Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 264  (Read 2164 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 264

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

« Last Edit: April 17, 2021, 11:48:16 PM by Forum »

Offline thamilan

உள்ளுக்குள் இருந்து
உயிர் வதம் செய்பவளே
காதல் என்றால்
இன்பம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்
உன்னை காதலித்த பின் தான்
காதல் என்பது தீராத துயரம் என
அறிந்து கொண்டேன்

உன்னை உருகி உருகி காதலித்தேன்
நீயோ உனது அனல் பேசினால்
என்னை உருக வைத்தாய்
உண்மையான காதலுக்கு எதிரியே
சந்தேகம் தானடி

உன்னை தவிர எல்லா பெண்களுமே
சகோதரி தாய் என்று தான்
நினைத்தேன் நான்
உன் சந்தேகப் பார்வைக்கு
அது எங்கே தெரியப் போகிறது

எப்போதுமே உன் கண்களில்
அனல்
பேசினில் விஷம்
வார்த்தை அம்புகளால் என்னை
துளைத்தெடுத்தாய்
உன் ஒவ்வொரு சொல்லும் கத்தியென 
என் இதயத்தை கிழித்தன

தாங்கிக் கொண்டேன்
எல்லாம் தாங்கிக் கொண்டேன் உனக்காக
என் அன்பை என்றாவது புரிந்து கொள்வாய்
என்று காத்திருந்தேன் 
நீ மாறவே இல்லை
என்னை பிரிந்து சென்றாய்

உன் பிரிவால் நான்
என் உயிர் துறக்க நினைத்தது
தவறென்று இன்று புரிந்து கொண்டேன்
நீ தந்த காயங்களால்
நான் இன்று கவிஞன்
கவிஞன் என்று மற்றவர் சொல்லும்போதெல்லாம்
என்னுள் உன்னைத்தான் பார்க்கிறேன்

ஏனெனில்
என் கவிதைகளை நான் எழுதுவது
நீ கிழித்த எனது இதயம் வடிக்கும் 
ரத்தத்தால் 

புன்னைகைள் வென்று
என் இதயத்தை கொன்று
நடத்திய வேள்வியில் கிடைத்தது தோல்வியே
கேட்கிறேன் ஒரு கேள்வி
காதல் பொய்யா நீ
காதலித்து பொய்யா
நான் சித்தும் கண்ணீர் ஒன்றே
உண்மை

Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !

என் கண்ணில் தோன்றிய
கனவு தேவதையே ...!
காதல் என்ற வார்த்தையை
தவணை முறையில் தந்தவளே ...

அன்று..
உன் பார்வை தரிசனத்துக்காக ...
நான் வீதியின் ஓரத்தில்
கால்கள் வலிக்க நின்று
காத்திருந்த போதும்  வலிக்கவில்லை ....

உன் காதலை பெற சுற்றி வந்தபோது
வீசும் கனல் சொற்களின்
அவமானங்களின் போதும்  ...
வலிக்கவில்லை  பெண்ணே ...

காதலித்த போது...
என் மீது திணிக்க பட்ட ஆளுமை கூட
என் மீதுள்ள காதலால்தானே
என்று வலிக்கவில்லை ...

உன் கட்டளைகளை ...
சிரமேற்கொண்டு ஓடி ஓடி செய்த போதும்
ஏதும் வலி இருக்க விழவில்லை ...

என்னை ஆட்சி செய்து ..
உன் கருத்துக்களை என்மீது வீசி
சரணடைய செய்தபோதும்
வலி இருக்கவில்லை ...

மகிழ்ச்சியான மாலை பொழுதையும்
உன் அந்நியமற்ற செயல்களால்
அதை கொன்ற போதும் வலிக்கவில்லை

வாழப்போகும் வாழ்க்கைக்கு
தேவையான பணத்தை சேகரித்து வா
என விரட்டிய போதும் ...நமக்காக தானே
என்று ஓடி ஓடி உழைத்தபோதும் வலிக்கவில்லை !

எப்போதும் ஏழை என்று ஏளனப்படுத்தி
வார்த்தைகளால் காய படுத்தியது போதும்  ...
என் காதலை நீ காசோடு ஒப்பிட்டு பேசிய போதும்
வலிக்கவில்லை பெண்ணே !

உன் அகத்தில் எப்போதும் நான் ...
என் உயிரில் நீ மட்டுமே என்று
தவம் இருந்து ...
வரம் பெற்ற  நாளை எண்ணி
காத்து இருந்த எனக்கு ..

இன்று ....
இவன்தான் என் வருங்கால
பணக்கார கணவன் என்று
அறிமுகப்படுத்திய கணத்தில்
அம்பு தைத்த இதயம் ஓசை இன்றி
உதிரம் கொட்டி .....
என் உயிரை உதிர செய்குதடி ! 


Offline இளஞ்செழியன்

என்றாவது ஓர் நாள் என் மனம் ஏற்காத அளவுக்கு
எனக்கு நானே
ஓர் பொய்ச் சமாதானம் சொல்லி, ஆற்றுப்படுத்திக் கொள்வேன்!
நீ இப்போது என்னோடும்,
எனக்காகவும் இல்லையென்று...

வாழ்க்கை அனுபவிக்கச் செய்த,
அதியுயர் அழகான விஷயமும் நீ தான்!
அத்துமீறி அழுத்தம் தந்து சென்ற,
நிலையாமையும் நீ தான்!

இந்த இடைப்பட்ட காலத்தில்
நமக்குள் நிகழ்ந்த அத்தனைக்கும்
எந்தப் பெயரும் சூட்டி அழைக்கத் தோன்றவில்லை....
என்னில் நீயொரு நிகழ்வு!
உன்னில் நானொரு நிகழ்வு!

ஏனோ!
காலம் நம்மில் ஊன்றிக் கடத்திச் செல்கின்ற,  ஏராளமான தவிப்புக்கள் தற்செயல
நிகழ்வாய் தான் மாறிப் போகிறது. ...

நிஜமாகவே நான் எதை காதலிக்கிறேன்?
உன்னையா? உன் காதலையா?
என் நியாயமான இந்தக் கேள்விக்கு
எனக்கு இன்னும் பதில் அகப்படவில்லை..

எனக்குப் புலப்படாத ஓர் புதிர் வரி நீ!
தெளிவின்மையோடு வீற்றிருக்கும்
ஓர் வாசகன் நான்!

உன்னைச் சந்திக்கும் முன்
என்னிடமிருந்த...!
என் பழைய வாசனையும்,
ஈரம் அப்பிய
என் பழைய மழை நாட்களும்,
என் திமிர் நிறைந்த
பழைய கர்வங்களும்,
மிக அழகான பழைய நானும்
இப்போது இங்கில்லை.

எனக்குப் பிடித்த
என் வெறிச்சோடிய அறையின்
நாலு சுவர்களுக்குள்ளும்...!
என்னைப் போலவே
ஆதரவற்றுத் தவிக்கிறது
என் காதலின் அசரீரி!

காதலைப் பயிலும்
வரம் தந்தாய்!
காட்சிகள் யாவற்றிலும்
காதலை நிரப்பிச் சென்றாய்!
ஏகாந்தமாய் நானிருக்குமொரு
நிலை தந்தாய்!

அது போலவே...!

ஆத்திரப்படவும்
நீ பலம் கொடுத்திருக்கலாம்!
அழுவதற்கும்
நீ பலம் கொடுத்திருக்கலாம்!
நீயற்ற இந்நாளிகையில்
நான் நிர்க்கதியாய் நிற்கையில்...!
மனதின் ஓரத்தில் கசியும்
ரணமான அழுகையை அடக்கிச் சாக,
நீ என்னை பக்குவப்படுத்தியிருக்கலாம்
பிழைகளோடு ஆனவன்...

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 642
  • Total likes: 1786
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum

வேண்டாம்! பெண்ணே! வேண்டாம்!!
ஒருவரின் மனதை கொடூரமாக தாக்கும்
கூர்மையான... ஆயுத சொற்களை... நிறுத்திவிடு!! 

நம் இதழ் வழியே சிந்தும் வார்த்தைகள் என்றுமே..
நாம் விரும்புவோர் அல்லது நம்மை விரும்புவோர்களிடம். 
கனிவான சந்தோச சூழ்நிலையை உருவாக்கணும்..

கண்களில் நீர் பெருகி வழிந்தோடும் வேதனையையோ..
அன்னாரின் மனதில் மரண வலியை கொடுக்கும்
கடும் சொற்களையோ..  என்றும் மொழியாதே! பெண்ணே..

நாம் ஜனனம் எடுத்த  இப்புண்ணிய புனித பூமியுமே..
கருனையில்லா கொடிய மனம் கொண்ட அரக்கர்களையும்..
தாயுள்ளம் கொண்டு அரவணைத்தனர்.. நம் முன்னோருமே..

ஓர் ஆணின் கடும் சொல் கிணற்றில் போடும் கல்போல..
ஆனால் ஓர் பெண் கோபத்தில் உச்சரிக்கும் கடும் சொல்லோ.
தேன்கூட்டில் விட்டெரியும் கல்போல... பெண்ணே!!!...

தேனீக்கள் தன் சின்ன சிறகை விரித்தால்!! பெண்ணே!!.
நீ மட்டுமல்லாது.உன் சுற்றமும் சேர்ந்து அழியுமே!!..
வேண்டாம்.. பெண்ணே  வேண்டாம்.. அனல் சொற்களுமே..

அன்பான வார்த்தையாலும் .. பாசமான  பார்வையாலுமே
தவறே இழைத்திருத்தலும்.. உன்னவனை நீ திருத்தலாமே...
அன்புக்கு அடிபணியா.. உயிர்கள் ஏதும் உளதோ..

பெண்ணே.. பொறுமை பூமி ஆளும்..
பெண்ணே.. அன்பை பழகு... அன்போடு பழகு...
பெண்ணே.. அன்பே ஜெயம்... அன்பே ஜெயம்...
 



Offline Cholan



அந்த ஒரு வார்த்தை

என் உலகத்தையே அழகாக்கியது
என் பேச்சில் தெளிவு  பிறக்கவைத்தது  
என்னை யாரென்று எனக்கே புரிய வைத்தது
என்னை விண்ணுக்கும் மண்ணுக்கும் குதிக்க வைத்தது
எனக்கு அன்பு பாசம் என்பவற்றை  புரிய வைத்தது

அந்த ஒரு வார்த்தை

எந்த  பெண்ணையும்  சகோதரி போல்  பார்க்க  வைத்தது
வரை படம் இல்லாமல் பாதை தெரிய வைத்தது
என்னை அறியாமலே தூரங்களை கடக்க வைத்தது
நீதான் என் அண்டம் என்றாக்க்கியது
ஆனால்  .......
என்ன பிழை செய்தேனோ.........

அந்த ஒரு வார்த்தை

என் கண்களில் கண்ணீர் வர வைத்தது
என் இதயத்தை கிழித்து  துண்டாக்கியது
என்னை மரணம்  வரை கொண்டு சென்றது
என்   உலகையே   இருளாக்கியது

அந்த ஒரு வார்த்தை

எனை உயிர் இருந்தும் பிணமாக்கியது  
என்னை தனிமைப்படுத்தியது  
என்னை சிந்தனை செய்ய வைத்தது
என்னக்கு புத்தி வர வைத்தது

அந்த ஒரு வார்த்தை

செவி புலன் இழக்க வைத்தது
நண்பர்களை தேட வைத்தது
என்னை வாய் பேச முடியாத  ஊமை ஆக்கியது
இங்கயே  நரகம்  காட்டியது

அந்த ஒரு வார்த்தை

என்னை மீண்டெழ முடியாமலாக்கியது
இன்று வரை ஏன்  அந்த  வார்த்தையை
செவிகேட்டேன்  என்று புலம்ப  வைக்கிறது
என்னை அக்னியில் இட்டு  சாம்பலாகித்தது
எதையும் ஆக்கவும்  அழிக்கவும் பலம் கொண்டது
என்பதையும் நிரூபித்துவிட்டது...

           
நன்றி இப்படிக்கு இவன்.          நன்றி இப்படிக்கு இவன்.           நன்றி இப்படிக்கு இவன்.
           

Offline MoGiNi

களைத்த
பொழுதுகளை
இரக்கமின்றி
சபித்துக்கொண்டே
பிடுங்கி கொண்டிருக்கிறேன்
உன் நினைவுகளை ..
வேரோடு ஊன்றி இருந்தால்
வந்துவிடும் ..
உயிரோடு ஒன்றி
பிரிய மறுக்கிறது ..

சில்லென்ற குளிரிளில்
திடீரென கொட்டும்
இந்த மழைத் துளிகளில்
கரைந்துவிட கூடுமோ ..
என்புவரை துளைத்த போதும்
எள்ளளவும் அது கரையவில்லை ..

வார்த்தைகளில்
பிரியத்தை தேடி
களைத்துக் கிடக்கிறது மனது ..
தேர்வு செய்து பேசுவதற்கு
இது பரீட்சை அல்ல
வாழ்க்கை
வாழ்ந்து பேசுகிறேன்
நீயோ
( எரிந்து  ) வீழ்ந்து பேசுகிறாய் ..

நானில்லாத இடைவெளியை
யாராவது
நிரப்பி விட்டார்களா
சொல்லு
நானாக சென்று விடுகிறேன்
நாளைப் பொழுதில்
என்னை நகர்த்தும் வேலை கூட
உனக்கு வேண்டாமே ..

என்னென்னவோ பேசவேண்டும்
என்பதாய் இருக்கிறது மனது
இப்படிதான் பேசவேண்டும்
என்கிறதாய் இருக்கிறது
உன் நகர்வு ..

தேடுகிறேன்
என்னை தொலைத்த
இதயத்தை ..
அது
காணாமல் போய்
ஒரு சில நாட்கள்
கடந்தது தெரியாமல் ...

வாழ்க்கையோடு
போராட வலுவிருக்கிறது
உன் வார்த்தைகளோடு
போராட ...
எங்கிருந்து பெயர்க்கிறாய்
என்மீது வீச ?
கல் நெஞ்சென்று
பெயர் போன என் நெஞ்சே
பிளந்து கிடக்கிறதே ...

குருதித் கலன்களின்
ஒவ்வொரு துகளுக்குள்ளும்
துல்லியமாய் உட்புகுந்து
போதையூட்டும்
உன்  நினைவுச் சிற்பங்கள்
கண்களில் மின்னுகின்றது
கண்ணீர் துளிகளென ...

ஒற்றையாய் பறக்கும்
ஓர் வண்ண பறவையும்
தண்ணிலவாய் காயும்
வெண் நிலவின் மென் ஒளியும்
என் நினைவில் உன்  உருவை
செதுக்கி உறைகிறது பனியென ..

கலந்து பிரிந்த
கைகளின் விரல் இடுக்கில்
பிரியாத பிரியங்களின் ரேகைகள்
நம் காதலின் ஆயுளை
கூட்டி குளிர்விக்காதோ ?

இணை பிரிந்த அன்றில் என
உனைப் பிரிந்த நான்
ஒற்றையாய் உலவுகிறேன்
இலை உதிர்த்த
மரத்தின் கிளைகள் எல்லாம்
பசுமைக்கு ஏங்குவது போல்
உன்னை எண்ணி
அனைத்தும் இழந்து தவிக்கும்
என் இருதயம்
உன் நினைவு சுமந்து வாழ்கிறது
நடைப்பிணமென .

அழகே
நீ எறிந்த வார்த்தைகளின் வலியில்
இன்னும்
உன் இருதயத்தின் ஈரத்தை
தேடிக் கனக்கிறது மனது ..

Offline SweeTie


ஐந்தாண்டுக்கு   ஒரு முறைதான் தேர்தலே வருகிறது
நமக்குள் ஐந்தாண்டுகளில்   எத்தனை  சண்டைகள் '
மிட்டாய்க்கு  சண்டைபோடும் சிறுபிள்ளைகள் போல்
தொட்டதற்கும்  பட்டதற்கும்   அடித்துக்கொண்டு....
மீட்டுப் பார்க்கையில்   ....
மனக் குமுறல்களும்  வேதனைகளும்தான் மிச்சம்

அன்பு வைத்தால்  அது பாவம் .....வரம்பு மீறின்
ஆர்ப்பரிக்கும்   கடல் அலையாய் மாறிவிடும்
உணர்வுககளை   கடந்து    உரிமை  கொண்டால்
ஊழிக்  காற்றும்  சுழன்றடிக்க தொடங்கிவிடும்
எதிர்பார்ப்புகள்  ஏமாற்றங்களை சந்திக்கையில்
கண்ணீர்  கட்டுக்கடங்காமல்  பெருக்கெடுக்கும்
பூவுக்குள்ளும்    பூகம்பம்  வெடிக்கும் 
உணர்வுகளின்   காயங்ளில்  ரத்தம் பெருக்கெடுக்கும் 

நாக்கிலே  நரம்பை  வைக்கத்  தவறிவிட்டான்  அவன்
வைத்திருந்தால்    ரோசம்  அதில் குடி கொண்டிருக்கும்
என்றோ நானும் உன்னை பிரிந்திருப்பேன்
நம் சண்டைகளுக்கும்   முற்றுப்புள்ளி  கிடைத்திருக்கும்
இந்த இரண்டும்கெட்ட நிலையும்  முடிந்திருக்கும்

உன்மேல் வந்துவிளும்   ஒவொரு அம்பும்
என்   இதயத்தின்    ஆழத்தில்   பதிந்திருக்கும்
காதல்  ரணத்தின்   ரத்த துளிகள் 
என்னை நானே  நொந்துகொள்கிறேன்
 உன்னை   திட்டியபின்   
எத்தனை  இரவுகள்   உனையே நினைத்து
உறங்காமல்    தவித்திருப்பேன்   
வேதனையின்    வலியில்   துடித்திருப்பேன்   
எனக்கு   மட்டும்தான்  தெரியும்  அது

மழையிலும்  வெயிலிலும்  காலமெல்லாம்
காத்து நிற்கும்  வெருளி   உழவன் கண்னுக்கு தெரிவதில்லை
இரவு முழுதும்   மின்விளக்கின்  ஒளியில் மயங்கி 
நாட்டியம் ஆடி மகிழும் விட்டில்களுக்கு
விடிந்ததும்  மரணம் என்பதும்  தெரிவதில்லை
இயற்கையின்   வேடிக்கைதான்  என்னே !   

இதயம் என்று ஒன்று இல்லாதிருந்திந்தால்   
உன் நினைவுகளை   சேகரித்திருக்கமாட்டேன்
நினைவுகள்     இல்லாது   இருந்திருந்தால் 
கனவுகளில்  உன்னுடன்  கைகோர்த்திருக்கமாட்டேன் 
காலங்களால் கலைந்துபோன  என் கனவுகள்
கானல்நீராகவே   போகட்டும். 
காதல்  எனும்  போதையில்   வீழ்ந்ததும்   போதும்
மீள்தல்  இல்லா   வாழ்க்கை   வாழ்ந்ததும்   போதும் 
விட்டுவிடு   ஏன் உயிரே ! !  விட்டுவிடு  !!  நான்  போகிறேன்!!!