Special Category > இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் 25.02.2019

(1/1)

regime:
இன்றைய ராசிபலன்

மேஷம்

மேஷம்: சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


ரிஷபம்

ரிஷபம்: பணப்புழக்கம் அதிக ரிக்கும். உறவினர், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள்எடுப்பார்கள் அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.


மிதுனம்

மிதுனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்.
உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.


கடகம்

கடகம்: பழைய நல்லசம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம்தேவை. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள்
வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். 


சிம்மம்

சிம்மம்: திட்டவட்டமாக சிலமுக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். அரசால் ஆதாயம் உண்டு. வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.


கன்னி

கன்னி: கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். தோற்றப் பொலிவுக் கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உடல் நலம் சீராகும். உறவினர்களால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். தடைகள் உடைபடும் நாள்.


துலாம்

துலாம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மைதலைத் தூக்கும். சிலர் உங்களைமட்டம் தட்டிப்பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். முக்கியகோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.


விருச்சிகம்

விருச்சிகம்: சில வேலைகளை அலைந்து, திரிந்துமுடிக்க வேண்டி வரும். உறவினர்கள், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உடல் அசதி, சோர்வு வரக்கூடும். வியாபாரத்தில் போராடி லாபம்
ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


தனுசு

தனுசு: பிரச்னைகளை சமாளிக்கும் மனோபலம் அதிகரிக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சிறப்பான நாள். 


மகரம்

மகரம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீகள் பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பிவருவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். உத்யோ
கத்தில் தலைமையின் நம்பிக்கையைப்பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.


கும்பம்

கும்பம்: உங்களுக்குள் இருந்து வந்த சோர்வு நீங்கிசுறுசுறுப்பாவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வுகாண்பீர்கள். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள்.


மீனம்

மீனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியரின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

Navigation

[0] Message Index

Go to full version