Entertainment > விளையாட்டு - Games

திருக்குறளை கண்டுபிடி

(1/93) > >>

VICKYDASA2:
வணக்கம் நண்பர்களே திருக்குறளை கண்டுபிடி இந்த விளையாட்டில் ஒரு திருக்குறளின் வரிகளில் இருந்து ஒருசில வார்த்தைகள் நீக்கப்பட்டு இருக்கும்
விடுபட்ட வார்த்தைகளை கண்டுபிடித்து அந்த குரலை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும் இது தான் இந்த விளையாட்டில் நீங்கள் செய்ய வேண்டியவை வேறு ஏதும் வரைமுறைகள் இல்லை



உதரணத்திற்கு :
     
                        அகர முதல ---------------------- ஆதி
                        பகவன் --------------உலகு.

மேலே கொடுகபட்டுள்ள குரலில் விடுபட்ட வார்த்தைகளை நிறைவு செய்து பதில் அளிக்க வேண்டும்

பதில் :
                          அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
                           பகவன் முதற்றே உலகு.

நீங்க ஒரு குரலை கண்டுபிடித்து பூர்த்தி செய்தபிறகு அடுத்து நமது நண்பர்கள் கண்டுபிடிக்க வேண்டிய குரலை நீங்கள் பதிவு செய்யலாம்

இதோ தொடங்குவோம் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய குரல்

                           பல்லார் ------------ பயனில சொல்லுவான்
                           --------------------- எள்ளப் படும்

குழலி:
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

உரை: பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லாரும் இகழ்ந்துரைப்பார்கள்.

நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய குரல்


அன்பகத் ________ உயிர்வாழ்க்கை ________
வற்றல் __________ தற்று.

maha:
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

உரை:
மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.

நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய குறள்:


________ ராயினும்________  காவாக்கால்
சோகாப்பர்________  பட்டு.

Swetha:
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு....

நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய குரல் :

கேடில் ____________ கல்வி ____________
மாடல்ல மற்றை யவை.

Anu:
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை


ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்.

நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய குறள்:

இனிய _____   _________ கூறல்
கனிஇருப்பக் _____ தற்று.

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version