Author Topic: எனது உயிர் நண்பி இசைக்கு  (Read 710 times)

Offline thamilan

இசைக்கு பிறந்தநாள்
இசை உலகில் உதித்த நாள்
இனிய இசைக்கு இந்த உலகமே மயங்கும்
அது போல
யாழிசைக்கு மயங்காத மனம் உண்டோ

கலகலப்பான சிரிப்பு 
களங்கமில்லா பேச்சு
கட்டிப்போடும் அன்பு
கலைந்து  போக முடியாத நட்பு
இவை அனைத்துக்குமே சொந்தமான
இசை எனக்கு நண்பியானது
இறைவன் தந்த வரம்

நட்பைத்  தவிர ஏதும் இல்லை
நல்லதைத் தவிர வேறு சிந்தனையில்லை
நகைச்சுவை பேச்சிக்குப் பஞ்சமில்லை
அரட்டை அடிப்பதில் மிஞ்ச யாரும் இல்லை

தாயை காணாத குழந்தை போல
காணாவிட்டால் மனம் ஏங்கும்
கண்டுவிட்டாலோ சந்தோசத்தில் மனம் எகிறும்
பேசினால் மனம் இளகும்
கவலைகளும் பறந்து போகும்

இசையே எனக்கு ஒரு ஒரு அவா
இது பேராசையாகவும் இருக்கலாம்
என்றும் உனது களங்கபடமில்ல நட்பு
மாசு மருவற்ற உனது அன்பு
என்றும் எனக்கு  வேண்டும்
என்றும் எனது உயிர் தோழியாக
நீ வலம்வர வேண்டும் 
« Last Edit: January 06, 2019, 02:15:59 PM by thamilan »

Offline thamilan

Re: எனது உயிர் நண்பி இசைக்கு
« Reply #1 on: January 06, 2019, 02:13:52 PM »
இசைக்கு பிறந்தநாள்
இசை உலகில் உதித்த நாள்
இனிய இசைக்கு இந்த உலகமே மயங்கும்
அது போல
யாழிசைக்கு மயங்காத மனம் உண்டோ

கலகலப்பான சிரிப்பு 
களங்கமில்லா பேச்சு
கட்டிப்போடும் அன்பு
கலைந்து போக முடியாத நட்பு
இவை அனைத்துக்குமே சொந்தமான
இசை எனக்கு நண்பியானது
இறைவன் தந்த வரம்

நட்பைத்  தவிர ஏதும் இல்லை
நல்லதைத் தவிர வேறு சிந்தனையில்லை
நகைச்சுவை பேச்சிக்குப் பஞ்சமில்லை
அரட்டை அடிப்பதில் மிஞ்ச யாரும் இல்லை

தாயை காணாத குழந்தை போல
காணாவிட்டால் மனம் ஏங்கும்
கண்டுவிட்டாலோ சந்தோசத்தில் மனம் எகிறும்
பேசினால் மனம் இளகும்
கவலைகளும் பறந்து போகும்

இசையே எனக்கு ஒரு ஒரு அவா
இது பேராசையாகவும் இருக்கலாம்
என்றும் உனது களங்கபடமில்ல நட்பு
மாசு மருவற்ற உனது அன்பு
என்றும் எனக்கு  வேண்டும்
என்றும் எனது உயிர் தோழியாக
நீ வலம்வர வேண்டும்

Offline யாழிசை

Re: எனது உயிர் நண்பி இசைக்கு
« Reply #2 on: January 07, 2019, 08:03:26 AM »
மிக்க நன்றி தமிழா.... என்னை எந்த அளவுக்கு உங்களுக்கு பிடிக்கும் என்று எனக்கு நன்றாக தெரியும். உங்கள் கவிதையே அதை பறை சாற்றுகிறது.. உங்களை மாதிரி ஒரு இனிய நண்பன் எனக்கு கிடைத்ததில் அதே கடவுளுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.. நீங்க சொன்னது போல் கண்டிப்பாக நம் நட்பு என்றும் தொடரும்....  உங்கள் கவிதை படிச்சதும் உண்மையா சொல்லனும்னா என்னையும் அறியாமல் எனக்குள்ளே நிஜம் ஒரு பூரிப்பு வந்தது ... என் அக்கா கிட்டே எல்லாம் உங்க கவிதையே காட்டி பெருமை பட்டுகிட்டேன் தமிழா... என் எண்ணங்களை எழுத்து வடிவில் சரியாக எனக்கு சொல்ல தெரில ... இருந்தும் ... உங்க கவிதை காந்தம் போல என்னை இழுக்குது ... மீண்டும் மீண்டும் படிக்க தெகிட்ட வில்லை ... நன்றி தமிழா .....