தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது

ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 277

<< < (2/2)

TiNu:


அன்று,
எண்ணில் அடங்கா விஷ ஜந்துக்கள் உலவும் அடர்ந்த பசும் காடு...
எதிரில் தெரியும் உருவம் எதுவென உணர முடியாது...
என் கண்களும் பார்வை இழந்து தவித்தது தடுமாற..
என்னை சுற்றி இருந்த கன்னங்கரிய காரிருள் நடுவே..
என் கடமையை நானும்.. செவ்வனே செய்ய விழைந்தேன்..
 
அச்சமயம்,
எந்த சூழ் நிலையும் என் மனோ நிலையை  பாதிக்காது
எல்லை பாதுகாப்பில்..  நானும் கவனமாக இருந்த போது..
எங்கிருந்தோ இடியென சீறி பாய்ந்து..  என் காதுகளை கிழித்தது..
எந்திர துப்பாகிகளை மாறி மாறி சுடும் சத்தம்.. நானும் விருட்டென 
என் செவிகள்.. ஒலி உணர்ந்த..  .திக்கு நோக்கி எழுத்து ஓடினேன்..

அங்கே,
எதிரி நாட்டு படைகளின் முகாமில். ஏதோ ஓர் அசம்பாவிதம்..
என் எண்ணத்தில் 1000 கேள்விகள் எழ.. அங்கே பார்த்தேன்...
என்னால் என்னவென்று யோசித்து..  முடிவுக்கு வருமுன்னே..
எல்லோரும் எங்கெங்கோ சிதறி தலைதெறிக்க ஓடி மறைந்தனர்.
எத்திக்கிலும் ஓசைகள் ஒடுங்கி நிசப்தம் நிலவ.. திரும்பினேன்..

அப்போது,
என் சிறு செவிகளை.. மெல்லியதாக தீண்டியது ஓர் ஓசை..
என்னவாக இருக்கும் என இன்னும் சற்றே நெருங்கி சென்றேன்..
என் சப்த நாடிகளும் ஒரு கணம் அதிர்ந்து ஆட நின்றது..
என் கண்முன்னே நான் கண்ட.. நம்பமுடியாத காட்சி..
எண்ணி பன்னிரண்டு  நாட்களே ஆனா பச்சிளம் குழந்தை...

அன்னிசையாக,
என் இரு கால்களும்.. என் மனமும் அச்சிசு நோக்கியே..
என்னையறியாமலே..  ஓர் சிறு நடுக்கத்துடன் நடந்து செல்ல..
எதிராளி முகாமின் வெளி பரப்பில்.. சற்றே தொலைவில்
என்ன நடக்கிறது என்று.. கொஞ்சமும் புரிய முடியாத நிலையில்..
என்னை நோக்கி.. தன் சின்ன ரோஸ் இதழ்கள் நெளிய அழுதது...

அந்நொடியில்,
என் கண்களில் நீர் வழிய.. நெஞ்சினில் பாசம் பொங்கி எழ.. 
என் கைகளில் அள்ளி எடுத்து.. என் தோளில் சாய்த்தேன்...
என் மனதில்..  இது ஓர் எதிரி சிசு என்ற எண்ணம் எழவில்லை..
என் தோள்களே..  தன்  ஆனந்த அமைதியான உலகமே..
என்ற எண்ணத்தோடு..  தன் விழிகளை முடி துயிலும் குழத்தையை..

அமைதியாக.. அணைத்தவாறு நடந்தேன்.. என் குடில் நோக்கியே...


MoGiNi:
சிலுவைகள்
சுமந்த பூக்கள்
எப்பொழுதும் அழகானவை

சில வலிகளின் நிவாரணியாக
ஓர் கோடைகாலத்தின் 
மழைத்துளியாக
துன்ப வெள்ளத்தின்
துடுப்பென
சில முற்றுப் புள்ளியின்
தொடர் புள்ளிகளாக
என்றும் அவை ..

கடந்த காலத்தின்
கருமையான
பக்கங்களில் பூத்த
அழகான கையெழுத்துப் பூ நீ
உன் வாய் வழியில்
வந்து விழும்
வார்த்தைகளுக்காய்
தவம் கிடைக்கும்
தாய் உள்ளம் கொண்டவன் தான் ...

உன்னை உதறிய
கைகளுக்கு தெரியவில்லை
உந்தன் ஊயர்வுகள்
பதறியழுத உன் அழுகைக்கும்
படியவில்லை அதன்
மனம் - எனில்
அது பிணம் ...
உல்லாசத்தில் உருவான
குழந்தை குப்பை என
நினைத்தாளோ ?
இல்லை
உன்னை வளர்க்க
கொடுத்து வைக்காது
கொலைவாளில்
பலி ஆனாளோ ...

எதுவாய் இருப்பினும்
என்னடா ..
இரும்பு சுமந்த என் கரங்கள்
இணையை இழந்த
என் இருதயம்
ஏந்தி சுமக்கும் உன்னை
வாழ்நாள் முழுமைக்கும் ..

உன்னை தவறவிடவில்லை
எனக்காய்
தாரை வார்த்திருக்கிறாள்
உன்  அன்னை ...
வா எதிர்காலம்
எனக்கும் உனக்குமாய் ...

AgNi:


போர்களத்தில் பூத்த பூவே!
நீ இந்த நிலத்தில்
புரியவேண்டிய போர்களைப்பற்றி
கூறுகிறேன்! கேளாய்..!

தாயை‌ விட்டு நீ இழந்து பிரிந்து  தவித்து இருந்தாலும்...
தன்மானத்தை இழக்க விரும்பாத
உன் தாய்நாட்டு வெற்றிக்காக  போராடு!

மங்கையரின் வாழ்வை சூறையாடும் மாபாதகர்களை
சூல் கொண்டு  வெறியோடு  வேட்டையாடி போராடு!

வெஞ்சமரில் உதித்த பூரண
வெள்ளி நிலவாய் ஒளிர்பவனே!
வறுமையின் கறுமைநிழல்
உன்மீது படராத்திருக்க போராடு!

சருகாய் உதிர்ந்த  காட்டில்
சாம்பலாகாமல்  தளிர்த்தவனே...
சாதி வேரோடிய‌ இப்பூமியில்
சமதர்மத்தை நிலைநிறுத்த
சளைக்காமல் போராடு!

பஞ்சம் நிறை வஞ்ச களத்தில்  வண்ணமலராய் மலர்ந்தவனே!
மிஞ்சிகிடக்கும் லஞ்சங்களை
ஒழிக்க அஞ்சாமல் போராடு!

கல்லறைபூமியில் பிறந்தவனே!
மேலுலகத்திற்கு கொண்டு
செல்லமுடியா சில்லறைக்காக
அல்லாடும் பேராசை‌மனிதர்களை
திருத்த போராடு!

நிச்சயமில்லா‌ நிலத்தில்
நீடுழிவாழ பிறந்தவனே!
நீதி, நேர்மை, நியாயங்கள்
காத்து அமைதிபூமியாக்க
கம்பீரமாக போராடு!


SweeTie:
பெற்றவள்  உன்னை   விட்டெறிய 
குற்றமென்ன   செய்தாயோ  குலவிளக்கே
என் வீட்டின்   ஒளி  விளக்கே   
என் குறை தீர்க்க  வந்தவனே   

 பொலிவிழந்த  இல்லத்தை    அலங்கரிக்க வந்தவனே
அழகான மழலையால்  மகிழ்விக்க வந்தவனே
 உன்  இதமான சிரிப்பொலிகள்  கேட்டு
இல்லமே  இன்பத்தில்   மிதக்குதடா

இல்லையொரு  பிள்ளையென்று    ஏங்கிநின்ற போது 
எங்கிருந்தோ வந்தாய்   என் மகனே 
இனி இல்லை   எனக்கு    ஏதும்   குறைகள்  என
என் முகம்  மலர வைத்தாய்    மானே   

தந்தை  என்  வளர்ப்பில்    நீ தரணியும் ஆள்வாய்
பொல்லா  பிணிகள்   போக்கவும்    கற்பாய்
வித்தைகள்    பலவும் கற்றிட செய்வேன்
உன்  வளர்ச்சியில்     உலகமே  கொள்ளும்  பொறாமை

வாழப்  பிறந்தவன் நீயடா   என் செல்வமே 
வாழவைப்பவன்    நான் உன்   தாயுமானவனுமாவேன்
குறைகள்    இனி   உனக்கில்லை   மகனே
குன்றின்மேல் ஒரு நச்சத்திரமடா   நீ !

பெற்றவர்  செய்யும்   தவறுக்கு   
பலியாகும்    ஆட்டுக்குட்டிகள்     இவர்கள்   
விதியை  வகுக்கும்   இறைவன்   எனோ 
பெற்றவர் மதியை  மறக்கவும்  வைத்தான்..   

Navigation

[0] Message Index

[*] Previous page

Go to full version