நண்பர்கள் தமிழ் அரட்டை அரங்கத்தின் பத்தாம் ஆண்டு தொடக்க விழா...!
பத்து ஆண்டுகள் இப்படி ஒரு நண்பர்கள் தளத்தை தொடர்ந்து நடத்த முடியுமா?என்ற கேள்வியே எனக்கு வியப்பையும் ஆச்சரியத்தையும் தருகிறது.
வலிகள் வேதனைகள் ஏமாற்றம் அழுகை கண்ணீர் என நீளும் மனித வாழ்க்கைக்கு சற்று ஆறுதல் தருவது நண்பர்கள் என்ற அருமருந்தே....அத்தகையக நண்பர்கள் உடன் இருப்பவர்கள் மட்டும் அல்ல,முகம் தெரியாத யாரோ ஒருவன் "என்ன மச்சி வீட்ல எல்லோரும் நல்ல இருக்காங்களானு அக்கறையோடு கேட்கும் அனைவரும் நண்பர்களே,
முகம் தெரியா பல நண்பர்களை ஒன்றிணைக்க இத்தகைய தளத்தை தொடங்கி பல தடைகளை கடந்து பத்தாம் ஆண்டு வரை வெற்றியோடு நடத்திக்கொண்டிருக்கும் FTC team"க்கும் அதற்கு பக்க பலமாய் இருக்கும் அத்தனை நல்ல உள்ளத்திற்க்கும் இந்த சந்தோசமான தருணத்தில் நன்றி சொல்லிக்கொண்டு....FTC நூற்றாண்டு விழா காண வாழ்த்துக்கிறேன்....!❤️
உன்னைக் கொண்டாடுபவர்களுடன்
நீ கொண்டாடுபவைகளுடன்
எப்பொழுதும் பிணைந்திரு
அதுவே மகிழ்ச்சி..!❤️❤️❤️
- ரூமி