Author Topic: கேள்வி இது தான் பதில சொல்லுங்க  (Read 2684 times)

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook


ரூ 100 எப்படி வந்தது..?
   ★★★★★★★★★★★


ஒருவரிடம் 1000 ரூபாய் கடன் வாங்கினேன்.

உடனே அது தொலைந்து போக, இன்னொரு நண்பரிடம் 500 ரூபாய் கடன் பெற்று 300 ரூபாய்க்கு இனிப்பு வாங்கினேன்.

பின்பு மீதமுள்ள 200 ஐ
1000 தந்தவருக்கு 100 ரூபாயும்,
500 தந்தவருக்கு 100 ரூபாயும் கொடுத்தேன்.

இப்போது,
1000 தந்த நபருக்கு ₹900 பாக்கி.
500 தந்தவருக்கு ₹400 பாக்கி.

எனவே நான் திருப்பி கொடுக்க வேண்டிய மொத்த கடன்
900+400= ₹1300.

இனிப்பு வாங்கிய 300 ரூபாயையும் சேர்த்தால் 900+400+300=1600

இப்போது,
கேள்வி என்னவென்றால்
1500 தான் கடன் வாங்கினேன்.

எப்படி அது 1600 ஆக மாறியது..?

மேலதிகமான "₹100" எப்படி வந்தது என்பது தான் கேள்வி ?????

கணிதத்தில் நல்ல மார்க் எடுத்தவங்க இதற்கு ஒரு "விடையை" சொல்லுங்களேன்.




Offline AnoTH

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 323
  • Total likes: 1595
  • Karma: +0/-0
  • Gender: Male
  • சோதனைகளை சாதனையாய் மாற்று
1000/= கடன் வாங்கியவரிடம்  100/= ஏற்கனவே கொடுத்து இருக்கக்கூடிய
பட்சத்தில் மீதம் 900/= தான் கொடுக்க வேண்டும்

அதே போல 500/= கடன் பெற்றிருக்க கூடியவரிடம் ஏற்கனவே 100/=
கொடுத்த பட்சத்தில் மீதம் 400/= தான் கொடுக்க வேண்டும்

ஆகவே 1500/= கான மொத்த கடன் கொடுக்கப்பட்டுவிட்டது.

இதில் அவர் செலவு செய்திருக்கக்கூடிய 300 /= மீண்டும் கொடுக்க வேண்டிய தேவை இல்லை.

 ஆகவே 900/= + 400/= + 100/= + 100/=   =  1500/=