Author Topic: விஞ்ஞான வளர்ச்சி உலகுக்கு தேவையா? தேவையில்லையா?  (Read 5031 times)

Offline thamilan

உலகம் விஞ்ஞானம் இல்லாத ஒரு யுகத்தையும் தாண்டியிருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சியின் உச்சத்தில் நிற்கும் ஒரு யுகத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
விஞ்ஞானம் இல்லாத காலத்திலும் மனிதர்கள் வாழ்ந்தார்கள். இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

விஞ்ஞானம் மனிதனை, நாம் கையால் பிடிக்க மாட்டோமா என ஏங்கிய சந்திரனையே நம் காலடிக்கு கீழ் கொண்டுவந்து விட்டது.
இந்த உலகத்தையே நமது உள்ளங்கைகுள் அடக்கி விட்டது.


அதே நேரம் உலகில் பலவிதமான நோய்கள், இயற்கை அழிவுகள், இதற்கும் மூலகாரணியாக விஞ்ஞானமே விளங்குகிறது.உலக அழிவுக்கு மூலகாரணமாக இருப்பதும் இந்த விஞ்ஞான வளர்ச்சியே.

ஆகவே, இந்த விஞ்ஞான வளர்ச்சி நமக்கு தேவை தானா என எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. விடை உங்கள் மூலம் கிடைக்கலாம் என்ற எண்ணத்தில் இதை விவாத அரங்கில் சமர்ப்பிக்கிறேன்.

உங்கள் கருத்துக்களையும் விவாதங்களையும் இங்கே வைக்கலாம்
நண்பர்களே.

எனது கருத்தை நானும் சொல்வேன்.

நன்றி நண்பர்களே!

Offline Yousuf

விஞ்ஞானம் எனபது கடவுள் நமக்கு கொடுத்த ஒரு அருட்கொடை. இந்த விஞ்ஞானத்தின் மூலமாக தான் நாம் இன்று இங்கு பயன்படுத்தி கொண்டிருக்கின்ற கணினி முதல் இணையத்தளம் வரை அனைத்தும் நமக்கு பயனுள்ளதாக இருக்கிறது. இப்படி ஒரு விஞ்ஞானம் நமக்கு கிடைக்க வில்லை என்றால் எங்கோ இருந்து கொண்டு நம் அனைவரும் ஒன்றாக இங்கு விவாதித்து கொண்டு நட்புகளை பரிமாறி கொண்டு இருக்க முடியாது.

அதே போல் விஞ்ஞானத்தினால் சில பா திப்புகளும் இருக்கத்தான் செய்கிறது. மனிதர்களின் நன்மைக்கு பயன்படுத்த வேண்டிய விஞ்ஞானத்தை அழிவுக்கும் பயன்படுத்தி கொண்டு தான் இருக்கிறார்கள். இது தடுக்க பட வேண்டியது.

ஆகவே விஞ்ஞானத்தை மனிதர்களின் நன்மைக்காக மட்டும் பயன்படுத்தினால் அது என்றென்றும் மனிதர்களுக்கு நன்மை தான் பயக்கும் எனபது என்னுடைய கருத்து.