Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 166  (Read 3106 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 166
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Ftc Team சார்பாக    வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 12, 2018, 11:12:02 AM by MysteRy »

Offline JeGaTisH

இயற்கையோடு சேர்ந்த இசை என்னை ஈர்க்க
இயல்பான என் மனம் இசை வசமானது
இயற்கைக்கும் இசை உண்டு என
இசையை ரசிக்கும் பொழுது உணர்தேன்

எண்ணங்களும் வண்ணங்களும்
இசையோடு சேரும் பொழுது அழகாகிறது
இசை என்பது இயற்கையின் அங்கமே
இயற்கை இன்றி இசை இல்லை

இதயம் கூட இசை கேட்க துடிக்கிறது
நான் கேட்கும் இசையோ மௌனம் சாதிக்கிறது
கூவும் குயிலுக்கும்  கத்தும் கிளிக்கும்
இசை சொல்லி கொடுத்தது யார்
இசை என்பது  இயற்கை உருவாக்கியதில்
ஈடு இணை இல்லாத ஓன்று

காற்றோடு மரம் பேசும் வார்த்தைகள்
கல்லோடு நதிநீர் பேசும் வார்த்தைகள்
மூங்கில் காடும்  கொட்டும் மழையும்
பேசுவது எல்லாம் இசையே

இயற்கையால் உருவாக்க பட்ட இசைக்கு
அந்த இறைவனும் அடிமையே
நாமும் இசையின் ஓர் அங்கமே
இயற்கை நம் மூலமாக இசையை வழங்குகிறது



அந்த இசையை எனக்கு ரசிக்க வைத்த  FTCக்கு  நன்றி
« Last Edit: December 05, 2017, 07:09:19 PM by JeGaTisH »

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
இசையோடு பிறக்கிறோம்
இசையோடு வளருகிறோம்
இசையோடு பயணிக்கிறோம்
மரணத்துக்கு பிறகும் இசை இசைத்துக்கொண்டிருக்கிறது

என் சந்தோஷமும் துக்கமும்
என்னுடன் பகிர்ந்துகொள்வது
என் இசை

மறந்தும் உன்னை கேட்காமல்
நான் இருப்பதில்லை
எங்கும் நீ இருக்கிறாய்

விடியலை நோக்கி புறப்பட கூவும்
சேவலின் ஒலியும்
இசைதான்

இருப்பதை மற்றவர்களுடன்
பகிர்ந்துண்ண கரையும்
காக்கையின் ஒலியும்
இசைதான்

பிரிந்தவரை எண்ணி எண்ணி வாடி
பாடும் குயிலின் ஏக்க ஒலியும்
இசைதான்

அழகான மாலையில்
நளினமாடி வீசும் மரங்களின்
குளிர்காற்றும்
இசைதான்

ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து ரசிக்க
அடை மழையும் இசைதான்

நதிநீரின் அசைவுகளிலும்
கடக்கும் மனதில், அமைதியாய்
இசைதான்

ஜாதி, மதம், இனம், மொழி தாண்டி
நம்மை ரசிக்க வைப்பது
இசைதான்

உலகில்
இயற்கையை விட சிறந்த இசையை
இசைப்பவனும் உண்டோ ?

இயற்கையை ரசிப்போம்
இசையோடு வாழ்வோம்
வா தோழா !!

****ஜோக்கர் ****


« Last Edit: December 05, 2017, 06:04:48 PM by joker »

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
பிறக்கையில் மழலை அழுகையாய்
அன்னைக்கு இசையானோம்
வளர்கையில் இயற்கை எனும் அன்னையில் இசை கண்டோம்

காற்றில் ஆடும் கீற்றுகளில்
இசையே
ஆற்றில் துள்ளும் மீன்களும்  இசையே

வண்ண கிளிகளின் கீச்சு
குரல்களில் இசையே
அள்ளித்தெளிக்கும் மழைச்
சாரலில் இசையே

இதயம் துடிக்கையில்
உணர்ந்திடும் இசையே
அந்த துடிப்பில் பிறந்திடும்
காதலும் இசையே
காதலில் பேசிடும் மௌன
மொழியும் இசையே
மௌனங்கள் தந்திடும்
கண்ணீரும் இசையே
அந்த கண்ணீரின் வலி தீர்க்கும்
மருந்தும் இசையே
பார்க்கும் திசையெல்லாம்
இசையின் வசமே


"இசையோடு வந்தோம்
இசையோடு வாழ்வோம்
இசையோடு போவோம் இசையாவோம்"

அன்று அவை வைரமுத்துவின் வரியானது 
இன்றோ அவை என் காதில் இசையானது

                                  **விபு**
« Last Edit: December 05, 2017, 04:30:50 PM by VipurThi »

Offline AnoTH

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 323
  • Total likes: 1595
  • Karma: +0/-0
  • Gender: Male
  • சோதனைகளை சாதனையாய் மாற்று
கல்லாகி மணலாகி பூவாகிக் கனியாகி
காற்றோடு இசையாகி எமையாழும்அவள் யாரோ ?

தென்றலோடு தேன் சுமந்து
வண்ணப் பூவில் தஞ்சம் பெற்று
ஆகாரம் தேடும் வண்டினொலியும்
ரீங்காரமாகுமோ ?


இருளாகி நீராகி மழையாகி நதியாகி
கடலோடு கலப்பாகி பேரலையின் ஓசையும்
சங்கீதமாகுமோ ?


சிசுவோடு உறவாடி
இசையாலே மொழி பேசும்
அன்னையவள் குரலும்
தாலாட்டானதோ?


புல்லாகிச் செடியாகிப் பயிராகி ஊனாகி
புவியோடு இயல்பாகி  எமைக் காக்கும் அவள் யாரோ?

சிறகோடு சிகரம் கடந்து
இனத்தோடு கண்டம் நகர்ந்து
அண்டம் காணும் பறவையின் ஒலியும்
இசையானதோ ?


ஒளியோடு ஒலி சேர்ந்து
இயற்கையோடு கரம் கோர்த்து
அகிலமுணரும் மொழியாம்
அதுவே இசையானதோ  ?
« Last Edit: December 08, 2017, 04:07:25 PM by AnoTH »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இசை கேட்டால் புவி அசைந்தாடும்
இது இறைவன் அருளாகும்

எதில் இல்லை சங்கீதம்
காற்றின் அசைவில்
இயற்கை தாய் அள்ளித்தருவது சங்கீதமே
இயற்கையை விரும்புபவர்களுக்கு
காற்றின் சங்கீதம் இனிமையே

காற்றின் அசைவில்
மரங்கள் சலசலப்பதும் சங்கீதமே
காற்று ஊதிடும் விசில் சத்தமும் சங்கீதமே

இயற்கையின் மடியில்
ஒளிந்து கிடக்கிறது 
எண்ணற்ற சங்கீதங்கள்
விடிகாலையில் பறவைகள் சங்கீதங்கள் தானே
நம்மை  எழுப்புகின்றன

காது உள்ளவனுக்கே
சங்கீதம் கேட்கும்
ரசனை உள்ளவனுக்கே 
இயற்கையின் சங்கீதங்கள் புரியும்

இறைவன் படைத்திட்ட உலகில்
எங்கும் எதிலும் நிறைந்திருக்கிறது சங்கீதம்
இறைவனோடு ஒன்றும் போது அவன்
அருளை பெறுகிறோம்
இயறகையோடு ஒன்றும் போது
அதன் சங்கீதத்தை உணர்கிறோம்

Offline thamilan

நான் தாயின் வயிற்றில் இருந்த போது
கேட்ட முதல் சங்கீதம் - என்
தாயின் இதயத் துடிப்பு
 
அடுத்ததாக கேட்ட சங்கீதம்- தாயின்
வளையல்கள்   ஒலி
அந்த தாயின் கைகளில் தவழ்ந்தபோது
கேட்ட சங்கீதம் - அவள்
பாடிய ஆராரோ தாலாட்டு
வளர்ந்த போது
கேட்ட சங்கீதம் - தாயின்
கோபத்தில் அவள் திட்டும் அர்ச்சனைகள்

என் மனைவியின் சிரிப்பொலி
என் குழந்தையின் மழலை மொழி
கேட்கும் எனக்கு சங்கீதமே
இப்படி சங்கீதத்தில் வளர்ந்தேன் நான்

சங்கீதங்கள் இல்லாமல் ஏதும் இல்லை
இயற்கையும் சங்கீதமும்
ஓட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
ஒன்றில்லாவிடலால் இன்னொன்று இல்லை

வீழும் அருவியில்
 வீசும் தென்றலில்
கொட்டும் மழையில்
சலசக்கும் அலைகளில்
மின்னி மறையும் மின்னலில்
எங்கும் இருக்கிறது சங்கீதம்

உலகத்தின் நாதமாம்
ஓம் என்னும் ஒலி
உலகையே ஆட்டிப்படைக்கும் சங்கீதம் அல்லவா
மனிதன் படைத்திட்ட சங்கீதங்கள்
காலத்தால் மறையலாம்
இயற்கை படைத்திட்ட சங்கீதங்கள்
என்றும் அழியாதது
 

Offline KaBaLi

விடிந்திடும் நாளும்
நகர்ந்திடும் நொடியும்
புதுமை அடைகிறது  உன்னாலே..!

ஓடும் நதியிலும் இசை
ஆடும் அலையிலும் இசை
வீசும் காற்றிலும் இசை
விடும் மூச்சிலும் இசை...!!!

காதல் இல்லாமல் இருக்கலாம்
ஆனால் இசை இல்லாமல் இருக்கலாகுமா ?

இரவினில் கூட உன்னை பார்க்கிறேன்
இசையினை கொண்டு கவிபாடுனேன்

சந்தோஷத்திலும் உன்னை கூப்புடுறேன்
துக்கத்திலும் உன்னை கூப்பிடுகிறேன்
முப்பொழுதும் என்னோடு நீயாக !!

சங்கீதம் இல்லாமல் நிகழ்வு இல்லை
கல்லை எடுத்தலாம் அது கரையும் இசையினிலே !
இசையினால் பெற்ற துன்பம் யவரே !

காலைக் கறுக்கலில்
கதிரவன் எழும்வேளை
சோலைக் குயில்கள்
கூவிடும் இசையே !

இசைக்கு ஆடை அணிவது கவிதை
ஆடை நிர்வாணம் ஆகும் போது இசை..!

பாசம் என்பது பாடலாக
பிரிவு என்பது மெட்டாக
மலரும் குடும்பம் என்னும் இசை ..!!!

கடலின் அலைகள் கடற்கரையின் மணல்கள்
வீசும் காற்று காதோரும் வந்து சேரும் இசைப்பற்று

தனிமையில் நானும் இசையும்
நள்ளிரவில் பௌர்ணமியும் கடலும் !
 
மூங்கில் தண்டில் துளை போட்டு நுழைந்த வண்டு 
புல்லாங்குழலாக மாற்றிய இசை..!!

ஆயிரம் இசைக்கருவி
ஒலிசெய்து ஓய்ந்தாலும்
ஆவி ஓய்ந்தபின்பும் ஒலிசெய்யும்
ஆதி இசை பறை..!!

ஆதியிலே ஊரறிய
சேதி சொன்ன நாதம் இது
வீதியிலே போட்டுவிட்டான்
சாதியென பெயர் எழுதி

பாறையாய் மாறிவிட்ட
சாதிய மனங்கள் எல்லாம்
சாம்பலாய் ஆகட்டும்
இந்த பறை ஒலியினிலே..!

பெண்ணின் கொலுசு சத்தமும் இசை தான்
மழைத்துளியின் சப்தமும் இசைதான்
அணைத்து ஓசையும் இசைதான்
இசையினால் கனவு நினைவாகும் போது !

Offline SweeTie

தவழ்ந்து வரும் தென்றலில்  அசைகின்ற மூங்கில்கள்
இசைக்கின்ற  ஓசை  இனிமை
மழை நின்ற பின்பு  இலை சிந்தும்   மழைத்துளிகள்
மண்ணில் விழும்போது  எழுகின்ற  ஓசை இனிமை
விடிகாலை மொட்டவிழ்ந்து  மணம் வீசும் மல்லிகையை
நுகரவரும்  வண்டினங்கள் எழுப்பும் ரீங்காரம் இனிமை
கடலில் உருவாகி   கரை சேரும்  அலை வரிசை
எழுப்பும்  ஓசை இனிமை

காலை கதிரவனை   துயில் எழுப்பும்  பறவைகளின் சங்கீதம்
பருக்கையை  பகிர்ந்துண்ண  கூடும் காக்கைகளின்  கூச்சல்
மாரி  மழையில்  நிரம்பிய குளத்தில்  வாழும்  தவளைகளின்  கத்தல்
மாமரக் கிளைகளில்  மழலை மொழியில் கிள்ளைகள் பேசும் கொஞ்சல்
பாலூட்ட    கன்றினைத்  தேடும்  பசுவின்  கதறல்
இயற்கையின்  கொடையில் இணையில்லா  இசைகள்

பச்சை வர்ண சேலையில்  நெற்கதிர்ப்போல் நாணி நிற்கும்
பாவையவள்  கால் கொலுசு எழுப்பும் இசை இனிமை
காதலன்  கரம் தீண்டுகையில் அவள் கை  வளையல்கள்
எழுப்பும்  இசை  இனிமை 
காலமெல்லாம்  காத்திருந்து   வரமாக கிடைத்த   தன்
காதலனின் கொஞ்சலிலும்  கெஞ்சலிலும்  கேட்கும்  இசை இனிமை

மொழி இல்லா மொழியில்    அழும்  குழந்தையின் அழுகை
புரியாத  சங்கீதம் 
அகிலத்தை  அதிரவைக்கும் சிவனையே மயக்கியது
இராவணன்  மீட்டிய  வீணை இசை
கோகுலத்தில் கோபியரை  மயங்க வைத்தது   
கண்ணனின் புல்லாங்குழல் இசை
இயற்கையும் இசையும்   பின்னி பிணைந்தது 
பிரிக்க முடியாத  சங்கீதம்.