Special Category > பிரார்த்தனை - Our Heart and Pray

தமிழகத்தின் கட்டுமரம் டாக்டர் கலைஞர் காலமானார்

(1/2) > >>

AdMiN:
                    தமிழகத்தின் சூரியன் அஸ்தமனம் ஆனது  !!
             

             
                            தோற்றம் :- 1924   மறைவு :- 2018


DoRa:

AshiNi:

RishiKa:
தமிழகத்தின் கட்டு மரம்..
என்றும் காலம் ஆகாது!
அவர் காலம் தந்த கலைஞர்!
காலத்தை வென்ற கவிஞர் !

அவர் ஒரு சரித்திரம்!பொக்கிஷம் !அதிசயம் !
என்று சொல்லும் உலகம் இன்று !
தமிழுக்கு பெருமை சேர்த்த கவிஞர் !
தலைமை பண்பை கற்று கொடுத்த தலைவன் !

அவர் ஒரு சரித்திரம்!பொக்கிஷம் !அதிசயம் !
என்று சொல்லும் உலகம் இன்று !
தமிழுக்கு பெருமை சேர்த்த கவிஞர் !
தலைமை பண்பை கற்று கொடுத்த தலைவன் !

ரத்தத்தின்  ரதங்கள் உங்கள் உடன் பிறப்புகளை...
சோகத்தில் ஆழ்த்திவிட்டு சென்று விட்டாய்..
வள்ளுவனுக்கு வான் உயர சிலை தந்த செம்மலே..
உழைப்பில் ஒய்வு அறியா சூரியனே !

சென்று வா தலைவா...
வாவாங்கு வாழ்ந்தவரே!
புன்னகை முகமாய்.....சென்று வா..
நாளை எங்கள் பிள்ளைகள்...
உங்கள் சரித்திரம் படிக்கட்டும்...
சாதனை படைக்கட்டும் !


சாக்ரடீஸ்:

கலைஞரே
திராவிடத்தின் சக்ரவர்த்தியே
தமிழ் மொழிக்கும்
தமிழ் நாட்டிற்கும்
 நீ உயிர் எழுத்து

அரசியலின்
ஆதவன் 
இலட்சியத்தின் 
ஈச்சுவரன்
உழைப்பின்
ஊட்டுதல்
எழுத்துக்களின்
ஏவுகணை
ஐந்தெழுத்து
ஒப்பனை
ஓய்வில்லா
ஔடதவாதி
ஃ மட்டும் அல்ல உன் பார்வையும் எதிரிகளுக்கு
ஆயுத எழுத்தே  ...

கலைஞர்
என்ற ஒரு சொல்
அரை  நூற்றாண்டின்  தலைப்பு செய்தி
இந்தியா அரசியலில் தவிர்க்க முடியாத  ஒரு  பெயர்
அதிகமாக விரும்பப்பட்டவர்
அதிகமாக விமர்சிக்கப்பட்டவர்
கட்சி சார்பின்றி  அனைவருக்கும்  ஒரு ஊக்கம்

கலைஞரே
உன் சாவுக்கு காத்துகொண்டு இருந்த
உன் எதிரிகளை கூட
ஏமாற்றிட  கூடாது
என்று நீ உன் உயிரை பிரிந்தாய
தலைவா

உன்  கறகற குரலில் 
என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே
என்று
கேட்க  வேண்டும் என்று நினைத்தால்
அது  பேராசைதான்
ஆனால்
மீண்டும் கேட்டுவிட்டால் அதைவிட
ஒரு உணர்ச்சி மிக்க தருணம்
வேறு எதுவும் இல்லை என்னக்கு ....

கலைஞரே
நீங்கள்  பெரியாரின் வளர்ப்பு
நீங்கள் அண்ணாவின் கொள்கை பாதுகாவலன் தான்
 இருந்தாலும்
தந்தை பெரியார்
பேரறிஞர் அண்ணா காலத்தில்
நான் பிறக்கவில்லை
உன்னை தவிர வேறுயாரையும்
நான் தலைவனாக பார்த்ததும் இல்லை
பார்க்கப்போவதும் இல்லை ...
நீ வாழந்த காலத்தில்
நானும் வாழ்கிறேன்
என்ற பெருமிதம்  போதும் என்னக்கு

மரணம்
இயற்கைதான்
என்றாலும் மனம்
ஏற்க மறுக்கிறது ...
தானாகவே கண்களில்
கண்ணீர் வருகின்றது ....
அழ வைத்துவிட்டாய் தலைவா

சென்று வா தலைவா ...
மீண்டும் சந்திப்போம் தலைவா ....

 

 

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version