தமிழ்ப் பூங்கா > கதைகள்

என் இதயம் தேடும் குரலே...யார் நீ ? 1

(1/2) > >>

JsB:
என் இதயம் தேடும் குரலே...யார் நீ ? 1
Ftc யில் அன்று மாயாவின் பிறந்தநாள் கோலாகலமாக நடந்து முடிந்தது. பிறந்தநாள் நிகழ்ச்சி ftc fm மில் சிறப்பாக முடிந்தது என்று கனவு உலகத்தில் மாயாவும் மிதக்க சென்று விட்டாள்.

Ftc மேனில் ஒரே ஆடலும்பாடல் சத்தமாகவே இருந்தது. இடையில் எப்போதும் மொக்க ஜோக் போட்டு எல்லோரையும் சிரிக்க வைக்கும் இந்த foodie ஒரு பக்கம்...திடீர் என்று வந்தது ஓர் அழகிய ஆண் மகனின் தாலாட்டு பாடல் மேனில்...அதிர்ந்து போனது என் மனது.

அந்த குரலை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று என் இதயம் அடம் பிடித்தது.

வழக்கம்போல் மேல வேகமாக சென்று விட்ட voice message களை மும்முரமாக தேட  ஆரம்பித்தேன்.
நான் கேட்பதற்குள் அது மறைந்து போனது. என் இதயத்தை விட்டு தொலைந்து போனது.

மீண்டும் அந்த குரலை கேட்க வாய்ப்பு கிடைக்குமா என்று ஒவ்வொருநாளும் ftc நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறது என் இதயம். என் இதயத்தில் இடம் பிடித்த அந்த குரலுக்கு சொந்தமானவரை என் கண்கள் உறங்கமால் தேடிக் கொண்டிருக்கிறது....

தொடரும் ......

JsB:
என் இதயம் தேடும் குரலே யார் நீ ? 2
மீண்டும் அதிகாலையிலே எழுந்து ஓடினேன்... ஓடினேன் ...
Ftc யின் முன் வாசலை தேடி ஓடினேன்...
என் ஓட்டத்தையும் என் ஆட்டத்தையும் யாராலும் தடுக்கவும் முடியல முடிக்கவும் முடியல...
அதற்கு காரணம் என்னவென்றால் நான் சென்றதோ மாறு வேஷத்தில் ....

குரலுக்கு சொந்தமானவரை கண்டு பிடிக்க மறுவேஷத்தில் சென்றால் ....
போன இடத்தில் என்னை தேடி வந்தவரோ கோடீஸ்வர கோடி...
இவர் ftc யின் பெரிய கேடி.

இவருடன் பேசிக்கொண்டிருக்கையில் மேனில் அதே தாலாட்டு பாடல் கேட்க ஆரம்பித்தது...
என்னுடன் கடலை போட வந்த கோடி என் செய்கையை பார்த்து தட்டு தடுமாறி போனார்.

அவர் உள்ளத்தில் எழுந்து பொங்கியது பாடல் வரிகள் ...

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோன்னு ஒரே புலம்பல்...

இவருக்கு ஒரு கும்பிடு போட்டு ...
சற்று முன் மேன்ல கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல
கேட்ட அதே குரலை விரட்டி பிடிக்கலாம்னு போனா...

அந்த நல்ல நேரமா பார்த்து அட்மின் மேன் refresh பண்ணி விட்டுடாரே....

தொடரும்.....

JsB:
என் இதயம் தேடும் குரலே யார் நீ ? 3
போச்சுயா....போச்சு.... எல்லாமே மொத்தமா சுத்தமா ஆச்சே....
ஒரு வினாடியில் என் தலையே சுற்றி விட்டது.

சோகத்தில் மூழ்கி போயிருந்தேன். என்னை யார் தேற்றுவது?
என்னையும் சந்தோஷ மழையில் நனைய வைக்கும் ஜீவன் இங்கிருக்கும்மான்னு
இங்கையே கொஞ்ச நேரம் காத்திருந்தேன்.

காத்திருந்து ...எதிர் பார்த்தது ...வீண் போகலைனு தான் சொல்லணும்.
தமிழ் பேசும் தங்க காசு தமிழன் வந்துட்டாருயா....வந்துட்டாருயா...
யார் மேன்ல பேசினாலும் ...அமைதியா கேட்டு ...
இவர் போடும் பதில் இருக்கே ....
யாராலையும் இவரு மாதரி யோசிக்கவும் முடியாது;
மொக்க போட்டு சிரிக்க வைக்கவும் முடியாது.

அவரோட ஜோக்ஸ் எல்லாம் வேற levelல இருக்குங்க.

எப்போதும் இவரை எல்லோரும் சாப்பிட கூப்பிடுவது வழக்கம்.
ஆனா இவரோ, “இன்று நான் இன்னும் சாப்பிடலைனு “,
சொல்லி டமாரம் அடித்துக் கொண்டிருப்பதற்கு பின்னாடி எதாவது கதை இருக்குமோனு...
நானும் ஏன் அண்ண நேத்து orchids சாப்பிட கூப்பிட்ட மாதரி....
இன்று, யாரும் உங்களை சாப்பிட கூப்பிடலையானு கேட்ட பாவம் தாங்க...

சொன்னாரே ஒரு ஜோக்; கேட்டதும் நான் குடித்துக் கொண்டிருந்த ஆப்பிள் ஜூஸ் அப்படியே
வெளிய வந்து விட்டது...

அப்படி என்னதான் சொல்லி இருப்பாருனு உங்களுக்கே யோசிக்க தோணுமே...

“அவுங்க நேத்து சாப்பிட கூப்பிட்டு,இன்னைக்கு flight ticket அனுப்பி இருகாங்க”,
சாப்பாடு நாரி போயிருக்கும்...நான் போகலனு சொல்லிட்டாரு....
இப்படியெல்லாம் பேச ரூம் போட்டு யோசிப்பாரு போல ......

தொடரும்....

JsB:
என் இதயம் தேடும் குரலே யார் நீ ? 4
இங்க  அடிக்குற வெயில்ல  ஏதாச்சும் இளநீர்  குடிச்சா நல்லா இருக்குமே...
தொண்டை ரொம்ப வறண்டு போகின்ற  நிலமையிலும்   அந்த குரலுக்கு சொந்தமானவரை தேடும் தீவிரத்தில் இறங்கியதை  மறந்து விடக் கூடாது.
சேரி ... இளனிய வாங்கிட்டு , அடுத்து வருவது யாருன்னு பார்க்கலாம்....

என்ன ...இங்க இளநீ கடை  புதுசா இருக்கே.....
இம்ம்ம்ம்... கடை கூட நல்லா வெளிச்சமா இருக்கு...
போயி முழிக்க போற மூஞ்சி எப்படி இருக்குமோ....

அண்ண...அண்ண...யாராவது கடையில இருக்கீங்களா?
என்ன  ஆளையே காணும்? டைம் வேற ஆகுது ...
ஓமைகோட் ... என்ன  இந்த  ஆளு face  மாஸ்க் போடாம....முக முடியோட வராரு ...
சரியான காமெடி பீஸ் போல,
என்று உள்ளத்திலே பேசி சிரித்துக் கொண்டேன்.

“அண்ண, கடைய ஓபன் பண்ணிட்டு ; எங்க போயிட்டீங்க?
எவளோ நேரமா  உங்களை கோழி கூவுற  மாதரி கூப்டுகிட்டே  இருக்கிறது.
கூப்டு ... கூப்டு... இருக்குற வாய்ஸ்சும் இல்லாம போய்டும் போல.

“இல்ல,நீ ...வர்றதை  தூரத்தில் இருந்தே பார்த்தேன்...
நீ வரேன்னு  தெரிஞ்சு  தான் பின்னாடி உள்ள  வேலைய போட்டு; உனக்காக...முன்னாடி ஓடி வந்தேன்”.

சேரி, “ அண்ண.நீங்க ...முன்னாடி  வந்த  அழகு எப்படினு தான் நான் பார்த்தேனே ...

எனக்கு ஜில்லுனு ஒரு இளநீ கொடுங்க”.

ஹஹ்ஹாஹா .....அதை  ஏன் இங்க வந்து கேக்குற?
ஜொள்ளு விடுற  ஜில்லு  கிட்டல நீ கேட்கணும்...

என்ன  இந்த ஆளு  என்னமோ சொல்லுதே ....
ஆஹா... இந்த மூஞ்சிய  பார்த்த விக்கு  போட்ட விக்ரம் மாதரியே இருக்கே...
ஆமா ...இவரு  எப்படி இங்க?
நல்ல காலத்துலே உளறுவரே...
ஆனா ...இன்னைக்கு ரொம்ப கருத்தா...தெளிவா... பேசுறாரே.

சேரி  அப்பரும் இருக்கு இந்த ஆளுக்கு  கச்சேரி.
அமைதியா வாங்கிட்டு இடத்தை காலி பண்ணுவோம்.

“யோவ், பேச்சை  குறைச்சிட்டு  செயல்ல கூட்டுயா...
சீக்கிரமா கேட்டதை கொடுங்க; நான் போகணும் ...
டைம் ஆச்சு.”

“இளனி வேணும்னு கேக்குதுங்க...
வரும்போதே காலுல சுடுதண்ணி ஊத்திட்டு வருதுங்க ...
உன் மூஞ்சில முழிச்சுட்டேன்ல ...அப்போ அவ்ளோதான் ;
எவன் கிட்ட  அடி வாங்க போறேனோ... ஆண்டவா....”.

“ம்..ம்..ம்ம்... நீ, அடி  வாங்கினா எங்கிட்ட  தான் வாங்குவையா...
ஏன்னா...உன் மைன்டு  வாய்ஸ்  இங்க வரைக்கும் கேக்குது...
ஒழுங்கா வேலைய பாரு...நான் வரட்டா....”.

தொடரும்...

JsB:
என் இதயம் தேடும் குரலே யார் நீ ? 5
இந்த ஆளு கையில இளநீ வாங்கி  குடிச்ச  அதிஷ்ட்டம் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்.

என்ன ஆச்சு மேன்ல ஒரு வாய்ஸ்  மெசேஜ்  கூட  இன்னும் வரலையே....
எப்ப வருமோ ....இப்ப  வருமோ ....நான் போன பிறகு அப்போ வருமோ....

ஆஹா...ஹா...சொல்லி வாய மூடல  வந்திருச்சே....
யாரா இருக்கும்? இம்ம்ம்...இவரா??? ஆமா,  அப்டி  என்ன  பேசிர போறாரு ...
ஒன்னு பேருக்கு  ஏத்த  மாதரி  வாய்ஸ்  இருக்கனும்;
இல்ல வாய்ஸ்கு  ஏத்த  மாதரி  பேரு வச்சிருக்கணும்;
இப்டி எதுமே இல்லாம  வாய்ஸ்  மெசேஜ் போட்டு... என்  உயிரை  எடுக்க  வந்துட்டாரு ...

என்னதான் சொல்றாருனு பிலே பண்ணி  கேட்கலாம் ...

“ஏன் birdடு, பேரை birdனு வச்சிருகையே...எப்போ  பறந்து போவ “?

ஹா..ஹ்..ஹா..ஹ்...ஹா...என்னையா இதுவெல்லாம்....
எடுங்கய்யா அந்த உருட்டு  கட்டைய...

இந்த  மனுஷனுக்கு இதே  ஒரு  வேலையா போச்சு.
யாரோடையாவது நிக்  வித்தியாசமா; இவருக்கு  ரொம்ப பிடிச்சு  இருந்த போதும் ...நல்லா காலாய்ச்சு தள்ளிருவாரு.

அவரு தான் am so sweet. பேரு  மட்டும் தாங்க சுவிட்டு . வாய்ஸ் சுவிட்டுனு  எப்படி என் வாயாலையே நான் சொல்லுவேன். நீங்களே கேட்டு தெரிஞ்சிக்கோங்க.... ;D ;D ;D

தொடரும்...

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version