Author Topic: திருக்குறளை கண்டுபிடி  (Read 73795 times)

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1639
  • Total likes: 1463
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #450 on: July 04, 2020, 02:14:32 PM »
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று


விளக்கம்:
சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு - சினத்தைத் தன் ஆற்றல் உணர்த்துவதோர் குணம் என்று தன்கண் கொண்டவன் அவ்வாற்றல் இழத்தல்; நிலத்து அறைந்தான் கை பிழையா தற்று - நிலத்தின்கண் அறைந்த அவன் கை அந்நிலத்தையுறுத்தல் தப்பாதவாறு போலத் தப்பாது.


அடுத்து,
--------       --------    இகழாமை நான்கும்
-------- வாய்மைக் குடிக்கு.

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline Ninja

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 376
  • Total likes: 854
  • Karma: +0/-0
  • Fitter, healthier, happier
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #451 on: July 04, 2020, 03:02:13 PM »
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.

விளக்கம்:
உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்லப் பண்புகள் என்பர்.

அடுத்து,
_______ _______ எறிதற்குப் பட்டடை
நேரா ______ ____.

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 643
  • Total likes: 1786
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #452 on: July 04, 2020, 03:19:37 PM »
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.

விளக்கம்:
மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோல் தோன்றினாலும் பொருளை வெட்டி எறிவதற்குத் துணை செய்யும் பட்டடை போன்றது


அடுத்து,
--------- கூகையைக் ------------ இகல்வெல்லும்
-------------- -------------- பொழுது.

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1639
  • Total likes: 1463
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #453 on: July 04, 2020, 03:40:23 PM »
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது


விளக்கம்:
காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.



அடுத்து,
--------- வாழ்வாரே--------- இசையொழிய
--------- வாழா தவர்

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 643
  • Total likes: 1786
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #454 on: July 05, 2020, 09:42:06 AM »
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்


உரை: தம்மைப் பிறர் இகழாமல் வாழக்கூடியவரே இவ்வுலகில் உயிரோடு வாழ்பவர் ஆவர். புகழைப் பெறாமல் உயிர் வாழ்கின்றவர்களை வாழாதவர் என்றே சொல்லுதல் வேண்டும்



அடுத்து,
---------- தூக்காத ------- வாண்மை
---------- வல்லைக் ---------

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1639
  • Total likes: 1463
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #455 on: July 05, 2020, 10:19:50 AM »
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.


விளக்கம்:
தனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.


அடுத்து,
---------- நூல்நயம் ----------பயில்தொறும்
---------- தொடர்பு.

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #456 on: July 10, 2020, 07:54:49 AM »
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

பொருள்:

படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.

அடுத்து:
[highlight-text]........... .......... வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் ............ ..........  [/highlight-text]
[/size]

Offline Ninja

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 376
  • Total likes: 854
  • Karma: +0/-0
  • Fitter, healthier, happier
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #457 on: July 10, 2020, 08:21:19 AM »
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.

விளக்கம்:
நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.


அடுத்து,
________ கொள்க ஒருவன்தன் _______
அழுக்காறு ________ _______.

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #458 on: September 23, 2020, 03:06:30 PM »
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு

பொருள்: ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்கநெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.

அடுத்து : ----------- ------ நட்புஅரண் ஆறும்
---------- ---------- ஏறு

Offline Tejasvi

  • Full Member
  • *
  • Posts: 188
  • Total likes: 327
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #459 on: June 29, 2022, 11:02:50 AM »
படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.

விளக்கம்: படை, குடி, விளைபொருள், அமைச்சர், நண்பர், அரண் என்னும் ஆறு உறுப்புகளையும் சிறப்பாகப் பெற்றவன் அரசருள் சிங்க ஏறு ஆவான்.


அடுத்து : -------- சான்ற பெரும்பொருள் --------
                 ------ --------- தில்

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #460 on: July 19, 2022, 06:23:32 PM »
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்த தில்

விளக்கம்:
ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நூகராமல் இறந்து போனால் அவன் அந்த பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை.

 அடுத்து: நகையுள்ளும் ------------ ----------
----------- பண்புள ------------ --------


Offline ANJANA

  • Newbie
  • *
  • Posts: 9
  • Total likes: 4
  • Karma: +0/-0
  • Gender: Female
  • HI FREINDS, AM ANJANA
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #461 on: July 20, 2023, 01:10:49 AM »
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.


சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
நகைச் சுவைக்காகக்கூட துன்பம் தரும் அளவிற்கு இகழாமலும், பகைத்துக் கொண்டாலும் பண்புடனும் நடந்துக்கொள்வது பண்பாளர்களின் உடமை.


மு.வரதராசன் விளக்கம்:
ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும், பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்லப் பண்புகள் உள்ளன.


சாலமன் பாப்பையா விளக்கம்:
விளையாட்டில் விளையாட்டிற்காகக்கூட ஒருவனை இகழ்ந்து ஏளனமாகப் பேசுவது அவனுக்கு மன வருத்தத்தைத் தரும்; அதனால் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறியும் திறம் உள்ளவர்கள், பகைவர்களிடம் கூட ஏளனமாகப் பேசார்.


கலைஞர் விளக்கம்:
விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும். அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள்.

அடுத்து :---------- பெற்ற ------------ நன்பால்
கலந்தீமை --------   -------.

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #462 on: December 20, 2023, 02:05:03 AM »
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.

விளக்கம் :
பண்பில்லாதவன் முன்னை நல்வினையாலே பெற்ற பெருஞ் செல்வமானது, நல்ல ஆவின்பால் கலத்தின் குற்றத்தால் திரிதல் போல, ஒருவருக்கும் பயன்படாமல் போகும்

அடுத்து: ______ விழையான் ______ ______
------ துடைத்தூன்றும் _____