Author Topic: FTC ஏழாம் ஆண்டு நிறைவு சிறப்பு கவிதை நிகழ்ச்சி  (Read 2318 times)

Offline Forum

நண்பர்கள் கவனத்திற்கு ...

நம் அரட்டை மற்றும் பொது மன்றத்தின் ஏழாம் ஆண்டு  நிறைவை முன்னிட்டு ... இந்த கவிதை பகுதியில் நீங்கள் உங்கள் உங்களின் கற்பனை திறமைய வெளிப்படுத்தும்  பொருட்டு  கவிதை மழைகளை  பொழியலாம் ...
 கவிதை நம் நண்பர்கள் இணையத்தளம் சார்ந்ததாய் மட்டுமே அமையவேண்டும் .. எதிர்வரும் ஆகஸ்ட்  2 ஆம்  தேதிக்கு  முன்பாக உங்கள் கவிதைகளை பதிவு செய்யுமாறும்  கேட்டுக் கொள்கின்றோம் ..பதிவு செய்யப்பட்டகவிதைகள் ஏழாம்  ஆண்டு நிறைவு நாள் நிகழ்ச்சியின்பொழுது நண்பர்கள் இணையதள வானொலி மூலம் உங்களை வந்தடையும்.

Offline AshiNi

  • Full Member
  • *
  • Posts: 145
  • Total likes: 985
  • Karma: +0/-0
  • Gender: Female
  • -𝔹𝕖 𝕨𝕙𝕠 𝕦 𝕣 & 𝕤𝕒𝕪 𝕨𝕙𝕒𝕥 𝕦 𝕗𝕖𝕖𝕝-
அதிகாலை வான வீதியில்
  பட்சிகளின் கீச்சிடும் சலசலப்பு...
பச்சைக்கிளியை அழைத்துக்
கேட்டேன் காரணம் !
  விடை கூற நேரமில்லையென
  விமானமாய்ப் பறந்தது...

அடர்ந்த வனாந்தரத்திலேப்
  பசுமை மரங்களின் பேரணி...
மாமரத்தை அழைத்துக்
கேட்டேன் காரணம் !
  விடை கூற நேரமில்லையென
  சக்கரமாய் ஓடியது...

வண்ணமலர் பூங்காவிலே
  பூக்களின் அணிவகுப்பு...
மல்லிகையை அழைத்துக்
கேட்டேன் காரணம் !
  விடை கூற நேரமில்லையென
  மின்னலாய் விரைந்தது...

காட்டுப் பாதையிலே
  மிருகங்களின் வேகநடை...
கோமாதாவை அழைத்து
கேட்டேன் காரணம் !
  விடை கூற நேரமில்லையெனப்
  புயலாய்ச் சுழன்றது...

கேள்வியின் பதில் தெரியாது
  தார்சாலையை வந்தடைந்தேன்...

என்னவொரு வியப்பு...!

தேன்கூட்டினை மொய்க்கும்
  தேனீக்களாய் மக்கள் கூட்டம் அங்கும்...
என் வயது தோழியை அழைத்துக்
  கேட்டேன் காரணம் !

அவள் விடையால்
  உள்ளம் குளிர்ந்தேன்...
அணை திறந்த மடையாய்
  இன்ப வெள்ளம் உணர்ந்தேன்...

FTC அரங்கத்தின் ஆண்டுவிழாக் கொண்டாட்டமாம்...
  நட்பின் அர்த்தம் உணர்த்தும் FTC க்கு
  எட்டுத்திக்கும் கரகோஷமாம்...

இறைவனும் இயற்கையும்
  ஆசி வழங்கும் இணையத்தளமாம் FTC...
நட்பை வாரி வழங்குவதில்
  தேன்மழையாம் FTC...

இனியென்ன யோசனை...!
  மனமெல்லாம் FTC இன் வாசனை...!

எல்லோருடனும் கோலாகலத்திற்கு விரைந்தேன்...
  FTC எனும் நட்பின் சொர்க்கத்தையும்
  அடைந்தேன்...
ஏழாண்டுகள் கடந்த FTC,
  ஏழேழு ஜென்மமும் நம்மோடு கைக்கோர்க்க
இறையருள் என்றும் வேண்டி
  கவியும் பரிசளித்தேன்...


வாழ்த்துக்கள் FTC


« Last Edit: July 31, 2018, 09:19:40 AM by AshiNi »

Offline JeGaTisH

அதிகாலை எப்போது வரும்
அனைவரையும் காண
அன்புடன் தோழர்கள்
FTCயில் என்னும் பாடசாலையில்.

எங்கிருதோ இணைகிறோம்
சேர்ந்து பழகுகிறோம்
இருவருக்குள் ஒரு உறவு பிறக்கிறது
நீயும் நானும் நட்பின் ஓர் அங்கமாக.

பேசுவது ஒரு சில மணித்துளிகள்
ஆனால் ஏதேதோ பேசுகிறோம்
Hi என்று சொல்லி பேசிய வார்த்தைகளை
BYE என்று சொல்லி மறந்து விடுகிறோம்.

உன்னுடன் நான் பேசியது கொஞ்சம்
ஆனால் விட்டு பிரியும் போது
மனது எதனையோ தேடுகிறது மீண்டும்.

என் இனிய நண்பர்களை எப்பொழுதும்
FTC என்னும் இணையதளத்தில் ஒன்று சேர்
அதை உருவாக்கிய நண்பனே நீர் பெருமைகொள்
நீங்கள் உருவாக்கியது ஒரு அங்கம்
அதை செதுக்கியது படித்த தொழில்நுட்பம்
அதை கட்டிக்காப்பதுவோ வளர்ந்து வரும் நண்பர்கள் கூட்டம்.
உன்னை போற்றும் எப்போழுதும் எங்கள் நெஞ்சம்.

இதயங்கள் எங்கிருந்தோ வருகிறது
அதை FTC இணைக்கிறது
இன்று போல் என்றும் வாழ
இறைவனை வேண்டுகிறேன்.




        8 ஆம் ஆண்டுக்குள் தடம்பதிகிறது FTC வாழ்கவழமுடன்.
                           என்றும் உங்கள் அன்பு chocolate தம்பி ஜெகதீஸ்.




« Last Edit: August 01, 2018, 04:44:29 PM by JeGaTisH »

Offline thamilan

எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும்
FTC என்னும் இணையில்லா இணையத்தளமே
நீ பிறந்தது முதல் இன்றுவரை
உன்னுடன் பயணிக்கும் பெருமை எனக்குண்டு

நேற்று பெய்த மழையில்
இன்று பூத்த காளான்களாக
எத்தனையோ இணையதளங்கள் 
எத்தனை இணையதளங்கள் இருந்தாலும்
எந்தன் மனதில் குடிகொண்டவள்
என்றும் என்னை வசீகரிப்பவள்
FTC எனும் எழிலரசி நீ தானே

நம்  வாழ்க்கைப் பயணத்தில்
ஏதோ ஒரு நிறுத்தத்தில் ஏறி
ஏதோ ஒரு நிறுத்தத்தில்
இறங்கிப் போய் விடும்
வாழ்க்கை  மனிதவாழ்க்கை
ஏறிய நாள் முதல்
இறங்க மனமின்றி
உன்னில் பயணிக்கும் பயணி நான்

 நிழலின் அருமை
வெயிலில் தான் தெரியும்
நன்மையின் அருமை
தீமையில் தான் தெரியும்
பெண்ணின் அருமை
ஆணில் தான் தெரியும்
நட்பின் அருமை
FTC யில் தான் தெரியும்

FTC ஒரு அதிசய உலகம்
அஙகே காயங்கள் கூட
பூக்கள் ஆகிவிடுகின்றன
கண்ணீர் துளிகள் கூட
நட்சத்திரங்கள் ஆகிவிடுகின்றன
துன்பங்கள் கூட
சுகமானதாகி விடுகின்றன

BREEZE, விவி, லொலிடா போன்ற
பாசமான தங்கைகள்
ICE, JEGA  போன்ற
பாசமான தம்பிகள்
இசை, CUTE MOON, JO, மாஷா, லோலா
போன்ற நல்ல  நண்பிகள்
எண்ணில் அடங்கா
நல்ல நண்பர்கள்
பவி, நியா, சுபா போன்ற நல்ல உறவுகள்
இவையாவும் என்னுடன் சேர்ந்தது
FTC எனும் குடும்பத்தாலே 

இணையத் தளங்களில் இணையில்லா FTC  யே
உன்னில் உருவான பலபேரில் நானும் ஒருவன்.
நல்ல நண்பர்களின் நல்முகம் காட்டியவன் நீ.
நட்புக்கரங்கள் ஒன்றிணைய பாலமாய் அமைந்தவன்  நீ.
 
உன் சேவைகள் என்றும் தொடரட்டும்.
உனது சேவை உலகமெங்கும் பரவட்டும்.
உனது இசையால் தமிழ் நெஞ்சங்கள் இன்புறட்டும்.
வளர்க வளமுடன் இன்னும் பல ஆண்டுகள்
என மனதார வாழ்த்துகிறேன்
« Last Edit: July 31, 2018, 12:03:39 AM by thamilan »

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
அழகான குழந்தை
ஆடி மாசத்தில் பிறந்த
இக்குழந்தை

ஏழு ஆண்டுக்கு முன் பிறந்த ஒரு
சுட்டி குழந்தை தன் இயல்பு மாறாமல்
இன்னும் சிரித்தபடி நம்மை வரவேற்கிறது

கவலைகள் மறக்க குழந்தையின் சிரிப்பை
கண்டால் போதும்
அதுபோலவே
கவலைகள் மறக்க ftc அரட்டை அரங்கத்தில்
நுழைந்தாலும் போதும்

சொல்ல சொல்ல விளையாட்டாயினும்
செல்ல செல்ல சண்டைகளாயினும்
தட்டிக்குடுத்து  உடன் இருக்கும்
இக்குழந்தை

நமது திறமை எதுவாயினும்
அது கவிதைகளாயினும் ,
கதைகளாயினும் , வேடிக்கை விடுகதைகளாயினும்
ஊக்குவிக்கும், உடன் சேர்ந்து விளையாடும்
இக்குழந்தை

எனக்கு எவ்வளவு பிடிக்கும் இந்த ftc என்றால்
தன்  இரு கை விரித்து அகிலத்தை அணைக்கும்
சிறு குழந்தை போல் சொல்ல தோன்றுகிறது

தொலை தூரத்து நிலவு போல
தொலை தூரத்து நட்பும் இங்குண்டு
தொல்லை தரும் உறவுகளுக்கு மத்தியில்
தொடக்கம் முதலேஅன்பில் துள்ளி குதிக்கும்
பல உறவுகளும் இங்குண்டு

நட்சித்திரங்கள் போல
எண்ணிலடங்கா உறவுகள்
என்றும் உனக்குண்டு

வருபவர்களின்
எண்ணங்கள் மாறும்
உருவங்கள் மாறும்
நிறங்கள் மாறும்
தேசங்கள் மாறும்
வருடங்கள் கூட மாறும்
ஆனால்
மாறாது என்றும் இக்குழந்தையின்
சிரிப்பு

பல பல பல பல ஆண்டுகள்
தொடரட்டும் உன் வீர நடை


****ஜோக்கர் ****
« Last Edit: July 30, 2018, 07:26:34 PM by joker »

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline SaMYuKTha

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 497
  • Total likes: 1531
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
நட்பின் மாட்சியை போற்ற
நண்பர்களால் நண்பர்களுக்காக
நட்பின் சின்னமாய் பிரசவித்த
உன்னதமான பிறப்பு உன்னுடையது...

உலகின் எத்திக்கிலும்கூட
முகமறியாபலரை நட்பெனும்
முகவரிகொடுத்து பாந்தமாய் இணைக்கும்
மென்மையான ஜனனம் உன்னுடையது…

புற்றீசலாய் கிளைவிட்டிருக்கும்
பற்பல அரட்டையரங்ககளின்  வரிசையில்
பத்தோடு பதினொன்று அதோடு
இதுவும் ஒன்றென்ற அனுமானத்தோடு
இவ்விடம் புணர்ந்தவள் நான்...

தோள் கொடுக்கும் அருமைநட்புகளினாலும்
உயிர் துடிக்கும் அழகியஉறவுகளினாலும்
தனித்துவமான உன்சுயத்தால் எனை பிரமிப்பித்து
உன் விரிந்தசிறகினால் என்னையும் அரவணைத்தாய்...
என்னுள் இருக்கும் எனை எனக்கே
படிப்பித்த எனக்கான போதிமரம் நீ...
அன்பின் ஸ்நேகிதியாய் எனை
அடையாளப்படுத்தி கொண்டாட செய்தவன் நீ...

பரிதவிக்கும் வேளைகளில் அன்பாயணைத்து
அரவணைப்பவள் தாய் என்றால்...
முயற்சிகள் யாவையும் ஊக்குவித்து
தோள்தட்டி தேற்றுபவர் தந்தை என்றால்...
நம் அழுகையில் அழுது சிரிக்கையில் சிரித்து
வளர்ச்சியில் பூரிப்பது உடன்பிறப்பென்றால்...
நீயும் இவர்களுக்கு சற்றும் சளைத்தவனில்லையே!!!

காய்த்த மரம்தான் கல்லடிபடுமாம்
அகவை ஏழாயினும்
உனது அனுபவமோ ஏராளம்...
உன்வளர்ச்சியில் மனம் வெதும்பியவர்களின்
சொல்லடிகளை மட்டுமல்லாது
உன்னருமை புரியாமல் உதறியவர்களின்
உதாசீனங்களையும்கூட புன்சிரிப்புடன் ஒதுக்கி
ஏணியாய் இருந்து எமை உயரச்செய்து அழகுபார்க்கும்
உன்பக்குவமோ அளப்பரியது...

வெற்றியுடன் எட்டாமாண்டில்
அடியெடுத்து வைக்கும் நீ
ஆல்போல் தழைத்து நேசமெனும் கிளைக்கொண்டு
எட்டுத்திக்கும் இணைப்பாயாக!!!
உன்னை நட்பெனும் கருவிலிருந்து ஈன்றெடுத்து
எம் கைகளில் தாரைவார்த்து விட்டு
தள்ளிநின்று உன்பெருமையில் பூரித்திருப்பவனோடு
என்றென்றும் தோள்கொடுத்து கண்ணிமையாய்
உன் புகழோங்க காத்திடுவோம் யாம்!!!


என்றும் உனதன்பில்  திளைக்க விரும்பும் உன் அன்பின்  சிநேகிதி சம்யுக்தா...

« Last Edit: July 31, 2018, 02:59:59 PM by SaMYuKTha »

Offline RishiKa

  • Full Member
  • *
  • Posts: 162
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Female
  • என்னை நீ மறவாதிரு!புயல் காற்றிலும் பிரியாதிரு..
அன்பு நண்பர்களே!

நண்பர்கள் தமிழ் தளத்தின் ஆண்டு விழாவினை
நாம் நன்றி சொல்லும் விழாவாகுவோம்!
வாருங்கள்!

நண்பர்கள் இணைய தளம்...
இது .....
நாடி வந்த அனைவர்க்கும்...
நல்வரவு கூறும் தளம்!

வலை உலக சொந்தங்கள்...
வளமாக உருவாகும் இடம்!

புது புது உறவுகளும் தோழமையும்...
பூரிப்புடன்  கிடைத்திடும்  அரங்கம்!

கனிவு பொங்கும் சிரிப்புகள்..... .
கண நேரத்தில் தோன்றிடும் மன்றம்!
கனவு நூல்கள் நெய்யப்படும் தறி கூடம் !

முகம் தெரியா நட்புகளில்...
யாரும் அனாதை இல்லை என்று
பறை சாற்றும் இல்லம்!

தொலைவில் இருந்தாலும் ...
அருகில் அமர்ந்து .....
தொலையாத அன்போடு...
பேச செய்யும் அறிவு கூடம்!

பண்பும் பாசமுமாய் நமக்குள்
அன்பு  பாலம் போடும் கூட்டம் !

இதயங்களை இணைக்கும் அன்பு...
நண்பர்கள் தமிழ் மன்றமே.!...

என்றுஎன்றும்  உன் சேவை தொடர ...
வாழ்த்தும்  உள்ளங்களுடன் ...நானும்

நெஞ்சம்  நிறைந்த ....
வாழ்த்துக்களுடன்  ...

உங்கள் ரிஷிகா!...
« Last Edit: July 31, 2018, 09:06:44 PM by RishiKa »

Offline சாக்ரடீஸ்

  • Hero Member
  • *
  • Posts: 845
  • Total likes: 2403
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Self-respect is a Priority & Luxury to Urself
FTC நண்பா...
உனக்கோ வயது ஏழு
நம் நட்புக்கோ வயது ஐந்து
உன்னை பிரிந்து சென்றேன்
உன் நட்பை உதறி சென்றேன்
இருந்தும்
நான் மீண்டும் வருகை தந்த போது
அதே அன்போடும்
அதே பாசத்தோடு
அதே நட்போடு
என்னை கட்டியணைத்தாய்
உன் நட்பை என்னவென்று
நான் வர்ணிப்பேன் நண்பா ....

எங்கள்
சந்தோசத்தை கவலைகளை
தொல்லைகளை
ஏந்திய நீ
சந்தோசத்தை இருமடங்காய் பெருகி
கவலைகளை சுக்குநூறாய் உடைத்து
தொல்லைகளை தாயாய் அரவணைத்து
தமிழ் என்ற  ஒற்றை மொழி கொண்டு
அன்பால் இணைத்து
நட்பால்  தழுவி
எங்கள்  அனைவரையும் உனக்குள் சேர்த்த
அரட்டை அரங்கு நண்பா !!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !!

பகல் முழுவதும்
அரட்டை  அரங்கத்தில்
கேலி கிண்டல்  சண்டை செய்து
கொண்டு தனிமை என்ற சொல்லையே
மறந்து துள்ளி ஓடி கொண்டிருக்கும் நான்
இரவில்
திடீர் என்று எனக்குள்
இருக்கும் கிறுக்கன் வெளிப்பட
என் மகிழ்ச்சியை
என் துயரத்தை
என் வாழ்த்தை பதிவுகளாய் பதிவிட
உன் வாசலில் நிற்பேன் ...
நீயோ ஒரு மினி கூகுள்
நீயோ  திகட்டாத அமிர்தம் ...
உன்னை தோண்ட தோண்ட
அறிவு என்ற புதையல்  கிடைக்கும்
என் பொது மன்ற நண்பா....

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ...

தினம் தினம்
ஆனந்தமாய் துயில்
கொள்கிறேன் உன் இசையால்
நீ போடும் பாடல்களில்
எங்களுள் இருக்கும்
பிரபுதேவா சித்ரமா
ஜேசுதாஸை  வெளிக்கொண்டு  வருவதில்
நீ ஒரு வித்தகன் .....
தென்றலுக்கு உருவம்  இல்லை
இசைக்கும் உருவம் இல்லை
உருவம் இல்லா ரெண்டையும் இணைத்து
இசை தென்றலாய் எங்கள்
செவிக்கு விருந்து தருவதில்
நீ ஒரு இசை பிரியன் ..
ஓவியத்திற்கு உயிர் தருவது கவிஞர்
அந்த கவிஞரின் கவிதைக்கு உயிர் தருவது குரல்
அந்த குரலுக்கு உயிர் தருவது இசையொலி
உயிரற்ற நிழல் படத்தை உயிர்கொடுத்து
ஓவியம் உயிராகிறதாய் கொடுப்பதில்
நீ ஒரு அதிசய பிறவி
என் செவிவழியில் கிடைத்த
பண்பலை நண்பா.....

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ...

நண்பா
தொலைதூரம் இருப்பினும்
எனக்காக தோள் தரும் நட்புகளை தந்தவன் நீ
உடன் பிறவா
சகோதரர்களை  சகோதரிகளை தந்தவன் நீ
எங்களுள் இருக்கும்
திறமைகளை உலகிற்கு காட்டியவன் நீ
உன் பயணத்தை நான்
கடலோடு ஒப்பிடுகிறேன்
உன் ஆயுள் கடல் போல் நீளமாகவும்
நாங்கள் உன்மீது வைத்திருக்கும் அன்பு
கடலின் ஆழமாக  இருப்பதால்
உனக்கு என்றும்
ஏறுமுகம் தான் ....
உன் பிறந்த நாள் அன்று உனக்கு  வாழ்த்து சொல்லி
உன் விரல் பிடித்து நடப்பதில் பெருமிதம் என்று சொல்லி
இந்த கிறுக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.


என்றும் உன்னோடு பயணிக்க விரும்பும் ...உன் அன்பு கிறுக்கன் சாக்கி ...

 

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
இணையம் என்ற இன்றைய
தோழனுடன் உதயமானது
அவன் அன்றைய பயணம்

பற்பல நாடுகள்
பல்வேறு மொழிகள்
பகட்டில்லா குணங்கள்
பஞ்சமில்லா நட்புகள்

கிறுக்கலிலே கவிதைகளும்
எண்ணத்திலே கதைகளும்
அள்ளிப்பகிரும் ஆலியாவும்
பொதுமன்ற பொக்கிஷங்கள்

பாடிவரும் பண்பலை
உயிராகும் ஓவியங்கள்
இனிமையான இசைத்தென்றல்
எல்லையில்லா தொகுப்பாளர்கள்
இத்தனையும் இவன் கொண்டு –இன்று
கடந்து வந்தான் ஏழாண்டு

நட்பென்று இவன் நீட்டிய கைகள்
இன்றும் நீளுகிறதே
பல கைவழி தொடர்ந்து
முடிவில்லா இந்த பாலம்
என்றும் தொடரட்டுமே பல்லாண்டு.....

FTC team மற்றும் நண்பர்கள் அனைவர்க்கும் 7ஆம் ஆண்டுநிறைவு நல்வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன் வாழ்த்தும் நான்
                                   **விபு**

Offline BreeZe

  • Hero Member
  • *
  • Posts: 703
  • Total likes: 2381
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Smiling is the prettiest thing you can wear

FTCயின் ஏழாவது வருட நினைவு  நாள்
8வது இனிய பிறந்தநாள்
மலரும் நினைவுகளால்  என் மனது
நிரம்பி வழிகிறது

FTCயின் உள்ளே காலடி வைத்தேன் நான்
பலவிதமான வரவேற்ப்புகள்
அன்பான உபசரிப்புகள்
பின்னாட்களில் படப்போகும் கஷ்டம் அறியாமல்

வந்ததுமே எப்போ ரெஜிஸ்ட்டர் பண்ணுவீங்க
எப்போ ரெஜிஸ்ட்டர் பண்ணுவீங்க
எனது நச்சரிப்பு தாங்காம
நான் கொடுத்த குடைச்சல் பொறுக்காம
உடனே ரெஜிஸ்டர் பண்ணிகொடுத்தத நினைச்ச
இப்பவும் சிரிப்பு சிரிப்பை வருதே

அப்புறமா FMல பேசணும் என்று ஒரு ஆசை
என்ன பேச வைங்கப்பா பேச விடுங்கப்பான்னு
மறுபடியும் துளைத்து எடுக்க ஆரம்பிச்சேன்
என்ன பண்ணுறதுனு தெரியாம
ஓவியம் உயிர் ஆகிறதுல கவிதை எழுதுனு
சில விஷமிகள் ஐடியா கொடுத்தாங்க
என்ன பத்தி சரியாய் புரியாம

இருங்கடா உங்கள ஒரு வழிபண்ணுறேன் என
நானும் ஒரு கவிதை எழுதினேன்
PAUL அண்ணாவும் ENIGMA சிஸ்டரும் எனக்கு
போஸ்டரே அடிச்சாங்க
அந்த நாளை என்னைக்கு மறக்க மாட்டேன்
   
நிறைய பேரு எழுதுறதையே நிறுத்திட்டாங்க
சிலபேரு தாயே வேணாமா
எழுதுறது நிறுத்திக்கோ என காலில் விழுந்தாங்க
ஒரு புண்ணியவான்  மட்டும்
அம்மா நீ தயவு செய்து எழுதாத
வேணுமின்னா நான் எழுதி தாரேன்
தமிழ வாழவிடு தாயே என
கைகூப்பி கொஞ்சினார்
நானும் பரிதாபப்பட்டு எழுதுறது நிறுத்திட்டேன்

என்ன கண்டா அரட்டை அரங்கத்தை விட்டு
தலைதெறிக்க ஓடுறவங்க நிறைய பேரு
எனது தமிழ் ஒரு காரணம்
நான் கிப்ட் கேட்கிறது மறுகாரணம்
நான் கிப்ட் வாங்காதவங்க யாருமே இல்ல
புதுசா வாறவங்கள கூட
நான் விட்டுவச்சது இல்ல
என்ன கண்டாலே செம டென்சன் ஆவாங்க 

என்னையும் ஒரு நேர்மை  தவறாத பொண்ணு
ஸ்ட்ரிக்ட் ஆபிசர் என நினைச்சி ஏமாந்து
அரட்டை அரங்கத்துல மொட் போஸ்ட் கொடுத்தாங்க
திருடன் கைல சாவிய கொடுத்தது போல
சக்கரைக்கு எறும்ப காவல் வச்சது போல

என்ன பார்த்து ஒருத்தர் கூட பயப்படல
என்ன காமெடி போலீஸ் ஆகிட்டாங்க
யாரும் தப்பு செஞ்சா
அந்த நேரம் பார்த்து நான் தலைமறைவாகிடுவேன்
எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம்
மெதுவா உள்ளே வருவேன்
ஊரு  வம்பு எனக்கெதுக்கு
அடிவாங்குற உடம்ப இது

இப்போல்லாம்
லஞ்சம் தான் என் பேச்சு
லஞ்சம் தான் என் மூச்சு
லஞ்சம் வாக்குறதையே லட்சியமாய்
கடைபிடிக்கும் ஆஃபீசர் நான்

சாட் என்றாலே தப்பு
என்று நினைத்த என்னை
என் நினைப்பே தப்புனு நினைக்கவச்சது
FTC அரட்டை அரங்கம் தான்
அன்பான தோழர்கள்
அரவணைப்பான தோழிகள்
என்னை காணாவிட்டால்
எங்கே எங்கே என்று தேடுமளவுக்கு
நல்ல உறவுகள்
வேலை செய்யும் போது கூட
FTC அரட்டை அரங்கத்தின்  நினைவு தான்
தூக்கத்தில் கூட
சாட் பண்றது போல கனவு வரும்
அந்த அளவுக்கு என்னுடன் ஒண்டரக்கலந்து விட்டது
FTC இணையதளம்

எனது தனிமையை போக்கிடும்
எனது வெறுமையை மாற்றிடும்
FTCஇணையதளத்துக்கு எனது உளமார்ந்த நன்றிகள்

இன்னும் பலப்பல ஆண்டுகள்
இன்னும் புதுப் பொலிவுடனும் மிடுக்குடனும்
வீர நடை போட வேண்டுமென
மனதார வாழ்த்துகிறேன் 


Copyright by
BreeZe

Offline SweeTie

ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்பார்
FTC   தோழா உனக்கு என்றுமே போனதில்லை வயது
என்றென்றும்  இளமை குன்றா மார்க்கண்டேயர் நீ
தமிழை  வாழவைக்க வந்த  இணையம் நீ 
வாழிய  நீ  பல்லாண்டு 

பாரெங்கும் பரந்து  தனித்து நிற்கும்  தமிழர்களை
உன் அன்பான  கரம் நீட்டி அரவணைத்தாய்
பிரியாத உறவுகளும்  பாங்கான  நட்புகளும் 
அன்பும் பாசமும் குறையாத உறவுகளும்
அத்தனையும் கண்டோம்  இங்கு .
.
அன்னை  போல் அரவணைப்பு
தந்தை  போல் அறிவுரைகள்
அக்கா தங்கை அண்ணா தம்பி என
எண்ணற்ற  உறவுகள் அன்பு செய்ய
இதமாக  பேசி  இன்முகம் காட்டும்  நட்புகள்

எங்கே கிடைக்கும் இத்தனை இணையற்ற செல்வங்கள்?
உறவுகள் வேண்டாம்  பணம் இருந்தால் போதும்  என
பணத்தையே குறிவைக்கும் பணக்கார கும்பல்களின் பணம்
நம் இதயங்கள் பரிமாறும்  அன்புக்கு ஈடாகுமா?
நாம் ஒருவர்மேல் ஒருவர் கொண்ட பாசத்துக்கு இணையாகுமா?

தமிழ் பேசும் இதயங்களை இணைக்கும் பாலம் எங்கள் FTC
ஈடில்லா  இணையற்ற ஒரே இணையம்  எங்கள்  FTC
மாசற்ற பொலிவுடனும்  மங்காத  புகழுடனும்
நாளொரு மேனியும்  பொழுதொரு வண்ணமும் நீ வாழவேண்டும்
என்றும் எங்கள் நல்லாசிகளும்  வாழ்த்துக்களும்  உனக்கே  FTC
 

Offline MaSha

  • Sr. Member
  • *
  • Posts: 433
  • Total likes: 1125
  • Karma: +0/-0
  • Gender: Female
  • *!_Do small things with great love_!*
பூக்களுக்கு பிறந்தநாள்
பனித்துளிகளால் கொண்டாடப்படுகிறது
FTC யின் பிறந்தநாள் நண்பர்களால் கொண்டாடப்படுகிறது
7வது வயதை  எட்டும் நீ
இன்னும் எட்டாத உயரத்துக்கு வளர்ந்திட
இதயம் கனிந்திட வாழ்த்துகிறேன்

காலங்கள் மாறலாம்
கனவுகள் மாறலாம்
இதயங்கள் மாறலாம்
இயற்கையும் மாறலாம்
FTC மேல் கொண்ட காதல் மட்டும்
என்றும் மாறவே மாறாது

உறவுகள் இல்லை என்று வருந்தினேன்
தனிமையில் தவித்தேன்
என்குரலை நானே கேட்டு சலித்தேன்
வரப்பிரசாதமாக கிடைத்தது
FTC எனும் நண்பர்கள் இணையதளம்
அண்ணன் தம்பிகளாக
அக்கா தங்கைகளாக
நட்புக்கு நட்பாக
ஒரு குடும்பமே கிடைத்தது
அரட்டை அரங்கத்தில்
காதுக்கு இனிய கானாமிர்தங்களை
அள்ளி அள்ளி தந்தது FTC FM
அறிவுக்கு விருந்தாக
பல்சுவை விருந்துகளை அள்ளித் தந்தது பொதுமன்றம்

FTC யில் சின்ன சின்ன கோபங்களும்  உண்டு
செல்லச் சண்டைகளும் உண்டு
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
சுயநலமில்லா அன்பு அரவணைப்பும் உண்டு
விட்டுக்கொடுக்கும் மனங்களும் உண்டு
நட்புக்காக எதையும் செய்யும்
அன்புள்ளங்களும் உண்டு

இதயம் இல்லா இணையதளங்களில்
நல்ல இதயங்களை கொண்ட   
இணையில்லா இணையதளம்
FTC இணையதளம்
இன்னும் பலப்பல ஆண்டுகள்
ஆரோக்கியமாய் நீ வாழ வாழ்த்துகிறேன்

HaPpy BiRthDayyyy FTC <3