து, மாய உலகின் பிடியில் இருந்து விலகி பிரம்மத்தை அடைய உதவுகின்றது.