FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on August 11, 2018, 02:26:13 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 195
Post by: Forum on August 11, 2018, 02:26:13 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 195
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM UYIRAAGIRATHU/195.png)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 195
Post by: JeGaTisH on August 13, 2018, 04:16:28 PM
கடல் அலைகள் துள்ளி விளையாட
காதல் பேசிக்கொண்டு கரை அருகே நாமிருவர்.

நிலா அவள் அழகை கடல் நீரில் காண
நீண்டது எங்கள் பாதை நிலவிற்கே செல்ல.

காதலில் விழுந்த எம்மை
களிப்படைய செய்தது விண்மீன்களின்  கூட்டம்

காதல் வந்து எங்களை தாலாட்ட
அலைகள் கரையோரம் தூறல் தூதாக
நிலவே நாமிருவரை சேர்க்கக்கண்டேன்.

நிலவில் ஏறி காதல் கொடியை நட
கடலே கற்களை கொண்டு படி செய்தது
நிலவின் காதலன் உதவி புரிய
கை சேர்ந்தது என் காதல் என்னோடு

எத்தனை பெரிய கடலையும் கடந்துவிடுகிறது நிலா
அது போல பேரலை  போல வரும் கஷ்டம் எல்லாம்
நுரைகள் போல விலகும் என்று காதல் கரம் பிடித்தேன்.




 அன்புடன் உங்கள் சொக்லேட்  தம்பி ஜெகதீஸ்

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 195
Post by: thamilan on August 14, 2018, 04:01:00 AM
அந்திவானம் சாரலாக விழும் விண்மீன்கள்
மேகத் திரையை விலக்கிக்கொண்டு
 நாணத்துடன் எட்டிப்பார்க்கும் அழகிய நிலவு
 நிலவை ஒத்த மதிவதனத்துடன்
அருகே என் காதலி
நிலவு அழகா இல்லை
என்னவள் முகம் அழகா
செவ்வானம் அழகா இல்லை
என்னவள் செவ்விதழ் அழகா
மனதுக்குள் சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம்

நானிருப்பது தேவலோகமா
என்னருகில் இருப்பது தேவகன்னியா
காதலும் இயற்கையும் என்னை
தேன்குடித்த வண்டாக மாற்றிவிட்டன

காதலுக்கு தூதுவிடும் அன்னப்பறவை
எங்கள் காதலின் சாட்சியாக
கைகொட்டிச் சிரிக்கும்
கடலலைகள் எங்களுக்குத் துணையாக

நிலவிலும் களங்கம் உண்டு
ஆலைகளின் புகைகளால்
உலகம் களங்கம் ஆவது போல
பாட்டி வடை சுட்ட புகையால்
களங்கம் ஆனது நிலவோ

ஒரே நேரத்தில் இரு நிலவுகள்
வானத்தில் ஒரு நிலா
என்னருகே இன்னொரு நிலா
அது வெண்ணிலா
இது பெண்ணிலா
என்னவள் பெயரும் மதிவதனி அன்றோ
எதை ரசிப்பது
உயிருள்ள நிலவை ரசிப்பதா  இல்லை
உலகுக்கே ஒளிதரும்  வானத்து நிலவை ரசிப்பதா
குழப்பத்தில் நான்
லட்டு தின்ன ஆசைப்பட்டவனுக்கு
இன்னொரு லட்டு தேவையா
என்று கேட்பது போலிருந்தது எனக்கு

காதலுக்கு தூது சொல்ல
நிலவை கேட்பார்கள்
எங்கள் காதலை காதலுடன் பார்த்தபடி
எதிரே நிலவு
என் காதலியுடன் கைகோர்த்து சென்று
நிலவில் கையெழுத்திட
காற்று அமைத்திட்ட படிக்கற்கள்

காதலுக்கும் இயற்கைக்கும்
நிலவுக்கும் கன்னிகளுக்கும்
எத்தனை தொடர்புண்டு என்று
அன்று தான் அறிந்து கொண்டேன்

 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 195
Post by: AshiNi on August 14, 2018, 07:47:15 PM
யாருமில்லா கடற்கரையில்
  என்னருகே என் காதல் தேவதை...
அமைதியான வானதனில்
  நமக்காய் ஒளிரும் பால் நிலா...

விண்மீன்கள் எல்லாம் கூடி
  நம்மீது ஆசி மழை பொழிய...
வெண்மேகங்கள் ஒன்றிணைந்து
  மங்கள தோரணங்கள் அமைக்க...
நீயும் நானும் மனதால்
  ஒன்று கலக்கும் அந்திமாலை இது...!!!

ரயில் போல் நளினம் கொண்ட
  என் மெல்லிடையாள் நீயன்றோ...
மத்தாப்பூவாய் மின்னிச் சிரிக்கும்
  என் பிரகாசமும் நீயன்றோ...

வாய்மொழி பேசாது
  கண்களால் காதல் பேசும்
அழகுக் கவிதையும் நீதானே...
  முகமதில் காட்டாது
 காற்பெருவிரலால் நாணமதை காட்டும்
  செல்லச் சிரிப்பழகி நீதானே...

என் உயிரைப் பறித்து
  உனக்குள் ஒளித்த என் வஞ்சியே...
குறை குடமாய் இருந்தவனை
  நிறை குடமாக்கிய என் பதுமையே...

உன் வனப்பை வர்ணிக்க
  பூமியில் வார்த்தைகள் போதவில்லையடி...!!!
  உன்னை வர்ணிக்காது
நாட்கள் கடந்தால்,
  அவை என் நாட்களில்லையடி...!!!

வார்த்தைகள் தேடி
  சுற்றித் திரிந்தேன்...
வெண்ணிலா என்னை
  கைத்தட்டி அழைத்தது...

மதியை சென்றடைய
  பாதை அமைத்தேன்...
உன்னை கூட்டிச் செல்ல
  இவ்விடம் அழைத்தேன்...

என் கரம் கோர்த்து
  வா என் அரசியே...
பால் நிலவின் மடியில்
  பெண் நிலவு உனக்காய்
கவிமழை பொழிய
  காத்துக்கிடக்கிறேன்...!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 195
Post by: RishiKa on August 15, 2018, 11:47:20 AM
என் வான வெளியிலே..
உன் நினைவு சிறகுகள்..!
பால் வெளி...!
மினுக்கும்  நட்சத்திரங்கள்...
வெள்ளி நிலவு...

அலை அடிக்கும் கரையில்..
அலை பாயும் மனது....
விண்ணை தாண்டும்  சிறகு ..
விரும்பியவள் அருகிலே இருந்தால்...

விடியாத இரவுகள்...
முடியாத பிறவிகள்..
நீயும் நானும் ....
பிரபஞ்சம்  தீண்டி  பார்த்து....
உயிரை சேரும்  ஆன்மா...

சொல்லாத காதல்கள்..
சொர்க்கத்தில்..
சொல்லிய காதல்கள்...
திருமணத்தில்..
இங்கு காதல் மந்திரங்கள்,,,
அந்தரத்தில்...

தேவதைகள் பூத்தூவி..
வரவேற்பதில்லை....
தேவதையே  நீ என்றால்...

நீ சூரியன் ....
உன்னை சுற்றும் உலகம் நான்..
உன்னை கவி பாட ...
இங்கு வரவில்லை....
நீயே இங்கு கவிதை  ஆனாய்...

வா...இன்னும் ஒரு ..
புதிய அத்தியாயம் ....
பூக்க செய்வோம்...!

நமக்கு என்று....
பறப்பதற்கு ஒரு வானம்...
பயணம் செல்ல மேக படகு..
வசிக்க  ஒரு அண்டவெளி ....
சுவாசிக்க ..உன் காற்று...
இது போதுமே......



Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 195
Post by: சாக்ரடீஸ் on August 15, 2018, 10:39:39 PM

காதல்
கண்ணீரில் சந்தோஷத்தையும்
புன்னகையில் வலியையும்
உணர்த்தி
சுயநலமாய் சிந்தித்து
சுயநலமாய் நேசித்து
சுயநலமாய் பிரிந்து
பொதுநலமாய் பெற்றவர்களை
நோகடிப்பது காதல் ...

அறியா பருவம்
அலைபாயும் இதயம்
அழையா விருந்தாளியாய் நேசம்
உன் விழியின்
அசைவை கண்டு
என்னுள் காதல் பூகம்பம்
கடற்கரையில் உன்னிடம்
நான் பேசிய  வார்த்தைகள்
முதன்முதலில் உன்னிடம்
நான் வெளிப்படுத்திய
காதலின் ஞாபகங்களே
இந்த கிறுக்கல் ...

உன் கால்களை  முத்தம் இட
காத்துகொண்டுஇருக்கும்  கடல் அலைகள்
உன்னை பார்க்க என்னைப்போல்
அவளோடு இருக்கும் விண்மீன் கூட்டம்
என்னை  விட பேரழகியா என்று உன்மீது
பொறாமை கொள்ளும் வெண்ணிலவு
இந்த இயற்கையோடு
உன்னை பார்க்கையில்
உற்சாகத்தின் உச்சம்
சந்தோசத்தின்  வெள்ளம்
இயல்பான இன்பங்கள்
கண்டும் ரசித்தும்
ஆயிரம் உண்டு சொல்ல .....

முதல் சந்திப்பு
நீயும்
நானும்
உளறல் பேச்சு
விழிகளின் உரையாடல்
வெட்கத்தின் பிறப்பிடம்
கரையும் நேரம் 
இதயத்தில் படபடப்பு
இதழோர சிரிப்பு
விரல்கள் உரசும் ஸ்பரிசம்
என் செவி தேடும் உன் குரல்
என் விழி தேடும் உன் இதழ்
சொற்களை வீசிவிடு
மௌனத்தை கலைத்து விடு ..

பலகோடி பெண்கள் இருந்தும்
ஏனோ உன்னை மட்டும்
நான் நேசிக்கிறேன்
உன் விரல்களை பிடிக்க
ஏனோ என் கரங்கள்
துடிக்கின்றன
உன்னை இமைக்காமல் பார்க்க
ஏனோ என் கண்கள்
ஆசை கொள்கின்றன

உன் இதழ் பேசும்
வார்த்தையை விட
உன் இமை பேசும்
மௌனம் கொள்ளை அழகு
என் இதயத்தில் நிலையாய்
நின்ற உன் இமைகள்
பேசும் போதும்
மௌனம் கொள்ளும் போதும்
வெட்கப்படும் போதும்
எனக்கே தெரியாமல்
உன் இமை ஊட்டும் போதையில்
மயங்கி போகிறேன் ...

கடற்கரை மண்ணில்
நம் கால்தடம்
மறைந்து போனாலும்
என் இதயத்தில் இருக்கும்
உன் கால்தடத்தை
என்றும் கரையாமல்
கல்லறை கடந்தும்
காவியமாய் தொடரும் ....

நீ என்மீது
தலைசாய்த்து
ஒரு நண்பனாய் உன்னை தாங்கி
உன் விரல் கோர்த்து
என் இதயம் எனும் சிறையில்
உன்னை சிறை எடுத்து
ஒரு நெடுதூர பயணம் வேண்டும்

முதமுறையா உன்ன நேருல பாக்குறேன்
எல்லாமே சொல்லிட
ஆனா ஒன்னும் மட்டும் சொல்ல முடியல
இருந்தாலும் சொல்லுறேன்
மனசு அடிச்சிக்குது
சொல்லாம போகவும் முடியல
தப்ப எடுத்துக்காத
ஐ லவ் யு டி ராட்சஷி ...


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 195
Post by: joker on August 16, 2018, 08:12:12 PM
இந்த கடல்தாண்டி நீ  இருந்த பொழுதில்
என் இதயத்தில் இடம் பிடித்தவள் நீ

பார்த்துக்கொண்டதில்லை நாம்
இணையம் வழி இணைந்த உறவு
இது

தனிமையே துணை என இருந்தவனை
உன் நினைவுகளே துணை என
மாற்றியவள் நீ

தென்றல் காற்று மெல்ல வந்து
சில்லென்று தொடுகிறது
உன்னை நினைக்கையில்

மென்மையான உன் உரையாடல்
இரவில் ராஜாவின் மெலடி கேட்ட
இன்பம் தரும்

உன்னுடன் செல்ல செல்ல
சண்டைகளிட்ட போதெல்லாம்
இந்த கடல் அலையிடம் தான் வந்து
என் சோகம் பகிர்வேன்

என் சோகமெல்லாம் உள்வாங்கி
மன அமைதியை திருப்பித்தரும்
மீண்டும் உன்னிடம் பேச வைக்கும்

உன்னை பார்க்காத அந்நாட்களில்
இந்த நிலவை காண்பேன் அது
காணாத உன்முகத்தை பிரதிபலிக்கும்

இதோ
கடல்தாண்டி வந்து உன் கரம்
பிடித்தேன்

விரல்களின் இடைவெளியில்
உன் விரல்கோர்த்து
கடற்கரை மணலில் நம் கால்தடம்
பதித்து அமர்கிறோம்

உன் உதடு சிரித்தாலும்
உன் மனதின் சஞ்சலம்
நானறிவேன் அன்பே
பெற்றோரை பிரிந்து
கடல்தாண்டி என் கரம் பிடித்து வந்த
உன் சோகம்

சீறிப்பாய்ந்து வந்த கடல் அலை
நம் அருகே  வந்து பவ்வியமாய் கால் வருட
உனக்கும் சொல்லியிருக்கும் ஒரு சேதி
இருக பற்றிய உன் கைகள் எனக்கும் உணர்த்தியது அதை

இயற்கை என்னும் தேவதைகளுடன்
என் கைகள் பற்றிய என் காதல் தேவதை
என் வாழ்க்கைக்கு 
அழகாய்
வண்ணம் தீட்டிக்கொண்டிருக்கிறது


****ஜோக்கர் ****