3
« Last post by joker on Today at 12:05:29 PM »
நா முத்துக்குமார் பிறந்த நாள் இன்று
காலத்தால் அழியாத படைப்புகள் பல
அவரின் சில சிதறிய முத்துக்கள் இங்கே
நன்மைக்கு சொல்லிடும்
பொய்களும் அழகு
உண்மையில் அதுதான்
மெய்யான அழகு
*******************************************
உயிருடன் இருப்பது
இப்போதெல்லாம்
வலித்தால் மட்டும் தெரியும்
உன்னுடன் நானும் இல்லை என்பது
விழித்தால் மட்டுமே புரியும்
*******************************************
முற்றுப்புள்ளி அருகில்
நீயும் மீண்டும்
சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும்
ஆரம்பமே
*******************************************
கதை பேசிக்கொண்டே வா
காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும்
உன் மௌனங்கள் போதும்
வளையாமல் நதிகள் இல்லை
வலிக்காமல் வாழ்க்கை இல்லை
வருங்காலம் காயங்கள் ஆற்றும்
*******************************************
ஒவ்வொரு அடகுக்கடை கம்மல்களிலும்
உலர்ந்துகொண்டிருக்கிறது
ப்ரியயில்லாமல் கழட்டிக்கொடுத்த
ஒரு பெண்ணின் கண்ணீர்த் துளி...
*******************************************
வழிப்போக்கனின் வாழ்விலே
நிழலாக வருகிறாய்