தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது
ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 277
Forum:
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 277
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
Updated on 26 Oct 2020:
நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக, உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் , 60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
Mr Perfect:
💜💜பிரசவ அறைக்கு வெளியே உன் முதல் அழுகை கேட்ட நொடி, அப்பாவாய் நான் பிறந்தேன் கண்மணியே!
💜💜 அக்கனமே என் இளவரசிக்கு அழுகை அறியா ஓர் உலகை கொடுக்க தயாரானேன் ஒரு தகப்பனாய்!
💜💜 இந்த பூமியில் பூத்த புன்னகை தேவதை இவள்!
💜💜அவள் தரும் முத்தத்தில் என் இன்னலை மறக்கச் செய்பவள்!
💜💜சிரிப்பின் ஓசையால் என் சினத்தை சிதறச் செய்பவள்!
💜💜அவளின் கை விரல் தீண்டலால் என் காயங்களை ஆறச் செய்பவள்!
💜💜அவளின் மழலை மொழியில் உலகையே மறக்கச் செய்பவள்!
💜💜அவள் விடும் கண்ணீர் துளியில் என் மனதை கலங்கச் செய்பவள்!
💜💜அவள் ஊட்டிவிடும் ஒரு வாய் சோற்றில் தாயின் அன்பை தருபவள்!
💜💜அவள் கொலுசின் ஓசையால் பல கீதங்களை இசைப்பவள்!
💜💜என் விரல் பிடித்து அழகாய் நடை பழகுபவள்!
💜💜என் உயிரிலே கலந்தவள்! 💜💜என் உலகமென மாறியவள்!
💜💜அப்பா என்ற ஒரு வார்த்தையால் என்னை கட்டிப்போட்டவள்!
💜💜 என்ன தவம் செய்தேன் நீ என் மகளாய் பிறப்பதற்கு!
💜💜உன்னை வயிற்றில் சுமக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை
💜💜எனினும் ஆயுள் உள்ளவரை என் நெஞ்சில் சுமப்பேன் கண்மணியே!💜💜
எஸ்கே:
தனிமையை பரிசளித்த என்னவள் !
உன்னை பரிசாக தந்திருக்கிறாள்!!
என்னவளின் அன்பு பரிசு நீ!!!
விலை மதிக்க முடியா பொக்கிஷம் நீ!!!!
உன் சிரிப்பை கண்டு நான்
சொக்கிதான் போனேன்!!!!!
கலங்காதே என் ஆசை தேவதையே!
என்னவளின் பிரிவு உன்னை,
எப்போதும் நெருங்க விட மாட்டேன்!!
எந்தன் அரவணைப்பில் நீ!!!
உந்தன் அரவணைப்பில் நான்!!!!
பிரிவு கண்டு நான் கலங்க மாட்டேன்!
என்னவளின் பிரிவை போக்கும்,
அருமருந்து நீதானே செல்லமே!!
பெறாத இன்பம் தனை நான் பெற்றேன்!!!
உந்தன் மடியில் படுத்து உறங்க,
ஆசை கொண்டேன் என் கண்ணே!!!!
எந்தன் இறுதி வரை உன்னை
இமையாய் காத்து நிற்பேன்!
எந்தன் நிழலே நீ தானே அன்பே!!
என்னவளின் பாதி நான் !!!
என்னில் பாதி நீ !!!!
உனக்கு நான் எனக்கு நீ என,
வாழ்வோம் உலகம் மறந்து,
என்னுடன் நடை போட வா!!!!!
Sun FloweR:
அழாதிரு மகனே அழாதிரு ....
தாயைத் தொலைப்பதைக் காட்டிலும்
கொடுமையானது தாய்மண்ணைத் தொலைப்பது...
இரண்டையும் தொலைத்து விட்ட
உன் துயரத்தைவிட
என் வலி ஒன்றும் பெரிதல்லடா.....
துளியாய் துவங்கிய இத்துயரம்
இன்று பெருமழையாய்
கடக்க இயலாமல் கண்முன்னே
நம் வாழ்வனைத்தையும் சுருட்டிக்
கொண்டு போனதடா.....
நட்பு வேஷம் பூண்டு
துரோகமிழைக்கும் வஞ்சகர் கூட்டம்
பல உண்டு..அதில் உன்
அப்பனின் ஆணிவேர் சாய்ந்த
கதைக்கும் இடமுண்டு என்பதைப்
புரிந்து கொள்ளடா.....
இனிமேல் நான் என்ன
செய்யப் போகிறேன் என்பதைவிட
நீ என்னவாகப் போகிறாய் என்பதிலே
என் வாழ்வனைத்தும் சுழலுதடா.......
நம்மை விழச்செய்தவர்களை
வீழச் செய்யாமல் விடக்கூடாது
என்பதில் வேட்கையாய் இரு...
கவனமாய் இரு...
நம் கண்ணீர் காற்றில் கரைந்துவிடும்
கற்பூரம் அல்ல...வேரினிலே
வளர்ந்துவிட்ட நெருப்பூரம் அது...
வேரின் கதை மறந்த கிளைகள்
செழிப்பதில்லை.. உன் தகப்பனின்
கதை அறிந்து உன்னை செதுக்கிக்கொள்..
வளர்த்துக்கொள்.. எழுச்சி விதைகளை
உன்னுள் தூவிக்கொள்... பரப்பிச் செல்...
ஒரு நாள் நானும் உன்னை
விட்டு நீங்கலாம்...அப்படி
நீங்கினாலும் சோர்ந்துவிடாதே...
துவண்டுவிடாதே... இவ்வுலகில் எங்கோ
இருந்து கொண்டு உன்னைக்
கண்காணித்துக் கொண்டுதான்
இருப்பேன் பறவையாய் செடியாய்
மரமாய் ஏதோ ஒன்றாய்......!!
Dear COMRADE:
என்னவள் கருவில் பூத்து
என்னை அப்பா என்றழைக்க
தேவதை கூட்டத்தின் இளவரசியாய்
என் தோள் சாய வந்தவளோ...
என் மார்பு கம்பளம் விரிக்குமடி - உன்
பிஞ்சுக்கால்கள் மெல்ல நடக்கையிலே...
என் காதில் தேனிசை பாயுமடி- உன்
மழழை பேச்சை கேக்கையிலே...
நானும் குழந்தை ஆவேனடி - உன்
குறும்புச் சேட்டையை ரசிக்கையிலே...
நானும் உன் மகன் தானடி - நீ
அதட்டி அதிகாரம் செய்கையிலே...
அன்பு மகளே நீயும் ஆணையிட்டால்
அப்பன் நானும் உந்தன் சேவகனே...
உன்னை அள்ளிக் கொஞ்சுகையில்
என்னை இறுக பற்றிக்கொண்டு...
உமிழ்நீர் கொண்டு சித்திரம் வரைய
எந்தன் முகம்தான் உந்தன் காகிதமோ...
சிங்கம் வாழும் காட்டில்
சிறு குள்ளநரிகளும் உண்டு...
சிரித்துப் பேசுவர் எம் முன்னே- வாழ்வை
சீரழிக்க சதி தீட்டுவர் அதன் பின்னே...
கள் என்று அனைவரையும் கருதாதே
செம்பால் என்றும் செவி சாய்க்காதே...
காலம் உனை அழைக்கும் - அன்று
கயவர் யாரென்று அது உரைக்கும்...
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்,
அதை கையாளுமே- இங்கு சில
பசும்தோல் போர்த்திய புலிகள்...
அன்னப்பறவை ஆகிடு - அதில்
அன்பை இரண்டரப் பிரித்தெடு...
இன்னார் செய்தாரை ஒருத்தல்- அவர் நாண
நன்னயம் செய்து விடல் - இதுவே தந்தை
நான் கூறும் வாழ்வின் சாராம்சம்...
காலப்போக்கினில் இதை கற்றிடுவாய்- அதை
கடந்து சென்று வெற்றிக்கொடி நட்டிடுவாய்...
அந்திச்சூரியன் மறைந்தாலும்
அந்த பௌர்ணமியாய் மலர்வேன்...
அதை காரிருள் சூழ்ந்தாலும்
அள்ளித் தெளித்திடுவேன் அந்த தாரகைகளை
அனையா வெளிச்சம் உன்வாழ்வில் வீசிட...
அதுவரை தற்சமயம்,
அனைத்தும் மறந்து என்தோளில் தூங்கடி
என் இனியவள் தந்த பொக்கிஷமே- உனை
அள்ளி ஏந்தி ஓர் இடம் செல்கின்றேன்
அங்கு நானும் நீயும் மட்டும் வாழ...
தூங்கடி...தூங்கடி...தூங்கடி எந்தன் செல்வமே......
Dear COMRADE (Hunter) 🙂
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version