Recent Posts

Pages: 1 ... 6 7 [8] 9 10
71
உள்ளுக்குள் இருந்து
உயிர் வதம் செய்பவளே
காதல் என்றால்
இன்பம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்
உன்னை காதலித்த பின் தான்
காதல் என்பது தீராத துயரம் என
அறிந்து கொண்டேன்

உன்னை உருகி உருகி காதலித்தேன்
நீயோ உனது அனல் பேசினால்
என்னை உருக வைத்தாய்
உண்மையான காதலுக்கு எதிரியே
சந்தேகம் தானடி

உன்னை தவிர எல்லா பெண்களுமே
சகோதரி தாய் என்று தான்
நினைத்தேன் நான்
உன் சந்தேகப் பார்வைக்கு
அது எங்கே தெரியப் போகிறது

எப்போதுமே உன் கண்களில்
அனல்
பேசினில் விஷம்
வார்த்தை அம்புகளால் என்னை
துளைத்தெடுத்தாய்
உன் ஒவ்வொரு சொல்லும் கத்தியென 
என் இதயத்தை கிழித்தன

தாங்கிக் கொண்டேன்
எல்லாம் தாங்கிக் கொண்டேன் உனக்காக
என் அன்பை என்றாவது புரிந்து கொள்வாய்
என்று காத்திருந்தேன் 
நீ மாறவே இல்லை
என்னை பிரிந்து சென்றாய்

உன் பிரிவால் நான்
என் உயிர் துறக்க நினைத்தது
தவறென்று இன்று புரிந்து கொண்டேன்
நீ தந்த காயங்களால்
நான் இன்று கவிஞன்
கவிஞன் என்று மற்றவர் சொல்லும்போதெல்லாம்
என்னுள் உன்னைத்தான் பார்க்கிறேன்

ஏனெனில்
என் கவிதைகளை நான் எழுதுவது
நீ கிழித்த எனது இதயம் வடிக்கும் 
ரத்தத்தால் 

புன்னைகைள் வென்று
என் இதயத்தை கொன்று
நடத்திய வேள்வியில் கிடைத்தது தோல்வியே
கேட்கிறேன் ஒரு கேள்வி
காதல் பொய்யா நீ
காதலித்து பொய்யா
நான் சித்தும் கண்ணீர் ஒன்றே
உண்மை
72
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 264

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

73
கால பயணத்தில்
எத்தனையோ திருப்பங்கள்
கருத்துகளாகவும் விருப்பங்களாகவும்
நாம் மாறுபட்டோம்

தேடல்களாக தொலைந்தோம்
பிரச்சனைகளாக வேறுபட்டோம்
இருப்பினும் இறுதிநிலை
சிவமும் சக்தியும்
இணைவதாக இருக்கட்டும்

எந்த நினைவுகளோ
எண்ணங்களோ
வாத்தைகளோ
நம் இதயத்தை தொட்ட பின்
அன்பாக மலரட்டும்...

சுயநலம் என்பது
மிகச்சிறிய உலகம்
அதில் ஒருவன் மட்டுமே
வாழமுடியும்
தனித்துவத்தை தத்துவத்தை
மாற்றி அமைப்போம்
அது தரும் சுகத்தை
வாழ்கை முழுவதும்
மதித்து நடப்போம்...


வாழ்க்கை நதி
பயத்தை
வருங்காலம்
சொல்லட்டும்
வாழும் வரை
மனிதத்தை
மனதோடு ஏற்றிவைப்போம்...
................சிற்பி....

74
கவிதைகள் / வலி
« Last post by இளஞ்செழியன் on April 10, 2021, 11:09:06 AM »
கொஞ்சம் போகும் வழியில்
என் சோகத்தில் பாதியையாவது
எடுத்துக் கொண்டு செல்லுங்கள்...!

என் சொல்லப்படாத
உள்ளக்குமுறலில் ஒன்றையேனும்
என்னிடம் வாங்கிக் கொண்டு,
அதற்குப் பகரமாய்
ஏதேனும் ஒரு வெறுமையற்ற உணர்வொன்றை
என்னிடம் தந்து விட்டுச் செல்லுங்கள்.

துயர் துடைக்க யாரும் இல்லை
என்பதைக் கூடச் சொல்லி அழ
யாரும் இல்லாத,
வரண்டு போன
என் வெறுமையை
நீங்கள் ஓர் நாளைக்காவது
என்னிடத்தில் இருந்து
கடனாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.

நீங்கள் எப்போது வந்து குறை கூறினாலும் உங்கள் உள்ளத்தை
காயப்படுத்த விரும்பாமல்,
உங்களிடம் நளினமாய் உரையாடிவிட்டு தனியாய் அதற்கான
காரணத்தை தேடி சோர்ந்து விழும்
என் இயலாமையை
நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.

முடியாதல்லவா...?

இங்கே எனக்கான உணர்வுகள் தான்
என்னோடு பிண்ணப்பட்டு கிடக்கின்றன.
என் சுயத்தின் மீதான
விசாரணைகளின் பதில்கள்,
என்றும் என் கடந்த கால வாழ்வோடு
ஒன்றிப் போகாமல் விலகி நிற்கவில்லை.

நீங்கள் எத்துனை தான் உபதேசித்தாலும், எத்துனை தான்
என்னில் குறைப்பட்டுக் கொண்டு திறிந்தாலும்
அதற்கான மாற்றத்தை
நானே நினைக்காமல்
உங்களால் சாத்தியப்படுத்த முடியாது.

மிக எளிதாய்
அன்பொன்று மட்டும் என்னிடம் இருந்து இனாமாகவும், தாராளமாகவும் கிடைக்கின்றது என்பதற்காய்,
உங்கள் விருப்பங்களுக்குள்
என்னை அடிமைப்பட்டுக்
கிடக்கச் சொல்லாதீர்கள்.

என் எளிமையான #பேரன்போடு
சேர்ந்து வாருங்கள்...!

உதாசீனங்கள் ஒன்றும்
நான் சந்திக்க போகும்
முதல் புதிய நிகழ்வல்ல.
என் அன்றாடங்களில் எப்போதும்
அரங்கேறுவது தான்.
ஆதலால்...!
நீங்கள் விலகிச் சென்றாலும்
இப்போது சாதாரணமாய்
கடந்து செல்லும்
பலத்த மனதொன்றை பெற்றிருக்கிறேன்.

76
THANK YOU ALL MY LOVELY  FRIENDS
77
    Wish you Happy Birthday  Dear Beemz...  wish you a healthy and wealthy
 birthday
78
Wish you many more happy returns of the day, Happy Birthday beema bro , stay blessed and stay happy..
79

“Hope your special day brings you all that your heart desires! Here’s wishing you a day full of pleasant surprises! Happy birthday!”
Pages: 1 ... 6 7 [8] 9 10