Recent Posts

Pages: 1 2 [3] 4 5 ... 10
28
பட்டுடை வேஷ்டி அணிந்து
தலைப்பாகை தனை பூண்டு
மங்கல வாத்தியம் இசைக்க
புரோகிதர் மந்திரம் உரைக்க
மணமேடைதனில் அமர்ந்து
வழி மீது விழி வைத்து - உன்
வருகைக்காய் காத்திருக்கின்றேன்
எந்தன் காதலியே - உந்தன்
கரம் பற்றும் நொடிப்பொழுதை நோக்கி....

வளையோசைகள் வண்டாய்
ரீங்காரம் இடவே - உன் பாதக்
கொலுசுகள் தரை தீண்டி
மத்தளங்கள் இசைக்கவே
வெண்மேகம் கம்பளம் விரிக்க
பாவையர்கள் படை சூழ
நெற்றிச்சுட்டி முன்னாட
கார் கூந்தல் பின்னாட
மெல்லிடை வளைவினிலே
ஒட்டியாணம் இசைந்தாட
செவ்வானம் நெய்து தந்த
சேலைப்பட்டு அணிந்து - எந்தன்
இதயவாசலில் கோலமிட்டவள்
அன்னநடையாய் மெல்ல நடந்து
அருகில் வந்து அமர்ந்தாளே....

அக்கினி சாட்சியாக
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து
ஆன்றோர் சான்றோர் புடைசூழ
மன்னவள் உன் சங்குக் கழுத்தினிலே
திரு மாங்கல்யம் இட்டேனே
முந்தானை முடிச்சிட்டு - உன்கரம் பற்றி
மூன்று முறை வலம் வந்தேனே....
புருவ இடைவெளியில்- நான் வைத்த
மஞ்சள் குங்குமம் மண மணக்க
மாற்றிய ஆரமும் மணக்குதே - உன்
புன்னகையில் மலரும் பூவோடு....

" யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே "

"காதலின் இரண்டாம் அத்தியாயம்
துணைவன் துணைவியாய் - உம்மிருவர்
தூரபயணத்தின் துவக்கப் புள்ளி..."
வாழ்த்தும் நெஞ்சமொன்று
வளைந்து தோள்பற்றி தூக்கிட
நன்றி பயக்கும் நோக்கோடு
கட்டியணைக்க முனைந்தேன்....

ஹாஹா
கட்டிலில் இருந்து விழுந்தேன்
காண்பது கனவென்று அறியாமலே....


29
சின்னஞ்சறு பறவை போல் கனவு வளர்த்த நாள்..
விவரம் புரியா மனதில்
 சிறு விதை நீ என ஆசைகள் வளர்த்த நாள்...
தனக்கென ஒருவன் தனக்கான‌ கனவுகளுடன் நம்மிடம் எப்போது வருவான்
 என்று எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நாள்...
கண்கள் கண்ட நொடிகளில்
எதிர் காலம்‌ அவர் எனப் புரியும் நாள்...
உலகமே சொர்க்கமாய் நந்த வனம் போல் ஆக
நீயும் நானும் பூக்கள் நிறைந்த இடத்தில்
 பலவண்ண  பூக்களின் அழகை
 மிஞ்சி விடுமோ என்பதை போல்
கைகோர்த்து வீற்றிருக்க ..
ஒன்றாக அனைவர் ஆசி பெற்று  இனிய வாழ்வு
இணையும் நாள் இதுவா என்று
கனவிற்கும் நினைவிற்கும் இடையில் சிக்கி தவிக்கிறேன்.
மனிதற்கே உரியது காதல் உணர்வு வெளிப்பாடு
பொய்கள் எனத் தெரிந்தும் அந்த உணர்வுகளை ரசிக்க
நமக்கு மட்டுமே இறைவன் கற்றுக் கொடுக்கிறானே..
அவ்வாறு இருந்தும் சிலர் திருமண பந்தத்தை துண்டித்து உணர்வு இல்லாத மனிதரைத் தேடித்தான் செல்கின்றனர்.
நமக்கானவர்களை அவர்கள் குறைகளோடு ரசித்து திருமண
வாழ்வை கசந்து விடாமல் இனிதாகவே நாம் துவங்கி
 சிறு சண்டைகளோடு ,சிறு ஊடல்களோடு ,
சிறு கோபங்களோடு இறுதியாக காதலோடு வாழலாமே...
30
இனி உன்கிட்ட
பேசக் கூடாதுன்னு தான் இருந்தேன்!
ஆனா...! என்ன பண்றது?
உன்ன விட்டுட்டு
இருக்க முடியாம இருக்குது"
அப்டின்னு சொல்லிக்கிட்டு
முந்தி வந்து தானாய் பேசும்
ஒரு அன்பின் குரலில்,
தீர்ந்தே விடாத பெரும் கதகதப்பொன்றுண்டு.
"நீ என்னை இப்படி
வியப்பாக உணர்ந்து கொண்டேயிரு!" என்பதாய் எல்லாம் பேச
பலரால் முடியும்.
பேசிப் பேசி பிரம்மிக்க வைக்கும்
மனிதர்கள் பலர்,
செயல்படுத்திக் காட்டுவதில்
திணறி நிற்பார்கள்.
ஆனால்!
இந்த அன்பில் திளைத்துப் போதலை சாத்தியப்படுத்தித் தர,
சிலரால் மட்டுமே முடிகிறது.
அதற்கு நிகழ்த்திக் காட்டுதல் எனும்
மாபெரும் இயல்பினை
தன்னகத்தே ஒருவர்
கொண்டிருக்க வேண்டும்.
அதையெல்லாம் உணர்தலானது
ஒரு நெகிழ்வு.
அதுதான் இந்த அன்பில்
உயிர் கொண்டு வாழும் தன்மையை உடைந்து விடாமல் காக்கிறது.
அகங்காரமும், சளைப்பும்,
ஏளனமும், கண்டுகொள்ளாத் தன்மையும், அன்பின் கதவுகளை
சீக்கிரம் தாழிட்டுப் பூட்டிவிடும்.
"உன் உள்ளம்
நோய்வாய்ப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவேனும்,
நான் உன்னோடு இருப்பேன்"
எனும் குரல்களில்
நாம் நலமாயிருக்க முடிகிறதல்லவா? அதனை வாழ்வில்
சாத்தியமாக்கித் தரும் மனிதர்கள்,
நம் அடர் நிம்மதிக்குச் சொந்தக்காரர்கள்.......
Pages: 1 2 [3] 4 5 ... 10