Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 197  (Read 2179 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 197
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 11, 2018, 01:41:56 PM by MysteRy »

Offline thamilan

வறுமைக் கோடு
இந்தக் கோடு
எந்த ரப்பர் கொண்டழித்தாலும் அழிவதில்லை
பசி
மனிதனைக்  கொல்ல
எந்த அணுஆயுதமும் தேவை இல்லை
பசி ஒன்றே போதும்
கொலை கொள்ளை
இவற்றின் பிறப்பிடம் பசி தான் 
பசி வந்தால் பத்தும் மறந்து போகும்
வெட்கம் பயம் மனசாட்சி
மானம் குலம் கேள்வி
அறிவுடைமை தானம் தருமம்
உணர்ச்சி இவை அனைத்தும்
மறந்து போகும்

ஏழையாக பிறப்பது தவறில்லை
ஏழ்மையாக வாழுவதே கொடியது     
பசித்தவன் உணவை கண்டதும்
உலகையே வென்றது போல சிரிப்பானே
அது சொல்லும் பசியின் வலிமையை

பசியோடு இருப்பவனுக்கு
உணவு கொடுத்துப்பார்
நீ இறந்த பின் காணும் சொர்கத்தை
கண்முன்னே காட்டும்

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாமாம்
முதலில் ஏழைகள் சிரிக்கட்டுமே
அவர்கள் சிரித்து நான் பார்த்ததில்லையே
பசியோடு சேர்த்து கண்ணீரும் அல்லவா
பரிசாகக் கொடுத்திருக்கிறான் இறைவன்
 
ஏட்டில் ஏழைகளை பற்றி
வரிவரியாக எழுதுகிறோம்
நேரில் கண்டாலோ
முகம் சுளிக்கிறோம் அருவெறுக்கிறோம் 
தீண்டத்தகாதவர்களாக அவர்களை ஒதுக்குகிறோம்
அவர்களுக்கு ஒருவேளை உணவளிப்பதால்
ஏதும் குறைந்துவிடப்போவதில்லை நமக்கு
 இறைக்க இறைக்கத் தான்
ஊரும் கிணறு
கொடுக்க கொடுக்காத தான்
சேரும் தர்மம்

இறைவன் கையில் தராசு
எப்போது எந்தப்பக்கம் சாயும் யாரறிவார்
குபேரனும் குப்பைமேட்டுக்கு வரலாம்
குப்பைமேட்டில் இருக்கும் காகிதம் கூட
கோபுர உச்சியை தொடலாம்

உயிர்களை கொல்லும் அணுஆயுதங்களை உண்டாக்க
கோடிக்கணக்கில் செலவிடும் உலகநாடுகளே 
உயிர்களைக் காக்கவும்
கொஞ்சம் செலவிடுங்களேன்


« Last Edit: August 28, 2018, 07:13:10 AM by thamilan »

Offline Guest

நான் தெய்வத்தால் குழந்தை

**********************


கறுப்போ வெறுப்போ
ஒன்றுமே இல்லாத
வெள்ளை இதயமவனுக்கு..


அவனின் எல்லைகளில்லா உலகில்

இல்லைகள்தான் ஏராளம் – எனினும்
ஒரு நாள்கூட யாரிடமும்
செல்லாமலோ சொல்லாமலோ
இருந்ததில்லை பசிக்கிறதென்று....

வெண்மேகத்தில்
கலந்துநிற்கும் கார்மேகத்தின்
நிறமவனுக்கு – வெளிறிய
முகத்தில் நகக்கீறல்கள்
ஏன்.? எப்படி.? யாரால்.? என
பார்க்கும் கண்கள்
வினவுவதை அறிகிறான்......


எழுதவும் ஏடில்லை
ஏற்றவும் விளக்கில்லை – இதில்
எனக்கு அறிவென்ன
வேண்டிக்கிடக்கிறது.? பரந்த பூமியில்
அவனின் ஆதங்கம் அறிவோடானது.....


நடந்து செல்லும் பாதைகளில்
தீயையும் அறிவதில்லை
தீட்டையும் அறிவதில்லை –தன்னை
ஒதுங்கிச்செல்பவர்களை தயவோடு
பார்த்து சிரிப்பான் தன் புனிதம்
கெடுமே என ஒருபோதும் அவன்
நினைத்ததே இல்லை...

கையில் கிடைத்ததை வைத்து
மானத்தை மறைத்து கெள்வான் – ஒழுக்கமோ
நியதியோ படித்தறிந்ததில்லையவன்
தலைவிரிகோலமாய்
விரும்பவில்லை....

உடுத்திய கந்தலில்
ஆங்காங்கே கிழிசல்கள்
மானம் மறைக்க மறந்ததே இல்லை – மேலும்
கீழுமற்று மார்பு திறந்து உடையணியும்
நவீன உலகில்
மானம் மறைக்க மறந்ததே இல்லை...


எச்சில் இலைகளை
அவன் தொடுவதில்லை – சதா
அவனை சுற்றித்திரியும் நாய்களுக்காய்
அதனை விட்டுவிடுகிறான்

நன்றியோடு பாதுகாக்கின்றன அவனை
மனித மிருகங்களிடமிருந்து....


நான் வயிற்றிலிசைக்க

என் குரலுக்காய் ஏங்கும்
பிஞ்சுக்குழந்தையில்தான்
எப்போதாவது சிரிக்கிறேன்....

நான் அழைக்கப்படும் பெயரில்

மட்டுமே வேறுபடுகிறேன் – கொஞ்சம்
நிதானமாய் யோசித்துப்பாருங்கள்
எல்லோரும் என்னைப்போலவே
ஏதோ ஒன்றுக்காய் யாசிக்கிறார்கள்....

நான் தெய்வத்தின் குழந்தையல்ல
தெய்வத்தால் குழந்தை – என்னில்
கறுப்போ வெறுப்போ
யார்மீதும் இல்லை
தெய்வத்தோடல்லாமல்.....

கொடிதினும் கொடிது
யாசகம் கேட்பது
அதனினும் கொடிது
"அன்பிற்கு" கையேந்துவது....
« Last Edit: August 27, 2018, 09:25:59 PM by Dokku »
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ

Offline RishiKa

  • Full Member
  • *
  • Posts: 162
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Female
  • என்னை நீ மறவாதிரு!புயல் காற்றிலும் பிரியாதிரு..

ஒரு சின்ன பறவை....
வண்ண மரத்தின் அடியே விழுகின்றது...

வறுமையின் வாயிலே நிற்கிறது..
ஆறுதல் தேடும் அதன் பார்வை..

ஓ...சின்னச்சிறு புள்ளி மானே..

உன் பார்வை எங்களை துளைக்கிறது...
இறைவனை தேடுகிறாயா ?...

என்னை ஏன் இந்த பூமியில்...
பிறக்க வைத்தாய் பாதகனே...
என்று கேள்வி கேக்கிறாயா?
அல்லது ..

வயிற்ற்றுக்கு உணவிடாத
வஞ்சகர்களே  என்று
இரக்கமற்ற எங்களை
வைகிறாயா...?

ஓ  மலர துடிக்கும் மொட்டே ..!

நாளை என்பது என்ன ?
என்ற கேள்வி ....
உன் வண்டு விழிக்குள் ..
ஏங்கி நிற்பது தெரிகின்றது ....

உன் வறுமை ..
இந்த நிகழ் காலத்தை..
எரிகின்றது..

பறக்க துடிக்கும் வானம் பாடியே..

உன்னை பார்த்தாலே ....
நெஞ்சம் அழுகின்றது ..

பாசத்திக்கிற்காக  உன் மனம்..
பிஞ்சு நெஞ்சம் பஞ்சாக...
பரிதவித்து வெம்புவதை...

அழுது சலித்த ..உன் ..
விழிக்கடையின்..கண்ணீர் துளிகள்..
உறைந்து கல்லாய் போனது..

ஆனால் ..எங்கள் ...
கல் நெஞ்சில் ஈரம்...
காயாமல் சுரக்க வைத்து  விட்டது..

ஓ பௌர்ணமியை  எதிர் நோக்கும் ..
மூன்றாம் பிறையே..!

ஏனிந்த சூனிய பார்வை..
காலம் எப்போதுமே ..

இலையுதிர் காலமே ...
வைத்து இருப்பதில்லை..

காலம் கனியும்போது...
வசந்த காலமும் உன் வாழ்வில் ..
வளமாக்க வரும் .....

அப்போது ....
பாசங்கள் உனக்கு பாய் போடும்...
பந்தங்கள் உனக்கு..
பால்சோறு ஊட்டும் ..

உறவுகள்  ஊக்கத்தை  தரும்..
ஆம்! ...
நம்பிக்கையே உன்னை  வளர வைக்கும் !

ஒரு சின்ன பறவை....
வண்ண மரத்தின் அடியே விழுகின்றது...
வறுமையின் வாயிலே நிற்கிறது..
ஆறுதல் தேடும்
அதன் பார்வை..!
                                             








« Last Edit: August 28, 2018, 01:13:03 PM by RishiKa »

Offline AshiNi

  • Full Member
  • *
  • Posts: 145
  • Total likes: 985
  • Karma: +0/-0
  • Gender: Female
  • -𝔹𝕖 𝕨𝕙𝕠 𝕦 𝕣 & 𝕤𝕒𝕪 𝕨𝕙𝕒𝕥 𝕦 𝕗𝕖𝕖𝕝-
கருவிழிகள் சோக சித்திரம் வரைய,
நாசியில் தூய சுவாசம் குறைய,
பிஞ்சு இதழ்கள் ஏக்கத்தால் நிறைய,
மறைந்திருந்து பார்க்கும்
சிறுவனே நீ யாரடா...?

தலை கால் புரியாத பணத்தின்,
தாங்கமுடியா சொல்லடிக்கும்
வதைக்கும் கல்லடிக்கும் அஞ்சி,
மறைந்திருக்கிறாயோ கண்ணா...!

வறுமையால் கொண்ட
யானைப் பசிக்காய்
சோளப்பொரி தூவும்
மானிடரின் கருமித்தனம் கண்டு,
மறைந்திருக்கிறாயோ கண்ணா...!

பாசாங்கு பகட்டு காட்டும்
அத்தர் மணங்களும்
வாசனை திரவியங்களும்
உன் வியர்வை வாடையை
ஒதுக்கி தள்ளுமென நடுங்கி,
மறைந்திருக்கிறாயோ கண்ணா...!

வாழ்வின் பெரும் அங்கமான
பாடசாலை வாசமும்
ஏட்டுப் புத்தகங்களும்
பேனை வாங்க வழியற்ற உன்னை
ஏளனம் செய்யுமென குறுகி,
மறைந்திருக்கிறாயோ கண்ணா...!

வேதனை களைந்து
சாதனை நாடு சிறுவனே...!

வாய்க்காலாய் ஓடும் நீ,
நீர்வீழ்ச்சியாய் மாறலாம்...
பாகலாய் கசக்கும் நீ,
தேனமிர்தமாய் மாறலாம்...

காடு மேடு வலயம் தாண்டி சென்றால்
அழகுவெளி காணலாம்...
உன் வாழ்வின் பிரளயம் தாண்டி வந்தால்
இன்ப வருங்காலம் வாழலாம்...

உன்னுள் மறைவாய் இருக்கும்
முயற்சி நரம்பினை தட்டியெழுப்பு...
உன்னை மறைத்து நிற்கும்
தடை பாறைகளை வெட்டியகற்று...

முயற்சி எனும் ஆயுதம் ஏந்தி,
உனக்கான பாதையில் அடிகள் பதித்து,
வறுமை எனும் அகோரனுக்கு
நீ ஓர் மகாவீரன் எனக் காட்டு...!

"முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்" எனும் கூற்று,
அது உன் சோதனைகளை
கழுவும் ஊற்று...

இன்றே தொடங்கு உன் பயணம்...!
ஏழ்மைக்கு உன்னாலும் ஏற்படலாம் மரணம்...

காய்ந்து கருகி கிடக்கும்
உன் அமைதி காட்டிலும்
அடைமழை ஒருநாள் நிச்சயம் பொழியும்...
அன்று உன்னாலே
பல ஏழை மனங்களின்
கருமை வாழ்வுகள் நிச்சயம் விடியும்...!!!

Offline SweeTie

கந்தல் உடை அணியும்  விந்தை உலகம் இது 
நாகரீகம்  மேலோங்கி  உடைகளில்  கிழிசல்கள்  பொத்தல்கள்
அரை குறை  ஆடைகளில் அலங்காரமும்  செய்து 
அந்தரங்கம்களை வெளிப்படுத்தும்  ஒரு ஜாதி i
கந்தலே  தஞ்சமென  காயமே கடவுளென
மூடி மறைக்க   கிழிசல் தேடி அலையும்   மற்றோர்  ஜாதி
,
ஏழைக்கு சிந்தையில் ஏராளம் தேவைகள்
ஒட்டிய வயிற்றில் கொட்டிக்கொள்ள  ஆசைகள்
பட்டியல் போட்டாலும்  பகிர்ந்து தின்ன யார் வருவார்?
கிட்டவர  அருவருக்கும்  பகட்டான  மனிதர் அவர்
எட்ட நின்று பார்ப்பார்,  ஏளனமும் செய்வார்.

பஞ்சு மெத்தையில் புரண்டு படுத்தாலும்
கொஞ்சமும் வராது  கண்ணுறக்கம் , பணக்காரன் அவனுக்கு
படுக்க பாயும் இல்லை  உறங்க இடமும் இல்லை
பிளாட்பாரம்  தேடுகிறான்  ஏழை மைந்தன் இவன்
கண்ணுறங்கி  பலகாலம் ஆயிற்று. 

நாகரிகமான நட்சத்திர  ஹோட்டல்களில் 
மீதமாய் உண்டு  ஏப்பம் விடும்    ஜாதி அவர்
அகங்கார  கண்களுக்கு  தெரிவதில்லை
பிஞ்சு முகத்தில்  பட்டினி  ரேகைகளின்  கொடூரம்
அரைவயிறு  கஞ்சிக்கு  கெஞ்சி நிற்கும்  இவனின்
 ஆதங்கம்  என்றுமே  புரிந்ததில்லை 

வெள்ளி குவளை களில் மது அருந்தும் மானிடரே
குட்டி நாய்களை கொஞ்சி கொண்டாடும் கோடீஸ்வரர்களே
ஒரு சான் வயிறு ஒரு நேரம் நிரம்பாதா என …
 பள்ளி செல்லும் வயதினிலே  பரிதவித்து நிற்கின்றான்
கண் விழித்து பாருங்கள்  கருணை முகம் காட்டுங்கள்

விலைவாசி ஏற்றம்  விண்கலங்கள்  ஏற்றம்
வகை வகையாய்  வரிகள்  மூச்சு முட்டும்  மட்டும் 
ஸ்தம்பித்துபோகும்  நடுத்தர வர்க்கம்   நாம்
பார்த்து ரசிக்கிறான் பம்பரமாய் சுழலும்  நம்மை
தீர்த்து வைப்பான்  என்ற   யூகத்தில்  வாழுகிறோம்
வார்த்தைகளால் விலைபேசும்  மாய உலகமிது  தெரியாமல்.
 





 

Offline JeGaTisH

இறைவன் இயற்கையை படைத்தான்
அங்கு வாழ   மக்களையும் மாக்களையும் படைத்தான்
மக்களை படைத்தவன் பேதங்களும் வைத்தான்
அன்றாடம்  உணவு தேடும்   மாக்களை போலவே
ஏழை  என்னையும்  படைத்துவிட்டான்

என்னை கண்டால்  காரி துப்பாத குறை 
என்னை  பார்த்து  முகம் சுளிக்கும்  பணக்காரன்
என்  பசி தீர்க்க  ஒரு பிடி சோறு போடாத  கருமி
இவர்கள் எல்லாம் மனிதர்கள்தானா   என  எண்ணத் தோன்றும்

என்னை படைத்த இறைவனை குறை சொல்வேனா
என் விதியை  நொந்து அழுவேனா
என்னை பெற்று அனாதையாய்  தெருவில் விட்ட
என் தாய் தந்தையரை  குற்றம் சொல்வேனா 

பகலும் இரவும்  எனக்கு ஒன்றுதான்
பகல் முழுதும்  இரை  தேடும் பறவைகள்போல்
நானும்  தெருவெல்லாம்  பிச்சை பாத்திரம் சுமக்கிறேன்
இரவில்  தெருவோரம் தஞ்சமாய்   உறங்குகிறேன்

ஆறறிவு படைத்த மனிதா
நீ உண்பதிலும் உடுப்பதிலும்  என்போன்ற
ஏழைகளுக்கும்  கொஞ்சம் கருணை செய்யுங்கள்
உங்கள் ஒரு கையால் கிள்ளிப்போடும் உதவிக்கு
எங்கள் இரண்டு கையால் உங்களை வணங்குவோம்



அன்புடன் உங்கள் சொக்லேட்  தம்பி ஜெகதீஸ்
« Last Edit: August 31, 2018, 01:15:10 PM by JeGaTisH »

Offline சாக்ரடீஸ்

  • Hero Member
  • *
  • Posts: 845
  • Total likes: 2403
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Self-respect is a Priority & Luxury to Urself
வளரும் பறவைகளின்
கனவுகள் மிகப்பெரியது
விடியும் வரை
நிஜமாய் இருக்கும் கனவுகள்
விடிந்த பின்
கானல்  நீராய் மறைவது ஏனோ
அந்த கனவுகளுக்கு
விடியல் பிறப்பது எப்பொழுது ?

கனவில் வந்து
உன்னை தொல்லை செய்யாமல்
உன் தூக்கத்தை கலைக்க விரும்பாமல்
விடியும் வரை காத்து கொண்டு இருக்கும்
வறுமை
இந்த நிலை
மாற்றத்தை காண்பது எப்பொழுது ?

தினம் தினம் போராட்டம்
கண்களில் ஏக்கம்
மனதில் ஏமாற்றம்
வயிற்றில் பசி
ஒவ்வொரு இரவும்
பட்டினியில் முடிவுபெறும்
இதுபோன்ற நாட்களும்
முடிவு பெறுவது எப்பொழுது ?

ஒதுங்க இடமும் இல்லை
உடுத்த நல்ல உடையும் இல்லை
உண்ண உணவும் இல்ல
சிறகை விரித்து
பறக்க வேண்டிய பறவைகள்
இன்று
கூலி தொழில் செய்து
குறிக்கோள் இன்றி வாழ்க்கை
செல்லும் பாதையில் சிறகொடிந்து செல்கின்றன
இந்த வறுமை தீர்வது எப்பொழுது ?

வேறுபடும் ஏற்றத்தாழ்வு
ஒரு பக்கம்
வறுமை அறியாதவர்கள்
மறு பக்கம்
வசதி அறியாதவர்கள்

எப்போது தீரும்
இந்த ஏற்றத்தாழ்வு
இந்த ஏக்கம்
இந்த ஏமாற்றம்
இந்த பசி
இந்த பட்டினி
இந்த வறுமை என்று எனக்கு
நானே வினா எழுப்பியபோது ?

இவ்வுலகில்
அறிமுகம் இல்லாத
ஆணை  சகோதரனாகவும்
பெண்ணை சகோதிரியாகவும்
ஏற்று நேசம் காட்டினால் மட்டுமே
வறுமை என்னும் கொடிய அரக்கனிடம்
இருந்து விடுதலை பெற்று
புதியதொரு விடியல் பிறக்கும்
இந்த மனித சமுதாயத்திற்கு ....

ஏற்றத்தாழ்வை எதிர்ப்போம் !
வறுமையை ஒழிப்போம் !
சமூகநீதியை பின்பற்றுவோம் !