Author Topic: என் காதல்  (Read 330 times)

Offline thamilan

என் காதல்
« on: January 28, 2018, 11:51:21 PM »
என் காதல்
வளையாத இரும்பல்ல
அது வளைந்து கொடுக்கும்
நாணலைப் போன்றது
அதனால் தான் புயல்களோடு
போராட முடிகிறது     
      *   *   *
என் காதல்
பூக்களால் ஆனதல்ல
முற்களால் ஆனது
அதனால் தான்
பிறரின் கால் padutha இடத்தில் இருக்கிறது
           *   *   *
என் காதல்
கடிகாரத்தைப் போன்றதல்ல
அதன் முற்களை போன்றது
அதனால் தான்
இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது
         *   *   *
என் காதல்
malaria போன்றதல்ல
வேரைப் போன்றது
அதனால் தான்
அது ஆழத்தில் இருக்கிறது
         *   *   *
என் காதல்
மேகத்தைப் போன்றதல்ல
அது ஆகாயத்தை போன்றது
அதனால் தான்
அது கலையாமல் இருக்கிறது
           *   *   *
என் காதல்
வாழ்வைப் போன்றதல்ல
மரணத்தைப் போன்றது
ஆம்
நிச்சயம் ஒரு நாள்
நிறைவேறக் கூடியது