Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1அன்பான நண்பர்களே ,, FTC FM தனது பயனர்களின் இசை ஆர்வம் மற்றும் ரசனைகளை பகிர்ந்து கொள்ளும் விதமாக "உங்கள் சாய்ஸ் " என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறது.

பயனர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுக்கு பிடித்த 15 பாடல்களை பட்டியல் இட்டு அனுப்பலாம். பயனர்களால் தேர்தெடுக்கப்பட்ட பாடல்கள் FTC FM இல் ஒளிபரப்பு செய்யப்படும்.

தினமும் ஒளிபரப்பு நேரம் : ஐரோப்பிய நேரம் 4:30 PM (இந்திய நேரம்-09:00 PM)

"நீங்கள் கேட்ட பாடல்கள் " பகுதியில் “YES” என்று பதிவிடுவதன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். ‘முதலில் பதிவு இட்ட நபர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்’ அவர்களுடைய பாடல்கள் முதலில் ஒளிபரப்பப்படும் .

24-ஜனவரி -2022 (திங்கள் கிழமை  )அன்று  ஐரோப்பிய நேரம் 5:00 PM மணியளவில் (இந்திய நேரம் 09:30 PM) முன்பதிவு இடும் வகையில்  "உங்கள் சாய்ஸ் " பகுதி திறக்கப்படும்.

முதலில் முன்பதிவு செய்யும் பாவனையாளரின் பாடல் தொகுப்பு 25-ஜனவரி -2022  அன்று ஐரோப்பிய நேரம் 04:30 PM(இந்திய நேரம் 09:00 PM) இக்கு ஒளிபரப்பப்படும்,

முன்பதிவு செய்யப்பட்ட பதிவுகளின் முன்னுரிமை அடிப்படையில்  தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மற்ற பயனாளர்களின் பாடல் தொகுப்பு ஒளிபரப்பப்படும்.
2

குறள் 24:
உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

மு.வ விளக்கம்:
அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்
3


விழா நாட்களில் முதல்நாள் இரவே வாசல் தெளித்து கோலம் போட்டு விடுகிறார்களோ? இது சாஸ்திரப்படி சரிதானா?

சூரிய உதயத்திற்கு ஒன்றைமணி நேரம் முன்பு தான் வாசலைத் தூய்மை செய்து சாணம் தெளித்து கோலமிடவேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. முதல்நாள் இரவே கோலமிட்டு விட்டு தூங்கிவிடுவது அவ்வளவு உசிதமானது அல்ல. அதிகாலையில் கோலம் இடும் வீட்டிலே திருமகள் நித்யவாசம் செய்வாள். இப்போது பிரம்மாண்டமான கோலங்களை எல்லாம் முதல்நாள் இரவே வாசலில் இட்டு அசத்துகிறார்கள். ஆனால், கூடியமட்டும் காலை நேரத்திலே வாசல் தெளித்து கோலமிடுங்கள்.
4

நவரத்தின மோதிரம் அணி வதைப்பற்றி விளக்கம் அளியுங்கள்?


மோதிரத்திற்கு "அங்குலீயகம்' என்று பெயர். இதற்கு "விரலுக்கு அணிவிக்கப்படும் ஆபரணம்' என்று பொருள். எல்லா தெய்வங்களுக்கும் எல்லாக் கற்களும் உகந்தவை தான். சுவாமியை பிரதிஷ்டை செய்யும் முன் பீடத்தில் நவரத்தினங்கள் வைக்கப்படுகின்றன. கும்பாபிஷேக கலசம், திருவாபரணங்களிலும் இவற்றுக்கு முக்கியத்துவம் உண்டு. அவரவர் விரும்பும் கற்களில் விருப்பமான முறையில் மோதிரம் அணிந்து கொள்ளலாம். அவை தீங்கு ஏதும் விளைவிக்காது. சுவாமி முன்பு வைத்து வணங்கியபிறகு அணிந்து கொள்ளுங்கள்.
5

குறள் 23:
இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு

மு.வ விளக்கம்:
பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது
6
எதிர்வரும் காதலர் தினத்தை முன்னிட்டு  நண்பர்கள் இணையதளம் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.

நண்பர்கள் கீழே கொடுக்கப்பட்ட 3  கருத்துக்களில் ( Concept ) ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து  நிகழ்ச்சியை தயார் (Prepare) செய்யலாம்.  இந்த மூன்று Concept களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய 24 ஜனவரி  இரவு 10 மணிக்கு முன்பதிவு இடும் வகையில்  இப்பகுதி திறக்கப்படும்.

இந்த பகுதியில் முன்பதிவு  இடுபவர்களின்  முன்னுரிமை அடிப்படையில் ஏதேனும் ஒரு Concept ஐ   தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்படும்.7

குறள் 22:
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

மு.வ விளக்கம்:
பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.
8

சுபவிஷயங்களை வளர்பிறையில் தொடங்குகிறார்களே! இது ஆன்மிகமா, அறிவியலா?

ஆன்மிகம்வேறு, அறிவியல்வேறு என்று பிரித்துப் பார்ப்பதை முதலில் விடுங்கள். ஆன்மிகம் காட்டும் வழியில் செல்வது தான் அறிவியல். பூமி உருண்டையாக இருக்கிறது என்று முதலில் கூறியது ஆன்மிகம். அதை உறுதிப்படுத்திக் கொண்டது அறிவியல். இன்றைய அணுசக்திவரை எல்லாவற்றிற்குமே அடிப்படை ஆன்மிகம் தான்.
அமாவாசைக்கு மறுநாள் வளர்பிறை தொடங்கும். ஒவ்வொரு நாளும் நிலவொளி அதிகரித்துக் கொண்டே போகும். இதனை சுக்லபட்சம்(வெண்மையான இரவு) என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பிறை வளர்ந்து வரும் நாளில் தொடங்கும் செயல்கள் நல்லபடியாக நிறைவேறும் என்பது ஆன்மிகம். வளர்பிறையில் இறுக்கம் குறைந்து நம் மனம் தெளிவுடன் செயல்படும் என்பதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது. எச்செயலையும் தெளிவான புத்தியுடன் தொடங்குபவன் வெற்றி பெறுவது உறுதிதானே! ஆன்மிகமும் அறிவியலும் ஒன்றுக்கொன்று வேறுபட்டதல்ல என்ற உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.
9

நிச்சயதார்த்தம் நடந்தபின் துக்க வீட்டில் கலந்து கொள்ளக்கூடாது என்கிறார்களே? காரணம் கூறவும்.

திருமணத்தை ஆயிரம் காலத்துப்பயிர் என்று பெரியவர்கள் சொல்வர். வாழ்வில் வரும் சுப நிகழ்வு என்றாலே அது திருமணம் தான். திருமணச் சடங்குகளை சாஸ்திரம் "விவாக தீட்சை' என்றே குறிப்பிடுகிறது. அக்னி முன் செய்யப்படும் மணச்சடங்கின் மூலம் மணமகன், மணமகள் இருவரும் இணைந்து வாழத் தொடங்குகின்றனர். மந்திரப்பூர்வமாக செய்யப்படும் இவ்வைபவம் தம்பதியரின் முன்னோர்களில் இருபது தலைமுறைகளைக் கரையேற்ற வல்லது. இதேபோல, சந்ததிகளுக்கும் நன்மை தரக்கூடியதாகும். இதனை, ""பூர்வே விம்சதி- பரே விம்சதி'' என்கிறது வேதம். கோயிலில் "அர்ச்சனை செய்கிறேன்' என்று சங்கல்பம் செய்து கொண்டால் அர்ச்சிக்கும்வரை சந்நிதியை விட்டு வெளியேறக் கூடாது. அதுபோல், திருமணம் செய்து கொள்கிறோம் என்று சங்கல்பம் செய்து கொள்வது தான் நிச்சயதார்த்தம். அதனால், திருமணம் முடியும் வரை துக்கவீடுகளில் கலந்து கொள்வதில்லை என்ற விரதத்தைக் கடைபிடிப்பது அவசியம்.
10
உனக்கு முன்னால்
உடைந்து அழுதிடவும் முடியும்
என்பதை விடவா
வேறொரு இயல்பாயிருத்தல்
சாத்தியப்பட்டுவிட முடியும்

காயப்பட்ட ஒரு அப்பிராணி விலங்கின் மீது
காட்டிடும் காருண்யம் போன்றல்லாத
ஒரு அக்கறையையே எதிர்நோக்குகிறேன்

உன்னை காயப்படுத்தக்கூடும்
எதிர்ப்பார்பின் இன்னொரு எதிர்வினையை
என் அன்பு நிகழ்த்திப் போகுகையில்
எதிர்கொண்டிடும் கையாலாகாத்தனங்களால்
கைசேதப்பட்ட படியே
இல்லா வைராக்கியம் ஒன்றின்
கூடுகளுக்குள்ளே நுழைந்து
நீறுகிறேன்

இயல்பாயிருத்தலும் இயல்புதொலைத்தலும்
இல்லாத ஒரு நிலையினில்
எதைக்கேட்பது என்றறியாத
அழுது ஓய்ந்த ஒரு குழந்தையின் அமைதியை தேர்கிறது

இரைச்சல்களின் சலசலப்புகள் அடங்கிடாத மனம்
பனிபடர்ந்த சருகுகளின் மீதாக
தன் அடர்வை போர்த்திக் கொள்கிறது இருள்
விடியலுக்கு முன்னாக உதிரக்கூடும் இலைகளுக்கு
மேலாகவே படரட்டும் விடியலின் வெளிச்சக் கதிர்கள்

இந்த ஈரம் உலர்ந்திடும் சாத்தியங்களில்லை
இயல்பாயிருக்கவே விழைகிறேன்
இரவின் கருணையை வேண்டியபடி...
Pages: [1] 2 3 ... 10