Special Category > பிரார்த்தனை - Our Heart and Pray

தூக்குதண்டனையை தூக்கிலிட பிரார்த்திப்போமாக

(1/1)

vaseegaran:
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனையில்  இருக்கும் முருகன் சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றுவதற்கு உலகம் முழுவதும் பிரார்த்தனை செய்யும் இதயங்களோடு சேர்ந்து நாமும் பிரார்த்திப்போமாக...........

Global Angel:
எல்லாமாய் இருக்கும் தன்னிகர் அற்ற ஆண்டவனே .... ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனையில் இருக்கும் முருகன் சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்று... அவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் அமைதியுடன் இருக்க வை ஆண்டவா .... :( :( :(

Yousuf:
மரணத்தின் வாசலில் நின்று கொண்டு உயிர் பிழைக்க வழி தேடும் நிலையில் உள்ள பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தனின் கருணை மனு கோரிக்கைகள் இந்திய ஜனாதிபதி அவர்களால் நிராகரிக்கப்பட்டது என்றும் அவர்கள் கூடிய விரைவில் தூக்கிலிடப்பட்டு படுகொலை செய்யப்படுவார்கள் என்றும் வெளிவந்த செய்திகள் பல்லாயிரக்கணக்கான உணர்வாளர்களின் மனங்களை அதிச்சியடையச் செய்தது.

எப்பொழுதெல்லாம் ஒடுக்கப்பட்டவன் ஆதிக்க வெறிகளின் காலடியை விட்டு திமிறுகிறானோ அப்பொழுதெல்லாம் அவன் தீவிரவாதியாகின்றான்; சாட்சிகள் தாயரிக்கப்பட்டு வேட்டை பிராணிகளாக்கப்படுகின்றான்.

20 ஆண்டுகள் இளமை தொலைத்து, உலகம் இருண்ட கம்பி சிறைகளுக்குள் அடைக்கப்பட்டு, மீதமிருக்கும் அவர்களின் உயிரையும் பறிப்பதற்காக தேசியம் காப்பவர்கள் நீண்ட திட்டங்களை தீட்டியபடி உள்ளனர். கொலை செய்யப்படுவதன் மூலம் தான் தேசியம் காக்கப்படும் என்று  நம்புகிறது அதிகார வர்க்கம்.

பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் இவர்களைப் போலவே ஜனாதிபதியால் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட, எந்த ஒரு அரசியல் அமைப்புகளின் வெளிச்சம் படாத ஒரு உயிர் முரட்டு தூக்கு கயிற்றின் கொடுர பசிக்கு இரையாகும் நிலையில் உள்ளது.

வட இந்திய அரசியல்வாதிகளில் யாருக்கும் அந்த உயிரினைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமில்லை. ஏனென்றால் அவர் ஒரு காஷ்மீரி. தனால் அவர் தீவிரவாதி என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவர் முகம்மத் அஃப்சல் குரு.

அஃப்சல் குருவிற்கு எதிராக நேரடி சாட்சியங்கள் எதுவும் இல்லை என்பதை ஒத்துக் கொள்ளும் உச்ச நீதிமன்றம், "ஆனாலும் இந்திய குடிமக்களின் மன உணர்வுகளை தணிப்பதற்கு அஃப்சல் குரு தூக்கிலடப்பட வேண்டும்” என்று வேடிக்கையான தீர்ப்பு ஒன்றினை வழங்குகிறது.

தன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றத்திற்கு எதிராக தன்னைத் தானே காத்துக் கொள்வதற்கும் கூட அனுமதிக்கப்படாமல் சககுடிமகன் ஒருவனை தூக்கில் தொங்கவிடுவதன் மூலம் தான் இந்திய மக்களின் கூட்டு மனச்சாட்சி திருப்தியடையும் என இந்த நீதிமன்றங்கள் நம்புகின்றன.


"மனித உயிரை விரும்பியபோது எடுத்துக் கொள்ளக் கூடிய  நிறுவனமயப்பட்ட அரசுரிமைதான் மனித ஆளுமையில் கண்ணியத்திற்கு இழைக்கக் கூடிய  மாபெரும் இழிவாக இருக்க முடியும்" என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்தர் ஜெ.கோல்ட்பெர்க்  அவர்கள் கூறியது போல, தூக்கு தண்டனை என்பது சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட இன மக்களுக்கு எதிரான ஒரு வகையான அச்சுறுத்தலாகும்.  மரண தண்டனை சதிகளிலிருந்து  பேரறிவாளன், முருகன், சாந்தன் மற்றும் அஃப்சல் குரு அவர்கள் அனைவரையும் காப்பாற்றும் முயற்சியில்  நாம் அனைவரும் இணைந்து போராடுவோம்.

அவர்களின் மரணத்திற்கு நாமும் சாட்சிகளாகி விடமால் அவர்களின் சுதந்திரத்திற்கு  நாம் சாட்சிகளாய்  இருப்போம்.

இந்த அப்பாவிகளின் விடுதலைக்காக எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்...!!!

Navigation

[0] Message Index

Go to full version