Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 146  (Read 2754 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 146
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக    வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 12, 2018, 10:57:44 AM by MysteRy »

Offline SwarNa


நா வரள
ஒரு வாய் தண்ணீருக்கு அலைந்தேன்
நிழலில் ஒதுங்க மரமும் இல்லை
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
ஓடிய தார்ச்சாலையில்
தென்பட்டது கானல்நீரே

நிழலாடிற்று மனதில்
பாட்டன் கைப்பிடித்து
வயல்வெளிகளில் திரிந்ததும்
இளநீரும்,நுங்கும்
ஆற்றில் ஓடிய நீரும்
கண்மாய்க்கரையில் அமர்ந்து
துள்ளி விளையாடிய மீன்களை
ரசித்ததும்
சேற்று வயல்களில் நாற்றுகளின்
ஊடாய் பயந்து நடந்ததும்
பஞ்சு வெடித்த பருத்திச்செடியின் அடியில்
துயில் கொண்டதும்
சுற்றிலும் நீரைக்கண்டேன்
எங்கும்,எதிலும் செழிப்பும்,வளமையும்
அன்று

இன்றோ
வறண்ட நிலங்களும்,இலைகளற்ற மரங்களுமே
காணக்கிடைக்கிறதுஒரு குடம் நீருக்கு
பல கல் தொலைவு நடக்கும்
எம் சகோதரிகளைக் காண்கையில்
வருத்தமே மேவியது
விதைத்திட்ட வினையை
அறுவடை செய்கிறோம்

உறங்கியது போதும்
விழித்தெழு மானிடா
மரங்களை வளர்த்திடு
ஊறிடும் நிலத்தடிநீரும்
வாழ்த்தும் உன் சந்ததி
கையில் நீருடன்
« Last Edit: May 09, 2017, 07:02:51 PM by SwarNa »

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
பஞ்ச பூதமாம் உனக்கே பஞ்சமாகி
போன நிலையோ இங்கு
அக்கினியோ உன்னை உறிஞ்சி விட
வற்றி போனாயே இருந்த
இடம் கூட அறியாமல்

குடி நீருக்காய் திறந்து
வைத்த குழாய் எல்லாம்
காற்று போகவே வழி
விடுகிறது

கை நீட்டிஉன்னை எதிர் பார்த்தவர்
கையில் வந்து விழுகிறதே
ஒரு துளி கண்ணீராய்

பச்சை கம்பளங்கள் விரித்திருந்த
பூமி இன்று பற்றிய
காடாய் மாறியதே
காரணமானவர்களோ ஆராய்ச்சி
எனும் பேரில் செய்கின்ற
கோமாளித்தனங்கள் எமக்கே
வினையானதே

நீருக்கு  நண்பனாம் மரங்களையே
வெட்டி அழித்தால் கார்மேகம் கூட
கருணை காட்டாதே நமக்கு

மனிதநேயம் கொண்ட மானிடனாய்
ஒரு நொடியாவது வாழ்ந்திடவே
வீட்டுக்கு  ஒரு மரமாம் அதை
நீருற்றி காத்திடுவோம்

வீட்டுக்கு ஒரு மரம்
அதுவே ஊருக்கு நூறாகும்
நாட்டுக்கு ஆயிரமாம்
அதுவே உலகுக்கு  கோடி ஆகும்


மரங்களை நடுவீர் மழை வளம் பெறுவீர்


                             **விபு**
« Last Edit: May 07, 2017, 02:52:38 PM by VipurThi »

Offline SunRisE

  • Full Member
  • *
  • Posts: 179
  • Total likes: 408
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நம் வாழ்க்கை நம் கைகளில்
இயற்கை  தாயின்
இணையில்லா படைப்பு நீ
தண்ணீர்

தாகம் தீர்த்திட
தாராளமாய் பல்வேறு
ரூபத்தில் பவனி வரும்
பாரிவள்ளலின் அன்னை நீ

மாதங்கள் முழுதும்
உழைத்து வீடு திரும்பும்
தலைவனின் பசியாற
அடுமனையில் பாத்திரம்
உணவின்றி உறங்கிய போதும்
அட்சய பாத்திரமாய்
அவன் கைகளில் ஏந்தி
அருந்திடும் மானிடர் பலபேர்

நீரற்ற குடங்களுடன் வீடு மறந்து
சாலை முனைகளில்
நீ வரும் வரவை
எதிர்பார்த்து ஏங்கி நிற்கும்
எம் குல பெண்டிர் தான் எத்தனை

நீ வந்து விட்டால்
பசி மறந்து வீடு மறந்து
அடித்து பிடித்து உன்னை அள்ளிச்செல்லும்
அவர்களின்
வரப்பிரசாதம் நீ

விவசாயிகளின் கனவுகளை
நனவாக்கி
அவன் உண்ணும் உணவிற்கு
உண்மையான நண்பன் நீ
அவனும் உன்னை மறக்காமல்
நீர் அகாரம் என்று உன்னை
அருந்தி மகிழ்வான்

இயற்க்கை நன்கொடை
ஆனா நீ
இன்று வியாபாரம் ஆகிவிட்டாய்

மலைகளிலும் வயல்களிலும்
ஆற்றங்கரைகளிலும்
ஓடி விளையாடும் உன்னை
காண்பது  அரிதாகி போனது

அமினோ நெகிழிகளில் அடைக்கலப்படுத்தி
குளிர்ந்த அறைகளில் அடைத்து
அழகு பார்க்கிறது
பொருளாதார சந்தை
மா மேதைகள்

உன்னை நினைத்து உருகும்
விசாயி
உன்னை நினைத்து உருகும்
எளியோரின்
கைகளுக்கு நீ கானல் நீராகிப்போனாய்

விவசாயின் துயர்துடைத்து
பசுமை தாயின் களங்கம் தீர்த்து
தாகம் தீர்க்கும் சுடரொளியே
நீ எம் மக்களின் கானல் நீராகி
விடாதே

தாகம் தீர்த்த உன்னை
தஞ்சம் காப்பது
எம் கடமை

உனக்கு நிழலாய் உரமாய்
உன் உற்ற தோழன்
மரங்களை
நான் நட்டு வைக்கின்றேன்
மாதம்தோறும்
மகிழ்திரு நீ என்றும்
எங்களுடன்

சன் ரைஸ்


Offline Ms.SaraN

பஞ்ச பூதங்களுக்கே  தலைவன் நீ
பூமியை சுற்றி நீயே அதிகமாக இருக்கிறாய்
நீ நினைத்தால் பூமியை  அழித்து  விடலாம்
ஆனால் பொறுமையின் சிகரம் நீ
எத்தனை துன்பம் தந்தாலும் அமைதிகாக்கிறாய்

தண்ணீர் என்ற உன் பெயரை உச்சரித்தாலே
அப்படி ஒரு குளிர்ச்சி மனதினுள்
உன்னை பார்த்தால் அள்ளி அணைக்க தோன்றும்
பலரோ  உன்னை காண்பதே தவமென நினைகிறார்கள்
நீ  கிடைக்காமல் பலர் ஏக்க  பார்வை பார்க்கிறார்கள்


பலருக்கோ நீ கிடைப்பதால் அப்படி ஒரு அலட்சியம்
உன்னால் வளர்ந்த மரத்தை வெட்டுகிறார்கள்
நீ அள்ளித்தந்த பசுமையை அழிக்கிறார்கள்
அதை பொறுத்து கொள்ளாமல்தான்
பலதடவை விஸ்வரூபம் எடுத்தாய்
ஆனால் இன்னும் திருந்தவில்லை இவர்கள்

உன்னுள் நஞ்சை கலக்குகிறார்கள்
உன்னுள் வாழும் பல உயிர்களை கொல்கிறார்கள்
அதை பொறுத்து கொள்ளாமல் மழையாய் வந்து கதறுகிறாய்
இதை புரிந்து கொள்ளாமல் சொர்க்கம் என்று நினைத்து
உன் அழுகையை புன்னைகையோடு அனுபவிக்கிறார்கள்


இதையெல்லாம் பொறுக்க முடியாமல் தான்
குழாயில் அருவியாய் துள்ளி விளையாடிய நீ
 சொட்டு மருந்து போல் காட்சி அளிக்கிறாய்
இப்போதெல்லாம் உன்னை  பார்த்தாலே பலர் கும்பிடுகிறார்கள்
ஆனால் உனக்குத்தான் மனம்  இரங்கவில்லை

இனிமேலும் பொறுமை காக்காதே மானிடரே
நீர்தானே என்று அலட்சியம் செய்யாமல்
நீ பெற்ற குழந்தை போல் காத்து பழகு
நீரை  காத்தாலே  உன் தலைமுறை வாழும்
உலகம் செழித்திட நீர் தேவை இதை என்றும் மறவாதே
« Last Edit: May 07, 2017, 11:24:01 PM by Ms.SaraN »

Offline DeepaLi

ஏழையின் முதல் உணவு குடிநீர்..
தண்ணீர் எங்கே என்று ஏங்குகிறோம்..
தண்ணீருக்கு வழி இல்லாமல் தவிக்கிறோம்..
நீர் நிரம்பிய ஆற்றை கண்டிலோம்..
கேணிகள் இன்று எங்கும் அறியோம்..



தண்ணீரில் நீந்துகிறது மீன்..
கண்ணீரில் நீந்துகிறான் மீனவன்..
நீரின்றி தவிக்குது விவசாயம்..
கண்ணீரில் கலக்குது  விவாசாயியின் உள்ளம்..



குடிநீரின்றி அலையும் மக்கள்..
தாக வறட்சியில் நாடு..
இது நீர் மேல் இட்ட சாபமா..
இல்லை மக்கள் செய்த பாவமா..



தண்ணீர் தண்ணீர் என்று புலம்பி..
தடியடி வன்முறை எங்கும் பெறுக..
வழக்குரைக்க நீதிமன்றங்கள்..
என்று தாண்டி ஓட..



தண்ணீரை ஓட விடாமல் அடக்கி..
அணைகளில் தேக்கி..
பற்றாக்குறை என்று மனிதன் ஓலமிட..
பயிரை வளர்த்து நீர் வரப்பு இல்லாமல்..
அவை வாட..



மனமிழந்து தன்னுயிரை விட்டு..
கதுருகிறான் மனிதன்..
இன்னொரு எல்லையில்..



காலத்தின் கோலமா ஞாலத்தின் அவலமா..
காசுக்கு விற்றிடும் குடிநீரின் நிலை இங்கே..
காத்திடும் அரசும் வாய்பொத்தி இருப்பதேன்...
கண்மூடி நிற்பதேன்.. மௌனம் காப்பதேன்..



நினைத்து பார்த்தால்..
தண்ணீருக்காகவா இவ்வளவு..
என்று மயங்கி துவள்கிறது நெஞ்சம்..



Deepali :)
« Last Edit: May 08, 2017, 04:39:19 PM by DeepaLi »

Offline ReeNa

காத்திருக்கின்றேன் உனக்காய்
மழைத்துளியே
எங்கே நீ மறைந்திருக்கின்றாய்
பூமி அழுகின்றதே
உதடுகள் வெடிக்கின்றதே

சொட்டு சொட்டாக விழுகின்றாய்
நீர்க்குழாயில்
கைகளை இணைத்து உள்ளங்கைகளில்
உன்னை சேர்க்கின்றேன்
தொண்டை நனைக்க விரும்புகின்றேன்
ஆனால் என் கண்ணீரைவிட 
சிறு அளவுதானே நீ

பெரும் மூச்சோடும்
பெரும் எதிர்பார்ப்போடும்
நிமிர்ந்து வானம் பார்க்கின்றேன்
சல சலவென்று மழைத்துளியாக
வருவாயா என்று

எத்தனை நாட்கள் இன்னும்
என்னை ஏமாற்றுவாய்
உன்னை மதிக்காத மனிதனிடம் கோவமா?
இல்லை அவன் சந்ததி மீதான சாபமா ?
மனம் இரங்கும் இந்த பூமிக்காக
நீர் இல்லை என்றால் நானும் இல்லை

உலகின் உயிர் தண்ணீர்
நீர் இல்லை என்றால் கண்ணீர்
மனம் இரங்குவாயா

« Last Edit: May 10, 2017, 07:17:59 PM by ReeNa »

Offline AnoTH

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 323
  • Total likes: 1595
  • Karma: +0/-0
  • Gender: Male
  • சோதனைகளை சாதனையாய் மாற்று
வானிலிருந்து வீழும் ஒவ்வொரு துளி
    மழை நீரும் சங்கமித்திட இடமெங்கே?
மலை மீது மழை மோதி அலையெனத் திரண்டிடும்
    நதி நீர்  நீ எங்கே ?
பாறைகள் மீது வேகமாய்ப் பாய்ந்து
    ஓடிவரும் ஓடை  நீ எங்கே?

விவசாயி அவன் விதை விதைக்கப் பயன்தரும் நீர்
விஷமாய்மாறி வியாபாரமானதுவே...........
பசுமையாக்கிப் பரந்து நின்று பாரதம் காக்கும் நீர்
பானமாய் மாறி பாழாய்ய்ப்போனதுவே............

குடிமை வாழ்வியலில் கலந்திட்ட நீர் அது
குடுவை எனும் சிறையானதே.........
உடைமை இழந்தோன் நம் உழவன் அவன்
உழைக்க ஊருணிகள் மறைந்து போனதுவே......

வாவியாகி நமைக் காத்த நீர் அன்று,
வாளியாகி எமைக் காக்க வைக்கும்
நிலை தான் இன்று ........

தண்ணீருக்காய் காத்திருக்கும் நம் சமூகம்
கையேந்தியும் பயன்தராக் கண்ணீரால்
தொடரும் தருணம்...........

நீர் நிலைகளை மீட்டெடுக்க காத்திருப்போம்
எமது கண்களில் நீர் வற்றும் வரை
அதனையும் மறந்திடுவோம் ...........
« Last Edit: May 09, 2017, 06:18:57 PM by AnoTH »

Offline ChuMMa

"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் "


தமிழ் தாய் வாழ்த்தையும் நீர் கொண்டே தொடங்கினான்

என் தமிழன்...

வீட்டுக்கு வரும் விருந்தினர் அனைவர்க்கும்
முதலில் தண்ணீர் கொடுத்தே உபசரிப்பான் அவன்

ஆறுகள் அனைத்துக்கும் தான் உயர்வாய் மதிக்கும்
பெண்ணின் பெயரையே வைத்தான் அவன்

ஆற்றில் பார்த்தார் உன்னை என் பாட்டன்
கிணற்றில் பார்த்தார் உன்னை என் அப்பா
குழாயில் பார்க்கிறேன் உன்னை  நான்
குப்பியில் பார்க்கிறான் உன்னை என் மகன்
எங்கு பார்ப்பானோ உன்னை என் பேரன்

வேடிக்கையாய் தெரிந்தாலும் சந்ததியின்
அவலம் அறைகிறது என் கன்னத்தி..ல்

தன் உடல் வியர்வை துளியை கூட உரமாக்கி
விவசாயம் செய்தான் அவன்

வானுயர கட்டிடங்கள் கட்டிய மனிதன்
அழகு பார்த்தான் வானுயர்ந்த அழகான மரங்களை வெட்டி


வெட்டியது மரம் அல்ல தன் சந்ததியின்
மரண வாசலின் முதல் படி என அறியாமல்


தவறி பெய்யும் மழையையும் சேர்த்து வைக்க
தவறி விட்டோம்

இனி மிஞ்சி இருப்பது என் கண்களின் ஓரத்தில்
எட்டி பார்க்கும் கண்ணீர் துளியே


அது வற்றுவதற்குள் விழித்திடு மனிதா !


« Last Edit: May 08, 2017, 03:12:26 PM by ChuMMa »
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".