தமிழ்ப் பூங்கா > கவிதைகள்

வேட்டைக்காடாய் ஒரு தொட்டில்!!!

(1/1)

Yousuf:
நதிக்கரைகள் தாலாட்டிய
நாகரீகத் தொட்டிலில்
மனித உரிமைக்களுக்கான
மயானக்கொல்லை!

ஆலிவ் கிளையொன்றை
அலகில் ஏந்திவந்து
புறா வேடமிடும்
புராதனக் கழுகு.

எண்ணெயைத் தேடி.. .
எரிக்கப்படும் பூமி!
மனிதர்கள் விறகுகள்.

உலோகக்கிரீடம் இது
உடையாது என்றவர்கள்
தலைவலிகளின் காரணமென்று
தா(மத)மாகச் சொன்னார்கள்!

பலவந்தமாக அகற்றியப்பின்னர்
இப்போது நடக்கிறது
புறா வேட்டை...
புதிய மகுடத்தின் சிறகுகளுக்காக..!

அடர் கானக மன விலங்குகள்
வக்கிர கூச்சலோடு
வனம் விட்டு வந்து ...
சமவெளிகளில் சல்லாபங்கள்
குருதிப்புனலில் குளியல்கள்!

ஆயுத வியாபாரிகளின்
அதிரடி விற்பனையில்
பூக்களும் இலவசமாக..!
பரிசளிக்க
மரணங்களுக்குப்பின்
மலர் வளையங்கள்!

முடைநாற்ற மவுனச் சேற்றில்
மூழ்கி விட்ட மனசாட்சிகள்
தேம்பி அழுவதற்கேனும்
தீர்ப்பு நாளுக்காக காத்திருக்கும்..!

Global Angel:
nalla kavithai  vaaithaa vaankiye kaalam pohum theerpu avlo seekram kidaikkuma enna...??

Yousuf:
இங்கு கூறியிருப்பது மனிதர்களின் நீதி மன்றத்தில் கிடைக்கும் தீர்ப்பை அல்ல எஞ்சேல் இறைவனின் நீதி மன்றத்தில் கிடைக்கவிருக்கும் நியாய தீர்ப்பு அந்த தீர்ப்பு நாளிற்காக காத்து இருப்போம்...!!!

Navigation

[0] Message Index

Go to full version