Author Topic: திருவள்ளுவர் வழங்கிய திருக்குறள்  (Read 80502 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
     இந்த நூலின் பதிவினை அழகு படுத்தும் நோக்கத்தோடு சில பதிவு குறிப்புகள் வழங்கப்படுகின்றது அதை யாவரும் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

font - தமிழ்
siz - 12
குறள்- கறுப்பு நிறம்
பொருள் விளக்கம் - பச்சை நிறம்
அதிகாரம் - சிவப்பு
குறள் இலக்கம் - நீலம்

. பதிவுகள் எல்லாம் ஒழுங்கு படுத்தப்பட்டு நிரலாக பதிவினை மேற்கொள்ள வேண்டும்-------------------------------------------------------------------------------------------------                               





                              தமிழரின் வாழிவியல் கருவூலம்  
                 **திருவள்ளுவர்  வழங்கிய திருக்குறள்**
மூல பாடல்: 1330
அதிகாரம் :133

                                                                   

இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை,
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்,
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்”


திருக்குறள் - மனித இனத்திற்கு கிடைத்த ஒரு அறிய செல்வம், நம்மில் எத்தனை பேர் அதை உணர்கிறோம். திருக்குறலில் இலாதது வேறு எந்த ஒரு இலக்கியத்திலும் கிடையாது,எனவே அந்த அறிய வாழ்வியல் தத்துவ நூலை நாம் யாவரும் பகிர்ந்து பயன் அடைவோம் ..

Greatness of Thirukkural :

Thirukkural is a precious gem among the classics, unique in the
deliverance of code of conduct to the mankind to follow for all time
to come. It enshrines in it 1330 couplets under 133 chapters, each
chapter comprising 10 verses. The chapters again fall under three
major divisions. Virtue, Wealth and Love. This treatise
encompasses the whole gamut of human life and by Thiruvalluvar,
its illustrious author illuminates every bit of it! This classical work
written in Tamil, has been translated in over 60 languages of the
world.
The Government of Tamil nadu had a vision (for beyond) the
Horizon. Yes to rise a statue for Thiruvalluvar in Kanyakumari, the
southern tip of the mainland at the confluence of the three seas
befitting the stature of this Saint-poet. The statue that was
dedicated at the dawn of the new millennium, stands out as a
beacon of light to guide human life for ever.
« Last Edit: September 13, 2011, 04:36:40 PM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
                                                     அறத்துப் பால்
                                                       பாயிரம்- The Praise of God


அதிகாரம் :1  கடவுள் வாழ்த்து
01)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு .


எழுத்துக்கெல்லாம் முதன்மையானது அ. அது போல உலகத்துக்கு முதன்மையானவன் கடவுள் .        

"A" leads letters; the Ancient Lord
Leads and lords the entire world

« Last Edit: September 13, 2011, 04:35:47 PM by Global Angel »
                    

Arya

  • Guest
அதிகாரம் :1  கடவுள் வாழ்த்து
02)

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்


தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் பயன் ஒன்றும் இல்லை


That lore is vain which does not fall
At His good feet who knoweth all


« Last Edit: September 13, 2011, 03:58:21 PM by Global Angel »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அதிகாரம் :1  கடவுள் வாழ்த்து

03)

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார் .


அன்பர்களின் மனமாகிய  மலரில் வீற்றிருக்கும் இறைவனது திரு அடிகளைத் , தம் மனத்தால்  துதிக்கின்றவர் எக்காலமும்  அழிவின்றி  வாழ்ந்திருப்பர் .

Long they live on earth who gain
The feet of God in florid brain.

« Last Edit: September 13, 2011, 04:23:42 PM by Global Angel »
                    

Arya

  • Guest
அதிகாரம் :1  கடவுள் வாழ்த்து
04)


வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல


விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை


Who hold his feet who likes nor loathes
Are free from woes of human births.

« Last Edit: September 13, 2011, 04:25:16 PM by Global Angel »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அதிகாரம் :1  கடவுள் வாழ்த்து

05)

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.



இறைவனது உண்மையான புகழை விரும்பி எப்போதும் அன்பு செலுத்துவாரிடத்தில் அறியாமையால் வருகின்ற நல்வினை, தீவினை ஆகிய இரண்டும் சேர்வதில்லை .

God's praise who tell, are free from right
And wrong, the twins of dreaming night.



« Last Edit: September 13, 2011, 04:26:52 PM by Global Angel »
                    

Arya

  • Guest
அதிகாரம் :1  கடவுள் வாழ்த்து
06)

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்


மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுபடுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியை பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்



They prosper long who walk his way
Who has the senses signed away.

« Last Edit: September 13, 2011, 04:28:20 PM by Global Angel »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அதிகாரம் :1  கடவுள் வாழ்த்து

07)

தனக்குஉவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு  அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது .


தனக்கு நிகர் இல்லதவராகிய இறைவன் திருவடிகளை இடைவிடாமல் நினைபவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு மனதில் நிகழும் துன்பங்களைப் போக்கிகொள்ளல் இயலாது .

His feet ,whose likeness none can find,
Alone can ease the anious mid
.

« Last Edit: September 13, 2011, 09:32:18 PM by Global Angel »
                    

Offline thamilan

அதிகாரம் : 1 ‍‍கடவுள் வாழ்த்து

8 )
"அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அறிது"


அந்தணர் என்பதற்கு பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாக விளங்கும் அந்த சான்றோரின் அடியொற்றி
நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக்கடல்களை கடப்பது என்பது எளிதான காரியம் அல்ல.


Who swims the sea of vice is he
Who clasps the feet of Virue's sea.


« Last Edit: September 13, 2011, 04:31:26 PM by Global Angel »

Arya

  • Guest
அதிகாரம் :1  கடவுள் வாழ்த்து
09)

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை


உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்


Like senses stale that head is vain
Which bows not to Eight.Virtued Divine.

« Last Edit: September 13, 2011, 04:32:55 PM by Global Angel »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

அதிகாரம் :1  கடவுள் வாழ்த்து


10)
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேரா தார் .


இறைவன் அடி சேர்ந்தாரே பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கடப்பர் . இறைவனின் திருவடிகளை நினைக்காதவர் பிறவியாகிய கடலை நீந்திக் கடக்க மாட்டாமல் அதனுள் ஆள்வர்.

The sea of births they alone swim
Who clench His feet and cleave to him


« Last Edit: September 13, 2011, 03:54:06 PM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அதிகாரம் : 02  வான் சிறப்பு      The Blessing of Rain

11)

 வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் அமிழ்தல் என்றுணரற் பாற்று
.

மழை இடையறாது  பெய்வதனால்தான் உலகத்து உயிர்கள் வாழ்கின்றன . அதனால் அம்மழையேஉலகிற்கு அமிழ்தம் என்று போற்றத் தகுந்ததாகும் .

The genial rain ambrosia  call
The world but lasts while rain shall fall

« Last Edit: September 13, 2011, 09:23:54 PM by Global Angel »
                    

Arya

  • Guest
அதிகாரம் : 02  வான் சிறப்பு
12)

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை


யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அறிய தியாகத்தைச் செய்கிறது

The rain begets the food we ate
and forms a food and drink concrete
« Last Edit: September 13, 2011, 07:51:59 PM by Global Angel »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

அதிகாரம் : 02  வான் சிறப்பு


13)
விண்நின்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து
உள்நின்று உடற்றும் பசி
.

பருவ காலத்தில் மழை பெய்யாது தவறுமானால் பெரிய கடலால் சூழப்பட்ட  இவுலகில் பசி நிலைத்து நின்று , உயிர்களை வருத்தும் .

Let Clouds their visits stay, and dearth
Distresses all the sea- girt earth


« Last Edit: September 13, 2011, 07:59:42 PM by Global Angel »
                    

Arya

  • Guest
அதிகாரம் : 02  வான் சிறப்பு
14)

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்


மழை என்னும்  வருவாய் வளம் குன்றிவிட்டால் உழவுத் தொழில் குன்றி விடும்

Unless the fruitful shower descend,
the ploughman's sacred toil must end.

« Last Edit: September 13, 2011, 09:50:39 PM by Arya »