Special Category > இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் 23.02.2018

(1/1)

Evil:
இன்றைய ராசிபலன்

மேஷம்

மேஷம்: எதிர்பாராத பணவரவுஉண்டு. உறவினர், நண்பர் களால் ஆதாயமடைவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். தொட்டது துலங்கும் நாள்.


ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்று வீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப் பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி முக்கிய பொறுப்பை ஒப்படைப்பார். புதுமை படைக்கும் நாள்.


மிதுனம்

மிதுனம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வரும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர் கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.


கடகம்

கடகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் மத்தியில்செல்வாக்குக் கூடும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் முக்கியத்துவம் தருவார்கள். வெற்றி பெறும் நாள்.


சிம்மம்

சிம்மம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளை களை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலைஉயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள். 


கன்னி

கன்னி: மாலை 5மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக்
கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.


துலாம்

துலாம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். உறவி னர்களுடன் மனவருத்தங்கள் வரும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள். 


விருச்சிகம்

விருச்சிகம்:  குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். விசேஷங்களை முன்னின்று நடத் துவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வந்துப் பேசுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் மதிக்கப்ப டுவீர்கள். சிறப்பான நாள்.   


தனுசு

தனுசு: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி யமைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.


மகரம்

மகரம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.   


கும்பம்

கும்பம்: மாலை 5 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.


மீனம்

மீனம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். நீண்ட நாட்களாகபார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபா ரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

Navigation

[0] Message Index

Go to full version