Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
Wish You Many More Happy Returns Of The Day Amrita sis🎂💐😍♥️

2
GENERAL / Re: Did you know that 🤔🤔🤔
« Last post by MysteRy on July 06, 2025, 06:22:45 PM »

Most people remember me for a brand... but almost no one knows I nearly died without leaving anything behind. 😞📉

Before anyone ever tasted what I invented, my life was a series of failures. I was born in Germany and moved to Switzerland chasing any chance life might offer. I never finished pharmacy school. I was broke. By 25, I felt like a failure. I lived in a rented room, worked in other people’s labs, and couldn’t even afford a proper lab coat. 🧪

But what truly shattered me was seeing my neighbors’ babies die of malnutrition—tiny lives fading away because they couldn’t digest breast milk. That’s when I said: This can’t go on. I began experimenting. And failed. Over and over. Some formulas made children vomit. Others had no nutrients at all. People mocked me. Said I was crazy. Told me to give up. 👶💔

Then one desperate mother begged me to try to save her premature baby—he couldn’t eat anything, and doctors had given up. I gave him a formula I’d been refining: cow’s milk, wheat, and sugar. The baby survived. That moment changed everything. It was the birth of the first infant formula in history. 🚼

No, I didn’t get rich overnight. I fought through medical skepticism, legal barriers, resource shortages, and ruthless competitors. But now I had a purpose: not just to sell food, but to save lives. 💥

“Sometimes, the pain you witness in others becomes the spark to rewrite your own story.”
“Don’t look away from suffering—use it as fuel. Because when you help others live, your own life gains meaning.” 🙌

— Henri Nestlé
3
கவிதைகள் / Re: நீ வருவாய் என ❤️
« Last post by Asthika on July 06, 2025, 06:02:46 PM »
வேதா 💗💗உண்மையான வரிகள் .... 🫂🫂🫂
4
Happy Birthday Amrita sister
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்றென்றும் மகிழ்ச்சியுடன் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்
5
குறள்  - 224

அதிகாரம்    ஈகை

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.


பொருள்
ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்.
8
Love & Love Only / Re: ❤️❤️❤️ THE LOVE OF MY LIFE ❤️❤️
« Last post by MysteRy on July 06, 2025, 05:36:43 PM »
I was just a little girl in his arms.
But that hug… it was everything.
Strong, safe, warm.
Like the world could fall apart and I’d still be okay—because Dad was holding me.

Now he’s gone.
And no one tells you how quiet grief is.
It doesn’t scream.
It whispers in the empty seats, in the silence after a laugh, in the way your chest tightens at night when no one's watching.

Sometimes I catch myself reaching for my phone, wanting to text him.
“Guess what, Dad!”
But then I remember.
There’s no reply.

Sometimes memories of my Dad sneak out of my eyes and roll down my cheeks. 💔😔
And no matter how much time passes,
that little girl inside me still cries for her Dad.

I’d give anything to feel that hug again.
Just one more time.

9


இருபதாம் நூற்றாண்டுலகம் வரலாற்றில் மறக்க முடியாத பல தேசிய தலைவர்களையும், தியாகிகளையும், சர்வாதிகாரிகளையும் சந்தித்துள்ளது. அவர்களுள்  மகாத்மா காந்தியும், அடோல்ப் ஹிட்லரும் சமகாலத்தில் வாழ்ந்த இரு மாறுபட்ட சிந்தனைகளை உடைய தலைவர்களாவர்.   'அஹிம்சை' எனும் வன்முறையற்ற போராட்டத்தின் மூலம் இந்திய சுதந்திரத்தை ஈட்டிய காந்தி எனும் மாமனிதர் வாழ்ந்த காலத்திலேயே சுமார் ஐந்து கோடி மக்களுக்கு  மரணத்தை விளைவித்தவரான ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரும் வாழ்ந்தார், என்பது வியப்பிற்குரியதாகும். இவர்கள் கொள்கையளவில் இரு துருவங்கள் என்ற போதிலும்  இருவருக்கும் சில விடயங்களில் ஒத்த தன்மை காணப்பட்டது என்பதை நாம் மறந்து விட முடியாது.

மகாத்மா காந்தி 1869 அக்டோபர் இரண்டாம் தேதி கரம்சந்திர காந்தியின் #நான்காம் மனைவின் கடைசி மகனாக குஜராத்தில் பிறந்தார். தாயார் புத்லிபாய் ஆவார். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எனும் முழுப் பெயர் கொண்ட காந்தி பள்ளியில் படிக்கும் போதே நேர்மையானவராக விளங்கினார். சிறு வயதில் 'அரிச்சந்திரன்' நாடகத்தை பார்த்த இவர் அரிச்சந்திரனைப் போன்று எப்போதும் உண்மை பேச வேண்டும் என்று சங்கற்பம் செய்து கொண்டார்.  பதின்மூன்று வயதில் கஸ்தூரிபாயை இவருக்குத்   திருமணம்  செய்து வைத்தனர். காந்தி தனது பதினாறாவது வயதில் தந்தையை இழந்தார்.   பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்ட காந்தி மேற்படிப்புக்காக வெளி நாட்டுக்குச்   சென்றார்.    எனினும் மேல்நாட்டுக்குச் சென்றால் தன் மகன் கெட்டுப் போய்விடுவான் எனத் தாயார் புத்லிபாய் அஞ்சினார். எனவே ஜைன முனிவர் ஒருவரின் ஆலோசனைப்படி 'மேல்நாட்டில் நான் மது மாது மாமிசம் தொடமாட்டேன்' என்று தாயாரிடம் சத்தியம் செய்து கொடுத்தார். இதனை உரியபடி நிறைவேற்றினார்.

      'கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்றை நடத்தி உலகமகா பேரரசை வீழ்த்தியவர்' என்று சிறப்பிக்கப்படும் மகாத்மா காந்தியின் 'அஹிம்சை' சிந்தனையின் தோற்றம் தென்னாபிரிக்காவிலேயே ஏற்பட்டது. அங்கு இந்தியர்களுக்காக 1906 செப்டெம்பர் 16ஆம் நாள் வன்முறையற்ற முறையில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டார். 'எதிரியின் தோட்டாக்களுக்கு அடிபணிந்து போவதல்ல சத்தியாக்கிரகம் கொடுங்கோன்மையின் மனவுறுதியின் பெயரில் ஆன்மா தொடுக்கும் போர் தான் சத்தியாக்கிரகம்' என காந்தி தனது போராட்ட வடிவம் தொடர்பில் எடுத்துரைத்தார். தென்னாபிரிக்காவில் 1915 இல் நடைபெற்ற போராட்டம் வெற்றி பெற்றது. இவ்வாண்டு காந்தி இந்தியா திரும்பினார். அவரது வருகை இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றுவதாக அமைந்து விட்டது.
           அரசியலில் பிரவேசித்த காந்தி 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தம் சத்தியாக்கிரக இயக்கத்தை ரௌலாட் சட்டத்திற்கெதிராகத் தொடங்கினார்.  1920 ஆம் ஆண்டு ஒத்துழையாமை திட்டத்தை அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் ஏற்றுக் கொள்ளும்படி செய்தார். இதன்படி ஆங்கிலேயர் வழங்கிய பட்டம்   பதவிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றார். 
 ஆங்கிலேயரின் பாடசாலைகளுக்குப் பிள்ளைகளை அனுப்பக்கூடாது என்றும் இந்தியாவிற்கு  முழுசுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.  வெளிநாட்டுத் துணிகளைப் பகிஸ்கரித்து அவற்றினை நாடு முழுவதும் எரிக்கச்செய்தார்.     இச்சந்தர்ப்பத்தில் உண்ணாவிரதம் ஒரு   புதிய போராட்ட மார்க்கமாக கருதப்பட்டது. அஹிம்சை பிரதான போராட்ட வடிவமாக்கப்பட்டது. இந்திய தேசிய இயக்கத்திற்கு முக்கியமான  பங்களிப்பை காந்தி வழங்கினார்.

        சிறுபான்மையினர் பிரித்தானியரின் பிரித்தாளும் தந்திர வலையினுள் விழுந்து விடலாகாது' என காந்தி வலியுறுத்தினார். இந்து-முஸ்லீம் பிளவை அவர் ஒரு போதும் விரும்பியிருக்கவில்லை. 1919இல் முஸ்லிம்களின் அமைப்பான கிலாபத் இயக்கத்திற்கு இவர் தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது. இந்து-முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்ட காந்தி எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வி கண்டமை பாகிஸ்தானின் தோற்றத்தின் மூலம் புலனாகின்றது.
     
       அன்னியர் ஆட்சியை இந்தியாவிலிருந்து   நீக்குவது மட்டுமின்றி சமூகத் தீமைகளைக் களைவதையும் நோக்காகக் கொண்டு காந்தி செயற்பட்டார். பின்தங்கிய மக்களை மூடப்பழக்கங்களிலிருந்து விடுவிப்பதுடன், தீண்டாமையைச் சமூகத்திலிருந்து ஒழிப்பதற்கும் மிகக்கடுமையாகப் பாடுபட்டர். கதர் இயக்கம், வரிகொடா இயக்கம்,
சட்டமறுப்பு இயக்கம் என்கின்ற போராட்ட வழிமுறையின் ஊடாக அஹிம்சை நெறிதவறாமல் இந்திய சுதந்திரத்தைப் பெறப் போராடினார்.

       மகாத்மா காந்தி எந்த சுதந்திரத்திற்காக வாழ்நாளெல்லாம் போராடினாரோ அந்த சுதந்தரம் அவருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமையவில்லை. 1947 ஓகஸ்ட் 15ஆம் நாள் சுதந்திர இந்தியா உருவாகியது. அந்நாளில் இந்தியாவிலிருந்து பிரிந்து பாகிஸ்தான் எனும் புதிய நாடும் தோற்றம் பெற்றது.  காந்தி பாகிஸ்தானின் பிரிவினையை ஒருபோதும் விரும்பியிருக்கவில்லை.         இவர் சுதந்திர வைபவங்களில் கலந்து கொள்ளாது நாட்டின் பல பாகங்களிலும் நிகழ்ந்து கொண்டிருந்த வகுப்புக் கலவரங்களால் வேதனையுற்று கல்கத்தா சென்றார்.    அங்கு கலவரப்பகுதிகளில் அமைதி திரும்ப முயற்சித்தார். தனது மரணத்தின் போதும் தான் கடைப்பிடித்த கொள்கையைப் பின்பற்றிய மகான் காந்தியாவார். 1948 ஜனவரி 30ஆம் தேதி நாதுராம் கோட்சேயின் துப்பாக்கியின் குண்டுகளுக்கு  பலியான வேளையிலும் அஹிம்சை கொள்கையை கடைப்பிடித்தார்.

           வட ஆஸ்திரியாவின் பிரானவ் என்ற ஊரில் 1889 ஏப்ரல் 20ஆம் தேதி ஹிட்லர் பிறந்தார். சுங்க இலாகா அதிகாரியாக இருந்த அலாய்ஸ் ஷிக்கிள் கிரப்பர் ஹிட்லர் என்பவரின் #மூன்றாம் மனைவி; கிளாராவின் நான்காவது மகனே அடால்ப் ஹிட்லர். பிறந்தது முதல் ஹிட்லர் நோஞ்சானாகவே இருந்தார். பள்ளியில் படிக்கும் போது ஹிட்லர் வகுப்பில் முதல் மாணவராகத்  திகழ்ந்த போதிலும் பின்னர் படிப்பில் ஆர்வம் குறைந்தது. ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டினார். போர் பற்றிய கதைகள் படிப்பதில் அதிக ஆவல் கொண்டிருந்தார். ஹிட்லரின் 14ஆம் வயதில் அவரது தந்தை இறந்து போனார்.
    ஹிட்லர் தனது 17வது வயதில் பள்ளி இறுதித் தேர்வில் தேறினார். இதற்காகக் கொடுத்த சான்றிதழை வாங்கிக் கொண்டு வரும் வழியில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதுடன்  சான்றிதழையும் கிழித்தெறிந்தார். இதற்காக ஆசிரியர் அவரைக் கண்டித்தார். அன்று 'இனி என் வாழ் நாளில் சிகரெட்டையும் மதுவையும் தொடமாட்டேன்' என்று சபதம் செய்தார். அதனைத் தனது கடைசி மூச்சுள்ளவரை பின்பற்றினார். சர்வாதிகாரி ஹிட்லரின் இப்பண்பு ஆச்சரியத்திற்குரியது.

      ஹிட்லர் சிறந்த ஓவியராகவும் விளங்கினார். இளவயதில் காதலில்             தோல்வியுற்றதால் இராணுவத்தில் இணைந்து கொண்டார். முதலாம் உலகப்போரில் ஜேர்மனி இராணுவத்தில் ஒரு படைவீரராக பணியாற்றினார். போரில் ஜேர்மன் தோற்றத்திற்கு ஜனநாயக வாதிகளும் யூதர்களும் தான் காரணமென ஹிட்லர் நினைத்தார். 'உலகில் ஜேர்மனியரே உயர்ந்த இனத்தினர். உலகம் முழுவதையும் ஜெர்மனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்' என விரும்பினார். பேச்சுவன்மை மிக்க ஹிட்லர் 'தேசிய சோசலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சி'யில் இணைந்து மிக விரைவில் கட்சித் தலைவரானார். அரசாங்கத்திற்கெதிராக மக்களை தூண்டிவிட்டு ஆட்சியைக் கைப்பற்ற முயன்ற போதிலும் அதில் தோல்வி கண்டு சிறை சென்றார். சிறையில் இருந்த போது 'என் போராட்டம்' எனும் பெயரில் தன் சுயசரிதையை எழுதினார்.

1928 இல் நடந்த தேர்தலில் ஹிட்லரின் கட்சி தோல்வி கண்டதைத் தொடர்ந்து தமது கட்சியின் பெயரை 'நாஜிக்கட்சி' என மாற்றினார். ஹிட்லரின் இடைவிடாத உழைப்பாலும், பேச்சு வன்மையாலும், இராஜதந்திரத்தாலும் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தனர். மக்கள் போராட்டத்திற்கு அடிபணிந்த ஜனாதிபதி ஹிண்டன்பேர்க் ஹிட்லரிற்கு பிரதமர் பதவியை வழங்கினார் (1933 ஜனவரி 30). ஹிட்லர் பிரதமரான ஒன்றரை வருடத்தில் ஹிண்டன்பேர்க் மரணம் அடைந்தார். சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ஹிட்லர் ஜனாதிபதி பதவியை கைப்பற்றிக் கொண்டதுடன் ஜேர்மனியின்  சர்வாதிகாரியாகவும் மாறினார்.

'இனி ஜேர்மனியில் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடமில்லை' என்று அறிவித்தார். யூதர்களை அடியோடு அழிக்க வேண்டும் என்று முடிவு செய்து ஒரு பாவமும் அறியாத யூதர்களைக் கைது செய்து சிறையில் பட்டினி போட்டுச் சித்திரவதை செய்து கொன்றார். பலர் இருட்டறையில் அடைக்கப்பட்டு விஷப்புகையால் கொல்லப்பட்டனர். தினமும் சராசரியாக ஆறாயிரம் முதல் பத்தாயிரம் பேர் விஷப்புகையிட்டுச் சாகடிக்கப்பட்டனர். ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை 50 இலட்சமாகும்.

        உலகத்தையே தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர உலக நாடுகள் பலவற்றின் மீதும் போர் தொடுத்தார். இந்நடவடிக்கை இரண்டாம் உலகப்போருக்கு இட்டுச் சென்றது. எனினும் ஹிட்லரின் செயற்பாடுகள் மட்டுமே இரண்டாம் உலகப் போருக்குக் காரணமெனக் கூறிவிட முடியாது. முதலாம் உலகப்போரில் தோல்வி கண்ட ஜேர்மனி வேர்சைல் உடன்படிக்கையின் மூலம் நேசநாடுகளால் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது.  இதனால் அந்நாடுகள் மீது ஜேர்மனியர் ஆத்திரம் கொண்டிருப்பது இயல்பானதே. ஹிட்லரால் ஆரம்பிக்கப்பட்ட யுத்தத்தில் 1940இல் அவருக்குப் பெரும் வெற்றிகள் கிடைத்தன. எனினும் போரில் அமெரிக்காவும் ரஷ்யாவும் குதித்ததன் பின் ஜேர்மனிக்குப் படிப்படியான சரிவு ஏற்படலாயிற்று. ரஷ்யப்படைகள் பெர்லின் நகரை சுற்றிவளைத்ததன் காரணமாக 1945 ஏப்ரல் 30ஆம் தேதி ஹிட்லர் தற்கொலை   செய்து கொண்டார்.
     ஹிட்லர் கொன்றது யூதர்களை மட்டுமல்ல, கணக்கற்ற ரஷ்யர்களும், நாடோடிகளும் கூட கொல்லப்பட்டனர். இவர்கள் தவிர தாழ்ந்த இனத்தவர் என்றோ, அரசுக்கு எதிரிகள் என்றோ கருதப்பட்ட ஏராளமானோரும் கொல்லப்பட்டனர். இப்படுகொலைகள் வெறும் ஆத்திர உணர்ச்சியாலோ போரில் ஏற்பட்ட மனக்குமுறலிலோ செய்யப்படவில்லை. இவரது மரண முகாம்கள் பெரிய வாணிக நிறுவனங்களைப் போன்று கவனமாகத் திட்டமிட்டு அமைக்கப்பட்டன. கொலை செய்யப்படுபவர்களின் விவரங்கள் பதிவேடுகளில் குறித்து வைக்கப்படடன. ஒவ்வொரு முகாம்களிலும் இத்தனை பேர் கொல்லப்பட வேண்டும் என்று இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. இவையாவும் ஹிட்லரின் ஆணைப் படியே நடைபெற்றன.

          மகாத்மா காந்தியும் ஹிட்லரும் சமகாலத்தவர்கள் என்ற போதிலும் கொள்கையளவில் வேறுவேறு திசையினராவர். எனினும் இவர்கள் இருவரும் தாய் மீது மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்டவர்கள். காந்தி தன் தாய்க்குச் செய்து கொடுத்த சத்தியத்திற்காக வெளிநாட்டில் மது , மாது மாமிசம் என்பவற்றை தொடாதிருந்தமை அவரது தாய் மீது அவர் கொண்ட அன்பையும் மதிப்பையும் வெளிக்காட்டுகின்றது. ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட பொழுது அவரது வலது கரம் தாய் கிளாராவின் புகைப்படத்தை மார்போடு அணைத்தபடி இருந்தது. காந்தியும் ஹிட்லரும் சிறு வயதில் செய்த சத்தியத்திற்காக மது மாமிசத்தை இறுதி வரை உண்ணவில்லை. சர்வாதிகாரி ஹிட்லரும் காந்தியடிகளும் குழந்தைகளிடம் அன்பு கொண்டவர்கள். இவர்கள் இருவரும் நாட்டுப்பற்று மிக்க தலைவர்கள்.
       அன்பை அடிப்படையாகக் கொண்டு, பகைவனையும் நேசித்து, வன்முறையை அறவே விட்டொழித்து கொடுமைகளை அப்புறப்படுத்தவதற்குக் காந்தி கையாண்ட 'சத்தியாக்கிரகம்' எனும் அறப்போர் முறை இந்தியாவை விட்டு வெள்ளையரை வெளியேற்றுவதில் வெற்றி கண்டது. ஆனால் வன்முறையை ஆயுதமாக்கி உலகநாடுகள் பலவற்றையும் பகைவனாக்கி கோடிக்கணக்கான மக்களைக் கொன்று கொடுமை செய்து ஜேர்மனியை விஸ்தரிக்கக் ஹிட்லர் எடுத்துக்கொண்ட சர்வாதிகாரம் இறுதியில் தோல்வியைத் தழுவியது. காந்தி எனும் மாமனிதரை மனிதகுலம் கொலை செய்தது. ஹிட்லர் எனும் சர்வாதிகாரி தனது உயிரை தானே அழித்துக்கொண்டார்.
10
SMS & QUOTES / Re: Random Quotes, Pics, Comedy etc. - Everyday a Suprise
« Last post by Ishaa on July 06, 2025, 01:35:59 PM »
Pages: [1] 2 3 ... 10