Author Topic: வெள்ளி மழை  (Read 575 times)

Offline HBK

  • Newbie
  • *
  • Posts: 41
  • Total likes: 61
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Ninaivil Vaithu Kanavil Kanbathalla Natpu Manathil
வெள்ளி மழை
« on: August 05, 2017, 07:38:43 PM »
வெள்ளிப்பனியென
விழும் பெரும் துளியென
கண்ணில் திரையென
காற்றின் துணையென
சட சட இசையென
சலனமும் நானென
வானக்கொடையென
வானவர் வரமென
உழவர்தம் உயிரென
உயிர்தரும் உயர்வென
சமத்துவம் பாரென
சமதர்ம வேரென
நீர்க்கணை நானென
நிலம்தொடும் போரென
பொழியுது மழை
பெரும் இறைவனின் கலை!

நீர்த்துளி சேருது
நிலத்தினில் உருது.,
நிலம்தொட்ட நீரதன்
நிறத்தினை மாற்றுது.
நதிகளாய் பிறக்குது
நளினமாய் நெளியுது.
நீர்விழும் அதிசயம்
அருவியாய் ஜொலிக்குது.
தரையினில் வெடிப்புகள்
தழுவலில் குலையுது.
தழும்புகள் மறையுது.
புற்களும் பிழைக்குது
பெரும் சிறு மரங்களும்
தலைக்குது சிலிர்க்குது!.
காய்களும் கனிகளும்
கருக்கொண்டு பெருக்குது.
நீர் நிலை பாத்திரம்
நிறம்பியே வழியுது.
நேர்வழி மழைத்துளி
நிலம்பார்த்து ஓடுது
நிலையற்ற மானிட
நெஞ்சம்போல் மாறுது.
காடுகள் மேடுகள்
கடந்ததன் பயணங்கள்
கருமத்தின் பயனென
விதிவிட்ட வழியென
விதியதன் செயலென
ஈரப்பதன் திசையினில்
ஏற்ப்புடன் விரைந்திடும்
நீரதன் செயலினில்.,
இயக்கமும் நானல்ல
இயக்குவார் தெரியல
வாழ்வதன் நிதர்சனம்
வா வந்து பாரென
வாழ்ந்தது காட்டுது
வியப்பினை கூட்டுது.

நிழல் கண்டு நிர்க்கல
வெயில் கண்டு ஓடல
நித்திரை அதற்கில்ல
சத்தியம் தவறல.
கொதிப்பையும் தாங்குது
குளிரையும் ஏற்குது
கழிவுகள் கலக்குது
பூக்களால் மனக்குது
கோவமும் அதற்கில்ல
குணத்தையும் மாத்தல

உழவனின் வாழ்வினை
உயர்த்திய நீரது ..,
தாயவள் மடிகண்டு
தாவிடும் குழந்தையாய்..,
தலைவனின் கரம் சேர்ந்து
தழுவிடும் தலைவியாய்...,
சமுத்திர தாய்மடி
பாய்ந்தது சேருது
சலனமும் அடங்குது.
பயணமும் முடியுது!. :'( :'(
HBK
                     SWEETCHIN MUSIC

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: வெள்ளி மழை
« Reply #1 on: August 06, 2017, 03:33:22 PM »
Hbk :D eluthi asathitinga ;D super
சமுத்திர தாய்மடி
பாய்ந்தது சேருது
சலனமும் அடங்குது.
பயணமும் முடியுது!

Rmba azhagana lines ;D vazhthukal hbk

Offline JeSiNa

  • Hero Member
  • *
  • Posts: 504
  • Total likes: 813
  • Karma: +0/-0
  • Gender: Female
  • unmai kadhal yaar entral unai enai soluvene....
Re: வெள்ளி மழை
« Reply #2 on: August 09, 2017, 06:41:02 PM »
உழவனின் வாழ்வினை
உயர்த்திய நீரது ..,
தாயவள் மடிகண்டு
தாவிடும் குழந்தையாய்..,
தலைவனின் கரம் சேர்ந்து
தழுவிடும் தலைவியாய்...,
சமுத்திர தாய்மடி
பாய்ந்தது சேருது
சலனமும் அடங்குது.
பயணமும் முடியுது!.  :'( :'(

Hbk sprr linez solla vaarthaigale illai ungal kavi payanam thodara vazhthugal... :)

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5181
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: வெள்ளி மழை
« Reply #3 on: August 12, 2017, 02:43:30 PM »
கவிஞரே வணக்கம் ...

யார் நீங்க ..யாரு ...
இப்டி அசத்துறீங்களே ...

மிகவும் அருமையான
கவிதை ...
வரிகள் அனைத்திலும்
மெய்மறந்தேன் ..அருமை !!!
நீங்கள் எழுதிய கவிகளில்
' வெள்ளி மழை ' கவிதை
எனக்கு மிகவும் பிடித்திருக்குறது !!!
( அனைத்து கவிதைகளும் சிறப்பு ...
வெள்ளி மழை கவிதை எனக்கு தனி சிறப்பு )

என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ...
உங்களின் கவிப்பயணம் மென்மேலும்
சிறப்பாக தொடரட்டும்  சகோ !!!

நன்றி !!!
« Last Edit: August 12, 2017, 03:06:00 PM by ரித்திகா »


Offline SunRisE

  • Full Member
  • *
  • Posts: 179
  • Total likes: 408
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நம் வாழ்க்கை நம் கைகளில்
Re: வெள்ளி மழை
« Reply #4 on: August 12, 2017, 05:39:45 PM »
Velli mazhai kavithai mazhai. Vazhthukkal