FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on August 10, 2020, 01:38:00 PM

Title: கிறுக்கல்கள்
Post by: joker on August 10, 2020, 01:38:00 PM
கிறுக்கல்கள்


வெளிச்சத்தை கண்டு
வரும் விட்டில்பூச்சியாய்
உன்னை கண்டதும்
காதல் கொண்டு வருகிறேன்
வீட்டில் பூச்சியாய் ஆகினும்
என்னை வைத்துக்கொள்ளேன்
உன்னுடன் "

*******    *******    *********

"ஆறு தலை
முருகனை காண
வந்தேன்
ஆறுதலாய் இருந்தது
கண்டபின்
உன் முகம் "

*******    *******    *********

கதிரவன்
உதித்துவிட்டான்
ஊரடங்காம்
இன்று

எப்படி சொல்வேன்
தடுக்க முடியாதபடி
வந்து செல்லும்
உன் நினைவலைகலை  பற்றி

*******    *******    *********

என் வீட்டில்
பால் திருடிய
உன் வீட்டு
பூனைக்கெல்லாம்
கொஞ்சி முத்தம் கொடுக்கிறாய்

என் இதயத்தை
திருடிய உனக்கு
என்ன தண்டனை
கொடுக்கலாம்
என யோசித்துக்கொண்டிருக்கிறேன்

*******    *******    *********

உன்னை காணாத பொழுதில்
அனலில் இட்ட புழுவாய்
துடிக்கிறேன்
வந்து
உன் தாவணி தணலில்
எனக்கு ஓர் அடைக்கலம்
தருவாய் என 

*******    *******    ********
Title: Re: கிறுக்கல்கள்
Post by: joker on December 14, 2020, 03:24:03 PM
(https://i.postimg.cc/tCbKg8Gt/Ep-Kb-QOUc-AAsazp.jpg)

உன்னிடம்
சிக்கிக்கொண்டது
"பென்" மட்டுமல்ல
"பெண்ணே"
என் மனமும் தான்

உன்னிடம்
கடி வாங்கி
சிக்கி சிக்கி எழுதுவது
"பென்" மட்டுமல்ல
பெண்ணே

உன்னிடம்
காதல் சொல்ல வந்த
என் வார்த்தைகளும் தான்
திக்கி சிக்கி கொள்கிறது
எனக்குள்
Title: Re: கிறுக்கல்கள்
Post by: joker on January 22, 2021, 07:01:13 PM
(https://i.postimg.cc/0yhbyYFB/Es-KWdm-OUw-AA6-Ia6.jpg)

இல்லை...
உடுத்தி கொள்ள நல்ல
துணி இல்லை

வயிறு நிறைய சாப்பிட
உணவும் இல்லை
 
நேரம் தொலைக்க
தொலைபேசியும் இல்லை

உடன்
இருப்பது என்னவோ
எதிர்பார்ப்பில்லாத
நண்பனும்
அளவில்லா
ஆனந்தமும்
மட்டுமே
Title: Re: கிறுக்கல்கள்
Post by: joker on January 22, 2021, 07:02:38 PM
(https://i.postimg.cc/W1q1CDz6/Es-GBu-FOVEAQ88hj.jpg)
நிலா

விளையாட்டு "பந்து" ஆகவோ ?
சாப்பிடும்  "அப்பளம்" போலவோ
குமரி  "பெண்"ணாகவோ ?
தனிமை போக்கும் "தோழி" என்றோ?

பேசாமல் உறவை விதைத்து 
உணர்வை கடத்தி செல்லும்
 மாயக்காரி நீ

Title: Re: கிறுக்கல்கள்
Post by: joker on January 22, 2021, 07:05:10 PM
(https://i.postimg.cc/ZRbZb0bQ/Er1b-Z62-U0-AMybvz.jpg)

திண்ணைகள்

வெறிச்சோடிய திண்ணைகள்
பேரன் பேத்திகளுக்கு
கதை சொல்ல
கனத்த இதயங்களுடன்
அப்பத்தாக்கள் 
வீடியோ காலில்
காத்திருக்க
Title: Re: கிறுக்கல்கள்
Post by: joker on January 22, 2021, 07:08:31 PM
(https://i.postimg.cc/G2xFDg12/Eq8-JPww-Uc-AINJAZ.jpg)

தினமும்
தனியாய்
என் வீட்டு ஜன்னலோரம்
வந்து அமர்ந்து
 தன் மொழியில்
சத்தமிட்டு கொண்டிருக்கும்

என்னை போல
யாரை தொலைத்து
புலம்புகிறாயோ
Title: Re: கிறுக்கல்கள்
Post by: joker on January 22, 2021, 07:10:28 PM
(https://i.postimg.cc/1tF97bzm/Epv5mhr-UYAE-BT7.jpg)

மாதுளை விற்கவில்லை
கவலையில்லை
மாதுளை முத்துக்கள்
போன்ற
குழந்தையின் சிரிப்பில்
மறைகிறது
தாயின் கவலைகள்
Title: Re: கிறுக்கல்கள்
Post by: joker on February 17, 2021, 03:24:35 PM
அரைப்பெடல் அடித்து
ஆனந்தமாய் சுற்றிய
காலம்தனில்
அரை வயிறு உண்டாலும்
நிறைந்திருந்தது மனது

உடன் பயணித்து
என் உயர்வில் பங்கெடுத்து
இன்று சாய்வு நாற்காலியில்
அமர்ந்து ஓய்வெடுக்கும்
தந்தையை போல
சுவர் ஓரமாய் சாய்த்து
வைக்கப்பட்டிருக்கிறது
அப்பாவின்
"மிதிவண்டி

(https://i.postimg.cc/Hs0cbT53/images.jpg)

(https://i.postimg.cc/5y6YwzBC/cyc.jpg)
Title: Re: கிறுக்கல்கள்
Post by: joker on September 29, 2023, 01:41:22 PM
கைகள்
அழுத்தி பிடித்து
நடந்த காலம்
மறந்து

கைகள்
கோர்த்து நடந்த காலம்
மனதில்
நிறைந்து

உடல் தளர்ந்த நேரம்
அழுத்தி பிடிக்க
கைகள் இருந்தால்
வாழ்க்கை
அழகு
Title: Re: கிறுக்கல்கள்
Post by: joker on September 30, 2023, 08:11:12 PM
சிரித்த முகங்களுக்கு
வர்ணம்
பூச வேண்டியதில்லை

***JOKER***
Title: Re: கிறுக்கல்கள்
Post by: joker on September 30, 2023, 08:16:53 PM
நீ என்னை மிகவும்
ஆழமாக நேசிக்கும்
ஒரு நாள் வரும்

இந்த பூமியில் உள்ள
அனைத்தையும் தாண்டி
எனக்காக நீ
தனியாக காத்திருப்பாய்

ரசிக்க ரசிக்க
பேசும்
பேச பேச
ரசிக்கும்
என் குரல்,
என் மணம்,
என் அசைவு  என
எல்லாமே நெருக்கமாக இருக்கும்
என் ஆழ்ந்த இருப்பை
நீ விரும்புவாய்

ஒவ்வொரு
மரங்களில் இருந்தும்
உதிரும்
வாழ்ந்து தீராத
பச்சை இலை
போல

ஒவ்வொரு
மனங்களிலும்
உண்டு
ஆசை தீர
வாழாத
ஒரு காதல்
அதை புரிந்து கொள்ளும்
ஓர் நாள் வரும்
 

***JOKER***
Title: Re: கிறுக்கல்கள்
Post by: joker on October 07, 2023, 06:03:46 PM
எங்கள் சந்திப்பு
ஒளியின் வேகம் போல்
தோன்றும் அளவுக்கு
நேரம் கடந்தாலும்
அவள் பிரிக்க
முடியாதவளாகிவிட்டாள்
என் வாழ்வில்

சந்தித்த
மரத்தின் கிளைகள்
தென்றலுக்கு
சொல்கின்றன
ரகசியங்கள்

சரிதான்
வாழ்ந்து ஆசை தீராத
வாழ்வின் சுவடுகளை
உதிர்ந்து கீழ் வீழும்
மரத்தின் இலையை போல
நன்கு வேறுயாரறிவார்

****joker***

Title: Re: கிறுக்கல்கள்
Post by: joker on October 10, 2023, 06:54:10 PM
ஓர் பெரிய ஆன்மா
அங்கு பிறந்தது
வன்முறைக்கு இறை ஆகி
மீண்டும் உயிர்த்தெழுந்தது

எதனாலோ
அவ்வப்போது வன்முறை
அங்கு விருந்துக்கு வருகிறது

வன்முறை காணுகையில்
கனத்து விடுகிறது
நம் மனது

ஈவு இரக்கமற்ற
கூட்டத்தில் குண்டுகளால்
பிய்த்து எறியப்படுகிறது
அப்பாவிகளின் உயிர்

இவைகளை தடுக்க
மீண்டும் அவதரிக்க வேண்டுமோ
அந்த பெரிய ஆன்மா ?


Title: Re: கிறுக்கல்கள்
Post by: joker on October 13, 2023, 02:46:50 PM
கண்டேன்

முதன் முதலில்
உன்னை
கண்டேன்

உன்
நிழலுக்கும்
குடை பிடிக்கும்
பேதை என
நான் மாற
கண்டேன்

வார்த்தைகள்
உச்சரிக்கும்
உன் இதழ்கள்
கண்டேன்

போதை ஏறிய
குரங்காய்
என் மனம் மாறிட
கண்டேன்

காகிதம் கூட
உன்னிடம் பேசும்
ஆயுதமாக
கண்டேன்

படிக்க படிக்க
வெட்கம் கூட
என் துணை நிற்க
கண்டேன்

நம்மில்
வார்த்தைகள்
வற்றிட கண்டேன்

கண்ணில்
ஈரம் நிறைந்திட
கண்டேன்

உன் மௌனத்தின்
நெருக்கம்
கண்டேன்

அது
நம் பிரிவின்
தொடக்கமாய்
கண்டேன்

***JOKER***

Title: Re: கிறுக்கல்கள்
Post by: joker on October 14, 2023, 12:02:27 PM
தேவைகளை தவிர
எல்லோரும்
உங்களிடம் வருவார்கள்
என்ற மாயையில் இருக்காதீர்கள்
இதயத்தில் ஆழமாக
அன்பைக் கொடுத்தவர்களைத் தவிர

ஒவ்வொரு
மனிதனுக்குள்ளும்
உண்டு மூன்று வாழ்க்கைகள்

தனிப்பட்ட சொந்த
வாழ்க்கை,
பொது வாழ்க்கை,
மற்றும் அவரே அறியும்
ரகசியமான வாழ்க்கை..

இந்த ரகசியமான வாழ்க்கையின்
சந்தோஷங்கள்,
துயரங்கள், கொண்டாட்டங்கள்,
சின்னச் சின்ன அச்சங்கள்,
அளவற்ற மகிழ்ச்சி  அனைத்துமே,
அவரவர் மனங்களுக்கு
மட்டுமே சொந்தமானது..

ஏதோவொரு உந்துதலில்,
எப்போதாவது மட்டும்
அதனைப்பற்றி,
தான் நம்புகின்ற
ஒரு சிலரிடம் பேசக்கூடும்..

மனதிற்குள்
தன்னந்தனியே
நகர்ந்து கொண்டிருக்கும்
அந்த ரகசியமான வாழ்வு..

அவரவரின்
மன உலகுக்குள் மட்டுமே
எப்போதும் பயணிக்கிறது,
நினைத்துச் சிரிக்கிறது,
பரிதவித்து அழுகிறது,
மீண்டெழுகிறது

உண்மை என்பது
வெறும் வார்த்தையல்ல
வாழ்க்கை முழுமையும்
வாழ்ந்து தீர்க்கவேண்டும்
நேர்மையாக


***jOKER***
Title: Re: கிறுக்கல்கள்
Post by: joker on October 27, 2023, 08:11:19 PM
புரிந்தது கொள்ளும் வரை

எழுதுகோல் எடுத்து
எழுத நினைத்த போது
யோசித்தேன்

எழுதுவது
ஓரிருவரி  கவிதையா ?
இல்லை
ஒருபக்க கவிதையா ?

எழுதுவது
படித்து புன்னகைக்கவா
இல்லை
பிறர் படித்து
அழுது கொண்டிருக்கவா

எழுதுவது

என் வாழ்க்கையையா
இல்லை
பிறர்
வாழ்க்கையையா

எழுதுவது
படிப்பவர்
பொருளறியவா?
இல்லை

வெறும் வார்த்தை
மட்டும் படித்து
கடந்து செல்லவா ?

புரியாதொன்றை
புரிந்தது கொள்ளும் வரை

இடைவெளி விட்டு
நிற்கிறது
என் எழுதுகோலும்
காகிதமும்
Title: Re: கிறுக்கல்கள்
Post by: joker on November 01, 2023, 01:57:05 PM

(https://i.ibb.co/RcKKvKs/kirukkal.png) (https://ibb.co/RcKKvKs)


தூறும் மழை
மண்ணின் மீது
காதல் கொண்டு வருகையில்
இடையில் மரக்கிளைகளில் உள்ள
இலைகளின் மேல் தங்கி விடுகிறது
அது
மரத்தின் இலைகளுக்கு  வரமா ?
இல்லை அதற்கு சுமையா ?
இல்லை மண்ணிற்குதான் சாபமோ ?


***Joker***
Title: Re: கிறுக்கல்கள்
Post by: joker on November 14, 2023, 04:10:26 PM
நீ
என் அருகில் இல்லாவிட்டாலும்
என்னுடன் இருக்கிறாய்...
உடலால் நாம் தொலைவில் இருந்தாலும்,
மனதில் எப்போதும் நெருக்கமாகவே இருக்கிறோம்.

நான் உன்னை
எவ்வளவு நேசிக்கிறேன்
தெரியுமா?

வாழ்க்கையின் பாதையில்
ஆழமாக இறங்கிய வேர் நீ,
உன் மீதான என் காதல்
மிகவும் ஆழமானது

நீயே உயிரும் வாழ்க்கையும் என்பதை
உணர்ந்த தருணத்தில் என் கண்கள்
மகிழ்ச்சியில் நிறைந்தன

உன்னுடனான என் சண்டைகளில்
நீ இல்லாத வாழ்க்கை
எவ்வளவு நரகம் என்பதை உணர்ந்தேன்.

ஒவ்வொரு சண்டையின் முடிவிலும்
நிறைய
அன்பும் கனவுகளும் இருக்கும்.

உன்னுடைய சிறிய உலகத்தில்
எனக்கு நிறைய சந்தோஷம் உண்டு,

வேறு யாரோ பேசும் போது கூட
நான் இவ்வளவு சந்தோசமாக இருந்ததில்லை,
உன் குரல் கேட்டால்,
என்னையறியாமல் சிரித்தேன்,
நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்.

சில நேரங்களில்
என்னை விட மகிழ்ச்சியாக
யாரும் இல்லை என்று நினைக்கிறேன்.

எவ்வளவு வலித்தாலும்,
காதலால் விலகாமல்
உன்னை நேசிக்கும்
உன் இதயத்தின் மீது
எனக்கு மிகுந்த அன்பு உண்டு...

***JOKER***
Title: Re: கிறுக்கல்கள்
Post by: joker on November 16, 2023, 08:30:38 PM
சண்டைக்குப் பிறகு
நீ மௌனமாய் இருக்க வேண்டும்
என நானும்
நான் மௌனமாய் இருக்க வேண்டும்
என நீயும்
பரஸ்பரம்  நினைக்கிறோம்

இந்த மௌனம் நீளும் எனில்
கடைசியில்
இப்படி ஒரு உறவா என்று
யாரும் வாயடைத்துப் போகாத நாள் வரும்.
அப்போது ஒருவரை ஒருவர்
இழந்திருப்போம்,
திரும்ப வரமாட்டோம்..

நம்மிடையே அப்படி
ஒரு நிலை வரக்கூடாது என்றுதான்
ஆசை கொள்ள முடியும்
விதி என்ற ஒரு வார்த்தையில்
எல்லாம் முடிந்துவிடும்

அடுத்தவர்களுக்காய்
வாழ்ந்து
மற்றவர்களை போல
வாழ்ந்து
சலித்து விட்டது

என்னிலுள்ள நான்
யாரென்று மறந்ததது போல தோன்ற
இனியுள்ள வாழ்க்கையிலேனும்
நான் யாரென்றே உண்மை அறியும் வகையில்
வாழ்வு அமையும் என்ற
எதிர்பார்ப்பில் தொடர்கிறேன்
இவ்வாழ்வை

***JOKER****
Title: Re: கிறுக்கல்கள்
Post by: joker on November 17, 2023, 07:26:46 PM
வாழ்நாள் முழுவதும்
கனவு கண்டவர்கள்
ஒரு நொடியில்
பிரிந்து போகலாம்
அல்லது
நெருங்கி வரலாம்

சூழ்நிலையும்
சுயநலமும்
பெரும்பாலும்
அதன் சங்கிலிகளை
உடைக்கிறது.

எதுவும் தனக்குச்
சொந்தமாக வேண்டும் என்பதில்
ஆண்கள்
 சுயநலவாதிகள்

அதற்காக
எதையும் முயற்சி செய்வேன் எனில்
அதில் வாக்குறுதியும் ஒன்று

யாருடைய தவறுமில்லை
சில வாக்குறுதிகளை
நிறைவேற்ற
சூழ்நிலைகள்
ஒத்துக்கொள்ளவில்லை
அவ்வளவுதான்

அதைப் புரிந்து கொண்டால்
எல்லாம் சரியாகிவிடும்.
உறவுகளை காக்க
Title: Re: கிறுக்கல்கள்
Post by: joker on November 21, 2023, 01:58:03 PM
முதல் முத்தம்

முதல் முத்தம்
எனக்கு நினைவில்லை
ஆனால்
என்னை கைகளில்
ஏந்தி குடுத்த
என் தாய்க்கு
இனித்திருக்கும்

இரண்டாம் முத்தம்
தன்னை என்னில் கண்ட
என் தந்தை
கொடுத்திருக்க கூடும்

மூன்றாம் முத்தம்
என் பாட்டி
தன் மகனை
மீண்டும் குழந்தாய்
கண்ட நொடி
நினைத்து
பூரித்து கொடுத்திருக்க கூடும்

இன்னும் பல
தாயையும் சேயையும்
காண வந்த உறவுகள்
குழந்தை என
கொஞ்சி கொஞ்சி
கொடுத்திருக்க கூடும்

ஆனால்
அனாதையாய்
விட பட்ட குழந்தைக்கு
யார் கொடுத்திருப்பார்
முதல் முத்தம் ?


***JOKER***

Title: Re: கிறுக்கல்கள்
Post by: joker on November 29, 2023, 05:16:25 PM
பூத்துக்குலுங்கும்
பூஞ்சோலை

யாழிசை
வந்த வழி
நான் தேட
இடையில்  நீ
என் இதயத்தில்
நுழைந்ததை
நானறியேன்

ஏழு சுரங்களில்
அடங்காத
தேனிசை நீ
உன் குரல் வந்த திசை
என் வாழ்வின்
மாறுதலுக்கான விசை

இதழ்கள் உதிர்த்திடும்
புன்னகையில்
வெட்கி தலைசாய்ந்தன
சோலையின் பூக்கள்

பூக்களை சுற்றிவரும்
வண்டுகள் போல
உன்னை சுற்றிவரும்
என் கண்கள்

பூ வை  பறிக்க
ஆசை கொண்டு
சுற்றிவரும் பலர் இருக்க
விழியினில் காதல் ஏந்தி
இதழ்களில் புன்னகைக்கொண்டு
தென்றல் காற்றின்
சுகமான தழுவதிலில்
வேறென்ன கேட்டுவிட போகிறேன்
சொல்லிவிடேன்
உன் காதலை
என்னிடம்


***Joker***
Title: Re: கிறுக்கல்கள்
Post by: joker on November 29, 2023, 07:41:07 PM
எவ்வளவு வெட்டினாலும்
வேர் நீரை தேடி
ஓடுமாம்

அது போல தான்
நீ
எவ்வளவு தூரம்
போனாலும்
உன்னை சுற்றியே
என் நினைவுகள்
சுழலும்

சில
வார்த்தைகளை விட
கூர்மையானது
சிலரது
மௌனங்கள்

நீயும் நானும்
இருந்தபோது
பல நாளைகள் இருந்தன
ஆனால்
இன்று
நேற்று மட்டும்
மிச்சம்

நெருப்பு
எரியும் போது
எஞ்சியிருப்பது
ஒரு கைப்பிடி சாம்பலாகும்.
வாழ்நாள் கனவுகளும்
அதில்
அடங்கியிருக்கும்

கணித புத்தகத்தில்
பெறுக்கல்களும், கூட்டல்களும்
கழித்தலும் இருக்கும்
எதற்கும் பெரிய வித்தியாசத்தை
ஏற்படுத்தாத அமைதியாய்
இருப்பது
பூஜ்யம்
உடன் எண் இருந்தால் மதிக்க படும்
அப்படி தான் இன்று
நான் நீயில்லா
பூஜ்யமாய்

உன் மடியில்
என் தலை சாய்க்க
என் இதயம் ஏங்குகிறது

இந்த எல்லாம் தெரிந்த
நான்கு சுவர்களும் கூட
என் துக்கங்களை
பார்த்து மௌனமாய் இருக்கிறது

இப்போது
என் இமைகள்
உறக்கத்தை நெருங்க
ஆரம்பித்து விட்டது

மீண்டும் விழித்தால்
நீ இருப்பாய் எனில்
விழி திறக்கக்கூடும்


***Joker***
Title: Re: கிறுக்கல்கள்
Post by: joker on December 09, 2023, 12:57:02 PM
மனிதம்
மனிதன்
மறந்து காலங்கலாயிற்று

அவ்வப்போது
அதன் பொருள் உணர செய்ய
வரும் காலம் தான்
மழை காலம்

மென்று தின்ற
சாக்லேட்டின் உறை
ரோட்டில் வீசி எறிவதும்

வீட்டில் உள்ள குப்பைகளை
பிளாஸ்டிக் பைகளில்
வண்டியில் இருந்தே
குப்பை தொட்டியை நோக்கி
வீசுகையில் ரோட்டில்
சிதறும் போதும்

ஆணாய் பிறந்ததால்
இயற்கை உபாதையை கழிக்க
உலகமே தன் வசமாய்
எண்ணும் போதும்

பேருந்தில் பயணிக்கையில்
எச்சிலை ரோட்டில்
எவன் மண்டையில் விழுந்தால்
என்ன என்று எண்ணி
துப்பும் போதும்

தலைக்கவசம்
காவல்காரர் கண்காணிக்கும் போது
அணிந்தால் போதும் என்று
எண்ணும்போதும்

அதிவேக வாகனம்
சக பயணியை அச்சுறுத்தி
ஓட்டும்போதும்

மனிதம்
ஏனோ முக்காடிட்டு
ஒளிந்து கொள்கிறது

பேரிடர் காலங்களில்
ஓரிரு நாட்கள்
மனிதம்
மனிதனில்
விழித்து கொள்கிறது

***Joker**
Title: Re: கிறுக்கல்கள்
Post by: joker on December 11, 2023, 08:45:26 PM
வெள்ளைக்காரன்
பொய் சொல்ல மாட்டான்
என்பது போல
படித்தவர்கள்
நேர்மையாகவும், ஒழுக்கமாகவும்
இருப்பார்கள் என்பது
நகை முரண்

வாய்ப்பு இருந்தும்
தவறு செய்யாதவனை
போற்றாலாம்

அடி உதவுவது போல
அண்ணன் தம்பி
உதவ மாட்டான்
என்பார்கள்
அதுபோல
சில நேரம்
குற்றம் செய்யாமல்
தடுப்பது
இந்த சட்டமும்
தண்டனையும்

குற்றத்தை
தடை செய்யவே
வீதியெங்கும் ,
தெரு விளக்கும்
வீடு எங்கும்
கேமரா என்று
ஆயிற்று
இருந்தும்

அது
பல நேரம்
நடந்தது என்ன
என்று உணர்த்தவே
பயன்படுகிறது

எதற்காக நடந்தது
என்பதே அடுத்தகட்ட
ஆராய்ச்சிகள்

ஆடம்பர வாழ்வுக்கும்
ஆசைக்கு கட்டுப்பட்டுமே
நடக்கிறது இங்கு
பல குற்றங்கள்

இதில்
நீதிமன்றம் ஏறி
வாய்தாக்களில்
தாத்தாக்கள்
ஆயினோர் பலர்

பலவகை
குற்றங்கள்
பலவகை
சட்டங்கள்
இது எல்லாம்
அறிந்திருக்க வேண்டியதில்லை
நாம்

குறைந்த பட்சம்
சக மனிதனோடு
அன்பாய்
இருக்க
கற்றுக்கொள்வோமே

***Joker***